சைப்ரஸில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் தேவைகள்
சைப்ரஸில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன், விதிமுறைகளுக்கு இணங்கவும் நிதிக் குற்றங்களைத் தடுக்கவும் நடைமுறையில் உள்ள தேவைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட தகவல் ஏன் சேகரிக்கப்படுகிறது, ஏற்றுக்கொள்ளப்படும் ஆவண வகைகள் ஆகியவற்றை இந்தக் கட்டுரை விவரிப்பதுடன், உங்களின் ஆவணங்கள் அவசியமான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்வதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
இந்தப் பக்கத்தில்
- சைப்ரஸில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- தகவலைச் சேகரிப்பதன் நோக்கம்
- சைப்ரஸில் Shopify Payments-ஐச் செயல்படுத்த தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்கள்
- ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்
- ஆவண இணக்கத்தை உறுதிசெய்தல்
- பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- சைப்ரஸில் உள்ள Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
சைப்ரஸில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
சைப்ரஸில் Shopify Payments-ஐ நீங்கள் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்:
- தகுதியான வணிக வகைகள்: குறிப்பிட்ட சில வகையான வணிகங்களும் சேவைகளும் Shopify Payments-ஐப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் வணிகம் தகுதியுடையதா என்பதைத் தீர்மானிக்க, Shopify Payments சேவை விதிமுறைகளில் உள்ள சைப்ரஸிற்காகத் தடைசெய்யப்பட்ட வணிக வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
- வங்கிக் கணக்குத் தேவைகள்: உங்கள் வங்கிக் கணக்கை Shopify Payments-உடன் இணைப்பதற்கு முன், அது பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- வங்கிக் கணக்கு EUR நாணயத்தில் இருக்க வேண்டும்.
- இந்த வங்கிக் கணக்கிற்கு சிங்கிள் யூரோ பேமெண்ட்ஸ் ஏரியா (SEPA) பரிமாற்றங்களைச் செய்வதற்கான தகுதி இருக்க வேண்டும்.
- வங்கிக் கணக்கானது பின்வரும் நாட்டுக் குறியீடுகளில் ஏதேனும் ஒன்றில் தொடங்கும் சர்வதேச வங்கிக் கணக்கு எண்ணைக் (IBAN) கொண்டிருக்க வேண்டும்: AT, BE, BG, CH, CY, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE, அல்லது SI.
ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகைகள்
குறிப்பிட்ட சில வங்கிக் கணக்கு வகைகள் Shopify Payments-உடன் இணக்கமாக இருப்பதில்லை. பின்வரும் கணக்கு வகைகள் ஆதரிக்கப்படவில்லை:
- வயர் பரிமாற்றங்களை மட்டுமே ஏற்கும் நடப்புக் கணக்குகள்: இந்தக் கணக்குகள் Shopify Payments-உடன் செயல்படாது.
- சேமிப்புக் கணக்குகள்: Shopify Payments பேஅவுட்களுக்குச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்த முடியாது.
- Flex-currency கணக்குகள்: ஒரே நேரத்தில் பல நாணயங்களை ஆதரிக்கும் கணக்குகள் ஆதரிக்கப்படுவதில்லை.
- பணப் பரிமாற்றச் சேவைகள்: சில ஃபின்டெக் பிளாட்ஃபார்ம்கள் போன்று, வங்கிக் கணக்குகளைப் போலவே செயல்படும் சேவைகளை Shopify Payments-உடன் பயன்படுத்த முடியாது.
Shopify சாராத மெய்நிகர் கணக்குகளுக்கு ஆதரவு இருந்தாலும், இந்தக் கணக்குகளில் அதிகளவில் பேஅவுட் தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
உங்கள் பிராந்தியத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள பரிமாற்ற வகையை உங்கள் கணக்கு ஏற்குமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
தகவலைச் சேகரிப்பதன் நோக்கம்
நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சைப்ரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க, நீங்களும் உங்கள் வணிகம் குறித்த தகவல்களையும் சேகரித்து சரிபார்க்க வேண்டியது Shopify மற்றும் அதன் வங்கிக் கூட்டாளர்களுக்கு அவசியமாகும். உள்ளூர் விதிகளும் விதிமுறைகளும் மாறுபடும்போது, உங்கள் Shopify Payments கணக்கின் முழு ஆயுட்காலத்திலும் கூடுதல் தகவல்களை வழங்குமாறு கோருவதற்காக, Shopify மற்றும் அதன் வங்கிக் கூட்டாளர்களால் நீங்கள் தொடர்புகொள்ளப்படலாம்.
சேகரிக்கப்படும் தகவலானது வணிகத்தின் அடையாளம், வணிகத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் அடையாளங்கள் மற்றும் இரண்டுக்கும் இடையிலான உறவின் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
Shopify ஒருபோதும் அஞ்சல் மூலமாக ஆவணங்களை உங்களுக்கு அனுப்பாது. ஏதேனும் முக்கியமான ஆவணங்கள் அல்லது தகவல்தொடர்புகள் மின்னஞ்சல் செய்யப்படுகின்றன அல்லது உங்கள் Shopify நிர்வாகியின் அமைப்புகள் > பயனர்கள் பக்கத்தில் கடையின் உரிமையாளருக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கச் செய்யப்படுகின்றன.
உங்கள் தகவல் எவ்வாறு ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுகிறது என்பதைப் பற்றி அறிய, Shopify-இன் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.
