குறைவான அல்லது விடுபட்ட பேஅவுட்களைத் தீர்க்க உங்கள் Shopify Payments பேஅவுட்களுக்குச் செல்லுதல்
ஒரு Shopify வணிகராக, உங்கள் வணிக நிதியை நிர்வகிக்கும்போது, உங்களின் Shopify Payments பேஅவுட்களை எப்படிக் கண்டறிவது, தாமதங்களுக்கான சிக்கலைத் தீர்ப்பது மற்றும் முரண்பாடுகளைத் தெளிவுபடுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். உங்கள் பேஅவுட் விவரங்களைப் பார்க்கவும், குறைவான பேஅவுட்களுக்கான பொதுவான காரணங்களை ஆராயவும் இந்தக் கட்டுரை வழிகாட்டுகிறது, மேலும் உங்கள் பேஅவுட்டைக் கண்டறிய முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இது வழங்குகிறது.
உங்களின் நிதிப் பதிவுகள் அல்லது வங்கி வைப்புத்தொகைகளுடன் ஒரு குறிப்பிட்ட தேதி வரம்பில் Shopify Payments இருப்புச் செயல்பாட்டை நீங்கள் ஒப்பிட வேண்டுமெனில், Shopify Payments செயல்பாட்டு அறிக்கையைப் பயன்படுத்தவும்.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் Shopify Payments பேஅவுட்களைப் பார்ப்பது
- Shopify Payments பேஅவுட் நிலைகளைப் புரிந்துகொள்ளுதல்
- குறைவான Shopify Payment பேஅவுட்களுக்கான பொதுவான காரணங்கள்
- உங்கள் வங்கிக் கணக்கைப் புதுப்பித்த பிறகு விடுபட்ட Shopify Payments பேஅவுட்களைப் புரிந்துகொள்ளுதல்
- உங்கள் Shopify Payments பேஅவுட் விடுபட்டிருந்தால் என்ன செய்வது
உங்கள் Shopify Payments பேஅவுட்களைப் பார்ப்பது
உங்கள் பேஅவுட் இருப்பு மற்றும் பேஅவுட் திட்டமிடல் ஆகியவற்றை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்தே நீங்கள் அணுகலாம். பேஅவுட்கள் உங்களின் ஆர்டர்களுடன் ஒத்திசைக்கப்படும், இதனால் ஒரு பரிவர்த்தனைக்கு எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பதை எளிதாகப் பார்க்கலாம்.
பேஅவுட்கள் பக்கத்தில் உங்கள் பேஅவுட் நிலைகளைக் கண்டறியலாம், மேலும் உங்கள் பேஅவுட்கள் தொடர்பான ஏதேனும் அறிவிப்புகள் அல்லது விழிப்பூட்டல்களையும் தடமறியலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
- உங்கள் Shopify நிர்வாகியில், நிதி என்பதற்குச் செல்லவும்.
- பேஅவுட் இருப்பு பிரிவில், பேஅவுட்களைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
நிதி என்பதைத் தட்டவும்.
பேஅவுட் இருப்பு பிரிவில், பேஅவுட்களைப் பார் என்பதைத் தட்டவும்.
Shopify Payments பேஅவுட் நிலைகளைப் புரிந்துகொள்ளுதல்
பேஅவுட்கள் பக்கத்தில் ஒவ்வொரு பேஅவுட்டின் தற்போதைய நிலையை நீங்கள் பார்க்கலாம். தோன்றக்கூடிய பேஅவுட் நிலைகளின் விவரங்கள் பின்வருமாறு:
- திட்டமிடப்பட்டுள்ளது: பேஅவுட் செயலாக்கப்பட்டு மற்ற பரிவர்த்தனைகளுடன் பேட்ச் செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் நிலையில் உள்ளது, விரைவில் அனுப்பப்படும். பேட்ச் செய்தல் செயல்முறை பல பரிவர்த்தனைகளை ஒரே பேஅவுட்டில் இணைக்க அனுமதிக்கிறது, இது இடமாற்றத்தை மிகவும் திறம்பட ஆக்குகிறது.
