குரோஷியாவுக்கான Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்பான தேவைகள்

குரோஷியாவில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, விதிமுறைகளுக்கு இணங்குவதற்கும் நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்கும் உள்ள தேவைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட தகவல் ஏன் சேகரிக்கப்படுகிறது, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் வகைகள் ஆகியவற்றை பின்வரும் பிரிவுகள் விளக்குகின்றன, மேலும் உங்கள் ஆவணங்கள் அவசியமான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்வதற்கான வழிகாட்டலையும் வழங்குகின்றன.

குரோஷியாவில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்

குரோஷியாவில் நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும்:

  • தகுதியான வணிக வகைகள்: சில வகையான வணிகங்களும் சேவைகளும் Shopify Payments-ஐப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் வணிகம் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்க, Shopify Payments சேவை விதிமுறைகள் (TOS) என்பதில் உள்ள குரோஷியாவுக்கான தடைசெய்யப்பட்ட வணிக வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
  • வங்கிக் கணக்குத் தேவைகள்: நீங்கள் Shopify Payments உடன் இணைப்பதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கு பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
    • வங்கிக் கணக்கு EUR நாணயத்தில் இருக்க வேண்டும்.
    • வங்கிக் கணக்கானது சிங்கிள் யூரோ பேமெண்ட்ஸ் ஏரியா (SEPA) இடமாற்றங்களுக்குத் தகுதியுடையதாக இருக்க வேண்டும் மற்றும் டெபிட்களை ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
    • வங்கிக் கணக்கானது பின்வரும் நாட்டுக் குறியீடுகளில் ஏதேனும் ஒன்றில் தொடங்கும் சர்வதேச வங்கிக் கணக்கு எண்ணைக் (IBAN) கொண்டிருக்க வேண்டும்: AT, BE, BG, CH, CY, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE, அல்லது SI.

ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகைகள்

சில வங்கிக் கணக்கு வகைகள் Shopify Payments உடன் இணங்குவதில்லை. பின்வரும் கணக்கு வகைகள் ஆதரிக்கப்படுவதில்லை:

  • வயர் பரிமாற்றங்களை மட்டுமே ஏற்கும் நடப்புக் கணக்குகள்: இந்தக் கணக்குகள் Shopify Payments உடன் செயல்படாது.
  • சேமிப்புக் கணக்குகள்: Shopify Payments பேஅவுட்களுக்குச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்த முடியாது.
  • ஃப்ளெக்ஸ்-கரன்சி கணக்குகள்: ஒரே நேரத்தில் பல நாணயங்களை ஆதரிக்கும் கணக்குகள் ஆதரிக்கப்படுவதில்லை.
  • பணப் பரிமாற்றச் சேவைகள்: சில ஃபிண்டெக் (fintech) தளங்கள் போன்ற வங்கிக் கணக்குகளைப் போலவே செயல்படும் சேவைகளை Shopify Payments உடன் பயன்படுத்த முடியாது.

Shopify அல்லாத மெய்நிகர் கணக்குகள் ஆதரிக்கப்பட்டாலும், இந்தக் கணக்குகளில் அதிக பேஅவுட் தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

உங்கள் பிராந்தியத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள இடமாற்ற வகையை உங்கள் கணக்கு ஏற்குமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கம்

நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள குரோஷியாவின் விதிமுறைகளுக்கு இணங்க, நீங்களும் உங்கள் வணிகம் பற்றிய தகவல்களையும் சேகரித்துச் சரிபார்க்க வேண்டியது Shopify மற்றும் அதன் வங்கியியல் கூட்டாளர்களுக்கான கட்டாயமாகும். உள்ளூர் விதிகள் மற்றும் விதிமுறைகள் மாறும்போது, உங்களின் Shopify Payments கணக்கு உள்ள காலம் முழுவதும் கூடுதல் தகவல்களை வழங்குமாறு Shopify மற்றும் அதன் வங்கியியல் கூட்டாளர்களால் நீங்கள் தொடர்புகொள்ளப்படலாம்.

சேகரிக்கப்படும் தகவலானது வணிகத்தின் அடையாளம், வணிகத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் அடையாளங்கள் மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான உறவின் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

Shopify ஆவணங்களை ஒருபோதும் உங்களுக்கு நேரடியாக அஞ்சல் செய்யாது. முக்கியமான ஆவணங்கள் அல்லது தகவல்தொடர்புகள் ஏதேனும் மின்னஞ்சல் செய்யப்படும் அல்லது உங்கள் Shopify நிர்வாகியின் அமைப்புகள் > பயனர்கள் பக்கத்தில் கடையின் உரிமையாளருக்கு டிஜிட்டல் வடிவில் கிடைக்கும்படி செய்யப்படும்.

உங்கள் தகவல் எவ்வாறு ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுகிறது என்பதைப் பற்றி அறிய, Shopify தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.

குரோஷியாவில் Shopify Payments-ஐச் செயல்படுத்தத் தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்

Shopify சேகரிக்க வேண்டிய தனிப்பட்ட தகவல்கள் நாட்டிற்கு நாடு மாறுபடும். குரோஷியாவில் உள்ள வணிகங்களுக்கு, நீங்கள் வழங்க வேண்டிய தகவல்களை அது தீர்மானிப்பதால் உங்களது வணிக வகையைச் சரியாக அடையாளம் காண வேண்டும்.

