செக்கியாவில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் சார்ந்த தேவைகள்
செக்கியாவில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியவும் நிதிக் குற்றங்களைத் தடுக்கவும் நடைமுறையில் உள்ள தேவைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட தகவல் ஏன் சேகரிக்கப்படுகிறது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் வகைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது, மேலும் உங்கள் ஆவணம் தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்வதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
இந்தப் பக்கத்தில்
- செக்கியாவில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- தகவலைச் சேகரிப்பதன் நோக்கம்
- செக்கியாவில் Shopify Payments-ஐச் செயல்படுத்தத் தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்
- ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்
- ஆவண இணக்கத்தை உறுதிசெய்தல்
- பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- செக்கியாவில் Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
செக்கியாவில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
செக்கியாவில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்:
- தகுதியான வணிக வகைகள்: குறிப்பிட்ட வகையான வணிகங்களும் சேவைகளும் Shopify Payments-ஐப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. உங்கள் வணிகம் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்க, Shopify Payments சேவை விதிமுறைகள் என்பதில் செக்கியாவுக்குத் தடைசெய்யப்பட்ட வணிக வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
- வங்கிக் கணக்குத் தேவைகள்: உங்கள் வங்கிக் கணக்கை Shopify Payments உடன் இணைப்பதற்கு முன்பு, அது பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- வங்கிக் கணக்கானது EUR நாணயத்தில் இருக்க வேண்டும் அல்லது வங்கிக் கணக்கு செக்கியாவில் இருந்தால் அது CZK நாணயத்தில் இருக்கலாம்.
- வங்கிக் கணக்கானது சிங்கிள் யூரோ பேமெண்ட்ஸ் ஏரியா (SEPA) பரிமாற்றங்களுக்குத் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
- வங்கிக் கணக்கில் பின்வரும் ஏதேனும் நாட்டுக் குறியீடுகளுடன் தொடங்கும் சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN) இருக்க வேண்டும்: AT, BE, BG, CH, CY, CZ, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE அல்லது SI.
- இடைவெளிகள் இல்லாமல் உங்கள் முழு IBAN ஐயும் உள்ளிடவும். ஒரு செக் IBAN 24 எழுத்துகளைக் கொண்டிருக்கும் (எடுத்துக்காட்டாக, CZ6508000000192000145399); இதன் நீளம் நாட்டுக்கு நாடு மாறுபடும். உங்கள் IBAN ஐ உள்ளிடுவதற்கு முன், ஆன்லைன் IBAN வேலிடேட்டரைப் பயன்படுத்தி உங்கள் IBAN வடிவமைப்பை உறுதிப்படுத்தவும்.
ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகைகள்
குறிப்பிட்ட வங்கிக் கணக்கு வகைகள் Shopify Payments உடன் இணக்கமாக இருப்பதில்லை. பின்வரும் கணக்கு வகைகள் ஆதரிக்கப்படுவதில்லை:
- வயர் பரிமாற்றங்களை மட்டுமே ஏற்கும் நடப்புக் கணக்குகள்: இந்தக் கணக்குகள் Shopify Payments உடன் செயல்படாது.
- சேமிப்புக் கணக்குகள்: Shopify Payments பேஅவுட்களுக்குச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்த முடியாது.
- ஃபிளெக்ஸ்-கரன்சி கணக்குகள்: ஒரே நேரத்தில் பல நாணயங்களை ஆதரிக்கும் கணக்குகள் ஆதரிக்கப்படுவதில்லை.
- பணப் பரிமாற்றச் சேவைகள்: சில ஃபின்டெக் பிளாட்ஃபார்ம்கள் போன்ற வங்கிக் கணக்குகளைப் போலவே செயல்படும் சேவைகளை Shopify Payments உடன் பயன்படுத்த முடியாது.
Shopify சாராத மெய்நிகர் கணக்குகள் ஆதரிக்கப்பட்டாலும், இந்தக் கணக்குகளில் அதிகப் பேஅவுட் தோல்விகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.
உங்கள் பிராந்தியத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள பரிமாற்ற வகையை உங்கள் கணக்கு ஏற்குமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கம்
நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செக்கியாவின் விதிமுறைகளுக்கு இணங்க, Shopify நிறுவனமும் அதன் வங்கிப் கூட்டாளர்களும் உங்களைப் பற்றியும் உங்கள் வணிகத்தைப் பற்றியும் தகவல்களைச் சேகரித்துச் சரிபார்க்க வேண்டும். உள்ளூர் விதிகள் மற்றும் விதிமுறைகள் உருவாவதால், உங்கள் Shopify Payments கணக்கின் ஆயுட்காலம் முழுவதும் கூடுதல் தகவல்களை வழங்கும்படி Shopify மற்றும் அதன் வங்கிப் கூட்டாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ளலாம்.