- டெபாசிட் செய்யப்பட்டது: பேஅவுட் உங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டது. நிதியைச் செயலாக்கி உங்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய, உங்கள் வங்கி 1 முதல் 3 வணிக நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
- தோல்வியடைந்தது: உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள சிக்கல்களால், பேஅவுட்டைச் செயலாக்க முடியவில்லை. இதை எப்படித் தீர்ப்பது என்பது குறித்த தகவலுடன் உங்களின் Shopify நிர்வாகியில் பிராம்ட்களைப் பெறுவீர்கள். தோல்வியடைந்த Shopify Payments பேஅவுட்கள் குறித்து மேலும் அறிக.
உங்கள் பேஅவுட் நிலை 'டெபாசிட் செய்யப்பட்டது' என்று இருந்து, நிதி வந்து சேரவில்லை என்றால் என்ன செய்வது
உங்கள் பேஅவுட் நிலை டெபாசிட் செய்யப்பட்டது என்று இருந்து, நீங்கள் இன்னும் உங்கள் வங்கிக் கணக்கில் நிதியைப் பெறவில்லை என்றால், பேஅவுட் ஏற்கனவே உங்கள் கணக்கிற்கு வந்து கொண்டிருக்கிறது, ஆனால் அதனைச் செயலாக்கி காண்பிக்க உங்கள் வங்கி சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற சமயங்களில், நீங்கள் வங்கி ரெஃபரென்ஸைச் சரிபார்க்கலாம், சரியான விவரங்களுடன் உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளலாம், அத்துடன் உங்கள் அறிக்கையில் பேஅவுட்டைக் காண்பிக்க சிறிது நேரம் காத்திருக்கலாம்.
படிகள்:
- உங்கள் பேஅவுட் நிலையைச் சரிபார்த்தல்: உங்கள் பேஅவுட் நிலை டெபாசிட் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவும். பேஅவுட் செயலாக்கப்பட்டுவிட்டது என்பதை இது குறிக்கிறது, ஆனால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு நிதி வந்துவிட்டது என்பதை எப்போதும் இது குறிக்காது.
- வங்கி ரெஃபரென்ஸைப் பயன்படுத்துதல்: உங்கள் பேஅவுட் நிலை தோல்வியடைந்தது என்று இல்லை எனில், உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளும்போது, வங்கி ரெஃபரென்ஸைப் பயன்படுத்தலாம். பரிவர்த்தனையைக் கண்டறிய இந்த எண் அவர்களுக்கு உதவும். இருப்பினும் எல்லா வங்கிகளும் இந்த ரெஃபரென்ஸைப் பயன்படுத்துவதில்லை, எனவே அவர்களிடம் அது இல்லை என்றால், பேஅவுட் பெறப்படவில்லை என்று அர்த்தமல்ல.
- உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுதல்: இன்னமும் உங்களால் உங்கள் பேஅவுட் நிதியைக் கண்டறிய முடியவில்லை எனில், உங்கள் வங்கியின் தானியங்கு தீர்வகம் (ACH) அல்லது பரிமாற்றங்கள் துறையை நீங்கள் தொடர்புகொள்ளலாம், ஏனெனில் அவர்களால் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளைத் தேட முடியும். நீங்கள் அழைக்கும்போது, பின்வரும் தகவலை அவர்களுக்கு வழங்கத் தயாராக இருங்கள்:
- செட்டில்மெண்ட் தேதி
- பேஅவுட் தொகை
- பயன்படுத்தப்பட்ட நாணயம்
- பொறுமையாக இருங்கள்: பேஅவுட் டெபாசிட் செய்யப்பட்டது எனக் குறிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உங்கள் அறிக்கையில் நிதிகள் காட்டப்படுவது இயல்பானது. வங்கியில் செயலாக்கப்பட்டு, உங்கள் அறிக்கையில் நிதிகள் காட்டப்பட, ஓரிரு வணிக நாட்கள் வரை காத்திருக்கவும்.