நீங்கள் எந்த அரசு நிறுவனத்திலும் பதிவு செய்யவில்லை என்றால் அல்லது நீங்கள் பதிவு செய்திருந்தாலும் Obrt மற்றும் சுயதொழில் செய்பவர்கள் போன்று ஒரு தனிநபர் வர்த்தகராக வணிகத்தை நடத்தினால், தனிநபர் / தனிநபர் வர்த்தகர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் வணிகத்தைப் பதிவு செய்து OIB எண் (Osobni Identifikacijski Broj) வைத்திருந்தால், பின்வரும் வழிகாட்டலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • Javno Trgovačko Društvo (JTD) அல்லது Komanditno Društvo (KD) போன்ற OIB எண்களைக் கொண்ட கூட்டாண்மைகள் பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • OIB எண்களைக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்றது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • OIB எண்களைக் கொண்ட மற்ற அனைத்து வணிகங்களும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Društvo s ograničenom odgovornošću (DOO) அல்லது Jednostavno Društvo s ograničenom odgovornošću (JDOO) ஆகியவை பொதுவான எடுத்துக்காட்டுகள்.

நீங்கள் பதிவுசெய்யப்பட்ட வணிகத்தை வைத்திருந்து OIB எண் இல்லை என்றால், பின்வரும் வழிகாட்டலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • OIB எண்கள் இல்லாத கூட்டாண்மைகள் பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • OIB எண்கள் இல்லாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்றது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுப்பது என உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தனிநபர்கள் / தனிநபர் வர்த்தகர்

தனிநபர்கள் என்பவர்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யாமல் சொந்தமாகத் தொழில் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆவர். தனிப்பட்ட வர்த்தகர்கள் (Sole traders) என்பவர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு அரசாங்கத்தில் பதிவுசெய்த ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆவர். இவை இரண்டும் குரோஷியாவில் வசிக்கும் ஒரு தனிநபரால் நிர்வகிக்கப்படும் சொந்த வணிகங்களாகும், இதில் சுயாதீனப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் சிறு வணிக நடத்துநர்களும் அடங்குவர்.

இந்த வணிக வகைகள் ஒரே மாதிரியாகவே கருதப்படுவதால், இவை இரண்டுமே ஒரே தகவலை வழங்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகர்கள் வழங்க வேண்டியவை:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • குரோஷியாவில் உள்ள குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய, உங்களின் வீட்டு முகவரி.

உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்தும், நீங்கள் இன்னும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுகிறீர்கள் என்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் (DOO, JDOO)

வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் என்பது, அதன் சமபங்கு (equity) பங்குகளாகப் பிரிக்கப்பட்டு பங்குதாரர்களுக்குச் சொந்தமாக உள்ள ஒரு வணிகமாகும். கார்ப்பரேஷன் என்பது ஒரு தனிப்பட்ட சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறது, அது அதை நடத்துபவர்களிடமிருந்து வேறுபட்டது. பொதுவாக இவற்றில் ஒரு இயக்குநர் குழுவும் இருக்கும்.

வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் பலனடையும் உரிமையாளர் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகி ஒருவரைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய, உங்களின் வீட்டு முகவரி.
  • பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
  • சமபங்கு: வணிகத்தில் உங்களிடம் உள்ள சமபங்கு சதவீதம் (பொருந்தினால்).

உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்தும், நீங்கள் இன்னும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுகிறீர்கள் என்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் தங்களது வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடியான சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • OIB எண் (Osobni Identifikacijski Broj): வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் OIB.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: உங்களின் VAT பதிவு எண் (பொருந்தினால்).
  • வணிகத்தின் தொலைபேசி எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டில் உள்ள தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

குரோஷியாவில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் Shopify வங்கிப் கூட்டாளர்கள் உங்கள் தகவலைச் சரிபார்க்கின்றனர். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், OIB எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பலனடையும் உரிமையாளர்களாக உள்ள வேறு நபர்கள் எவரேனும் இருப்பின், அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடியே, அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளை உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைச் சரிசெய்வதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தால் (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ), சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையொப்பமிடவும்.

உங்கள் வணிகத்திற்கு உரிமையாளர்கள் இல்லை எனில், சான்றளிப்பில் கையொப்பமிடுமாறு அல்லது உங்களின் இயக்குநர்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் (JTD, KD)

பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை என்பது, வணிகச் செயல்பாட்டிற்காகப் பதிவுசெய்து OIB எண்ணைப் பெற்ற குறைந்தபட்சம் இரண்டு கூட்டாளர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும். பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகளுக்குச் சமபங்கு (equity) உள்ளது, மேலும் இந்தக் கூட்டாண்மை என்பது உரிமையாளர்களிடமிருந்து வேறுபட்ட தனிப்பட்ட சட்டப்பூர்வ நிறுவனமாகும்.

பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஓர் உரிமையாளர் அல்லது கூட்டாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய, உங்களின் வீட்டு முகவரி.
  • பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
  • சமபங்கு: வணிகத்தில் உங்களிடம் உள்ள சமபங்கு சதவீதம் (பொருந்தினால்).

உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்தும், நீங்கள் இன்னும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுகிறீர்கள் என்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் தங்களது வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடியான சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • OIB எண் (Osobni Identifikacijski Broj): வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் OIB.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: உங்களின் VAT பதிவு எண் (பொருந்தினால்).
  • வணிகத்தின் தொலைபேசி எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டில் உள்ள தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

குரோஷியாவில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் Shopify வங்கிப் கூட்டாளர்கள் உங்கள் தகவலைச் சரிபார்க்கின்றனர். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், OIB எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

உரிமையாளர்கள் மற்றும்/அல்லது கூட்டாளர்களாக உள்ள வேறு நபர்கள் எவரேனும் இருப்பின், அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடியே, அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளை உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைச் சரிசெய்வதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தால் (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ), சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையொப்பமிடவும்.

பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள்

பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை என்பது குறைந்தபட்சம் இரண்டு கூட்டாளர்களுக்குச் சொந்தமான வணிகமாகும், அவர்கள் OIB எண்ணைப் பெறுவதற்குப் பதிவு செய்திருக்கமாட்டார்கள், ஆனால் கூட்டாண்மை ஒப்பந்தத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த விஷயத்தில் உரிமையாளர்களே சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகின்றனர், மேலும் வணிகம் என்பது ஒரு தனி நிறுவனமல்ல.

பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஓர் உரிமையாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய, உங்களின் வீட்டு முகவரி.
  • பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
  • சமபங்கு: வணிகத்தில் உங்களிடம் உள்ள சமபங்கு சதவீதம் (பொருந்தினால்).

உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்தும், நீங்கள் இன்னும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுகிறீர்கள் என்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் தங்களது வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடியான சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: உங்களின் VAT பதிவு எண் (பொருந்தினால்).
  • வணிகத்தின் தொலைபேசி எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டில் உள்ள தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடியான வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

குரோஷியாவில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் Shopify வங்கிப் கூட்டாளர்கள் உங்கள் தகவலைச் சரிபார்க்கின்றனர். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

உரிமையாளர்கள் மற்றும்/அல்லது கூட்டாளர்களாக உள்ள வேறு நபர்கள் எவரேனும் இருப்பின், அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடியே, அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளை உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைச் சரிசெய்வதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தால் (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ), சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையொப்பமிடவும்.

பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள்

இலாப நோக்கற்ற நிறுவனம் (NPO) என்பது பங்குதாரர்களுக்கு லாபத்தை உருவாக்குவதைத் தவிர்த்து, பிற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். பொது அல்லது சமூக நலனுக்குச் சேவை செய்வதே இதன் முதன்மைப் பணியாகும். பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காகப் பதிவுசெய்து OIB எண்ணைப் பெற்றுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒரு இயக்குநர் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகி ஒருவரைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய, உங்களின் வீட்டு முகவரி.
  • பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
  • சமபங்கு: வணிகத்தில் உங்களிடம் உள்ள சமபங்கு சதவீதம் (பொருந்தினால்).

உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்தும், நீங்கள் இன்னும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுகிறீர்கள் என்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தங்களது வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடியான சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • OIB எண் (Osobni Identifikacijski Broj): வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் OIB.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: உங்களின் VAT பதிவு எண் (பொருந்தினால்).
  • வணிகத்தின் தொலைபேசி எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டில் உள்ள தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: வரி நிர்வாகத்தின் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

குரோஷியாவில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் Shopify வங்கிப் கூட்டாளர்கள் உங்கள் தகவலைச் சரிபார்க்கின்றனர். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், OIB எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

உங்கள் இயக்குநர் குழுவில் உள்ளவர்கள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் எவரேனும் இருப்பின், அவர்களை நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடியே, அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளை உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் இயக்குநர்களின் பெயர்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையொப்பமிடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்பு செயல்முறையை நிறைவு செய்யுமாறு அல்லது இயக்குநர் பதவியைக் காட்டும் ஆதார ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் ஆவணத்தைச் சமர்ப்பிக்க நீங்கள் விரும்பினால், உங்கள் கணக்கில் உள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவு செய்யப்படாத லாப நோக்கற்ற நிறுவனங்கள்

லாப நோக்கற்ற அமைப்பு (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டுவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். பொதுமக்களுக்கோ சமூகத்துக்கோ சேவையாற்றுவதே இதன் முதன்மை நோக்கம். பதிவு செய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்பிடம் OIB எண் இருக்காது, ஆனால் உள்ளூர் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு லாப நோக்கற்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.

பதிவு செய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்புகள் ஒரு முக்கிய முடிவெடுப்பவர் அல்லது அமைப்பாளரைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும், மேலும் அந்த நபரை ஒரு நிர்வாகியாகக் குறிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய, உங்களின் வீட்டு முகவரி.
  • பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
  • சமபங்கு: வணிகத்தில் உங்களிடம் உள்ள சமபங்கு சதவீதம் (பொருந்தினால்).

உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்தும், நீங்கள் இன்னும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுகிறீர்கள் என்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவு செய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்புகள் தங்கள் வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடியான சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: உங்களின் VAT பதிவு எண் (பொருந்தினால்).
  • வணிகத்தின் தொலைபேசி எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டில் உள்ள தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடியான வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

குரோஷியாவில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் Shopify வங்கிப் கூட்டாளர்கள் உங்கள் தகவலைச் சரிபார்க்கின்றனர். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், OIB எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

உங்கள் இயக்குநர் குழுவில் உள்ளவர்கள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் எவரேனும் இருப்பின், அவர்களை நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடியே, அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளை உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் இயக்குநர்களின் பெயர்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையொப்பமிடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்பு செயல்முறையை நிறைவு செய்யுமாறு அல்லது இயக்குநர் பதவியைக் காட்டும் ஆதார ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் ஆவணத்தைச் சமர்ப்பிக்க நீங்கள் விரும்பினால், உங்கள் கணக்கில் உள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.

ஏற்கப்படும் ஆவண வகைகள்

சரிபார்ப்புச் செயல்முறைக்கு உதவ, உங்கள் தனிப்பட்ட தகவலையும் சில சமயங்களில் உங்கள் வணிகத் தகவலையும் சரிபார்க்கக் குறிப்பிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும். குரோஷியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்குப் பின்வரும் ஆவண வகைகள் ஏற்கப்படும்.

அடையாள ஆவணங்கள்

அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்போது, ​​அவற்றில் உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர், பிறந்த தேதி (DOB) மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவை இருக்க வேண்டும். குரோஷியாவில் Shopify Paymentsஐப் பயன்படுத்தும்போது பின்வரும் அடையாள ஆவணங்கள் ஏற்கப்படும்:

  • Hrvatska putovnica (பாஸ்போர்ட்)
  • Vozačka dozvola (ஓட்டுநர் உரிமம்)
  • Osobna iskaznica (ID கார்டு) - முன்புறம் மற்றும் பின்புறத்தின் ஸ்கேன்கள் தேவை
  • Dozvola boravka (குடியுரிமை அனுமதி)

முகவரி ஆவணங்கள்

முகவரி ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்போது, ​​அவற்றில் உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர், உங்கள் Shopify Payments சுயவிவரத்தில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பட்ட முகவரி ஆகியவை இருக்க வேண்டும். மேலும் அதில் தேதியிருந்தால், அது ஏற்கப்படும் தேதி வரம்பிற்குள் இருக்க வேண்டும். குரோஷியாவில் Shopify Paymentsஐப் பயன்படுத்தும்போது பின்வரும் முகவரி ஆவணங்கள் ஏற்கப்படும்:

  • Osobna iskaznica (ID கார்டு) - முன்புறம் மற்றும் பின்புறத்தின் ஸ்கேன்கள் தேவை
  • Potvrda o bankovnom računu (வங்கி அறிக்கை) - 6 மாதங்களுக்குட்பட்ட தேதியிடப்பட்டது
  • Račun za komunalne usluge (பயன்பாட்டுப் பில்) - 6 மாதங்களுக்குட்பட்ட தேதியிடப்பட்டது

வணிகச் சரிபார்ப்பு ஆவணங்கள்

நிறுவன அல்லது அமைப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்போது, உங்கள் Shopify Payments சுயவிவரத்தில் நீங்கள் சேர்க்கும் வணிகப் பெயருடன் பொருந்தும் முழுமையான வணிகப் பெயர், OIB எண் மற்றும் உங்கள் Shopify Payments சுயவிவரத்தில் உள்ள முகவரியுடன் பொருந்தும் வணிக முகவரி ஆகியவை அவற்றில் இருக்க வேண்டும். குரோஷியாவில் Shopify Paymentsஐப் பயன்படுத்தும்போது பின்வரும் வணிக ஆவணங்கள் ஏற்கப்படும்:

  • Izvadak iz sudskog registra (இணைவாக்கச் சான்றிதழ்)
  • Izjava o osnivanju/Društveni ugovor/Statut (சங்கத்தின் விதிகள்)
  • Rješenje o upisu u registar PDV obveznika (மதிப்புக்கூட்டு வரிப் பதிவு)

உரிமை ஆவணங்கள்

உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனத்தின் பெயரையும், உங்கள் வணிகத்தின் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களின் முழுமையான பெயர்கள் அனைத்தையும் காட்டும் பட்சத்தில், உரிமை அல்லது இயக்குநர் பதவிக்கான ஆதாரமாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படும்.

உரிமையாளர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஆவணங்கள்:

  • Osnivački akt (நிறுவனச் சாசனம்)
  • Izvod iz registra trgovačkih društava (கார்ப்பரேட் தகுதிச் சான்றிதழ்)
  • Ugovor o partnerstvu (கூட்டாண்மை ஒப்பந்தங்கள்)
  • Osnivački dokument (பதிவு ஆவணம்)
  • Registar stvarnih vlasnika (முழுமையாகப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)

இயக்குநர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஆவணங்கள்:

  • Osnivački akt (நிறுவனச் சாசனம்)
  • Izvod iz registra trgovačkih društava (கார்ப்பரேட் தகுதிச் சான்றிதழ்)
  • Osnivački dokument (பதிவு ஆவணம்)
  • Registar stvarnih vlasnika (முழுமையாகப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)

உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பலனடையும் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு, உரிமையாளர் (Owner) என்ற பங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். வணிகப் பங்குகளில் 25% அல்லது அதற்கும் அதிகமாக வைத்திருப்பவர் பலனடையும் உரிமையாளர் என வரையறுக்கப்படுகிறார். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.

