Shopify Payments-க்கு மீண்டும் விண்ணப்பித்தல்

உங்களின் Shopify Payments விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட சில தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதிபெறலாம். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒப்புதலுக்கு உத்தரவாதம் அளிக்காது என்றாலும், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது உங்கள் விண்ணப்பம் மறுபரிசீலனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.

மீண்டும் விண்ணப்பிப்பதற்கான தேவைகள்

மீண்டும் விண்ணப்பிப்பதைப் பரிசீலிக்க, நீங்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

செயலாக்க வரலாறு

நிராகரிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து 6-12 மாதங்களுக்கு மூன்றாம் தரப்புக் கட்டண நுழைவாயில் மூலம் பேமெண்ட்டுகளைச் செயலாக்க வேண்டும். இந்த வரலாறு, வணிகராக உங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க உதவுகிறது.

சார்ஜ்பேக் நிர்வாகம்

6-12 மாத காலக்கட்டத்தில் உங்கள் சார்ஜ்பேக் வீதம் 1%-க்குக் கீழ் இருக்க வேண்டும். மதிப்பாய்வுச் செயல்முறையின்போது உங்களின் மூன்றாம் தரப்பு நுழைவாயிலிலிருந்து இந்த வீதத்துக்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்.

ஆர்டர் நிறைவேற்றம்

மறுபரிசீலனைக்குத் தகுதிபெற, நீங்கள் பின்வரும் ஆர்டர் நிறைவேற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • உங்கள் ஆர்டர்கள் அனைத்தையும் உடனுக்குடன் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
  • நீங்கள் அனுப்பும் அனைத்து ஷிப்மென்ட்களுக்குமான கண்காணிப்புத் தகவலைச் சேர்க்க வேண்டும்.
  • அறிவுறுத்தப்பட்ட நிறைவேற்றக் காலவரம்புகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • உங்கள் வாடிக்கையாளர்களிடம் தெளிவான தகவல் தொடர்பைப் பராமரிக்க வேண்டும்.

கணக்கின் நிலை

மறுபரிசீலனைக்குத் தகுதிபெற, நீங்கள் பின்வரும் கணக்கு நிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • நிலுவையிலுள்ள அனைத்து இருப்புகளும் தீர்க்கப்பட வேண்டும்
  • உங்கள் கணக்கில் எதிர்மறை இருப்புகள் எதுவும் இருக்கக்கூடாது
  • உங்கள் ஸ்டோர் Shopify-இன் சேவை விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்

Shopify Payments-க்காக மறுபரிசீலனையைக் கோருதல்

உங்களின் Shopify Payments விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், மறுபரிசீலனையைக் கோர இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. உங்களின் Shopify Payments நிராகரிப்பு நிலை குறித்து உங்களுக்குத் தெரிவிப்பதற்காகக் கணக்கு உரிமையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலைக் கண்டறியவும்.
  2. மேல்முறையீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்க, மின்னஞ்சலில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  3. மின்னஞ்சலில் மேல்முறையீட்டுப் படிவம் ஏதும் சேர்க்கப்படவில்லை எனில், உங்கள் சூழ்நிலையை விளக்கி மின்னஞ்சலுக்கு நேரடியாகப் பதிலளிக்கவும்.
  4. மின்னஞ்சலைக் கண்டறிய முடியவில்லை எனில், மின்னஞ்சலை மீண்டும் அனுப்பும்படி கோருவதற்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

மீண்டும் விண்ணப்பிப்பதற்கான முக்கியமான பரிசீலனைகள்

ரிசர்வ் தேவைகள்

உங்கள் மறுவிண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்கள் கணக்கில் ரிசர்வ் தொகையை Shopify வைக்கலாம். கணக்கு ரிசர்வ்கள் குறித்து மேலும் அறிக.

ஒப்புதலுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை

மீண்டும் விண்ணப்பிப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதானது Shopify Payments-க்கான ஒப்புதலுக்கு உத்தரவாதம் அளிக்காது. ஒவ்வொரு விண்ணப்பமும் பின்வருபவை உட்படப் பல காரணிகளின் அடிப்படையில் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படுகிறது:

  • செயலாக்க வரலாறு
  • வணிக மாதிரி
  • தயாரிப்புப் பகுப்பு
  • ஒட்டுமொத்த ஆபத்து மதிப்பீடு

மதிப்பாய்வுக்காகக் காத்திருக்கும்போது

உங்கள் மறுவிண்ணப்பம் மதிப்பாய்வில் இருக்கும்போது:

  • உங்களின் தற்போதைய கட்டண வழங்குநரைத் தொடர்ந்து பயன்படுத்தவும்
  • சிறந்த வணிக நடைமுறைகளைப் பராமரிக்கவும்
  • அனைத்து ஆவணங்களையும் நடப்பில் வைத்திருக்கவும்
  • Shopify-இலிருந்து வரும் கோரிக்கைகளுக்காக உங்கள் மின்னஞ்சலைக் கண்காணிக்கவும்

உதவி பெறுதல்

உங்கள் மறுவிண்ணப்பம் தொடர்பாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்: