உங்களின் Shopify Payments கணக்கை அமைத்தல்

Shopify Payments ஐத் தொடங்க, முதலில் உங்கள் பிராந்தியத்தில் இது கிடைக்குமா என்பதை உறுதிசெய்ய ஆதரிக்கப்படும் நாடுகளின் பட்டியலைச் சரிபார்க்கவும். உங்கள் தகுதியை உறுதிப்படுத்திய பிறகு, நீங்கள் சேவையைச் செயல்படுத்திச் சரிபார்ப்புச் செயல்முறையை முடிக்கலாம்.

உங்கள் ஸ்டோரில் இரு-படி அங்கீகாரம் செயல்படுத்தப்படும் வரை உங்கள் Shopify Payments பேஅவுட்கள் நிறுத்திவைக்கப்படலாம். தவறாக வழிநடத்தப்பட்ட பேஅவுட்கள் அல்லது பிற நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கக்கூடிய பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க இரு-படி அங்கீகாரம் உதவுகிறது.

உங்களின் முதல் விற்பனையைச் செய்வதற்கு முன் உங்களின் ஸ்டோர் நாணயத்தை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். அது உங்கள் Shopify நிர்வாகி முழுவதும், உங்கள் தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்வதற்கும் உங்கள் அறிக்கைகளைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படும் நாணயமாகும். உங்களின் முதல் விற்பனையைச் செய்த பிறகு உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்ற வேண்டும் என்றால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

Shopify Payments அமைவு நிறைவடைவதற்கு முன் ஆர்டர்களைப் பெறுதல்

வேறொரு கட்டண வழங்குநரை அமைக்காத சில புதிய ஸ்டோர்கள், Shopify Payments அமைவு நிறைவடைவதற்கு முன்பே ஆர்டர்களைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் ஆதரிக்கப்படும் கட்டண முறைகளைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்களின் பேமெண்ட் விவரங்கள் அந்த ஆர்டருக்காகச் சேமிக்கப்படும். நீங்கள் Shopify Payments அமைவை நிறைவு செய்து Shopify நிர்வாகியில் பேமெண்ட்டைச் செயலாக்கும் வரை வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. அமைவு நிறைவடைந்த பிறகு ஓர் ஆர்டரின் பேமெண்ட்டைச் செயலாக்க முடியாவிட்டால், வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியலை அனுப்பவும் அல்லது ஆர்டரை ரத்து செய்யவும்.

சேமிக்கப்பட்ட பேமெண்ட் விவரங்களை Shopify Payments மூலம் மட்டுமே செயலாக்க முடியும். அவற்றைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு வழங்குநர் மூலமாகவோ மேனுவல் பேமெண்ட் முறை மூலமாகவோ பேமெண்ட்டைப் பெற முடியாது.

Shopify Payments அமைவு நிறைவடைவதற்கு முன் உங்கள் ஸ்டோருக்கு ஓர் ஆர்டர் வந்தால், உங்கள் Shopify நிர்வாகியில் காட்டப்படும் காலக்கெடுவுக்குள் அமைவை நிறைவு செய்யவும். காலக்கெடுவுக்குள் அமைவை நிறைவு செய்யாவிட்டால், இந்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். நிறைவேற்ற நிறுத்தம் உள்ள ஆர்டர்களையோ பேமெண்ட் நிலுவையில் உள்ளது என்ற நிலையில் உள்ள ஆர்டர்களையோ நிறைவேற்ற வேண்டாம்.

Shopify Payments அமைவை நீங்கள் நிறைவு செய்யாவிட்டால் அல்லது வேறொரு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், காலக்கெடுவுக்கு முன் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு வேறு வழியில் பேமெண்ட்டைப் பெற வேண்டும். இதற்கு விலைப்பட்டியலை அனுப்புதல் அல்லது செக்அவுட் இணைப்பை அனுப்புதல் போன்ற வழிகளைப் பயன்படுத்தலாம்.