உங்கள் வணிகத்தில் பலனடையும் உரிமையாளர்கள் எவரும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக நீங்கள் இயக்குநர்களைச் சரிபார்க்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில், இயக்குநர்களுக்காக மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்கள் தகுதிபெறும். உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு இயக்குநரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு, இயக்குநர் (Director) என்ற பங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.

உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றால், உங்கள் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்கள் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்யவும், பிறகு கையொப்பமிடு (Sign) பொத்தானை அழுத்துவதன் மூலம் டிஜிட்டல் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவு செய்யவும்.

ஆவணப் பணி இணக்கத்தை உறுதிசெய்தல்

ஆவணங்களை வழங்கும்போது, ​​அவை தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிசெய்யவும். இணக்கத்தை உறுதிப்படுத்தப் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்:

  • துல்லியம்: உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல் உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ளவற்றுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும்.
  • தெளிவு மற்றும் வாசிக்கக்கூடிய தன்மை: உங்களின் ஆவணங்கள் படிப்பதற்குப் போதுமான அளவு பெரிதாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். முழு ஆவணமும் புகைப்படத்தில் தெரிவதை உறுதிசெய்யவும்.
  • முழுமைத்தன்மை: தேவையான விவரங்கள் அனைத்தும் உங்கள் ஆவணத்தில் தெரிவதை உறுதிசெய்யவும். ஆவணத்தில் எந்தெந்த விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏற்கப்படும் ஆவண வகைகளைப் பார்க்கவும்.
  • அசல் ஆவணங்கள்: கேமராவைப் பயன்படுத்தி உங்கள் ஆவணத்தின் அசல் புகைப்படத்தை எடுக்கவும். உங்கள் ஆவணங்களை நகலெடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ அல்லது திரைப்பிடிப்பு எடுக்கவோ வேண்டாம். பிற ஆவணங்களில் ஆவணங்களின் புகைப்படங்களை ஒட்ட வேண்டாம். கணினித் திரைகள் அல்லது பிரிண்ட்அவுட்களின் புகைப்படங்களை எடுக்க வேண்டாம்.
    • உங்கள் ஆவணம் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டிருந்தால், அனைத்துப் பக்கங்களையும் கொண்ட PDF கோப்பினை எவ்வித மாற்றங்களும் செய்யாமல் அசலாக வழங்கப்பட்டபடியே சமர்ப்பிக்கவும்.
  • செல்லுபடியாகும் தன்மை: புகைப்பட IDகளின் காலம் முடிவடையவில்லை என்பதையும், முகவரிக்கான ஆதாரம் சமீபத்தில் வழங்கப்பட்டது என்பதையும் உறுதிசெய்யவும். வணிகப் பதிவுக்கான ஆதாரத்தை வழங்கினால், உங்கள் வணிகம் இன்னும் செயலில் பதிவு செய்யப்பட்டு, நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், இந்தப் பொதுவான பழக்கப்படுத்துதல் சிக்கல்களையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கவும்.

எனது ஆவணம் நிராகரிக்கப்பட்டது

உங்கள் கணக்கில் உள்ள தகவல் உங்கள் ஆவணத்துடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, தேவைப்பட்டால் உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும். உங்கள் ஆவணங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இந்தப் பக்கத்தில் உள்ள பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:

எனது முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை

குரோஷியாவுக்கான Shopify Payments இல், உங்கள் முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், செல்ஃபி எடுக்கும் செயல்முறையை நிறைவு செய்யுமாறு அல்லது முகவரிக்கான ஆதார ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.

செல்ஃபி எடுக்கும் செயல்முறையை நிறைவு செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது. சரிபார்ப்பு தேவைப்படும் தனிநபர் செல்ஃபி (Selfie) பொத்தானைக் கிளிக் செய்து, அவர்களின் புகைப்பட IDயையும் அவர்களையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்துச் சரிபார்க்கலாம். முகவரிக்கான ஆதார ஆவணத்தை வழங்குவதற்குப் பதிலாக, நீங்கள் செல்ஃபி எடுக்கும் செயல்முறையை நிறைவு செய்யலாம்.

