Multibanco

Multibanco என்பது Shopify Payments-க்காகப் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஆன்லைனில் இருந்து ஆஃப்லைனுக்குக் கட்டணம் செலுத்தும் உள்ளூர் முறையாகும். வாடிக்கையாளர் தங்களின் ஆர்டரை ஆன்லைனில் செய்த பிறகு, Multibanco வசதியுள்ள ATM-இலோ அல்லது அவர்களின் வங்கிச் செயலி மூலமாகவோ நேரடியாகக் கட்டணத்தைச் செலுத்தி முடிக்கலாம்.

வாடிக்கையாளர் ஆர்டர் செய்த தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் பேமெண்ட்டை நிறைவுசெய்ய வேண்டும். 7 நாட்களுக்குப் பிறகு பேமெண்ட் நிறைவுசெய்யப்படாவிட்டால், அவர்களின் ஆர்டர் ரத்துசெய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் MB WAY செயலி அல்லது அவர்களின் வங்கிச் செயலியின் மூலம் பேமெண்ட்டை உடனடியாக அங்கீகரித்துச் செலுத்தும் மற்றொரு போர்ச்சுகல் உள்ளூர் கட்டண முறையான MB WAY-ல் இருந்து Multibanco வேறுபட்டதாகும்.

Multibanco தேவைகள்

போர்ச்சுகலில் உள்ள வணிகர்களுக்கு மட்டுமே Multibanco கிடைக்கும். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு Multibanco-வைச் செயல்படுத்த, நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்த வேண்டும். Shopify Payments செயலில் இருக்கும்போது மட்டுமே Multibanco வேலை செய்யும், மேலும் Shopify Payments சோதனைப் பயன்முறையில் இருக்கும்போது இது வேலை செய்யாது.

வாடிக்கையாளர்கள் போர்ச்சுகலில் இருந்து, யூரோக்களில் (EUR) பேமெண்ட் செய்யும்போது மட்டுமே Multibanco ஐப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்த முடியும். உங்கள் ஸ்டோர் EUR-ஐ ஏற்கிறதா என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே இந்த நாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை எனில், சர்வதேச விற்பனைக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் பல நாணய அமைப்புகளில் இதை உள்ளமைக்கலாம்.

வாடிக்கையாளர்கள் €0.50 EUR முதல் €99,999 EUR வரையிலான ஆர்டர்களுக்கு Multibanco-ஐப் பயன்படுத்தலாம்.

நீங்கள் Multibanco-ஐச் செயல்படுத்துவதற்கு முன்பு, முரண்படும் ஏதேனும் மாற்றுப் பேமெண்ட் நுழைவாயில்களை முடக்க வேண்டும்.

Multibanco-ஐப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தக்கூடிய பிராந்தியங்கள்

போர்ச்சுகலில் உள்ள வணிகர்கள் போர்ச்சுகலில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து Multibanco பேமெண்ட்டுகளை ஏற்கலாம்.

Multibanco-ஐச் செயல்படுத்துதல்

Multibanco-ஐச் செயல்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் Shopify Payments-ஐ அமைக்க வேண்டும். போர்ச்சுகலில் உள்ள ஸ்டோர்களுக்கு Shopify Payments உடன் Multibanco தானாகவே செயல்படுத்தப்படும்.

Multibanco-ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். நீங்கள் Shopify Payments-ஐச் செயல்படுத்தும்போது, Multibanco தானாகவே ஒப்புதல் செயல்முறைக்குச் செல்லும், இதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம்.

Multibanco ஒப்புதல் செயல்முறையை முடித்ததும், உங்கள் Shopify Payments பக்கத்தில் Multibanco விருப்பத்தின் கீழே ஒரு மெசேஜ் தோன்றும்.