Shopify Payments-ஐச் செயல்படுத்துதல்

உங்கள் Shopify நிர்வாகியின் Payments பகுதியிலிருந்து Shopify Payments-ஐ உங்கள் கட்டண நுழைவாயிலாகச் செயல்படுத்தலாம். செக்அவுட்டில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்கும் வகையில் கட்டண நுழைவாயிலை நீங்கள் அமைக்கவில்லை எனில், விற்பனையைத் தொடங்க Shopify Payments-ஐ அமைக்கலாம். மூன்றாம் தரப்பு கட்டண நுழைவாயிலை அமைத்திருந்தால், நீங்கள் Shopify Payments-க்கு மாறலாம் அல்லது கூடுதல் கட்டண முறைகளை வழங்கவும், தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை மீட்டெடுக்கவும் உங்களின் தற்போதைய வழங்குநருடன் இணைந்து Shopify Payments-ஐப் பயன்படுத்தலாம்.

Shopify Payments-ஐ உங்கள் கட்டண நுழைவாயிலாகச் செயல்படுத்துதல்

முதல்முறையாக Shopify Payments-ஐச் செயல்படுத்த, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > Payments என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify Payments பிரிவில், Shopify Payments-ஐச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தேவையான தனிப்பட்ட தகவல், முகவரி, அடையாளத் தகவல் ஆகியவற்றை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் வணிகம் குறித்துத் தேவையான தகவலை உள்ளிடவும்.

  5. உங்கள் வாடிக்கையாளரின் வங்கி அறிக்கையில் காட்டப்பட வேண்டிய ஃபோன் எண்ணை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. உங்கள் வணிக வகை மற்றும் ஸ்டோர் விவரங்களை மதிப்பாய்வு செய்து, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. சரிபார்ப்புக்குச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், மெனு என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், Payments என்பதைத் தட்டவும்.

  3. Shopify Payments பிரிவில், Shopify Payments-ஐச் செயல்படுத்து என்பதைத் தட்டவும்.

  4. தேவையான தனிப்பட்ட தகவல், முகவரி, அடையாளத் தகவல் ஆகியவற்றை உள்ளிட்டு, அடுத்து என்பதைத் தட்டவும்.

  5. உங்கள் வணிகம் குறித்துத் தேவையான தகவலை உள்ளிடவும்.

  6. உங்கள் வாடிக்கையாளரின் வங்கி அறிக்கையில் காட்டப்பட வேண்டிய ஃபோன் எண்ணை உள்ளிட்டு, அடுத்து என்பதைத் தட்டவும்.

  7. உங்கள் வணிக வகை மற்றும் ஸ்டோர் விவரங்களை மதிப்பாய்வு செய்து, உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.

  8. சரிபார்ப்புக்குச் சமர்ப்பி என்பதைத் தட்டவும்.

Shopify Payments-க்கு மாறுதல்

நீங்கள் மூன்றாம் தரப்பு கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தினால், உங்கள் மூன்றாம் தரப்பு நுழைவாயிலை முதலில் முடக்காமலேயே நீங்கள் Shopify Payments-ஐ அமைக்கலாம், அதாவது வாடிக்கையாளர்களுக்கான உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் எந்தத் தடங்கலும் ஏற்படாது.

மூன்றாம் தரப்பு வழங்குநரைத் தொடர்ந்து பயன்படுத்தவும், அதனுடன் சேர்த்து Shopify Payments-ஐச் சேர்க்கவும், மூன்றாம் தரப்பு வழங்குநருடன் Shopify Payments-ஐப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > Payments என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify Payments-க்கு மாறு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தேவையான தனிப்பட்ட தகவல், முகவரி, அடையாளத் தகவல் ஆகியவற்றை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் வணிகம் குறித்துத் தேவையான தகவலை உள்ளிடவும்.