Shopify Payment பேஅவுட்கள் குறைவாக இருப்பதற்கான பொதுவான காரணங்கள்
உங்கள் பேஅவுட் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது, உங்கள் நிதிகளை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவும். பேஅவுட்கள் குறைவாக இருப்பதற்கான சில பொதுவான காரணங்களும் அவற்றை எப்படி விசாரிப்பது என்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- பேஅவுட் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்: உங்கள் Shopify நிர்வாகியில் பேஅவுட் விவரங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் தொடங்கவும். கட்டணத் திருப்பல்கள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் தொடர்பான குறிப்பிட்ட அறிவிப்புகளையும் பரிவர்த்தனைக் கட்டணங்களின் விவரங்களையும் நீங்கள் கண்டறியலாம்.
- பரிவர்த்தனைத் தரவை ஏற்றுமதி செய்தல்: உங்கள் வருவாயைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெற, ஒரு குறிப்பிட்ட பேஅவுட்டிற்கான பரிவர்த்தனைகளை ஏற்றுமதி செய்யுங்கள். CSV கோப்பில் தொகை, கட்டணம் மற்றும் நிகரத் தொகை ஆகியவற்றுக்கான நெடுவரிசைகள் இருக்கும்.
- இருப்புச் செயல்பாட்டைக் காலப்போக்கில் ஒப்பிடவும்: தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி வரம்பு மற்றும் பேஅவுட் நாணயத்திற்கான பரிவர்த்தனைகள், கட்டணங்கள், பணத்தைத் திரும்பப்பெறுதல்கள், சார்ஜ்பேக்குகள், சரிசெய்தல்கள் மற்றும் பேஅவுட்களை மதிப்பாய்வு செய்ய, Shopify Payments செயல்பாட்டு அறிக்கையைப் பயன்படுத்தவும்.
Shopify Payments பேஅவுட்கள் குறைவாக இருப்பதற்கான சாத்தியமான காரணங்கள்
உங்கள் பேஅவுட் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதை நீங்கள் கவனித்தால், அதைப் பின்வரும் பல்வேறு காரணங்களால் நிகழ்ந்திருக்கலாம்:
- சரிசெய்தல்கள்: உங்கள் பேஅவுட் மேலோட்டத்தில் சரிசெய்தல்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம், அவை இறுதித் தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இந்தச் சரிசெய்தல்களின் குறிப்பிட்ட தன்மை பேஅவுட் விவரங்களில் விவரிக்கப்பட்டிருக்கும். சரிசெய்தல்களுக்கான எடுத்துக்காட்டுகளில் chargeback_fee, chargeback_protection, shopify_collective_debit, shopify_collective_credit, seller_protection மற்றும் tax_adjustment ஆகியவை அடங்கும்.
- சார்ஜ்பேக்குகள்: வாடிக்கையாளர்கள் ஏதேனும் முரண்பாடு அல்லது கட்டணத் திருப்பலைத் தொடங்கியிருந்தால், அந்தப் பேமெண்ட் தொகையும் தொடர்புடைய முரண்பாட்டுக் கட்டணங்களும் உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். இந்தக் கழிப்பினால் பேஅவுட் குறையும்.
- நாணய மாற்றம்: நீங்கள் விற்கும் நாணயத்திலிருந்து வேறுபட்ட நாணயத்தில் பேஅவுட்களைப் பெற்றால், பேஅவுட் தொகை நாணய மாற்றத்திற்கு உட்பட்டது, அதற்குக் கட்டணங்களும் விதிக்கப்படலாம்.
- எதிர்மறை இருப்பு: உங்கள் வருவாயை விடக் கடந்த காலக் கட்டணங்கள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் அதிகமாக இருந்ததன் காரணமாக, உங்கள் கணக்கில் எதிர்மறை இருப்பு இருந்தால், இந்த இருப்பீடு ஈடுசெய்ய உங்கள் பேஅவுட் குறைக்கப்படலாம்.
- பேஅவுட் நிறுத்திவைப்புகள்: பேஅவுட் நிறுத்திவைப்பு வழக்கமாக முழுப் பேஅவுட்டையும் தாமதப்படுத்தும் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் தொடர்பான சிக்கலினால், நிதியின் ஒரு பகுதி நிறுத்திவைக்கப்பட்டு மீதமுள்ளவை செலுத்தப்படலாம்.