நீங்கள் ஆவணத்தை மேனுவலாக வழங்க விரும்பினால், அவ்வாறே செய்யலாம். முகவரிச் சான்று ஆவணங்களில் உங்கள் முழுப் பெயர் மற்றும் வீட்டு முகவரி இருக்க வேண்டும், மேலும் அது ஏற்கப்பட்ட ஆவண வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்கள் ஆவணத்தைப் பதிவேற்றுவதற்கு முன்பு:

  1. உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள முகவரி, உங்கள் முகவரிச் சான்று ஆவணத்தில் உள்ள முகவரியுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  2. தேவையெனில், ஆவணத்தில் உள்ளபடி உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
  3. ஆவணத்தில் உங்கள் முழுப் பெயர் இருப்பதை உறுதிப்படுத்தவும். வேறொருவர் பெயரிலுள்ள மின்கட்டணம் அல்லது பிற பயன்பாட்டுக் கட்டண ரசீது உங்களிடம் இருந்தால், நீங்கள் வேறு ஆவணத்தை வழங்க வேண்டும்.
  4. ஆவணத்தின் தெளிவான புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
எனது உரிமையாளர் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை

Shopify Payments குரோஷியாவிற்கு, அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர் பெயர்களுடன் பொருந்துமாறு உங்கள் உரிமையாளர் தகவல்களை உள்ளிட வேண்டும். பதிவேட்டில் உள்ள உரிமையாளர் தகவலைப் பார்த்து, அதில் உள்ளபடியே பெயர்களை உள்ளிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு உரிமையாளர்கள் எவரும் இல்லை எனில், அதற்குப் பதிலாகக் கணக்கில் உள்ள உங்கள் இயக்குநர்கள் அனைவரையும் பட்டியலிட வேண்டும்.

நீங்கள் அவ்வாறு செய்தும் உங்களின் உரிமையாளர் அல்லது இயக்குநர் தகவலை இன்னும் சரிபார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் வழங்கிய தகவல் சரியானதுதான் என டிஜிட்டல் முறையில் சான்றளிக்க உங்கள் சரிபார்ப்புப் பக்கத்தில் உள்ள கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் விரும்பினால், சான்றளிக்கும் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிடும் உரிமையாளர் மற்றும் இயக்குநர் தகவல், நீங்கள் பதிவேற்றும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் பொருந்த வேண்டும். உங்கள் ஆவணத்தில் உரிமையாளர் அல்லது இயக்குநர் பட்டியலிடப்பட்டிருந்து, அது உங்கள் Shopify Payments கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றால், அந்த நபரை உங்கள் கணக்கில் சேர்த்து, அவருக்கு உரிமையாளர் அல்லது இயக்குநர் பங்கினை ஒதுக்க வேண்டும். உரிமையைச் சரிபார்க்க நீங்கள் வழங்கக்கூடிய ஆவண வகைகளின் பட்டியல் இங்கே கிடைக்கிறது.

உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்களும் இயக்குநர்களும் உங்கள் ஆவணத்துடன் துல்லியமாகப் பொருந்துகிறார்களா என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். ஆவணங்களில் இல்லாத கூடுதல் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களைப் பட்டியலிட வேண்டாம்.

எனது வணிகத் தகவல் சரிபார்க்கப்படவில்லை

குரோஷியாவில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் வணிகத் தகவலை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்க்கிறார்கள். உங்கள் வணிகத்தைச் சரிபார்க்க முடியவில்லை எனில், பின்வரும் விவரங்களைச் சரிபார்க்கவும்:

  • பெரிய மற்றும் சிறிய எழுத்துகள், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் உட்பட, பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர் வரி நிர்வாகப் பதிவேட்டில் உள்ளது போலவே சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் OIB எண் (Osobni Identifikacijski Broj) சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் வணிக முகவரி வரி நிர்வாகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரியுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

உங்கள் தகவலை இன்னும் சரிபார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கும். ஆவணத்தில் உள்ள தகவல் உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டவற்றுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

எனது வங்கிக் கணக்குத் தகவல் வேலை செய்யவில்லை

வங்கிக் கணக்குத் தேவைகளை உங்கள் கணக்கு பூர்த்தி செய்கிறது என்பதையும், ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகையை நீங்கள் பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்தவும். குரோஷிய IBAN 21 எழுத்துருக்களைக் கொண்டது, இது HR என்ற முன்னொட்டுடன் தொடங்கும்.

உங்கள் பேஅவுட் தோல்வியடைந்தால், கணக்குத் தகவலைச் சரியாக உள்ளிட்டுள்ளீர்களா மற்றும் ஆதரிக்கப்படும் கணக்கு வகையைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் கணக்கில் SEPA பரிமாற்றங்களைப் பெற முடியுமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

விர்ச்சுவல் வங்கிக் கணக்கில் எனது பேஅவுட்கள் தோல்வியடைகின்றன

பேஅவுட்களுக்கு Revolut மற்றும் Payoneer போன்ற விர்ச்சுவல் வங்கிக் கணக்குகள் ஏற்கப்படுகின்றன. ஆனால், வழக்கமான வங்கிக் கணக்குகளை விட இவற்றில் பேஅவுட் தோல்வி விகிதம் அதிகமாக இருக்கும். உங்கள் பேஅவுட்கள் தோல்வியடைந்தால், அதற்குப் பதிலாக வழக்கமான வங்கிக் கணக்கைப் பரிசீலிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குரோஷியாவில் உள்ள Shopify Payments தேவைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் இந்தக் கேள்விகளைப் பார்க்கவும்.

நான் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது லாப நோக்கமற்ற அமைப்பை வைத்துள்ளேன். உங்களுக்கு எனது புகைப்பட ID அல்லது முகவரிச் சான்று ஏன் தேவை?