Multibanco மூலமான பேமெண்ட்டுகள்

வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை அளித்து, கட்டணம் செலுத்த Multibanco-ஐப் பயன்படுத்தும்போது Multibanco மூலம் பேமெண்ட் அங்கீகரிக்கப்படும். வாடிக்கையாளர் தங்கள் ஆர்டருக்கான கட்டணத்தை Multibanco திறன்கள் உள்ள ATM-இலோ தங்கள் வங்கியின் செயலியிலோ செலுத்த 7 நாட்கள் வரை அவகாசம் உள்ளது. நீங்கள் நிதியைப் பெறும் வரை அதற்கான உத்தரவாதம் இல்லை. இந்தக் காலகட்டத்தில், Shopify நிர்வாகியில் பேமெண்ட் நிலை பேமெண்ட் நிலுவையில் உள்ளது எனக் காண்பிக்கும். வாடிக்கையாளர் கட்டணத்தைச் செலுத்தி முடித்ததும், பேமெண்ட் நிலை செலுத்தப்பட்டது என மாறும். ஒரு வாடிக்கையாளர் 7 நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனில், அவருடைய ஆர்டர் ரத்துசெய்யப்படும். நிதியைப் பெறுவதற்கு முன்பே அவருடைய ஆர்டரை நிறைவேற்ற வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துவதற்கு முன்பே பேமெண்ட் விவரங்கள் காலாவதியாகலாம் என்பதால், நிறைவேற்றத்திற்கு முன்பு பேமெண்ட் உறுதிப்படுத்தலுக்காக நீங்கள் காத்திருக்கலாம்.

பேமெண்ட் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, வாடிக்கையாளர் Multibanco மூலம் செலுத்திய கட்டணத்தை ரத்துசெய்ய முடியாது. Multibanco மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனையைத் திரும்பப் பெற, ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப் பெறுங்கள். Multibanco மூலம் செயலாக்கப்பட்ட பரிவர்த்தனைக்கான பணத்தை நீங்கள் திரும்பப் பெற்றால், Shopify Payments உங்களிடம் வசூலித்த செயலாக்கக் கட்டணம் உங்களுக்குத் திரும்ப வழங்கப்படாது.

வாடிக்கையாளர் Multibanco-ஐப் பயன்படுத்தி ஒரு ஆர்டருக்குக் கட்டணம் செலுத்தும்போது, அந்த ஆர்டருக்குக் கட்டணத் திருப்பலைப் பதிவுசெய்ய முடியாது.

Multibanco வாடிக்கையாளர் அனுபவம்

வாடிக்கையாளர் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குச் சென்று கொள்முதல் செய்து மின்னஞ்சல் முகவரியை உள்ளிடும்போது, செக்அவுட் செயல்முறையின்போது Multibanco பேமெண்ட் விருப்பம் காட்டப்படும்.

உங்கள் வாடிக்கையாளர் கட்டணம் செலுத்த Multibanco-ஐப் பயன்படுத்த விரும்பினால், செக்அவுட்டின்போது அதைத் தேர்ந்தெடுப்பார். Multibanco-ஐத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளருக்கு, ஆர்டர் அளித்த 7 நாட்களுக்குள் Multibanco திறன்கள் உள்ள ATM-இலோ வங்கியின் செயலி மூலமாகவோ நேரடியாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படும். பரிவர்த்தனையை நிறைவுசெய்வதற்காக வாடிக்கையாளருக்குக் குறிப்பு எண், உட்பொருள் எண் மற்றும் சரியான தொகை ஆகிய விவரங்கள் வழங்கப்படும். ஒரு வாடிக்கையாளர் 7 நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனில், அவருடைய ஆர்டர் ரத்துசெய்யப்படும்.

உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களைப் புதுப்பிக்கவும்

நீங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தினால், Multibanco-ஐச் சேர்க்க உங்கள் வார்ப்புருக்களைப் புதுப்பிக்க வேண்டும். இந்தப் படிகள் மூலம் Multibanco குறிப்பு எண்ணும் உட்பொருள் எண்ணும் வாடிக்கையாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்யலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

2. ஆர்டர் உறுதிப்படுத்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.