  6. உங்கள் வாடிக்கையாளரின் வங்கி அறிக்கையில் காட்டப்பட வேண்டிய ஃபோன் எண்ணை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. உங்கள் வணிக வகை மற்றும் ஸ்டோர் விவரங்களை மதிப்பாய்வு செய்து, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. சரிபார்ப்புக்குச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

  9. உங்கள் Shopify நிர்வாகியின் Shopify Payments பிரிவில், உங்கள் Shopify Payments கணக்கு அமைப்புகளை உள்ளமைக்க நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும். Shopify Payments-ஐ உள்ளமைப்பது பற்றி மேலும் அறிக.

  10. உங்கள் கணக்குச் சரிபார்ப்பு முடிந்ததும், செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், மெனு என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், Payments என்பதைத் தட்டவும்.

  3. Shopify Payments-க்கு மாறு என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைத் தட்டவும்.

  5. தேவையான தனிப்பட்ட தகவல், முகவரி, அடையாளத் தகவல் ஆகியவற்றை உள்ளிட்டு, அடுத்து என்பதைத் தட்டவும்.

  6. உங்கள் வணிகம் குறித்துத் தேவையான தகவலை உள்ளிடவும்.

  7. உங்கள் வாடிக்கையாளரின் வங்கி அறிக்கையில் காட்டப்பட வேண்டிய ஃபோன் எண்ணை உள்ளிட்டு, அடுத்து என்பதைத் தட்டவும்.

  8. உங்கள் வணிக வகை மற்றும் ஸ்டோர் விவரங்களை மதிப்பாய்வு செய்து, உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.

  9. சரிபார்ப்புக்குச் சமர்ப்பி என்பதைத் தட்டவும்.

  10. உங்கள் Shopify நிர்வாகியின் Shopify Payments பிரிவில், உங்கள் Shopify Payments கணக்கு அமைப்புகளை உள்ளமைக்க நிர்வகி என்பதைத் தட்டவும். Shopify Payments-ஐ உள்ளமைப்பது பற்றி மேலும் அறிக.

  11. உங்கள் கணக்குச் சரிபார்ப்பு முடிந்ததும், செயல்படுத்து என்பதைத் தட்டவும்.

பேஅவுட் வங்கிக் கணக்கை இணைத்தல்

உங்கள் Shopify Payments கணக்கு சரிபார்க்கப்பட்டதும், பேஅவுட்களைப் பெற உங்கள் Shopify நிர்வாகியின் Payments பிரிவில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்கலாம்.

வங்கிக் கணக்கு உரிமை சரிபார்ப்பு தேவைப்பட்டால், உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் Shopify Payments வங்கிக் கணக்கின் உரிமையைச் சரிபார்ப்பது பற்றி மேலும் அறிக.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > Payments என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify Payments பிரிவில், வங்கிக் கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. கிடைக்கும் விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் வங்கிக் கணக்கை இணைக்கவும்:

    • உங்கள் வங்கி உள்நுழைவைப் பயன்படுத்தி இணைக்க, வங்கிக் கணக்கை இணை என்பதைக் கிளிக் செய்து, பின்னர் வரும் பிராம்ட்களைப் பின்பற்றவும்.
    • உங்கள் வங்கிக் கணக்கை மேனுவலாக உள்ளிட, கணக்கு விவரங்களை மேனுவலாக உள்ளிடு என்பதைக் கிளிக் செய்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியில், மெனு என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், Payments என்பதைத் தட்டவும்.

  3. Shopify Payments பிரிவில், வங்கிக் கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.

  4. கிடைக்கும் விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் வங்கிக் கணக்கை இணைக்கவும்:

    • உங்கள் வங்கி உள்நுழைவைப் பயன்படுத்தி இணைக்க, வங்கிக் கணக்கை இணை என்பதைத் தட்டி, பின்னர் வரும் பிராம்ட்களைப் பின்பற்றவும்.
    • உங்கள் வங்கிக் கணக்கை மேனுவலாக உள்ளிட, கணக்கு விவரங்களை மேனுவலாக உள்ளிடு என்பதைத் தட்டி, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு, சேமி என்பதைத் தட்டவும்.