நீங்கள் நிறுவனம், கூட்டாண்மை அல்லது லாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவுசெய்திருந்தாலும், குரோஷியாவில் உள்ள ஒழுங்குமுறைச் சட்டங்களின்படி வணிகத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடங்கள் ஆகியவற்றை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்க்க வேண்டும்.

நான் குரோஷிய குடிமகன், ஆனால் தற்போது அங்கு வசிக்கவில்லை. நான் Shopify Payments குரோஷியாவைப் பயன்படுத்தலாமா?

உங்கள் வணிக வகை 'தனிநபர்' எனில், Shopify Payments குரோஷியாவைப் பயன்படுத்த, நீங்கள் குரோஷியாவில் வசிப்பது அவசியம். நீங்கள் தற்போது குரோஷியாவில் வசிக்கவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்க வேண்டும்.

உங்கள் ஸ்டோர் முகவரியைத் தற்போதைய இருப்பிடத்திற்குப் புதுப்பிக்கவும். உங்கள் இருப்பிடம் Shopify Payments வசதிக்குத் தகுதிபெற்றிருந்தால், நீங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்கலாம்.

உங்களுடையது கூட்டாண்மை, நிறுவனம் அல்லது லாப நோக்கமற்ற வகையாக இருந்தால், நீங்கள் நேரடியாகக் குரோஷியாவில் வசிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உங்கள் வணிகம் அங்குப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் குரோஷிய வணிக முகவரியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

நான் ஒரு கூட்டாண்மையை வைத்துள்ளேன், நீங்கள் OIB எண்ணைக் கேட்கிறீர்கள், ஆனால் என்னிடம் அது இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

கூட்டாண்மைக்காக உங்களிடம் OIB எண் கேட்கப்பட்டு, ஆனால் அது உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் தவறான வணிக வகையாக அமைக்கப்பட்டுள்ளீர்கள். கணக்கை அமைக்கும் செயல்முறையில் நீங்கள் இருந்தால், வணிக வகையைத் தேர்ந்தெடுக்கும் திரைக்குச் சென்று, பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை (Unregistered partnership) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஏற்கனவே கணக்கை அமைத்திருந்து, சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக OIB எண் கேட்கப்பட்டால், அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் சென்று உங்கள் வணிக வகையைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக விவரங்களுக்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வணிக வகையைப் புதுப்பிப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

நான் ஒரு தனி வியாபாரி. உங்களுக்கு எனது வணிகப் பதிவு அல்லது தகவல் தேவையா?

நீங்கள் ஒரு தனி வியாபாரி என்றால், குரோஷியாவில் வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, உரிமையாளரின் தனிப்பட்ட தகவலை மட்டுமே சேகரித்துச் சரிபார்க்க வேண்டிய தேவை Shopify-க்கு இருக்கிறது.

நீங்கள் ஒரு தனி வியாபாரி என்றால், வேறு வணிக வகையாகப் பதிவுசெய்ய முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், சரிபார்ப்பில் உங்களுக்குச் சிக்கல் ஏற்படலாம்.

நான் ஒரு பொது வர்த்தக நிறுவனம். நான் எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் (Limited liability company) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான செயல்முறை ஒன்றுதான். உரிமையாளர்களைச் சேர்க்கக் கோரும் கணக்கு அமைவுப் படிவப் பகுதியை நீங்கள் தவிர்க்கலாம். பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லை என்றால், அவர்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.

குரோஷியாவில் நீங்கள் ஒரு பொது வர்த்தக நிறுவனமாக இருந்து, ஏற்கனவே Shopify Payments கணக்கை அமைத்திருந்து, தற்போது சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உரிமையாளர் தகவல் கேட்கப்பட்டால், உங்களுக்கு உரிமையாளர்கள் எவரும் இல்லை என்பதைக் காட்டும் வகையில் உங்கள் உரிமையாளர் விவரங்களைப் புதுப்பிக்கவும். கோப்பில் உள்ள எந்தவொரு நபரிலிருந்தும் உரிமையாளர் (Owner) பங்கை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்கள் அனைவரும் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதையும் அவர்களுக்கு இயக்குநர் (Director) பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தவும்.

பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர் தகவல் சரியானதுதானா என உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்படலாம். அது சரியாக இருப்பதை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், கோப்பில் உள்ள தகவலுக்கு டிஜிட்டல் முறையில் சான்றளிக்க கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இந்தச் செயல்முறையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

என்னிடம் OIB எண் இல்லை, ஆனால் நான் ஒரு தனிநபர் அல்லது தனி வியாபாரி அல்ல

உங்களிடம் OIB இல்லை என்றால், பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் மற்றும் பதிவுசெய்யப்படாத லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கான வணிக வகை விருப்பங்கள் மட்டுமே Shopify-இல் கிடைக்கின்றன. இந்த இரண்டு வணிக வகைகளுமே, குரோஷியாவில் தங்களை ஒரு வணிக நிறுவனமாகப் பதிவுசெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் பொருந்தக்கூடிய வணிக ஆவணங்களை வழங்க வேண்டும்.

இந்த வணிக வகைகளில் ஏதேனும் ஒன்று உங்கள் வணிகத்திற்குப் பொருந்தவில்லை என்றால், தனிநபர் / தனி வியாபாரி என்பதைத் தேர்ந்தெடுத்து, முக்கிய முடிவெடுப்பவர் அல்லது உரிமையாளரைக் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்கவும்.

