Shop Pay Installments தயாரிப்புப் பக்க பேனர்

Shop Pay Installments பேனர் வாடிக்கையாளர்களுக்குத் தவணைகளில் பணம் செலுத்துவதற்கான விருப்பநிலைகளைத் தெரிவிக்கிறது, அத்துடன் இது தயாரிப்புப் பக்கங்களில் உங்கள் தயாரிப்பின் விலைக்குக் கீழே காட்டப்படும். இது காட்டும் தகவலானது தயாரிப்பின் மதிப்பு, வாடிக்கையாளரின் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். பேனரில் உள்ள Shop Pay லோகோ உங்கள் தயாரிப்புப் பக்கத்தின் பின்னணிக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும். லோகோ, வெளிறிய பின்னணிகளில் அடர்நிறமாகவும் அடர்நிறப் பின்னணிகளில் வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

தயாரிப்புப் பக்க பேனர்களைக் காட்டுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் செக்அவுட்டிற்குச் செல்வதற்கு முன்பாக அவர்களின் உத்தேசக் கடன்தொகை குறித்த தகவலை முன்கூட்டியே அவர்களுக்கு வழங்குகிறீர்கள்.

நீங்கள் ஜனவரி 31, 2022-க்குப் பிறகு உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் Shopify தீமை நிறுவியிருந்தால், தயாரிப்புப் பக்கங்களில் தயாரிப்பு பேனர் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கலாம். Shop Pay Installments-ஐச் செயல்படுத்திய பிறகு, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள ஒரு தயாரிப்புப் பக்கத்திற்குச் சென்று தயாரிப்பின் விலைக்குக் கீழே பேனர் காட்டப்படுகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

Shop செயலியில் உங்கள் பிராண்ட் இருப்பை நிர்வகிக்க உதவுவதற்கும் விற்பனை நுண்ணறிவுகள் போன்ற அம்சங்களை அணுகுவதற்கும் உங்கள் Shopify நிர்வாகியில் Shop விற்பனைச் சேனலைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளவும். Shop குறித்து மேலும் அறிக.

பேனர் ஏற்கனவே சேர்க்கப்படவில்லை எனில், தயாரிப்புப் பக்க பேனரை நீங்களே கைமுறையாகச் சேர்க்க வேண்டும்.

தயாரிப்புப் பக்க பேனரைக் கைமுறையாகச் சேர்ப்பது

பேனரை நீங்களே சேர்க்க, உங்கள் தீமின் குறியீட்டில் எங்கு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்து, பின்னர் தயாரிப்புப் படிவத்தைப் புதுப்பிக்கவும்.

மாற்றங்களை எங்கு செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிதல்

தயாரிப்புப் படிவத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் பேனருக்கான குறியீட்டைச் சேர்க்க வேண்டும், அது {% form 'product', product ... என்பதுபோல் இருக்கும். உங்கள் தீமைப் பொறுத்துத் தயாரிப்புப் படிவத்தைப் பல இடங்களில் காண முடியும் என்றாலும், கீழ்க்காண்பவை பொதுவான இடங்களாகும்:

  • product-form.liquid
  • featured-product-form.liquid
  • product-template.liquid
  • product.liquid

தயாரிப்புப் படிவத்தைப் புதுப்பித்தல்

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, செயல்கள் மெனுவைத் திறக்க கிடைமட்ட மெனு என்பதைக் கிளிக் செய்து, பிறகு குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தொடர்புடைய கோப்பைத் திறக்கவும்.

  4. {% form 'product', product என்பது இருக்கும் வரியைக் கண்டறியவும்.

  5. அதற்கு நேரடியாகக் கீழே புதிய வரியை உருவாக்கி, பின்வருபவற்றை அந்த வரியில் ஒட்டவும்:

{{ form | payment_terms }}
  1. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, மெனு ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, செயல்கள் மெனுவைத் திறக்க கிடைமட்ட மெனு என்பதைத் தட்டி, பிறகு குறியீட்டைத் திருத்து என்பதைத் தட்டவும்.

  5. தொடர்புடைய கோப்பைத் திறக்கவும்.

  6. {% form 'product', product என்பது இருக்கும் வரியைக் கண்டறியவும்.

  7. அதற்கு நேரடியாகக் கீழே புதிய வரியை உருவாக்கி, பின்வருபவற்றை அந்த வரியில் ஒட்டவும்:

{{ form | payment_terms }}
  1. சேமி என்பதைத் தட்டவும்.

இதன் முடிவு கீழ்க்காண்பதைப் போன்று இருக்க வேண்டும்:

{% form 'product', product ... %}
  {{ form | payment_terms }}
  ...
{% endform %}