உள்ளூர் கட்டண முறைகளைச் செயல்படுத்துதல்

Shopify Payments-க்கான சில உள்ளூர் கட்டண முறைகளைச் செயல்படுத்துவதற்கு முன்பு கூடுதல் ஒப்புதல் தேவை. நீங்கள் Shopify Payments-ஐச் செயல்படுத்தியதும், பொருந்தக்கூடிய உள்ளூர் கட்டண முறைகளுக்கான மதிப்பாய்வுச் செயல்முறை தானாகவே தொடங்கும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளைக் கட்டண முறைகள் பக்கத்தில் நீங்கள் செயல்படுத்திக்கொள்ளக் கிடைக்கும்.

Shopify Payments-க்கான தகவல் தேவைகள்

நிதியியல் குற்றங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதற்காக, நீங்களும் உங்கள் வணிகமும் குறித்த தகவலைச் சேகரித்து சரிபார்க்க வேண்டியது Shopify மற்றும் அதன் வங்கியியல் கூட்டாளர்களுக்கு அவசியமாகும். உள்ளூர் விதிகளும் விதிமுறைகளும் மாறும்போது, உங்கள் Shopify Payments கணக்கு உள்ள காலம் வரை கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் Shopify மற்றும் அதன் வங்கியியல் கூட்டாளர்கள் தொடர்புகொள்ளக்கூடும்.

சேகரிக்கப்படும் தகவல், வணிகத்தின் அடையாளம், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தனிநபர்களின் அடையாளங்கள் மற்றும் அவ்விரண்டிற்கும் இடையிலான உறவின் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

Shopify எந்த ஆவணங்களையும் உங்களுக்கு ஒருபோதும் அஞ்சல் மூலமாக அனுப்பாது. ஏதேனும் முக்கியமான ஆவணங்களோ தகவல்தொடர்புகளோ மின்னஞ்சல் செய்யப்படுகின்றன அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் ஸ்டோரின் கணக்கு உரிமையாளராகப் பட்டியலிடப்பட்டுள்ள நபருக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கச் செய்யப்படுகின்றன.

Shopify Payments சரிபார்ப்புக்காக ஆவணங்களைப் பதிவேற்றுதல்

கோரப்படும் தனிப்பட்ட தகவல் ரகசியத் தன்மை வாய்ந்தது என்பதால், உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள பாதுகாப்பான பேனர்கள் மூலம் பதிவேற்றப்படும் ஆவணங்களை மட்டுமே Shopify ஏற்க முடியும். உங்கள் பாதுகாப்புக்கும் தனியுரிமைக்கும், மின்னஞ்சல் அல்லது ஆதரவு அரட்டை மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் எவையாயினும், அவை மறைக்கப்பட்டு பயன்படுத்த முடியாதபடி செய்யப்படும்.

சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய, நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணம் எதுவாயினும் அது பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யவும்:

  • ஆவணம் ஸ்கேன் செய்யப்படவோ நகலெடுக்கப்படவோ ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படவோ கூடாது, அதைப் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். புகைப்படங்கள் கிரேஸ்கேலில் இல்லாமல், வண்ணத்தில் இருப்பதை உறுதிசெய்யவும்.
    • உங்களுக்கு டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கு, எந்த மாற்றங்களும் இன்றி அசல் PDF-ஐயும் அதனுடன் அனைத்து அசல் பக்கங்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.
  • ஆவணத்தின் நான்கு விளிம்புகளும் ஃபிரேமில் தெளிவாகத் தெரியும் வகையில், ஆவணம் படிப்பதற்குத் தெளிவாக இருக்க வேண்டும்.
  • ஆவணத்தில் உள்ள அனைத்து விவரங்களும் தெரியும் வகையில் அது முழுமையாக இருக்க வேண்டும்; எந்தவொரு பகுதியும் மறைக்கப்பட்டிருக்கவோ மங்கலாகவோ செதுக்கப்பட்டிருக்கவோ கூடாது.
  • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் பொருந்துகிறது.