சைப்ரஸில் Shopify Payments-ஐச் செயல்படுத்தத் தேவைப்படும் தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்
நீங்கள் வழங்க வேண்டிய தகவல் உங்கள் வணிக வகையைப் பொறுத்து மாறுபடும் என்பதால், உங்கள் வணிக வகையைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்யவும்.
எந்தவொரு அரசு நிறுவனத்திலும் பதிவுசெய்யாமல் வணிகத்தை நடத்தினாலோ பதிவுசெய்திருந்தும் தனி உரிமையாளராக வணிகத்தை நடத்தினாலோ, Individual / Sole Trader (தனிநபர் / தனி உரிமையாளர்) வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து, வரி அடையாள எண்ணைக் கொண்டிருந்தால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- வரி அடையாள எண்களைக் கொண்ட கூட்டாண்மைகள் இணைக்கப்பட்ட கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- வரி அடையாள எண்களைக் கொண்ட லாப நோக்கற்ற அமைப்புகள் இணைக்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பு வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- வரி அடையாள எண்களைக் கொண்ட மற்ற அனைத்து வணிகங்களும் தனியார் நிறுவனம் வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட வணிகம் இருந்தும், வரி அடையாள எண் இல்லை என்றால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- வரி அடையாள எண்கள் இல்லாத கூட்டாண்மைகள் இணைக்கப்படாத கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- வரி அடையாள எண்கள் இல்லாத லாப நோக்கற்ற அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் இணைக்கப்படாத லாப நோக்கற்ற அமைப்பு வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியவில்லை எனில், சரியானதைத் தேர்ந்தெடுக்க Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு உதவி பெறவும்.
தனிநபர்கள் / தனி உரிமையாளர்கள்
தனிநபர்கள் என்பவர்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யாமல் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்கள். தனி உரிமையாளர்கள் என்பவர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களின் கீழ் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒற்றை உரிமையாளர் வணிகங்கள். இவை இரண்டும் சைப்ரஸில் வாழும் ஒரு தனிநபரால் சொந்தமாக நடத்தப்படும் மற்றும் கட்டுப்படுத்தப்படும் வணிகங்களாகும், இதில் சுயாதீனப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் சிறு வணிக நடத்துநர்களும் அடங்குவர்.
இந்த வணிக வகைகள் ஒரே மாதிரியாகவே கருதப்படுகின்றன, மேலும் அவை ஒரே மாதிரியான தகவல்களை வழங்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் தனி உரிமையாளர்கள் இவற்றை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளபடி உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும் செயலில் உள்ள ஃபோன் எண்.
- சைப்ரஸில் உள்ள குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவற்றுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
உங்கள் தகவலை தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்வதன் மூலம் அந்தக் கோரிக்கைக்குத் தீர்வு காண முடியும்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
தனியார் நிறுவனங்கள் (LTD)
தனியார் நிறுவனம் என்பது ஒரு வணிகமாகும், அதன் பங்கு மதிப்புகள் பங்குகளாகப் பிரிக்கப்பட்டு பங்குதாரர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். ஒரு நிறுவனம் அதை நடத்துபவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறது. அவை பொதுவாக ஒரு இயக்குநர் குழுவையும் கொண்டிருக்கும்.
தனியார் நிறுவனங்கள் ஒரு பலனடையும் உரிமையாளரை அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகி ஒருவரைத் தங்களின் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளபடி உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும் செயலில் உள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவற்றுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
- பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
- பங்கு மதிப்பு: பொருந்துமாயின், வணிகத்தில் உங்களிடம் உள்ள பங்கு மதிப்பின் சதவீதம்.
உங்கள் தகவலை தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்வதன் மூலம் அந்தக் கோரிக்கைக்குத் தீர்வு காண முடியும்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
தனியார் நிறுவனங்கள் வணிகம் குறித்துப் பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வரித் துறைப் பதிவேட்டில் உள்ளபடி சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- வரி அடையாள எண் (TIN): உங்கள் நிறுவனப் பதிவு எண் (எ.கா: HE123456) அல்லது உங்கள் வரி அடையாளக் குறியீடு (எ.கா: 12345678A). உங்கள் வணிகப் பதிவு ஆவணத்தில் உள்ள எண்ணை நீங்கள் வழங்க வேண்டும்.
- VAT எண்: பொருந்துமாயின், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: வரித் துறைப் பதிவேட்டில் உள்ளபடி வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
சைப்ரஸில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு உங்கள் தகவல்களை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்க்கின்றனர். எழுத்து வகை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைக் கவனமாகக் கையாளவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், வரி அடையாள எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைப் படித்துப் பார்க்கவும்.
நிறுவனத்தின் பலனடையும் உரிமையாளர்களாக உள்ள பிற நபர்கள் எவரேனும் இருந்தால், அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளவாறு அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகள் ஆகியவற்றைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ID-யையோ முகவரிச் சான்றையோ வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்க்கச் சான்றில் கையொப்பமிடுவதே விரைவான வழியாகும். எனினும், நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். உங்களின் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தால் (முழுமையாகவோ பகுதியாகவோ), சரிபார்ப்பை நிறைவுசெய்யச் சான்றில் கையொப்பமிடவும்.
