Shop Cash
Shop Cash என்பது Shop செயலி வாடிக்கையாளர்களுக்கான Shopify-நிதியுதவி அளிக்கும் வெகுமதித் திட்டமாகும். வாடிக்கையாளர்கள் தகுதியான வாங்குதல்களில் Shop Cash-ஐப் பெறுகின்றனர், அதை உங்கள் ஸ்டோரின் ஆர்டர்கள் உட்பட எதிர்கால ஆர்டர்களுக்கு மீட்டுக்கொள்ளலாம். உங்களின் வழக்கமான Shopify Payments கட்டணங்களைத் தவிர கூடுதல் செலவின்றி செக்அவுட்டின்போது கட்டண முறையாக Shop Cash தானாகவே ஏற்கப்படும். கட்டண முறையாக Shop Cash-ஐ ஏற்பதிலிருந்து நீங்கள் விலக முடியாது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பில்லிங் முகவரிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட தொலைபேசி எண்களைக் கொண்ட Shop செயலி வாடிக்கையாளர்களுக்கு Shop Cash கிடைக்கும். இந்த வாடிக்கையாளர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள Shop ஸ்டோர்களின் மூலம் செய்யும் தகுதியான வாங்குதல்களில் Shop Cash-ஐப் பெறலாம், மேலும் Shop Cash-ஐ ஏற்கும் Shop ஸ்டோர்களில் செய்யும் தகுதியான வாங்குதல்களில் Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளலாம்.
Shop உதவி மையத்திற்குச் செல்வதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் Shop Cash குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில்
வாடிக்கையாளர்கள் Shop Cash-ஐப் பெறுவது எப்படி
வாடிக்கையாளர்கள் உங்களின் Shop ஸ்டோரிலிருந்து தகுதியான வாங்குதலை மேற்கொள்ளும்போது Shop Cash-ஐப் பெறுவார்கள், இது உங்களிடமிருந்து மீண்டும் வாங்குவதற்கு அவர்களை ஊக்குவிக்கும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பின்வரும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்போது Shop Cash-ஐப் பெறுவார்கள்:
- அவர்கள் வாங்கும் ஸ்டோர் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்க வேண்டும்.
- Shop Cash-ஐப் பெறுவதற்கான விளம்பரச் சலுகை அவர்களின் ஆர்டருக்குப் பொருந்த வேண்டும்.
- அவர்கள் Shop செயலி அல்லது Shop இணையதளத்தில் செக்அவுட் செய்ய வேண்டும்.
- அவர்கள் Shop Pay அல்லது Shop Pay Installments மூலம் பணம் செலுத்த வேண்டும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மூலம் செய்யப்படும் வாங்குதல்களுக்கு வாடிக்கையாளர்கள் Shop Cash-ஐப் பெற மாட்டார்கள். Shop Pay அல்லது Shop Pay Installments மூலம் செலுத்தப்படும் ஆர்டரின் பகுதிக்கு மட்டுமே Shop Cash வழங்கப்படும், கிஃப்ட் கார்டுகள், விலைக்குறைப்புகள் அல்லது பிற தள்ளுபடிகள் போன்ற தொகைக்கு Shop Cash வழங்கப்படாது.
Shop Cash-ஐப் பெறுவது குறித்து மேலும் அறிய, உங்கள் வாடிக்கையாளர்கள் Shop உதவி மையத்திலுள்ள Shop Cash-ஐப் பெறுதல் என்பதைப் பார்க்கலாம்.
வாடிக்கையாளர்கள் Shop Cash-ஐ மீட்டுக்கொள்வது எப்படி
வாடிக்கையாளர்கள் Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளும்போது, அது உங்கள் ஸ்டோரிலிருந்து அவர்களின் ஆர்டருக்கான கட்டணமாகச் செலுத்தப்படும், மேலும் நிலையான Shop Pay ஆர்டரைப் போலவே நீங்களும் ஆர்டருக்கான பேமெண்ட்டைப் பெறுவீர்கள்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பின்வரும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்போது Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளலாம்:
- வாடிக்கையாளர்கள் Shop செயலி அல்லது Shop இணையதளத்தில் செக்அவுட் செய்ய வேண்டும்.
- வாடிக்கையாளர் Shop Pay அல்லது Shop Pay Installments ஐப் பயன்படுத்தி தங்களது ஆர்டருக்குப் பணம் செலுத்துகிறார், மேலும் செக்அவுட்டின்போது Shop Cash கிடைக்கும் கட்டண முறையாகக் காட்டப்படும்.
- வாங்குதலில் கிஃப்ட் கார்டுகள் அல்லது டிஜிட்டல் தயாரிப்புகள் இருக்கக்கூடாது.
- உங்களின் ஸ்டோர் மொத்த விற்பனை ஸ்டோராக இருக்கக் கூடாது.
வாடிக்கையாளர் Shop இலிருந்து உங்கள் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டிற்குத் திருப்பிவிடப்பட்டால், அவர்கள் Shop Pay அல்லது Shop Pay Installments மூலம் பணம் செலுத்தும்போது Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளலாம். உதாரணமாக, வாடிக்கையாளர் ஒரு தயாரிப்பை Shop செயலியில் உள்ள தங்களது கார்ட்டில் சேர்க்கிறார், ஆனால் அது நேரடி விற்பனைக்காக வெளியிடப்படவில்லை எனில், அவர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டில் தங்களது ஆர்டருக்குப் பணம் செலுத்தத் திருப்பிவிடப்படுவார்கள். அவர்கள் Shop Pay ஐப் பயன்படுத்திச் செக்அவுட் செய்யும்போது, ஆர்டருக்காகத் தங்களின் Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளும் விருப்பத்தேர்வு அவர்களுக்கு இருக்கும்.