புகைப்பட ID தேவைகளைக் காட்டும் விளக்கப் படம்: நான்கு எல்லைகளும் தெரியும் தெளிவான, முழு வண்ண US பாஸ்போர்ட் படமானது பச்சை நிற செக்-மார்க் மூலம் குறிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே தரமற்ற புகைப்படங்களின் எடுத்துக்காட்டுகள் உள்ளன: ஒன்று மிகவும் மங்கலாக உள்ளது, ஒன்று கறுப்பு-வெள்ளையில் உள்ளது, ஒன்றில் ஆவணத்தின் இடது பக்கம் செதுக்கப்பட்டுள்ளது, இன்னொன்றில் வாட்டர்மார்க் சேர்க்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

PNG அல்லது JPEG வடிவத்தில் நீங்கள் புகைப்பட ID-யைச் சமர்ப்பிக்கலாம். கூடுதலாக, முகவரிச் சான்று மற்றும் வணிக ஆவணங்கள் PDF வடிவத்திலும் இருக்கலாம். உங்கள் பிராந்தியத்தில் எந்த வகையான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை அறிய, உங்கள் நாட்டுக்கென உள்ள குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் தகவல்களும் ஆவணங்களும் சரிபார்க்கப்படும் வரை, உங்கள் Shopify Payments பேஅவுட்கள் நிறுத்திவைக்கப்படலாம். ஆவணங்கள் தேவைப்பட்டால், உங்களுக்குத் தெரிவிக்க ஓர் விழிப்பூட்டல் அனுப்பப்படும், அத்துடன் புதிய தகவல்களை நீங்கள் வழங்கக்கூடிய பதிவேற்றப் பக்கத்திற்கு அது உங்களை அழைத்துச் செல்லும். புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களுக்கான கோரிக்கைகள் விற்பனையாளர் நலம் பகுதியிலும் காட்டப்படலாம்.

உங்கள் தகவல் சரிபார்க்கப்படவில்லை என்று அறிவிப்பைப் பெற்றால், பதிவேற்றப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள காரணங்களை நீங்கள் மதிப்பாய்வுசெய்து, புதிய ஆவணங்களைப் பதிவேற்றுதல் அல்லது பதிவேற்றப்பட்ட ஆவணங்களுக்குப் பொருந்தும் வகையில் உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பித்தல் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Shopify Payments சரிபார்ப்பிற்காக ஆவணங்களைப் பதிவேற்றும்போது அல்லது உங்கள் Shopify Payments விவரங்களைப் புதுப்பிக்க முயலும்போது, நீங்கள் அதிகபட்ச முயற்சிகளை அடைந்துவிட்டீர்கள் என்பதைக் குறிக்கும் பிழைச் செய்தியைப் பெறலாம். இது நடந்தால், உங்கள் விவரங்களில் மேலதிக மாற்றங்களைச் செய்யவோ கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