உங்கள் வணிகத்திற்கு உரிமையாளர்கள் எவரும் இல்லை என்றால், நீங்கள் ஒரு சான்றில் கையொப்பமிட அல்லது அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் உள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள்
இணைக்கப்பட்ட கூட்டாண்மை என்பது குறைந்தது இரண்டு கூட்டாளர்களுக்காவது சொந்தமான வணிகமாகும், அவர்கள் வணிக நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்து வரி அடையாள எண்ணைப் பெற்றிருப்பார்கள். இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் பங்கு மதிப்பைக் கொண்டுள்ளன, மேலும் இந்தக் கூட்டாண்மை அதன் உரிமையாளர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனி நிறுவனமாகும்.
இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக உரிமையாளரை அல்லது கூட்டாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளபடி உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும் செயலில் உள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவற்றுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
- பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
- பங்கு மதிப்பு: பொருந்துமாயின், வணிகத்தில் உங்களிடம் உள்ள பங்கு மதிப்பின் சதவீதம்.
உங்கள் தகவலை தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்வதன் மூலம் அந்தக் கோரிக்கைக்குத் தீர்வு காண முடியும்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் வணிகம் குறித்துப் பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வரித் துறைப் பதிவேட்டில் உள்ளபடி சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- வரி அடையாள எண் (TIN): உங்கள் நிறுவனப் பதிவு எண் (எ.கா: HE123456) அல்லது உங்கள் வரி அடையாளக் குறியீடு (எ.கா: 12345678A). உங்கள் வணிகப் பதிவு ஆவணத்தில் உள்ள எண்ணை நீங்கள் வழங்க வேண்டும்.
- VAT எண்: பொருந்துமாயின், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: வரித் துறைப் பதிவேட்டில் உள்ளபடி வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
சைப்ரஸில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு உங்கள் தகவல்களை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்க்கின்றனர். எழுத்து வகை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைக் கவனமாகக் கையாளவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், வரி அடையாள எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைப் படித்துப் பார்க்கவும்.
உரிமையாளர்கள் அல்லது கூட்டாளர்களாக இருக்கும் வேறு எவரேனும் இருந்தால், அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளவாறு அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகள் ஆகியவற்றைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ID-யையோ முகவரிச் சான்றையோ வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்க்கச் சான்றில் கையொப்பமிடுவதே விரைவான வழியாகும். எனினும், நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். உங்களின் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தால் (முழுமையாகவோ பகுதியாகவோ), சரிபார்ப்பை நிறைவுசெய்யச் சான்றில் கையொப்பமிடவும்.
இணைக்கப்படாத கூட்டாண்மைகள்
இணைக்கப்படாத கூட்டாண்மை என்பது குறைந்தது இரண்டு கூட்டாளர்களுக்காவது சொந்தமான வணிகமாகும், அவர்கள் வரி அடையாள எண்ணுக்காகப் பதிவு செய்திருக்கமாட்டார்கள், ஆனால் கூட்டாண்மை ஒப்பந்தத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் உரிமையாளர்களே சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறார்கள், மேலும் வணிகம் என்பது தனி நிறுவனம் அல்ல.
இணைக்கப்படாத கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் பிரதிநிதியாக உரிமையாளர் ஒருவரைக் குறிப்பிட வேண்டும். கணக்கின் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளபடி உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும் செயலில் உள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவற்றுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
- பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
- பங்கு மதிப்பு: பொருந்துமாயின், வணிகத்தில் உங்களிடம் உள்ள பங்கு மதிப்பின் சதவீதம்.
உங்கள் தகவலை தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்வதன் மூலம் அந்தக் கோரிக்கைக்குத் தீர்வு காண முடியும்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்படாத கூட்டாண்மைகள், வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடி, சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- VAT எண்: பொருந்துமாயின், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
சைப்ரஸில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு உங்கள் தகவல்களை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்க்கின்றனர். எழுத்து வகை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைக் கவனமாகக் கையாளவும்.
வணிகத்தைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயரும் வணிக முகவரியும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்.
உரிமையாளர்கள் அல்லது கூட்டாளர்களாக இருக்கும் வேறு எவரேனும் இருந்தால், அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளவாறு அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகள் ஆகியவற்றைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ID-யையோ முகவரிச் சான்றையோ வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்க்கச் சான்றில் கையொப்பமிடுவதே விரைவான வழியாகும். எனினும், நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். உங்களின் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தால் (முழுமையாகவோ பகுதியாகவோ), சரிபார்ப்பை நிறைவுசெய்யச் சான்றில் கையொப்பமிடவும்.
இணைக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள்
இலாப நோக்கற்ற நிறுவனம் (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கு இலாபத்தை உருவாக்குவதைத் தவிர பிற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். பொது அல்லது சமூக நலனுக்குச் சேவை செய்வதே இதன் முதன்மைப் பணியாகும். இணைக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள், வணிக நோக்கங்களுக்காகப் பதிவுசெய்யப்பட்டு வரி அடையாள எண்ணைப் பெற்றுள்ளன.
இணைக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள், ஒரு இயக்குநர் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகி ஒருவரைக் கணக்கின் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்கின் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளபடி உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும் செயலில் உள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவற்றுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
- பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
- பங்கு மதிப்பு: பொருந்துமாயின், வணிகத்தில் உங்களிடம் உள்ள பங்கு மதிப்பின் சதவீதம்.