வாடிக்கையாளர்கள் Shop உதவி மையத்திலுள்ள Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளுதல் என்பதைப் பார்த்து Shop Cash-ஐ மீட்டுக்கொள்வது குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.
Shop Cash மூலம் பேமெண்ட்டைப் பெறுதல்
வாடிக்கையாளர் ஆர்டருக்கு Shop Cash-ஐப் பயன்படுத்தும்போது, முதலில் அவர்களின் Shop Cash பயன்படுத்தப்படும், மீதமுள்ள இருப்புக்கு Shop Pay மூலம் கட்டணம் செலுத்தப்படும்.
Shop Pay ஆர்டர்களுக்கு உங்களுக்குப் பணம் செலுத்தப்படுவது போலவே, கட்டண முறையாக Shop Cash-ஐப் பயன்படுத்திச் செய்யப்படும் ஆர்டர்களுக்கும் உங்களுக்குப் பணம் செலுத்தப்படும். Shop Cash-ஐ உள்ளடக்கிய பேஅவுட்டைப் பார்க்கும்போது, அறிக்கையில் பேமெண்ட் வகை Shop Cash Credit எனக் காட்டப்படும். Shopify தான் Shop Cash-க்கு நிதியளிக்கிறது, உங்கள் பேஅவுட்டிலிருந்து கழிக்கப்படும் Shopify Payments பேஅவுட் கட்டணங்களைத் தவிர, Shop Cash-ஐ ஏற்பதற்கு உங்களுக்குக் கூடுதல் செலவு எதுவும் இல்லை.
Shop Cash மூலம் செய்யப்படும் வாங்குதல்களுக்கான பேஅவுட்கள் தினமும் நான்கு முறை அதாவது 12:00 am, 6:00 am, 12:00 pm மற்றும் 6:00 pm (ET) ஆகிய நேரங்களில் செயல்படுத்தப்படும். முந்தைய செயலாக்க நேரத்திலிருந்து எத்தனை Shop Cash ஆர்டர்கள் செய்யப்பட்டன என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு Shop Cash Credit பேஅவுட் பரிவர்த்தனையும் ஒன்று அல்லது பல ஆர்டர்களை உள்ளடக்கியிருக்கலாம். Shop Cash தொடர்புடைய ஆர்டர்களின் முழுமையான விவரங்களை அணுக, உங்கள் பேஅவுட் பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம். பல ஆர்டர்களை உள்ளடக்கிய Shop Cash பேஅவுட்களுக்கு, பேஅவுட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஆர்டர்களைப் பார்க்க Shop Cash வரிசை உருப்படியிலுள்ள அம்பு ஐகானைக் கிளிக் செய்யவும்.
உங்களின் நிதி அறிக்கைகளின் ஒரு பகுதியாக, உங்கள் Shopify பகுப்பாய்விலும் Shop Cash ஒரு கட்டண முறையாகத் தோன்றும்.
உங்கள் ஸ்டோர் அமெரிக்கா அல்லது கனடா அல்லாத வேறு நாட்டில் அமைந்திருந்து, வாடிக்கையாளர் தங்களது ஆர்டரில் Shop Cash-ஐ மீட்டுக்கொண்டால், Shop Cash மதிப்பு நடப்பு நாணய மாற்று விகிதத்தில் உங்கள் ஸ்டோரின் நாணயமாகத் தானாகவே மாற்றப்படும். நீங்கள் உங்கள் உள்ளூர் நாணயத்தில் பேமெண்ட்டைப் பெறுவீர்கள்.
Shop Cash மூலம் பணம் செலுத்தப்பட்ட ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்
Shop Cash-ஐப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஆர்டருக்கான பணத்தை நீங்கள் முழுமையாகத் திரும்ப வழங்கும்போது, பணத்தைத் திரும்பப்பெறுதல் தொகையானது முதலில் உங்கள் வாடிக்கையாளர் Shop Pay-உடன் பயன்படுத்திய கார்டிற்குச் செலுத்தப்படும். மீதமுள்ள ஏதேனும் இருப்பு வாடிக்கையாளருக்கு Shop Cash ஆக மீண்டும் கிரெடிட் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது Shop Cash இருப்பை Shop செயலியில் சரிபார்க்கலாம்.
உதாரணமாக, வாடிக்கையாளர் $100 ஆர்டருக்கு $20-ஐ Shop Cash மூலமாகவும், $80-ஐ Shop Pay மூலமாகவும் செலுத்தினால், அவர்களின் Shop Pay கட்டண முறைக்கு $80 வரை திரும்பப் பெறப்படும். பணத்தைத் திரும்பப்பெறுதலின் மீதமுள்ள தொகை அவர்களின் Shop Cash இருப்பிற்கு மீண்டும் கிரெடிட் செய்யப்படும்.
Shop Cash-ஐப் பேமெண்ட் வகையாகக் கொண்டுள்ள ஒரு ஆர்டருக்கு நீங்கள் பகுதி அளவு பணத்தைத் திரும்பப்பெறும் போது, எந்த அளவு தொகையை Shop Pay கட்டண முறைக்குத் திரும்பப்பெற வேண்டும் மற்றும் எந்த அளவு தொகையை வாடிக்கையாளரின் Shop Cash இருப்பிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
Shop Pay மூலம் செய்யப்பட்ட ஒரு ஆர்டருக்குப் பணத்தைத் திரும்பப்பெறுவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.