ஒரு ஆவணம் சரிபார்க்கப்படாததற்கான பொதுவான காரணங்கள்

ஒரு ஆவணம் சரிபார்க்கப்படாவிட்டால், பதிவேற்றப் பக்கம் காரணத்தைக் குறிப்பிடும். மிகவும் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • ஆவணம் செதுக்கப்பட்டுள்ளது அல்லது முழுமையாக இல்லை. எந்த விவரங்களும் விடுபடாமல் சட்டத்தில் நான்கு எல்லைகளும் தெளிவாகக் காணப்படும்படியான, முழு ஆவணத்தையும் காட்டும் புதிய புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
  • இந்த ஆவணம் ஸ்கேன் செய்யப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட ஒன்று, அல்லது படிக்கக்கூடியதாக இல்லை. ஸ்கேன், ஒளிநகல் அல்லது திரைப்பிடிப்பு ஆகிவற்றைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக அசல் ஆவணத்தை வண்ணத்தில் புகைப்படமெடுக்கவும், ஒவ்வொரு விவரமும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்யவும்.
  • ஆவணம் மாற்றப்பட்டதாகத் தோன்றுகிறது. வாட்டர்மார்க்குகள், சிறுகுறிப்புகள் அல்லது தரவு நீக்கங்கள் இல்லாமல் ஆவணத்தைப் பதிவேற்றவும், மேலும் எந்த விவரங்களையும் மறைக்கவோ மங்கலாக்கவோ வேண்டாம்.
  • ஒரு பெயர் அல்லது பிறந்த தேதி உங்கள் கணக்குடன் பொருந்தவில்லை. ஒரு நபரின் பெயருக்கும் உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வப் பெயருக்கும் இந்தக் காரணம் பொருந்தும். ஒரு நபருக்கு, அவர்களின் புகைப்பட ID-யில் இருப்பதைப் போலவே அவர்களின் பெயரையும் பிறந்த தேதியையும் உள்ளிடவும். உங்கள் வணிகத்திற்கு, பதிவுசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பெயரை உள்ளிடவும்.
  • உங்கள் வணிக விவரங்கள் அரசாங்கப் பதிவுகளுடன் பொருந்தவில்லை. உங்கள் கணக்கில் உள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர் மற்றும் பதிவு எண் ஆகியவை அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டவைதானா என்பதைச் சரிபார்க்கவும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் தேவைகள் மாறுபடும், எனவே உங்கள் பிராந்தியத்திற்கான தேவைகள் பக்கத்தைச் சரிபார்க்கவும்.
  • ஒரு முகவரி உங்கள் கணக்குடன் பொருந்தவில்லை. எந்த நபரின் அல்லது வணிகத்தின் முகவரி பொருந்தவில்லையோ அதைக் காரணம் குறிப்பிடும். உங்கள் கணக்கில் அந்த முகவரியைத் திருத்தவும் அல்லது ஏற்கனவே உங்கள் கணக்கில் உள்ள முகவரியுடன் பொருந்தக்கூடிய ஒரு ஆவணத்தைப் பதிவேற்றவும்.

உங்கள் கணக்கு விவரங்களும் ஆவணங்களும் பொருந்தி இருக்க வேண்டும். காரணத்தைப் பொறுத்து, உங்கள் கணக்கில் உள்ள விவரங்களை நீங்கள் திருத்தலாம் அல்லது உங்கள் கணக்குடன் பொருந்தக்கூடிய ஆவணத்தைப் பதிவேற்றலாம். வணிக முகவரியை மாற்றுவதற்கு முன், Shopify Payments-க்கான முகவரித் தேவைகளை மதிப்பாய்வு செய்யவும்.

உங்கள் தகவலைச் சரிபார்க்கக் கோரும் விழிப்பூட்டலை உங்கள் Shopify நிர்வாகி காட்டினால், அந்த விழிப்பூட்டலைத் திறந்து Shopify Payments பதிவேற்றப் பக்கத்திற்குச் செல்லவும். பதிவேற்றப் பக்கத்தில், சரிபார்க்கப்படாத விவரங்களைத் திருத்தலாம் மற்றும் புதிய ஆவணங்களைப் பதிவேற்றலாம். உங்கள் Shopify நிர்வாகியில் எந்த விழிப்பூட்டலும் இல்லை எனில், அமைப்புகள் > பொது பக்கத்தின் வணிக விவரங்கள் பிரிவிலிருந்து உங்கள் விவரங்களைத் திருத்தலாம். சில விவரங்களைத் திருத்துவதன் மூலம் மாற்ற முடியாது. எந்த வணிக நிறுவன விவரங்களை நீங்கள் திருத்தலாம் என அறிக.

வரி ID அல்லது சமூகப் பாதுகாப்பு எண் (SSN) போன்ற அரசு அடையாள ஆவணம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்ற பிழையைப் பெற்றால், உங்கள் நிறுவனத்தில் உள்ள வேறு ஒரு வணிக நிறுவனத்தில் அந்த அடையாளம் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கலாம். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அரசு அடையாள ஆவணம் தொடர்பான சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என அறிக.