உங்கள் தகவலை தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்வதன் மூலம் அந்தக் கோரிக்கைக்குத் தீர்வு காண முடியும்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள், வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வரித் துறைப் பதிவேட்டில் உள்ளபடி சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- வரி அடையாள எண் (TIN): உங்கள் நிறுவனப் பதிவு எண் (எ.கா: HE123456) அல்லது உங்கள் வரி அடையாளக் குறியீடு (எ.கா: 12345678A). உங்கள் வணிகப் பதிவு ஆவணத்தில் உள்ள எண்ணை நீங்கள் வழங்க வேண்டும்.
- VAT எண்: பொருந்துமாயின், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: வரித் துறைப் பதிவேட்டில் உள்ளபடி வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
சைப்ரஸில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு உங்கள் தகவல்களை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்க்கின்றனர். எழுத்து வகை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைக் கவனமாகக் கையாளவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், வரி அடையாள எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைப் படித்துப் பார்க்கவும்.
உங்கள் இயக்குநர்கள் குழுவில் உள்ள அல்லது முக்கிய முடிவுகளை எடுக்கும் பிற நபர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளபடி சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்களின் விவரங்கள், உங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் விவரங்களுடன் பொருந்த வேண்டும். பொருத்தம் இல்லையெனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்யுமாறு அல்லது இயக்குநருக்கான சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைச் சரிசெய்வதற்கான விரைவான வழியாகும். ஒருவேளை நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள்
இலாப நோக்கற்ற நிறுவனம் (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கு இலாபத்தை உருவாக்குவதைத் தவிர பிற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். பொது அல்லது சமூக நலனுக்குச் சேவை செய்வதே இதன் முதன்மைப் பணியாகும். இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனத்திடம் வரி அடையாள எண் இருக்காது, ஆனால் உள்ளூர் நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும், மேலும் இலாப நோக்கற்ற நிலையைக் கொண்டிருக்கும்.
இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள், முக்கிய முடிவெடுப்பவர் அல்லது அமைப்பாளரைக் கணக்கின் பிரதிநிதியாக நியமித்து, அந்த நபரை நிர்வாகியாகக் குறிக்க வேண்டும். கணக்கின் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளபடி உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும் செயலில் உள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவற்றுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
- பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
- பங்கு மதிப்பு: பொருந்துமாயின், வணிகத்தில் உங்களிடம் உள்ள பங்கு மதிப்பின் சதவீதம்.
உங்கள் தகவலை தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்வதன் மூலம் அந்தக் கோரிக்கைக்குத் தீர்வு காண முடியும்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள், வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடி, சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- VAT எண்: பொருந்துமாயின், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
சைப்ரஸில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு உங்கள் தகவல்களை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்க்கின்றனர். எழுத்து வகை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைக் கவனமாகக் கையாளவும்.
வணிகத்தைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயரும் வணிக முகவரியும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் இயக்குநர்கள் குழுவில் உள்ள அல்லது முக்கிய முடிவுகளை எடுக்கும் பிற நபர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளபடி சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்களின் விவரங்கள், உங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் விவரங்களுடன் பொருந்த வேண்டும். பொருத்தம் இல்லையெனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்யுமாறு அல்லது இயக்குநருக்கான சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைச் சரிசெய்வதற்கான விரைவான வழியாகும். ஒருவேளை நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.
ஏற்கக்கூடிய ஆவண வகைகள்
சரிபார்ப்புச் செயல்முறைக்கு உதவ, உங்களின் தனிப்பட்ட தகவல்களையும், சில சமயங்களில் உங்களின் வணிகத் தகவல்களையும் சரிபார்க்க குறிப்பிட்ட ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும். சைப்ரஸில் உள்ள தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் பின்வரும் ஆவண வகைகள் ஏற்கப்படும்.
அடையாள ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்கள் அடையாளச் சான்றாக ஏற்கப்படும். நீங்கள் வழங்கும் அடையாள ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள தகவல்களுடன் பொருந்துமாறு, உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள பெயரும் பிறந்த தேதியும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும், அவற்றின் காலாவதி தேதி முடிந்திருக்கக் கூடாது.
- பாஸ்போர்ட்
- ஓட்டுநர் உரிமம் (முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தின் புகைப்படங்கள் தேவை)
- அடையாள அட்டை (முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தின் புகைப்படங்கள் தேவை)
முகவரி ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்கள் முகவரிச் சான்றாக ஏற்கப்படும். நீங்கள் வழங்கும் முகவரி ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தகவல்களுடன் பொருந்துமாறு, உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள பெயரும் முகவரியும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
- பயன்பாட்டுக் கட்டண பில்கள் (கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டவை)
- வங்கிக் கணக்கு அறிக்கை (கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டது)
- அடமான அறிக்கைகள் (கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டவை)
- Ειδοποίηση επιβολής φόρου (வரி மதிப்பீட்டு அறிவிப்பு)
- Βεβαίωση Εγγραφής / Tescil belgesi (பதிவுச் சான்றிதழ்)
வணிகச் சரிபார்ப்பு ஆவணங்கள்
வணிகச் சரிபார்ப்புக்குப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படும். அவை உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயர், வரி அடையாள எண் மற்றும் முகவரியைத் தெளிவாகக் காட்ட வேண்டும். நீங்கள் வழங்கும் ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தகவல்களுடன் பொருந்துமாறு, உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
- Μητρώο Επιχειρηματικών Οντοτήτων (வணிகப் பதிவேட்டு நகல்)
- Καταστατικό / Şirket ana sözleşmesi (நிறுவன அமைப்பு விதிகள்)
- Συστατική Πράξη Εταιρείας / Şirket Kuruluş Onay Belgesi (இணைப்புச் சான்றிதழ்)
- Οικονομικές καταστάσεις / Mali tablolar (நிதி அறிக்கைகள்)
- Εγγραφή στο μητρώο Φ.Π.Α. (VAT பதிவு)
உரிமை ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்கள் உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயரையும், உங்கள் வணிகத்தின் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களின் முழுமையான பெயர்கள் அனைத்தையும் காட்டினால் மட்டுமே அவை உரிமை அல்லது இயக்குநர் பொறுப்புக்கான சான்றாக ஏற்கப்படும்.
