உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுதல்
உங்கள் உள்ளூர் நாணயமாக இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டோரில் காட்டப்படும் இயல்புநிலை நாணயத்தை உங்களால் மாற்ற முடியும். உங்களின் பெரிய வாடிக்கையாளர் பிரிவின் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது அதிக விற்பனையை எதிர்பார்க்கும் சந்தையை இலக்காகக் கொள்ளவோ இது உங்களை அனுமதிக்கிறது. உங்களின் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவது நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய சட்டரீதியான விளைவுகளையும் பிற தாக்கங்களையும் ஏற்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
சட்ட மற்றும் வரிக் கருத்தாய்வுகள்
உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவதற்கு முன், உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டுடன் தொடர்புடைய நாணயத்திலிருந்து வேறுபட்ட நாணயத்தில் விற்பனை செய்வதில் உள்ள சாத்தியமான சட்ட அல்லது வரி தொடர்பான தாக்கங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும். உங்கள் வரிகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். நாணயத்தை மாற்றினால் நீங்கள் அமைத்துள்ள வரிகளில் எவ்வித மாற்றங்களும் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த உள்ளூர் வரி அதிகாராம் அல்லது வரி கணக்காளரிடம் சரிபார்க்கவும். உங்களின் ஸ்டோர் நாணயத்தை மாற்றும்போது சட்டரீதியான விளைவுகள் ஏதுமில்லை என்பதைச் சரிபார்க்க, சட்ட நிபுணரிடம் ஆலோசிக்கவும்.
ஸ்டோர் நாணயத்தை மாற்றுவதால் ஏற்படும் தாக்கம்
உங்களின் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவதற்கு முன், உங்கள் ஸ்டோரில் இந்த மாற்றத்தால் ஏற்படும் பின்வரும் தாக்கத்தை மதிப்பாய்வு செய்யவும்:
- உங்கள் தயாரிப்பு விலைகள் மற்றும் தள்ளுபடி விகிதங்களின் நாணயம் தானாகவே புதுப்பிக்கப்படும், ஆனால் தொகை அல்ல. எடுத்துக்காட்டாக, நீங்கள் USD இலிருந்து CAD க்கு மாறினால், 20 USD எனப் பட்டியலிடப்பட்ட ஒரு தயாரிப்பு இப்போது 20 CAD எனப் பட்டியலிடப்படும்.
- ஷிப்பிங் கட்டணங்களின் தொகையும் நாணயமும் தானாகவே புதுப்பிக்கப்படாது.
- பழைய நாணயத்தில் மீதமுள்ள இருப்புகளைக் கொண்டுள்ள கிஃப்ட் கார்டுகள் இனி செயல்படாது.
- புதிய நாணயத்திலிருந்து வேறுபட்ட நாணயத் தேவைகளைக் கொண்ட செயலிகள், நாணயத்தை மாற்றிய பிறகு செயல்படாது.
- நாணய விகித ஏற்ற இறக்கங்கள் மற்றும் அறிக்கை புதுப்பிப்பு சுழற்சிகள் காரணமாக, உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவது உங்கள் அறிக்கைகளைப் பாதிக்கலாம்.
- உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவது, நிலுவையில் உள்ள பேமெண்ட்களைக் கொண்ட ஆர்டர்களைப் பாதிக்கலாம்.
- மதிப்புகளில் ஏற்படும் வித்தியாசம் காரணமாக, நாணய மாற்றத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களும் இந்த நாணய மாற்றத்தால் பாதிக்கப்படும்.
- Shopify Payments அல்லாத வேறொரு கட்டண வழங்குநரை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் எல்லாச் சந்தைகளின் நாணயங்களும் புதிய நாணயத்திற்குப் பொருந்தும் வகையில் புதுப்பிக்கப்படும்.
- நீங்கள் Paypal Express-ஐப் பயன்படுத்தினால், உங்கள் புதிய நாணயம் ஆதரிக்கப்படாமல் போகலாம்.
உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவதற்கு முன் பின்வரும் செயல்களை முடிக்கவும்:
- உங்கள் ஸ்டோரில் PayPal Express அல்லது மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர் செயல்படுத்தப்பட்டிருந்தால், புதிய ஸ்டோர் நாணயத்தை PayPal அல்லது உங்கள் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர் ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நாணயத்தை PayPal அல்லது மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர் ஆதரிக்கவில்லை என்றால், நாணயத்தை மாற்றுவதற்கு முன் நீங்கள் கேட்வேயை முடக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக ஆதரிக்கப்படும் வேறொரு நாணயத்தைப் பயன்படுத்தப் பரிசீலிக்க வேண்டும்.
- உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவதற்கு முன் நிலுவையில் உள்ள பேமெண்ட்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தீர்க்கவும்.
- உங்கள் செயலிகள் புதிய நாணயத்துடன் இணக்கமாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த அவற்றை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் ஸ்டோரின் நாணயத்தை மாற்றிய பிறகு ஒரு செயலி தொடர்ந்து வேலை செய்யுமா என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், விளக்கத்திற்குச் செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும். Shopify உருவாக்கிய செயலிகள் உங்கள் புதிய நாணயத்துடன் தொடர்ந்து செயல்படும்.
உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுதல்
உங்கள் Shopify நிர்வாகியில் பயன்படுத்தப்படும் நாணயமே உங்களின் ஸ்டோர் நாணயமாகும். இந்த நாணயத்தில்தான் உங்கள் தயாரிப்புகளுக்கான விலையை நீங்கள் நிர்ணயிப்பீர்கள், மேலும் இது உங்கள் அறிக்கைகளிலும் பயன்படுத்தப்படும். கடையின் உரிமையாளர் மட்டுமே ஸ்டோர் நாணயத்தை மாற்ற முடியும்.
பொதுவானவை அமைப்புகள் பக்கத்தின் ஸ்டோர் இயல்புநிலைகள் பிரிவிலிருந்து உங்கள் ஸ்டோர் நாணயத்தைப் பார்க்கலாம் மற்றும் மாற்றலாம். உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றுவதற்கு முன், இந்தச் செயலால் உங்கள் ஸ்டோரில் ஏற்படும் தாக்கம் மற்றும் சட்டரீதியான பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் இயல்புநிலைகள் பிரிவில், நாணயக் காட்சி என்பதன் கீழ், … என்பதைக் கிளிக் செய்து ஸ்டோர் நாணயத்தை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியலிலிருந்து உங்கள் புதிய ஸ்டோர் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்டோர் நாணயத்தைப் புதுப்பித்த பிறகு, பின்வரும் ஸ்டோர் அமைப்புகளை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்:
- உங்கள் தயாரிப்பின் விலை நிர்ணயத்தை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும். வெவ்வேறு நாணயங்களின் மதிப்பு சமமாக இருப்பது அரிது என்பதால், ஒரு தயாரிப்பின் மதிப்பு புதிய நாணயத்தில் வேறுபட்டிருக்க வாய்ப்புள்ளது, இது உங்கள் லாப வரம்புகளைப் பாதிக்கலாம்.
- புதிய ஸ்டோர் நாணயத்திற்கு ஏற்ப தள்ளுபடிகளை மதிப்பாய்வு செய்து சரிசெய்யவும்.
- உங்களிடம் தற்போதுள்ள ஷிப்பிங் கட்டணங்களை நீக்கிவிட்டு, புதிய நாணயத்தில் கட்டணங்களைக் காட்ட, கட்டணங்களை மீண்டும் மேனுவலாகச் சேர்க்கவும்.
- மீதமுள்ள இருப்புடன் கிஃப்ட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் புதிய கிஃப்ட் கார்டுகளை வழங்கவும்.
- நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் ஸ்டோர் நாணயத்தை மாற்றும்போது உங்கள் சந்தைகளைப் புதுப்பிக்கவும்.