3.
{{ email_body }}
என்ற வரியைக் கண்டறியவும்.

4. இந்தக் குறியீட்டுத் துணுக்கை அடுத்த வரியில் நகலெடுத்து ஒட்டவும்:

{% assign transaction_count = transactions | size %}
{% if transaction_count > 0 %}
{% for transaction in transactions %}
{% if transaction.show_buyer_pending_payment_instructions? %}

{{transaction.buyer_pending_payment_notice}}

{% for instruction in transaction.buyer_pending_payment_instructions %}

{{ instruction.header }}

{% endfor %}

Amount

{% for instruction in transaction.buyer_pending_payment_instructions %}

{{ instruction.value }}

{% endfor %}

{{transaction.amount | money}}

{% endif %}
{% endfor%}
{% endif %}
1. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
1. Shopify செயலியில், மெனு என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

3. ஆர்டர் உறுதிப்படுத்தல் என்பதைத் தட்டவும்.

4.
{{ email_body }}
என்ற வரியைக் கண்டறியவும்.

5. இந்தக் குறியீட்டுத் துணுக்கை அடுத்த வரியில் நகலெடுத்து ஒட்டவும்:

{% assign transaction_count = transactions | size %}
{% if transaction_count > 0 %}
{% for transaction in transactions %}
{% if transaction.show_buyer_pending_payment_instructions? %}

{{transaction.buyer_pending_payment_notice}}

{% for instruction in transaction.buyer_pending_payment_instructions %}

{{ instruction.header }}

{% endfor %}

Amount

{% for instruction in transaction.buyer_pending_payment_instructions %}

{{ instruction.value }}

{% endfor %}

{{transaction.amount | money}}

{% endif %}
{% endfor%}
{% endif %}
1. சேமி என்பதைத் தட்டவும்.

உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிசெய்ய, நீங்கள் Multibanco மூலம் சோதனை ஆர்டரை உருவாக்கலாம்.

மின்னஞ்சல் அறிவிப்பு வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.

Multibanco மூலம் பணத்தைத் திரும்பப்பெறுதல்

Multibanco-இல் வங்கிப் பரிமாற்றங்கள் உட்பட்டுள்ள காரணத்தால், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை உள்ளது.

உங்கள் Shopify நிர்வாகியில் பணத்தைத் திரும்பப்பெறுதலை உருவாக்கிய பிறகு, வாடிக்கையாளரின் IBAN விவரத்தைக் கோருவதற்குச் செக்அவுட்டின்போது வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் வாடிக்கையாளரை Stripe தொடர்புகொள்ளும்.

உங்கள் வாடிக்கையாளர் தமது IBAN விவரத்துடன் பதிலளிக்கும்போது, திரும்பப்பெற வேண்டிய தொகைக்காக உங்கள் வாடிக்கையாளருக்கு Stripe ஒரு கிரெடிட் பரிமாற்றத்தை உருவாக்குகிறது.

நிதி பரிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, உங்கள் Shopify நிர்வாகியின் ஆர்டர்கள் பிரிவில் அந்த ஆர்டர் பணத்தைத் திரும்பப் பெற்றவை அல்லது பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெற்றவை என்று காண்பிக்கப்படும்.

Multibanco-ஐ முடக்கு

டெஸ்க்டாப்
1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.

2. Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

3. ஏற்கப்பட்ட பேமெண்ட்டுகள் பிரிவில், Multibanco என்பதன் தேர்வகற்றிவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
1. Shopify செயலியில், மெனு என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பேமெண்ட்டுகள் என்பதைத் தட்டவும்.

3. Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைத் தட்டவும்.

4. ஏற்கப்பட்ட பேமெண்ட்டுகள் பிரிவில், Multibanco என்பதன் தேர்வகற்றிவிட்டு, சேமி என்பதைத் தட்டவும்.