உரிமையாளர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள்:
- Καταστατικό (இணைப்பு விதிகள்)
- Πιστοποιητικό Εταιρείας (நிறுவன நிலைச் சான்றிதழ்)
- Συμφωνία Συνεργασίας (கூட்டாண்மை ஒப்பந்தங்கள்)
- Έγγραφο Εγγραφής (பதிவு ஆவணம்)
- Μητρώο Τελευταίων Ωφελούμενων (இறுதியாகப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)
இயக்குநர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள்:
- Ετήσιες Εκθέσεις (ஆண்டு அறிக்கைகள்)
- Καταστατικό (இணைப்பு விதிகள்)
- Πιστοποιητικό Εταιρείας (நிறுவன நிலைச் சான்றிதழ்)
- Έγγραφο Εγγραφής (பதிவு ஆவணம்)
- Μητρώο Τελευταίων Ωφελούμενων (இறுதியாகப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)
உங்கள் ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு பலனடையும் உரிமையாளரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு அவர்களுக்கு உரிமையாளர் என்னும் பங்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். பலனடையும் உரிமையாளர் என்பவர், வணிகப் பங்குகளில் 25% அல்லது அதற்கு மேல் வைத்திருக்கும் ஒருவராக வரையறுக்கப்படுகிறார். தேவையெனில் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகத்திற்குப் பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லை எனில், அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில், இயக்குநர்களுக்காக மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்கள் தகுதியானவை. உங்கள் ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு இயக்குநரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு அவர்களுக்கு இயக்குநர் என்னும் பங்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். தேவையெனில் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது எனில், முதலில் உங்கள் உரிமையாளர்களும் இயக்குநர்களும் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதை உறுதிசெய்து, பிறகு கையெழுத்திடு பொத்தானை அழுத்துவதன் மூலம் டிஜிட்டல் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்யவும்.
ஆவணமாக்கல் இணக்கத்தை உறுதிசெய்தல்
உங்கள் ஆவணங்களை வழங்கும்போது, அவை தேவையான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதை உறுதிசெய்து கொள்ளவும். இணக்கத்தை உறுதிசெய்ய, பின்வரும் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யவும்:
- துல்லியம்: உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும்.
- தெளிவு மற்றும் வாசிப்புத் தன்மை: உங்கள் ஆவணங்கள் தெளிவாகவும் படிப்பதற்கு ஏற்ற அளவிலும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். ஆவணம் முழுவதும் புகைப்படத்தில் தெரிவதை உறுதிசெய்யவும்.
- முழுமை: உங்கள் ஆவணத்தில் தேவையான அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிவதை உறுதிசெய்யவும். ஆவணத்தில் சேர்க்கப்பட வேண்டிய விவரங்களைப் புரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகளை மதிப்பாய்வு செய்யவும்.
- அசல் ஆவணங்கள்: கேமராவைப் பயன்படுத்தி உங்கள் ஆவணத்தின் அசல் புகைப்படத்தை எடுக்கவும். உங்கள் ஆவணங்களை நகலெடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ, திரைப்பிடிப்பு எடுக்கவோ வேண்டாம். ஆவணங்களின் புகைப்படங்களை மற்ற ஆவணங்களில் ஒட்ட வேண்டாம். கணினித் திரைகள் அல்லது பிரிண்ட்அவுட்களைப் புகைப்படம் எடுக்க வேண்டாம்.
- உங்கள் ஆவணம் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டிருந்தால், எந்த மாற்றமும் செய்யாமல், அது முதலில் வழங்கப்பட்டபடியே அனைத்துப் பக்கங்களையும் கொண்ட PDF கோப்பாக வழங்கவும்.
- செல்லுபடியாகும் தன்மை: புகைப்பட ID-களின் காலம் முடிவடையவில்லை என்பதையும், முகவரிச் சான்று சமீபத்தில் வழங்கப்பட்டது என்பதையும் உறுதிசெய்யவும். வணிகப் பதிவுச் சான்றை வழங்கினால், உங்கள் வணிகம் இன்னும் செயலில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், பின்வரும் பொதுவான பழக்கப்படுத்துதல் சிக்கல்களையும் அவற்றின் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.
எனது ஆவணம் நிராகரிக்கப்பட்டது.
உங்கள் கணக்கிலுள்ள தகவல்களும் நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணத்திலுள்ள தகவல்களும் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்கைப் புதுப்பிக்கவும். உங்கள் ஆவணங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இந்தப் பக்கத்தின் பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:
- ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்: எந்தெந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் அவற்றில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும். திரைப்பிடிப்புகள், ஆன்லைன் தேடல்களின் பிரிண்ட்அவுட்கள் மற்றும் பதிவேட்டுத் திரைப்பிடிப்புகள் ஆகியவை ஏற்கப்பட மாட்டாது.