கணக்குப் பிரதிநிதி

வணிகம் என்பது பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகவோ அல்லது வேறொரு நிறுவனத்திற்குச் சொந்தமானதாகவோ இருந்தாலும், ஒவ்வொரு Shopify Payments கணக்கிலும் ஒரு தனிநபரைக் கணக்குப் பிரதிநிதியாகப் பட்டியலிட வேண்டும். Shopify-இன் வங்கியியல் கூட்டாளர்களுக்கு ஒவ்வொரு கணக்கிலும் உண்மையான ஒரு நபரின் அடையாளத் தகவல் தேவை என்பதால் ஒரு நிறுவனத்தைக் கணக்குப் பிரதிநிதியாக உங்களால் பட்டியலிட முடியாது.

நீங்கள் பட்டியலிடும் நபர் உங்கள் வணிக வகையைப் பொறுத்து மாறுபடுவார்:

  • தனிநபர்கள் மற்றும் தனிநபர் உரிமைகள்: வணிகத்தை வைத்து நடத்துபவர்.
  • பிற வணிக வகைகள் அனைத்தும்: Shopify Payments சேவை விதிமுறைகளுக்கு வணிகத்தைச் சட்டப்பூர்வமாக உட்படுத்தும் அதிகாரம் கொண்ட ஓர் உரிமையாளர் அல்லது மூத்த நிர்வாகி.

உங்கள் பிராந்தியத்தைப் பொறுத்து, கணக்குப் பிரதிநிதியாக யாரெல்லாம் தகுதி பெறுகிறார்கள் என்பது சற்றே மாறுபடும். கூடுதல் தகவலுக்கு, உங்கள் பிராந்தியத்திற்கான குறிப்பிட்ட தேவைகள் பக்கத்தைப் பார்க்கவும்.

கணக்குப் பிரதிநிதி கடையின் உரிமையாளராக இருக்க வேண்டியதில்லை, ஸ்டோரை நிர்வகிக்கும் செயல்பாட்டுப் பொறுப்புகளையும் அவர் ஏற்க மாட்டார். அவர்கள் தங்களின் தனிப்பட்ட தகவலை வழங்குவதோடு, அதைச் சரிபார்ப்பார்கள், இது ஆவணங்களை வழங்குவதை உள்ளடக்கியிருக்கலாம்.

ஒருவரைக் கணக்குப் பிரதிநிதியாகப் பட்டியலிடுவது, அவர்களைப் பலனடையும் உரிமையாளராகத் தெரிவிக்காது. உரிமை என்பது கணக்கில் உள்ள ஒரு தனிப் புலத்தில் பதிவுசெய்யப்படும், மேலும் அந்த நபருக்கு ஒரே நேரத்தில் உரிமையாளர் பங்கு வழங்கப்பட்டால் மட்டுமே இது பொருந்தும்.

பொது வர்த்தக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் போன்று, எந்தவொரு தனிநபரால் 25% அல்லது அதற்கு மேல் சொந்தமாகக் கொண்டிராத வணிகங்களும் கணக்குப் பிரதிநிதியைப் பெயரிட வேண்டும். இந்தத் தேவை வங்கியியல் விதிமுறைகளிலிருந்து வருவதால், இதைத் தவிர்க்க முடியாது.

உரிமையாளர், இயக்குநர் மற்றும் நிர்வாகி ஆகிய சொற்களைப் புரிந்துகொள்ளுதல்

பெரும்பாலான பிராந்தியங்களில், நேரடியாக அல்லது மறைமுகமாக (கட்டுப்பாட்டு நிறுவனம் அல்லது மூல நிறுவனத்தில் உள்ள உரிமையின் மூலம்) வணிகத்தின் பங்குகளில் 25% அல்லது அதற்கும் அதிகமாகச் சொந்தமாக வைத்துள்ள தனிநபரை உரிமையாளர் எனலாம். கட்டுப்பாட்டு நிறுவனத்தின் உரிமையின் மூலம் உங்கள் வணிகத்தின் பங்குகளைச் சொந்தமாக வைத்திருக்கும் தனிநபர்கள் இருந்தால், அவர்களை நீங்கள் பலனடையும் உரிமையாளர்களாகப் பட்டியலிட வேண்டும். உங்கள் கணக்கில் யார் பட்டியலிடப்பட வேண்டும் மற்றும் பலனடையும் உரிமையாளராக யார் தகுதி பெறுவார்கள் என்பது குறித்த கூடுதல் வழிகாட்டலுக்கு உங்கள் நாட்டிற்கென உள்ள குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கவும்.

இயக்குநர்கள் என்பவர்கள் உங்கள் நிறுவனத்தின் ஆளுமைக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் தனிநபர்கள் ஆவர், மேலும் இவர்கள் பொதுவாக பெரும்பாலான வணிகப் பதிவுச் சான்றுகளில் காட்டப்படுவார்கள்.

நிர்வாகிகள் என்பவர்கள் வணிகத்தின் மீது கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதோடு, வணிகத்தை நிர்வகிப்பதற்கும் இயக்குவதற்கும் பொறுப்பானவர்கள் ஆவர். தலைமை நிர்வாக அதிகாரி (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO), தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO), நிர்வாக உறுப்பினர், பொதுக் கூட்டாளர், தலைவர், துணைத் தலைவர் அல்லது காசாளர் போன்ற நிர்வாக அதிகாரிகள் அல்லது மூத்த மேலாளர்கள் இவர்களில் அடங்குவர்.

முகவரித் தேவைகள்

Shopify Payments-உடன் PO பாக்ஸ் அல்லது தனிப்பட்ட அஞ்சல் பாக்ஸ் முகவரிகளை உங்களால் பயன்படுத்த முடியாது.

உங்கள் வணிகம் அமெரிக்காவில் இருந்து, நீங்கள் Shopify Balance அல்லது Shopify Credit ஐப் பயன்படுத்த விரும்பினால், உங்களால் விர்ச்சுவல் முகவரிகள், அஞ்சல் பகிர்தல் சேவைகள், இணைப் பணியிடங்கள், பதிவு முகவர் முகவரிகள், அல்லது ஆவணங்களில் உங்கள் வணிகம் பயன்படுத்தக்கூடிய ஆனால் நேரடியாகச் செயல்படாத ஒத்த முகவரிகளைப் பயன்படுத்த முடியாது. இந்தத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த, கோப்பில் உள்ள நபர்களுக்கான உண்மையான வீட்டு முகவரிகளையும், உங்கள் வணிகச் செயல்பாடுகள் நேரடியாக அமையக்கூடிய வணிக முகவரியையும் நீங்கள் வழங்க வேண்டும்.

பெயருக்கான தேவைகள்

Shopify Payments கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள அனைவரும் தங்களின் அரசாங்கம் வழங்கிய புகைப்பட ID-யில் அல்லது ஆவணங்களில் காட்டப்படும் முழுச் சட்டப்பூர்வப் பெயரை வழங்க வேண்டும். செல்லப்பெயர்கள், சுருக்கங்கள், மாற்றுப்பெயர்கள் அல்லது நிர்வாகி, மேலாளர் போன்ற இடநிரப்பிகளைப் பயன்படுத்த வேண்டாம். பெயரில் எண்கள் அல்லது நட்சத்திரக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டாம்.

ஒரு நபருக்கான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்கும்போது, ஆவணங்களில் அந்த நபர் அரசாங்கத்தில் பதிவுசெய்துள்ள முழுச் சட்டப்பூர்வப் பெயர் காட்டப்படுகிறதா என்பதை உறுதிசெய்யவும். J. ஜோன்ஸ் போன்ற சுருக்கங்களைப் பயன்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம்.