Swish

Swish என்பது ஒரு உள்ளூர் கட்டண முறையாகும், இதற்கு செக்அவுட்டின் போது உங்கள் வாடிக்கையாளர் தங்கள் பேமெண்ட்டுகளை அங்கீகரிக்க வேண்டும். செக்அவுட்டின் போது வாடிக்கையாளர்கள் Swish மூலம் பணம் செலுத்தத் தேர்வுசெய்யும்போது, அவர்கள் தங்களுடைய Swish மொபைல் செயலி அல்லது ஸ்வீடிஷ் BankID செயலி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பேமெண்ட்டை அங்கீகரிப்பார்கள்.

Swish கிடைக்கும் Shopify Payments பிராந்தியங்கள், Swish-ஐப் பயன்படுத்தும்போதான தேவைகள் மற்றும் கட்டணங்கள், செக்அவுட்டில் Swish-ஐப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போதான வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றை இந்தப் பக்கம் விளக்குகிறது.

Swish-ஐப் பயன்படுத்துவதற்கான தகுதி

Shopify Payments-ஐப் பயன்படுத்தி ஒரு கட்டண முறையாக Swish-ஐச் செயல்படுத்த, உங்கள் ஸ்டோர் பின்வரும் அனைத்துத் தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • உங்கள் Shopify Payments கணக்கிற்கான அடையாளச் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். நீங்கள் அடையாளச் சரிபார்ப்பை முடிக்கவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கத் தேவையான ஆவணத்தைப் பதிவேற்றுமாறு கேட்கப்படுவீர்கள். Shopify Payments-க்கான தகவல் தேவைகள் குறித்து மேலும் அறிக.
  • தெளிவான பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை, துல்லியமான தயாரிப்பு விளக்கங்கள், அணுகக்கூடிய தொடர்பு விவரங்கள், நல்ல நிதி நிலை, Shopify-இன் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கைக்கு இணங்குதல் ஆகியவை உட்பட, உங்கள் ஸ்டோர் நம்பகமான வணிக நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • உங்கள் ஆன்லைன் ஸ்டோர் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்; தனிப்பட்ட பயன்முறையில் இருக்கக் கூடாது. தனிப்பட்ட பயன்முறையை முடக்குவது குறித்து மேலும் அறிக.
  • உங்களிடம் ஒரு தகுதியான வணிகர் வகை குறியீடு (MCC) இருக்க வேண்டும். உங்கள் வணிக வகை தகுதியானதா என்பதை உறுதிசெய்ய, Shopify Payments சேவை விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும்.

நீங்கள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், தற்போது Shopify Payments-க்கு Swish-ஐச் செயல்படுத்த முடியாது. உங்கள் ஸ்டோர் தகுதிக்காகத் தொடர்ந்து தானாகவே மதிப்பாய்வு செய்யப்படும். அடுத்த மதிப்பாய்வில் உங்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்த, உங்கள் ஸ்டோர் தொடர்ந்து அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யவும். நீங்கள் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்தால், உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள Shopify Payments பிரிவில் ஒரு கட்டண முறையாக Swish-ஐ எவ்வாறு செயல்படுத்துவது என விளக்கும் மின்னஞ்சல் ஒன்றை, ஸ்டோர் உரிமையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு Shopify அனுப்பும்.

Shopify Payments-க்கு Swish-ஐப் பயன்படுத்தும்போதான தேவைகள்

Shopify Payments-உடன் Swish-ஐப் பயன்படுத்துவதற்கான பின்வரும் தேவைகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • உங்கள் ஸ்டோர் ஸ்வீடனைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • Swish-ஐச் செயல்படுத்துவதற்கு முன், நீங்கள் Shopify Payments-ஐ அமைக்க வேண்டும்.
  • ஸ்வீடனுக்கு நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்த வேண்டும்.
  • செக்அவுட்டில் நீங்கள் SEK நாணயத்தை ஏற்க வேண்டும்.
  • Shopify Payments-உடன் Swish-ஐப் பயன்படுத்த, உங்களுக்குத் தகுதியான வணிக வகை இருக்க வேண்டும். உங்கள் வணிக வகை தகுதியானதா என்பதை உறுதிசெய்ய, Shopify Payments சேவை விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும்.

Shopify Payments-உடன் Swish-ஐப் பயன்படுத்த விரும்பினால், பின்வரும் தகவல் உங்கள் ஸ்டோரில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்:

  • சேவை விதிமுறைகள் ஆவணம்
  • ஒரு ரிட்டர்ன் கொள்கை
  • உங்கள் ஆர்டர்களுக்கான எதிர்பார்க்கப்படும் டெலிவரி நேரங்கள்
  • தொடர்புத் தகவல்
  • ஆர்டர்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் கட்டணங்கள்

ஸ்டோர் கொள்கைகளை உருவாக்குவது குறித்து அறிக.

Shopify Payments-க்கு Swish-ஐப் பயன்படுத்தும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை

செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு Shopify Payments-க்கு Swish-ஐ வழங்குவதற்கு முன், பின்வரும் விஷயங்களைக் கருத்தில் கொள்ளவும்:

  • உங்கள் Shopify Payments அமைப்புகளில் Swish கிடைக்கவில்லை எனில், உங்கள் நாணயம் அல்லது செக்அவுட் அமைப்புகளை மாற்றுவதற்கு முன் தகுதி மற்றும் தேவைகள் பிரிவுகளை மதிப்பாய்வு செய்யவும்.
  • உங்கள் வாடிக்கையாளர்கள் ஸ்வீடனைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆர்டருக்குப் பணம் செலுத்த SEK-ஐ நாணயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர் வேறு இருப்பிடத்தில் இருந்தாலோ அல்லது தகுதியான நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலோ, Swish-ஐப் பயன்படுத்திச் செக்அவுட் செய்வதற்கான விருப்பம் கிடைக்காது.
  • உங்கள் வாடிக்கையாளர்கள் Swish-ஐப் பயன்படுத்தித் தங்கள் ஆர்டருக்குப் பணம் செலுத்தும்போது, நிதியானது உடனடியாகக் கைப்பற்றப்பட்டு, உங்கள் அடுத்தக் கிடைக்கும் பேஅவுட்டில் சேர்க்கப்படும்.
  • Swish-ஐப் பயன்படுத்திச் செய்யப்படும் ஆர்டர்களில், முழுமையான அல்லது பகுதியளவு பணத்தைத் திரும்பப்பெறுதல்களை நீங்கள் செயல்படுத்தலாம். இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல்கள், Shopify Payments கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பணத்தைத் திரும்பப்பெறுதல்களைப் போலவே நிர்வகிக்கப்படும். Shopify Payments மூலம் பணத்தைத் திரும்பப்பெறுதல் குறித்து மேலும் அறிக.
  • Swish-ஐப் பயன்படுத்திப் பணம் செலுத்திய ஆர்டர்களில், வாடிக்கையாளர்களால் சார்ஜ்பேக்குகளைக் கோர முடியாது.
  • சந்தாத் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களால் Swish-ஐப் பயன்படுத்திப் பணம் செலுத்த முடியாது.

Shopify Payments-க்கு Swish-ஐச் செயல்படுத்துங்கள்

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து Shopify Payments-க்கு நீங்கள் Swish-ஐச் செயல்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, கட்டண முறைகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உள்ளூர் கட்டண முறைகள் பிரிவில், Swish என்பதற்கு அடுத்துள்ள Horizontal menu என்பதைக் கிளிக் செய்து, இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Swish-ஐச் செயல்படுத்தும்போது உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும்

Swish-ஐச் செயல்படுத்தும்போது, உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் அடையாளச் சரிபார்ப்பை முடித்திருந்தால், Swish-ஐச் செயல்படுத்தும்போது அந்தச் செயல்முறையை முடிக்க வேண்டியதில்லை.

உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டியிருந்தால், உங்கள் Shopify நிர்வாகியின் பேமெண்ட்டுகள் பிரிவில் Swish-ஐச் செயல்படுத்திய பிறகு, அடையாளச் சரிபார்ப்பு உரையாடல் பெட்டி தோன்றும்.

படிகள்:

  1. உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும் உரையாடல் பெட்டியில், தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்துவிட்டு, ஏற்றுக்கொண்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பின்வரும் செயல்களில் ஒன்றைச் செய்யவும்:
    1. உங்கள் Swish மொபைல் செயலி அல்லது Swedish BankID செயலியைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
    2. சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவு செய்ய மொபைல் சாதனத்தில் திறக்கக்கூடிய இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலைக் கோர, மேலும் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் அடையாளக் கார்டின் முன் மற்றும் பின் பக்கங்களை ஸ்கேன் செய்துவிட்டு, புகைப்படத்தைச் சமர்ப்பி என்பதைத் தட்டவும்.
  5. செல்ஃபி மூலம் சரிபார்க்கவும் உரையாடல் பெட்டியில், தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் சரிபார்ப்பு சமர்ப்பிக்கப்பட்டால், முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் சரிபார்ப்பு வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்படவில்லை எனில், நீங்கள் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்.

Swish மூலம் பணம் செலுத்தும்போது வாடிக்கையாளர் அனுபவம்

உங்கள் வாடிக்கையாளர்கள் ஸ்வீடனில் இருந்து, செக்அவுட்டில் SEK-இல் பணம் செலுத்தத் தேர்வுசெய்தால் மட்டுமே அவர்களால் Swish-ஐப் பயன்படுத்திப் பணம் செலுத்த முடியும். செக்அவுட்டில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது Swish மொபைல் செயலி அல்லது Swedish BankID செயலியைப் பயன்படுத்த வேண்டும். மொபைல் சாதனங்களில் உள்ள இயல்புநிலை கேமரா செயலியால் QR குறியீடு அங்கீகரிக்கப்படாது.

செக்அவுட்டில் Swish-ஐப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது, வாடிக்கையாளரின் அனுபவமானது அவர்கள் பயன்படுத்தும் சாதனத்தின் வகையைப் பொறுத்தது:

  • மொபைல்: தங்கள் மொபைல் சாதனத்தில் செக்அவுட்டின்போது Swish-ஐத் தேர்ந்தெடுத்து, இப்போதே பணம் செலுத்து என்பதைத் தட்டும் வாடிக்கையாளர்கள், தங்களது பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு பேமெண்ட்டுக்கு ஒப்புதல் அளிக்க அவர்களின் Swish மொபைல் செயலி அல்லது Swedish BankID செயலிக்குத் திருப்பிவிடப்படுவார்கள்.
  • டெஸ்க்டாப்: தங்கள் டெஸ்க்டாப் சாதனத்தில் செக்அவுட்டின்போது Swish-ஐத் தேர்ந்தெடுத்து, இப்போதே பணம் செலுத்து என்பதைக் கிளிக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு QR குறியீட்டைக் காட்டும் புதிய சாளரம் தோன்றும். வாடிக்கையாளர் தமது Swish மொபைல் செயலியைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்துவிட்டு, பணம் செலுத்து என்பதைத் தட்டுவதன் மூலம் பேமெண்ட்டுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். பேமெண்ட்டுக்கு அங்கீகாரம் அளிக்க, அவர்கள் தங்கள் Swedish BankID செயலியைப் பயன்படுத்திப் பாதுகாப்புக் குறியீட்டையும் உள்ளிடலாம்.