- ஆவண இணக்கத்தை உறுதிசெய்தல்: துல்லியம், தெளிவு, முழுமை, அசல் ஆவணங்கள் மற்றும் செல்லுபடியாகும் தன்மைக்கான தேவைகள்.
எனது வணிகத் தகவல் சரிபார்க்கப்படவில்லை.
உங்கள் வணிகத் தகவலை உள்ளிடும்போது, சைப்பிரஸில் உள்ள அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளபடியே உங்கள் வணிகப் பெயர், வரி அடையாள எண் மற்றும் முகவரி ஆகியவை சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். இதில் அடங்குபவை:
- சரியான எழுத்து வடிவம் (பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து)
- சரியான நிறுத்தற்குறிகள் மற்றும் இடைவெளி
- பதிவுசெய்யப்பட்டபடியே முழுமையான வணிகப் பெயர்
அதிகாரப்பூர்வப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலை Shopify வங்கிப் கூட்டாளர்கள் தானாகவே சரிபார்ப்பார்கள். சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் சரிபார்ப்பு தோல்வியடையலாம். நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணத்தில் சட்டப்பூர்வப் பெயர், வரி அடையாள எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை உள்ளதா என்பதையும், இந்த விவரங்கள் உங்கள் கணக்கில் உள்ளவற்றுடன் பொருந்துகின்றனவா என்பதையும் உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்கைப் புதுப்பிக்கவும்.
எனது முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை.
Shopify Payments சைப்பிரஸுக்கு, உங்கள் முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், செல்ஃபி செயல்முறையை நிறைவுசெய்யவோ அல்லது முகவரிச் சான்று ஆவணத்தை வழங்கவோ கேட்கப்படுவீர்கள்.
செல்ஃபி செயல்முறையை நிறைவுசெய்வது பரிந்துரைக்கப்படுகிறது. சரிபார்க்க வேண்டிய தனிநபர், செல்ஃபி பொத்தானைக் கிளிக் செய்து, தன் புகைப்பட ID-யையும் தன்னையும் புகைப்படம் எடுத்துச் சரிபார்க்கலாம். முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குவதற்குப் பதிலாக, நீங்கள் செல்ஃபி செயல்முறையை நிறைவுசெய்யலாம்.
நீங்கள் ஆவணத்தை மேனுவலாக வழங்க விரும்பினால், அவ்வாறே செய்யலாம். முகவரிச் சான்று ஆவணங்கள் உங்கள் முழுப் பெயரையும் வீட்டு முகவரியையும் காண்பிக்க வேண்டும். அத்துடன் அது இங்கு காட்டப்பட்டுள்ள ஆவண வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். பின்வருபவற்றையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்:
- உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்ட முகவரி, முகவரிச் சான்று ஆவணத்தில் உள்ள முகவரியுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
- தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்கு ஏற்ப கணக்கிலுள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
- உங்கள் முகவரிச் சான்று ஆவணத்தின் தெளிவான புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
- நீங்கள் பதிவேற்றும் ஆவணத்தில் உங்கள் முழுப் பெயர் உள்ளதை உறுதிசெய்யவும். எடுத்துக்காட்டாக, உங்களிடம் வேறொருவரின் பெயரில் இருக்கும் பயன்பாட்டுக் கட்டணப் பில் (utility bill) இருந்தால், நீங்கள் வேறொரு ஆவணத்தை வழங்க வேண்டும்.
எனது உரிமையாளர் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை.
Shopify Payments சைப்பிரஸில், உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர் பெயர்களுடன் பொருந்துமாறு, உரிமையாளர்களை நீங்கள் உள்ளிட வேண்டும். பதிவேட்டில் உங்கள் உரிமையாளர் தகவலைத் தேடி, அதில் காட்டப்பட்டுள்ளபடியே பெயர்களை உள்ளிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு உரிமையாளர்கள் யாரும் இல்லை என்றால், கணக்கில் உங்கள் இயக்குநர்கள் அனைவரையும் பட்டியலிட வேண்டும்.
நீங்கள் அவ்வாறு செய்தும், உங்களின் உரிமை அல்லது இயக்குநர் பதவியைத் தொடர்ந்து சரிபார்க்க முடியாவிட்டால், நீங்கள் வழங்கிய தகவல் சரியானதுதான் என டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, உங்கள் சரிபார்ப்புப் பக்கத்திலுள்ள கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்கள் விரும்பினால், சான்றளிக்கும் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிடும் உரிமையாளர் மற்றும் இயக்குநர் தகவல், நீங்கள் பதிவேற்றும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் பொருந்த வேண்டும். உரிமையாளர் அல்லது இயக்குநர் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டு, Shopify Payments கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தால், அவரை உங்கள் கணக்கில் சேர்த்து, அவருக்கு உரிமையாளர் அல்லது இயக்குநர் பங்கை (role) ஒதுக்க வேண்டும். உரிமையைச் சரிபார்க்க நீங்கள் வழங்கக்கூடிய ஆவண வகைகளின் பட்டியல் இங்கே கிடைக்கிறது.
உங்கள் கணக்கிலுள்ள உரிமையாளர்களும் இயக்குநர்களும் உங்கள் ஆவணத்துடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் ஆவணங்களில் காணப்படாத கூடுதல் உரிமையாளர்களையோ இயக்குநர்களையோ பட்டியலிட வேண்டாம்.
நான் ஒரு கூட்டாண்மை (partnership). என்னிடம் வரி அடையாள எண் கேட்கப்படுகிறது, ஆனால் என்னிடம் அது இல்லை.
நீங்கள் சைப்பிரஸில் ஒரு கூட்டாண்மையாக இருந்து, வரி அடையாள எண் கேட்கப்பட்டும், உங்களிடம் அது இல்லை என்றால், தவறான வணிக வகையாக நீங்கள் அமைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் Shopify Payments கணக்கை அமைக்கும் பணியில் இருந்தால், வணிக வகையை முறைப்படுத்தப்படாத கூட்டாண்மைக்கு (unincorporated partnership) மாற்றவும்.
நீங்கள் ஏற்கெனவே கணக்கை அமைத்து, உங்கள் சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக வரி அடையாள எண் கேட்கப்பட்டால், அமைப்புகள் > பொது என்பதற்குச் சென்று உங்கள் வணிக வகையைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக விவரங்களுக்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வணிக வகையைப் புதுப்பிப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நான் ஒரு தனி வணிகர் (sole trader). எனது வணிகத் தகவலையும் வரி அடையாள எண்ணையும் எப்படி உள்ளிடுவது?
நீங்கள் தனி வணிகராக இருந்தால், வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, உரிமையாளரின் தனிப்பட்ட தகவல் மட்டுமே தேவைப்படும்.
நீங்கள் ஒரு தனி வணிகராக இருந்தால், வேறு வணிக வகையாகப் பதிவுசெய்ய முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் சரிபார்ப்பில் தேர்ச்சி பெறுவதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படலாம்.
என்னிடம் வரி அடையாள எண் இல்லை. நான் ஒரு தனிநபர் அல்லது தனி வணிகர் அல்ல.
உங்களிடம் TIN இல்லை என்றால், முறைப்படுத்தப்படாத கூட்டாண்மை (unincorporated partnership) அல்லது முறைப்படுத்தப்படாத இலாப நோக்கற்ற நிறுவனம் (unincorporated non-profit) என்பதை மட்டுமே உங்கள் வணிக வகையாகத் தேர்ந்தெடுக்க முடியும். சைப்பிரஸில் உங்கள் வணிகம் இந்த வகையாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் காட்டும் ஆவணத்தை நீங்கள் இன்னமும் வழங்க வேண்டும்.
இந்த வணிக வகைகளில் எதுவும் உங்கள் வணிகத்திற்குப் பொருந்தவில்லை என்றால், நீங்கள் "தனிநபர் / தனி வணிகர்" என்பதைத் தேர்ந்தெடுத்து, முக்கிய முடிவெடுப்பவர் அல்லது உரிமையாளரைக் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சைப்பிரஸில் Shopify Payments தேவைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் பின்வரும் கேள்விகளை மதிப்பாய்வு செய்யவும்.
நான் ஒரு நிறுவனம்/கூட்டாண்மை/இலாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தால், எனது புகைப்பட ID-யும் முகவரிச் சான்றும் ஏன் தேவை?
நீங்கள் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது இலாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்திருந்தாலும், வணிகத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றைச் சரிபார்க்க, சைப்பிரஸில் உள்ள ஒழுங்குமுறைச் சட்டங்களின்படி எங்கள் வங்கிப் கூட்டாளர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
நான் சைப்பிரஸ் குடிமகன், ஆனால் நான் தற்போது அங்கு வசிக்கவில்லை. என்னால் Shopify Payments சைப்பிரஸைப் பயன்படுத்த முடியுமா?
உங்கள் வணிக வகை தனிநபர் எனில், Shopify Payments சைப்பிரஸுக்குத் தகுதி பெற, நீங்கள் சைப்பிரஸில் வசிக்க வேண்டும். நீங்கள் தற்போது சைப்பிரஸில் வசிக்கவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்க வேண்டும்.
உங்களின் தற்போதைய இடத்திற்கு ஏற்ப உங்கள் ஸ்டோர் முகவரியைப் புதுப்பிக்கவும். உங்களின் இடம் Shopify Payments-க்குத் தகுதியுடையதாக இருந்தால், அந்தப் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை நீங்கள் உருவாக்கலாம்.
நீங்கள் ஏதாவதொரு கூட்டாண்மை, நிறுவனம் அல்லது இலாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தால், நீங்கள் தனிப்பட்ட முறையில் சைப்பிரஸில் வசிக்க வேண்டியதில்லை. ஆனால், உங்கள் வணிகம் அங்கு பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் சைப்பிரஸ் வணிக முகவரியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நான் சைப்பிரஸில் உள்ள ஒரு பொதுப் பங்கு நிறுவனம் (publicly traded company). நான் எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
தனியார் நிறுவனம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பைப் பொறுத்தவரை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான செயல்முறை ஒன்றே. உரிமையாளர்களைச் சேர்க்கக் கோரும் கணக்கு அமைவுப் படிவத்தின் பகுதியை நீங்கள் தவிர்க்கலாம். பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லையெனில், நீங்கள் அவர்களைப் பட்டியலிட வேண்டியதில்லை.
நீங்கள் சைப்ரஸில் உள்ள பொது வர்த்தக நிறுவனமாக இருந்து, ஏற்கனவே Shopify Payments கணக்கை அமைத்து, இப்போது சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உங்களிடம் உரிமைத் தகவல் கேட்கப்பட்டால், உங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை என்பதைக் காட்ட உங்கள் உரிமை விவரங்களைப் புதுப்பிக்கவும். கோப்பில் உள்ளவர்களிடமிருந்து உரிமையாளர் பங்கை அகற்றிவிட்டு, உங்கள் இயக்குநர்கள் அனைவரும் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதையும், அவர்களுக்கு இயக்குநர் பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.
பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர் விவரங்கள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்படலாம். அது சரியாக இருப்பதை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், கோப்பில் உள்ள தகவலை டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்தச் செயல்முறையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
எனது கணக்கு ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுவிட்டது. புதிய தகவலை வழங்குமாறு நான் ஏன் கேட்கப்படுகிறேன்?
காலப்போக்கில் ஏற்படும் ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் Shopify இன் நிதிப் பங்காளர்களின் தேவைகளில் ஏற்படும் புதுப்பிப்புகள் காரணமாக, கணக்குதாரர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருக்கலாம். நிதிச் சேவைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த மதிப்பாய்வுகள் உதவுகின்றன.
இந்த மாற்றங்கள் நிகழும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் பேனர் அல்லது விழிப்பூட்டல் மூலமாகவும் அதற்குரிய மின்னஞ்சல் மூலமாகவும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். Shopify-இன் நிதிச் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த இந்தக் கோரிக்கைகளை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும்.
எனது Shopify Payments கணக்குத் தகவலை எப்படிப் புதுப்பிப்பது?
கணக்குச் சரிபார்ப்பை நிறைவுசெய்யுமாறு உங்களிடம் கோரப்பட்டால், கோரப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதோடு, சரிபார்ப்புப் பக்கத்தில் உங்கள் தகவலையும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
சரிபார்ப்புச் செயல்முறைக்கு வெளியே, அமைப்புகள் > பொது > வணிக விவரங்கள் என்பதற்குச் சென்று கடையின் உரிமையாளர் இந்த விவரங்களைப் புதுப்பிக்க முடியும். உங்கள் வணிக நிறுவனத்திற்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, வணிக வகை உட்பட அந்த வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க, திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
இங்கு நீங்கள் செய்யும் மாற்றங்கள் மதிப்பாய்வுக்காக எங்கள் வங்கிப் பங்காளர்களுக்குத் தானாகவே அனுப்பப்படும் என்பதையும், புதிய தகவல் மீண்டும் அவர்களின் சரிபார்ப்புச் செயல்முறைக்கு உட்படுத்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். மாற்றங்கள் தானாகவே மீண்டும் சரிபார்க்கப்படலாம், ஆனால் துணை ஆவணங்களை வழங்குமாறும் உங்களிடம் கேட்கப்படலாம்.
சரிபார்ப்பதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?
சரிபார்ப்பு நடைமுறை முடியும் வரை உங்கள் பேஅவுட்களில் தற்காலிக இடைநிறுத்தம் இருக்கும். முதல் காலக்கெடு முடிந்து பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, Shopify Payments மூலம் ஆர்டர்களை ஏற்கும் உங்கள் திறன் எப்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைக் காட்டும் இரண்டாவது காலக்கெடுவைக் காணலாம்.
இந்த இடைநிறுத்தங்கள் அனைத்தும் தற்காலிகமானவை, நீங்கள் சரிபார்ப்பை நிறைவுசெய்த பிறகு அவை தானாகவே நீக்கப்படும். உங்கள் காலக்கெடுவுக்கு, உங்கள் நிர்வாகிப் பக்கத்தைப் பார்க்கவும்.
ஜூன் 2026 முதல், முற்றிலும் புதிய Shopify Payments சைப்ரஸ் கணக்குகள் சரிபார்ப்பை நிறைவுசெய்வதற்கு, அவை செயலாக்கிய முதல் ஆர்டரிலிருந்து 90 நாட்கள் கால அவகாசம் இருக்கும். 90 நாட்களுக்கு மேலானால், Shopify Payments-ஐப் பயன்படுத்தி நீங்கள் செயலாக்கிய எந்த ஆர்டர்களுக்கும் தானாகவே பணம் திரும்பப்பெறப்படலாம்.
இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையானது ஐரோப்பிய நாடுகளுக்கும், ஜூன் 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை உங்களுக்குப் பொருந்தினால், பணத்தைத் திரும்பப்பெறுதல் செயல்முறை எப்போது நிகழும் என்று எச்சரிக்கைகள் மூலம் கடையின் உரிமையாளருக்குத் தெரிவிக்கப்படும்.
சைப்ரஸில் உள்ள Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க பின்வரும் தகவல்களைச் சேகரித்து வைக்கவும்:
- நீங்கள் பெற்ற ஏதேனும் பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள் (வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை மறைக்கவும்)
- அமைவின்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக வகை
- உங்கள் வரி அடையாள எண் (TIN), பொருந்தினால்
- நீங்கள் சிக்கலைச் சந்தித்த குறிப்பிட்ட படி
- நீங்கள் பயன்படுத்தும் உலாவி மற்றும் சாதனம்
- முழுக் கணக்கு எண்ணைப் பகிராமல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் (நாடு, நாணயம், கணக்கு வகை)
- நீங்கள் பதிவேற்றிய ஆவணங்கள் மற்றும் அவற்றைப் பதிவேற்றிய நேரம்
இந்தத் தகவலைத் தயாராக வைத்திருப்பது, Shopify ஆதரவு உங்களுக்கு இன்னும் சிறப்பாக உதவ வழிவகுக்கும்.