Shop Pay-ஐச் செயல்படுத்துதல்

உங்கள் Shopify ஸ்டோரில் Shop Pay-ஐச் செயல்படுத்த, உங்கள் சாதனத்தின் அடிப்படையிலான படிகளைப் பின்பற்றவும். இந்தப் படிகளை முடித்த பிறகு, உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களின் ஸ்டோரில் செக்அவுட் செய்ய Shop Pay-ஐப் பயன்படுத்தலாம். உங்கள் Shop Pay செக்அவுட்டின் மொழியைத் தனிப்பயனாக்க விரும்பினால், Shop Pay செக்அவுட் இயல்புநிலை வார்த்தைகளைப் புதுப்பித்தல் குறித்த கட்டுரையைப் பார்க்கலாம்.

Shop Pay-ஐச் செயல்படுத்துவது தகுதியுடையதாக இருக்கும்பட்சத்தில் பின்வரும் Shop அம்சங்களையும் உங்கள் ஸ்டோரில் சேர்க்கிறது:

  • அனைத்து Shop சேனல் தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்யும் Shop Pay-ஐப் பயன்படுத்தும் ஸ்டோர்களில் Shop மூலம் விற்பனை என்பது தானாகவே செயல்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் கண்டறிந்து வாங்குவதற்காக இந்த அம்சம் தகுதியான தயாரிப்புகளை Shop செயலியில் காட்டும்.
  • Shop Pay மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்தும் ஸ்டோர்களில் Shop மூலம் உள்நுழைக என்பது தானாகவே செயல்படுத்தப்படும். அதிகப் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஷாப்பிங் அனுபவம் மற்றும் ஒன்-டாப் செக்அவுட்டிற்காகத் தங்கள் Shop கணக்கைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்நுழைய இந்த அம்சம் அனுமதிக்கும்.

Shop Pay மூலம் செய்யப்பட்ட பேமெண்ட்டுகளுக்குப் பேஅவுட்களைப் பெறுங்கள்

பேஅவுட்களைப் பெற, உங்கள் வணிக விவரங்கள் மற்றும் வங்கித் தகவல் உட்பட, Shop Pay-க்கான அமைவை நிறைவுசெய்வது முக்கியமாகும். Shop Pay மூலம் உங்கள் முதல் பேமெண்ட்டைப் பெற்ற 21 நாள்களுக்குள் நீங்கள் அமைவை நிறைவுசெய்யவில்லை எனில், அனைத்துப் பேமெண்ட்டுகளும் வாடிக்கையாளருக்குத் தானாகவே திரும்ப அளிக்கப்படும். Shop Pay மூலம் பணம் பெறுவது குறித்து மேலும் அறிக.

Shop Pay-ஐச் செயல்படுத்து

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Shop Pay பிரிவில், Shop Pay என்பதைத் தேர்வுசெய்யவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, பட்டியல் என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பேமெண்ட்டுகள் என்பதைத் தட்டவும்.

  3. Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. Shop Pay பிரிவில், Shop Pay என்பதைத் தேர்வுசெய்யவும்.

  5. சேமி என்பதைத் தட்டவும்.

மூன்றாம் தரப்பு நுழைவாயில்களுக்கான Shop Pay

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் Shop Pay-ஐ வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், மூன்றாம் தரப்பு நுழைவாயில்களுக்கான விரைவான செக்அவுட்டாகவும் Shop Pay-ஐச் செயல்படுத்தலாம். Facebook, மற்றும் Instagram.

மூன்றாம் தரப்பு நுழைவாயில்களுக்கான Shop Pay தகுதித் தேவைகள்

மூன்றாம் தரப்பு நுழைவாயில்களுக்கான Shop Pay-ஐச் செயல்படுத்த, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

மூன்றாம் தரப்பு நுழைவாயில்களுக்கான Shop Pay-ஐச் செயல்படுத்து

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Shop Pay பிரிவில், Shop Pay-ஐச் செயலாக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. Shop Pay பிரிவில், அமைவை நிறைவுசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் வங்கித் தகவல் பற்றிய தேவையான விவரங்களை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, பட்டியல் என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பேமெண்ட்டுகள் என்பதைத் தட்டவும்.

  3. மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள் பிரிவில், நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. Shop Pay பிரிவில், Shop Pay-ஐச் செயலாக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.

  5. சேமி என்பதைத் தட்டவும்.

  6. Shop Pay பிரிவில், அமைவை நிறைவுசெய் என்பதைத் தட்டவும்.

  7. உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் வங்கித் தகவல் பற்றிய தேவையான விவரங்களை உள்ளிட்டு, சேமி என்பதைத் தட்டவும்.