- பணத்தைத் திரும்பப்பெறுதல்கள்: உங்களின் முந்தைய பேஅவுட்டிலிருந்து நீங்கள் ஏதேனும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களைச் செயல்படுத்தியிருந்தால், அந்தத் தொகைகள் உங்களின் அடுத்த பேஅவுட்டில் இருந்து கழிக்கப்படும். இது நீங்கள் பெறும் மொத்தத் தொகையை நேரடியாகக் குறைக்கும்.
- ரிசர்வ்கள்: முரண்பாடுகளால் ஏற்படும் சாத்தியமான இழப்புகளில் இருந்து பாதுகாக்க, தற்காலிகமாக ஒரு ரிசர்வ் அமைக்கப்பட்டிருக்கலாம்.
- Shopify Payments செயலாக்கக் கட்டணங்கள்: ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் செயலாக்கக் கட்டணங்கள் விதிக்கப்படும், அவை பேஅவுட் அனுப்பப்படுவதற்கு முன்பாக உங்கள் வருவாயில் இருந்து கழிக்கப்படும். கட்டணத் தொகையானது உங்கள் Shopify திட்டத்தைப் பொறுத்தது. பேஅவுட் கட்டணங்கள் மற்றும் உங்கள் Shopify Payments கிரெடிட் கார்டு கட்டணத்தை எப்படிப் பார்ப்பது என்பது பற்றி மேலும் அறிக.
- கட்டணங்களுக்கான வரிகள்: குறிப்பிட்ட பிராந்தியங்களில், உங்களின் செயலாக்கக் கட்டணங்களில் இருந்து பொருந்தக்கூடிய வரிகள் கழிக்கப்படலாம். Shopify Payments கட்டணங்களுக்கான வரி மதிப்பீடு பற்றி மேலும் அறிக.
உங்களின் வங்கிக் கணக்கைப் புதுப்பித்த பிறகு வராத Shopify Payments பேஅவுட்களைப் புரிந்துகொள்ளுதல்
உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைச் சமீபத்தில் புதுப்பித்தும் உங்களுக்குப் பேஅவுட் வரவில்லை எனில், பேஅவுட் வராததற்கான பின்வரும் சாத்தியக்கூறுகளைக் கவனியுங்கள்.
புதிய வங்கிக் கணக்கின் நாணயப் பொருந்தாமை
உங்கள் புதிய வங்கிக் கணக்கின் நாணயம் உங்கள் பிராந்தியத்தில் Shopify Payments பேஅவுட்களுக்கு ஆதரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்யவும். கணக்கு நாணயம் பொருந்தாமல் போனால் பேஅவுட் தோல்வியடையலாம்.
கணக்கு மதிப்பாய்வு
உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை மாற்றிய பிறகு, புதிய கணக்கின் மதிப்பாய்வு அல்லது சரிபார்ப்பு தேவைப்படலாம். மதிப்பாய்வு முடியும் வரை இந்தச் செயலாக்கம் பேஅவுட்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கக்கூடும். கணக்குச் சரிபார்ப்பு தொடர்பான எந்தவொரு அறிவிப்புகளைப் பற்றியும் அறிந்துகொள்ள, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வணிகர் விழிப்பூட்டல்களையும் கடையின் உரிமையாளர் மின்னஞ்சலையும் தவறாமல் சரிபார்க்கவும்.
புதிய கணக்கு விவரங்களில் உள்ள பிழைகள்
உங்கள் புதிய வங்கிக் கணக்குத் தகவலைச் சரியாக உள்ளிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்யவும். தவறான கணக்கு அல்லது ரூட்டிங் எண்கள் அல்லது தவறான கணக்கு வகையைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை இதில் அடங்கும் பொதுவான பிழைகளாகும். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவை பேஅவுட் தோல்விகளுக்கு வழிவகுக்கலாம்.
இது போன்ற சமயங்களில், சிக்கலைக் குறிப்பிட்டு Shopify இடமிருந்து மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவீர்கள். உங்கள் Shopify நிர்வாகியின் பேஅவுட்கள் பக்கமும் தோல்வியடைந்தது என்ற நிலையைக் காட்டும்.
இதைத் தீர்ப்பதற்கு, நீங்கள் உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை மீண்டும் புதுப்பிக்க வேண்டும், அத்துடன் பேஅவுட்டிற்கும் மீண்டும் முயல வேண்டியிருக்கலாம்.
