உயிருடன் இருப்பதற்கான சான்று சரிபார்ப்பு

Shopify Payments-க்கான உயிருடன் இருப்பதற்கான சான்று சரிபார்ப்புத் தேவையானது, உங்கள் நாட்டைப் பொறுத்தது. ஆதரிக்கப்படும் நாடுகள் மற்றும் ஆவணத் தேவைகள் குறித்து மேலும் அறிக. உயிருடன் இருப்பதற்கான சான்று சரிபார்ப்பை நிறைவுசெய்ய, செல்ஃபியைப் பதிவேற்ற உங்கள் வெப்கேம் அல்லது ஃபோனைப் பயன்படுத்துவீர்கள். பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்களின் புகைப்பட ID-யையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்:

  • உங்கள் ID ஆவணத்தைப் புகைப்படம் எடுக்க, வெப்கேம் அல்லது ஃபோனைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் ID ஆவணத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.

கணக்கு உரிமையாளர் மட்டுமே Liveness (உயிருடன் இருப்பதற்கான சான்று) சரிபார்ப்பு மற்றும் புகைப்பட ID சரிபார்ப்பை நிறைவுசெய்ய முடியும். Shopify Payments அமைவுச் செயல்முறையை நிறைவுசெய்வதற்கும், Shopify Payments ஐப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரால் பரிவர்த்தனைகளைச் செயலாக்க முடியும் என்பதை உறுதிசெய்வதற்கும் இந்தச் சரிபார்ப்பு அவசியமாகும்.

உங்கள் அடையாள ஆவணத்தை வழங்குவதற்கான வழிகாட்டுதல்

உங்கள் அடையாள ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் அடையாள ஆவணச் சமர்ப்பிப்பு வெற்றிகரமாக இருப்பதை உறுதிசெய்ய, பின்வருவனவற்றை உறுதிப்படுத்தவும்:

  • தெளிவான படத்தைப் பிடிக்கவும். படங்கள் மிகவும் இருட்டாகவோ அல்லது அதிக வெளிச்சத்துடனோ இல்லை என்பதையும், அவற்றில் கண்ணைப்பறிக்கும் ஒளி இல்லை என்பதையும் உறுதிப்படுத்தவும்.
  • ஸ்கேன் செய்ததைப் பதிவேற்றுவதற்குப் பதிலாக, உங்கள் மொபைல் சாதனம் மூலம் ID-ஐ நேரடிப் புகைப்படம் எடுக்கவும்.
  • இருண்ட பின்புலத்தில் ID-ஐப் புகைப்படம் எடுக்கவும். வெளிர், வண்ணமயமான அல்லது வடிவமைப்பைக் கொண்ட பின்புலங்கள் ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
  • படத்திலுள்ள உங்கள் ID ஆவணத்தின் எந்தப் பகுதியையும் மறைக்கவோ திருத்தவோ வேண்டாம்.
  • தலைக்கு மேல் வலுவான வெளிச்சம் உள்ள இடங்களைத் தவிர்க்கவும். இவை உங்கள் ID ஆவணத்தின் மீது நிழலை அல்லது பளபளப்பை உருவாக்கும்.

செல்ஃபி சரிபார்ப்பை நிறைவுசெய்வதற்கான வழிகாட்டல்

செல்ஃபி சரிபார்ப்பை நிறைவுசெய்யும்போது, உங்கள் செல்ஃபி சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிவதை உறுதிசெய்யப் பின்வரும் படிகள் உதவும்:

  • உங்கள் கேமரா/வெப்கேமை அணுகுவதற்கு உங்கள் சாதனத்திற்கு அனுமதி அளித்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்
  • உங்கள் முகத்தின் எந்தப் பகுதியையும் மறைக்க வேண்டாம். குளிர்க்கண்ணாடிகள், முகமூடிகள் அல்லது பிற உபகரணங்களை அகற்றவும்.
  • சுற்றுப்புற வெளிச்சம் உள்ள இடத்தைக் கண்டறியவும். உங்கள் முகத்தை வெளிறச் செய்யும் வகையிலான பிரகாசமான வெளிச்சத்திற்கு நேராகவோ முகத்தில் நிழலை உருவாக்கும் வகையிலான வலுவான மேல்புற வெளிச்சங்களுக்குக் கீழேயோ அமர்வதைத் தவிர்க்கவும்.

Proof of Liveness சரிபார்ப்பில் உள்ள சிக்கலைத் தீர்த்தல்

உங்களின் அடையாள ஆவணம் அல்லது செல்ஃபி சரிபார்ப்பைச் சமர்ப்பிப்பதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், பின்வருபவற்றை முயன்று பார்க்கலாம்:

  • உலாவித் தற்காலிக நினைவகத்தை அழித்துவிட்டு, மீண்டும் சமர்ப்பிக்க முயலவும்.
  • தற்போதைய செயல்பாட்டிலுள்ள உலாவி நீட்டிப்புகளை (உதாரணமாக, VPNs அல்லது விளம்பரத் தடுப்பான்கள்) அகற்றவோ முடக்கவோ முயலவும்.
  • வேறு சாதனம் அல்லது வேறு உலாவியிலிருந்து முயலவும்.