எனது கணக்கு ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுவிட்டது. புதிய தகவலை வழங்குமாறு நான் ஏன் கேட்கப்படுகிறேன்?

ஒழுங்குமுறை மற்றும் நிதி கூட்டாளர் தேவைகள் காலப்போக்கில் மாறுகின்றன. அப்படி நடக்கும்போது, நீங்கள் தொடர்ந்து இணங்கியிருக்கக் கூடுதல் தகவல்களை வழங்க வேண்டியிருக்கும். உங்கள் நிர்வாகிப் பக்கத்தில் ஒரு பேனர் அல்லது விழிப்பூட்டல் மூலமாகவும் அதற்கான மின்னஞ்சல் மூலமாகவும் இந்தக் கோரிக்கைகளைப் பெறுவீர்கள். Shopify Payments சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த, இந்தக் கோரிக்கைகளை நீங்கள் நிறைவு செய்ய வேண்டும்.

எனது Shopify Payments கணக்குத் தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?

கணக்குச் சரிபார்ப்பை நிறைவுசெய்யுமாறு நீங்கள் கேட்கப்பட்டால், சரிபார்ப்புப் பக்கத்திலிருந்து உங்கள் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளலாம், அத்துடன் கோரப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம்.

சரிபார்ப்புச் செயல்முறைக்கு வெளியே, கடையின் உரிமையாளர் இந்த விவரங்களை அமைப்புகள் > பொது > வணிக விவரங்கள் மூலம் புதுப்பிக்கலாம். வணிக வகை உட்பட வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க, உங்கள் வணிக நிறுவனத்திற்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, பின்னர் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் இங்கு செய்யும் எந்தவொரு மாற்றங்களும் மதிப்பாய்வுக்காக எங்கள் வங்கிப் கூட்டாளர்களுக்குத் தானாகவே அனுப்பப்படும், மேலும் புதிய தகவல் அவர்களின் சரிபார்ப்புச் செயல்முறையின் மூலம் மீண்டும் சரிபார்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். மாற்றங்கள் தானாகவே மீண்டும் சரிபார்க்கப்படலாம், ஆனால் அதற்கான துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் உங்களிடம் கேட்கப்படலாம்.

எனது சரிபார்ப்பிற்கான காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?

சரிபார்ப்பு நடைமுறை நிறைவடையும் வரை உங்கள் பேஅவுட்களில் தற்காலிக இடைநிறுத்தத்தைக் காண்பீர்கள். முதல் காலக்கெடு முடிந்து பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, Shopify Payments மூலம் ஆர்டர்களை ஏற்கும் உங்கள் திறன் எப்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைக் குறிக்கும் இரண்டாவது காலக்கெடுவை நீங்கள் காணலாம்.

இந்த இடைநிறுத்தங்கள் அனைத்தும் தற்காலிகமானவை, நீங்கள் சரிபார்ப்பை நிறைவுசெய்த பிறகு அவை தானாகவே நீக்கப்படும். உங்கள் காலக்கெடுவுக்கு, உங்கள் நிர்வாகப் பக்கத்தைப் பார்க்கவும்.

ஜூன் 2026 முதல், முற்றிலும் புதிய Shopify Payments குரோஷியா கணக்குகளின் சரிபார்ப்பை நிறைவுசெய்ய, அவற்றின் முதல் ஆர்டர் செயலாக்கப்பட்டதிலிருந்து 90 நாட்கள் கால அவகாசம் இருக்கும். 90 நாட்கள் கடந்துவிட்டால், Shopify Payments மூலம் நீங்கள் செயலாக்கிய ஆர்டர்களுக்கான பணம் தானாகவே திரும்ப வழங்கப்படலாம்.

இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், அத்துடன் ஜூன் 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை உங்களுக்குப் பொருந்தினால், பணத்தைத் திரும்பப்பெறுதல் எப்போது செயலாக்கப்படும் என்பதை எச்சரிக்கைகள் கடையின் உரிமையாளருக்குத் தெரிவிக்கும்.

குரோஷியாவிலுள்ள Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன்

Shopify ஆதரவை அணுகுவதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க இந்தத் தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்:

  • வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கியமான தகவல்கள் நீக்கப்பட்டு நீங்கள் பெற்ற ஏதேனும் பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள்
  • அமைவின்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக வகை
  • உங்கள் OIB எண் (Osobni Identifikacijski Broj) (பொருந்தினால்)
  • நீங்கள் சிக்கலைச் சந்தித்த குறிப்பிட்ட படி
  • நீங்கள் பயன்படுத்தும் உலாவி மற்றும் சாதனம்
  • முழுக் கணக்கு எண்ணைப் பகிராமல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் (IBAN, கணக்கு வகை, நாணயம்)
  • நீங்கள் பதிவேற்றிய ஏதேனும் ஆவணங்கள் மற்றும் அவற்றைப் பதிவேற்றிய நேரம்

இந்தத் தகவலைத் தயாராக வைத்திருப்பது, உங்களுக்குச் சிறப்பாக உதவ Shopify ஆதரவுக்கு உதவும்.