திட்டமிடப்பட்ட Shopify Payments பேஅவுட்கள் இருக்கும்போது, உங்கள் வங்கிக் கணக்குத் தகவலைப் புதுப்பித்தல்
ஏற்கனவே ஒரு பேஅவுட் செயல்பாட்டில் உள்ளபோது, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை நீங்கள் மாற்றினால், அந்தப் பேஅவுட் உங்கள் பழைய வங்கிக் கணக்கிற்கே செல்லும். எதிர்காலப் பேஅவுட்கள் உங்களின் புதிய வங்கிக் கணக்கிற்குச் செல்லும்.
உங்கள் வங்கிக் கணக்கைப் புதுப்பிப்பது, இதுவரை தொடங்கப்படாத பேஅவுட்களை மட்டுமே பாதிக்கும். பொதுவாக, உங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிப்பது உங்கள் பேஅவுட் அட்டவணையைப் பாதிக்காது. நிதிகள் அங்கு வந்தடைந்துள்ளனவா அல்லது அவை திரும்ப அனுப்பப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய, உங்களின் பழைய வங்கிக் கணக்கில் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
உங்கள் Shopify Payments பேஅவுட் வரவில்லை என்றால் என்ன செய்வது
உங்களின் பேஅவுட் எதிர்பார்த்தபடி வராததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சிக்கலைத் தீர்ப்பதற்கான படிகளின் சரிபார்ப்புப் பட்டியல் இதோ:
- பேஅவுட் நிலையை மதிப்பாய்வு செய்யவும்: உங்கள் Shopify நிர்வாகியில், உங்களின் பேஅவுட் நிலையைச் சரிபார்க்கவும். அது டெபாசிட் செய்யப்பட்டது எனக் காட்டப்பட்டால், பேஅவுட் உங்கள் கணக்கிற்கு வந்துகொண்டிருக்கிறது எனப் பொருள்.
- வங்கியில் செயலாக்கப்படும் நேரங்களைச் சரிபார்க்கவும்: ஒரு பேஅவுட் டெபாசிட் செய்யப்பட்டது எனக் குறிக்கப்பட்ட பிறகு, அதை உங்கள் வங்கி செயலாக்குவதற்கு 1 முதல் 3 வணிக நாட்கள் வரை காத்திருக்கவும். வங்கி விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் வங்கிகள் பரிவர்த்தனைகளைச் செயலாக்காது என்பதை நினைவில்கொள்ளவும்.
- வங்கிக் கணக்குத் தகவலைச் சரிபார்க்கவும்: உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியானவை என்பதையும் உங்கள் Shopify நிர்வாகியில் வழங்கிய தகவலுடன் அவை பொருந்துகின்றன என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும். தவறான கணக்கு எண் அல்லது பொருந்தாத கணக்கு வகை தாமதங்களுக்கு வழிவகுக்கலாம்.
- நிறுத்திவைப்புகள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்: கணக்கு மதிப்பாய்வுகளின்போது அல்லது பிற இணக்கம் சார்ந்த சிக்கல்கள் காரணமாகத் தற்காலிகமாகப் பேஅவுட்கள் நிறுத்திவைக்கப்படலாம். உங்கள் Shopify நிர்வாகியில் ஏதேனும் அறிவிப்புகள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்.
- மின்னஞ்சல் அறிவிப்புகளை மதிப்பாய்வு செய்யவும்: பேஅவுட் சிக்கல்கள், வங்கிக் கணக்குப் புதுப்பிப்புகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கான கோரிக்கைகள் பற்றி Shopify இடமிருந்து வந்திருக்கும் மின்னஞ்சல்கள் எதையாவது சரிபார்க்கவும்.
- உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்: பேஅவுட் டெபாசிட் செய்யப்பட்டது எனக் குறிக்கப்பட்டிருந்தும் அதை நீங்கள் பெறவில்லை எனில், வங்கியின் குறிப்பு எண்ணை (Trace ID எனவும் அழைக்கப்படும்) கூடுதல் உதவிக்காக உங்கள் வங்கியிடம் பகிரவும்.
பேஅவுட் தாமதங்கள் பற்றி மேலும் அறிக.