சேகரிக்கப்படும் தகவல்கள், வணிகத்தின் அடையாளம், வணிகத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் அடையாளங்கள் மற்றும் இந்த இரண்டுக்கும் இடையிலான உறவின் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும்.
Shopify ஒருபோதும் உங்களுக்கு ஆவணங்களை நேரடியாக அஞ்சலில் அனுப்பாது. முக்கியமான ஆவணங்கள் அல்லது தகவல்தொடர்புகள் ஏதேனும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அமைப்புகள் > பயனர்கள் பக்கத்தில் கடையின் உரிமையாளருக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கும்படி செய்யப்படும்.
உங்கள் தகவல்கள் எவ்வாறு ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அறிய, Shopify இன் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.
செக்கியாவில் Shopify Payments ஐச் செயல்படுத்தத் தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்கள்
உங்கள் வணிக வகையை நீங்கள் சரியாக அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஏனெனில் நீங்கள் வழங்க வேண்டிய தகவல்களை அதுவே தீர்மானிக்கிறது.
நீங்கள் எந்தவொரு அரசு நிறுவனத்திலும் பதிவு செய்யவில்லை என்றால் அல்லது பதிவுசெய்து, ஆனால் தனிநபர் உரிமையாக (OSVČ, தனி வர்த்தகர்கள் மற்றும் தனிப்பட்ட தொழில்முனைவோர் உட்பட) வணிகத்தை நடத்தினால், தனிநபர் / தனிநபர் உரிமை வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து, நிறுவன அடையாள எண் (IČO) வைத்திருந்தால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- நிறுவன அடையாள எண்களைக் கொண்ட (VOS, KS) கூட்டாண்மைகள், பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நிறுவன அடையாள எண்களைக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள், பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நிறுவன அடையாள எண்களைக் கொண்ட மற்ற அனைத்து வணிகங்களும் பதிவுசெய்யப்பட்ட கார்ப்பரேஷன் வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். SRO, AS அல்லது družstvo ஆகியவை பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.
உங்களிடம் பதிவுசெய்யப்பட்ட வணிகம் இருந்து, ஆனால் நிறுவன அடையாள எண் இல்லை எனில், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- நிறுவன அடையாள எண்கள் இல்லாத கூட்டாண்மைகள், பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நிறுவன அடையாள எண்கள் இல்லாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்ற வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
தனிநபர்கள் / தனிநபர் உரிமைகள்
தனிநபர்கள் என்போர் அரசிடம் பதிவுசெய்யாமல் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆவர். தனிநபர் உரிமைகள் என்பவை தங்கள் தனிப்பட்ட தகவல்களின் கீழ் அரசிடம் பதிவுசெய்யப்பட்ட ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆகும். இவை இரண்டும் செக்கியாவில் வசிக்கும் ஒருவரால் சொந்தமாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் வணிகங்கள் ஆகும், இதில் சுயாதீனப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் சிறு வணிக நடத்துநர்களும் அடங்குவர்.
இந்த வணிக வகைகள் ஒரே மாதிரியாகக் கருதப்படுவதால், இவையும் அதே தகவல்களை வழங்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் தனிநபர் உரிமைகள் வழங்க வேண்டியவை:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள ஃபோன் எண்.
- செக்கியாவில் உள்ள குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு பொருந்தும் உங்கள் வீட்டு முகவரி.
உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, அதன்பிறகும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையை நீங்கள் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கார்ப்பரேஷன்கள் (SRO, AS, družstvo)
பதிவுசெய்யப்பட்ட கார்ப்பரேஷன் என்பது ஈக்விட்டி பங்குகளாகப் பிரிக்கப்பட்டுப் பங்குதாரர்களால் சொந்தமாக்கப்படும் ஒரு வணிகமாகும். ஒரு கார்ப்பரேஷன் என்பது அதை நடத்தும் நபர்களிடமிருந்து வேறுபட்டு, தமக்கென்று சொந்தமாகச் சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறது. அவை பொதுவாக இயக்குநர் குழுவையும் கொண்டிருக்கும்.
பதிவுசெய்யப்பட்ட கார்ப்பரேஷன்கள், பலனடையும் உரிமையாளர் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகி ஒருவரைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு பொருந்தும் உங்கள் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, அதன்பிறகும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையை நீங்கள் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கார்ப்பரேஷன்கள் வணிகத்தைப் பற்றிய பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- நிறுவன அடையாள எண் (IČO): வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் நிறுவன அடையாள எண்.
- VAT எண்: பொருந்தினால், உங்கள் VAT பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டிலுள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வ பதிவுசெய்யப்பட்ட முகவரி.
செக்கியாவில் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்களின் தகவல்களை Shopify வங்கி கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம் (case), நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவன அடையாள எண், வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
நிறுவனத்தின் பலனடையும் உரிமையாளர்களாக உள்ள மற்ற நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளபடியே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் விவரங்கள், உங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழி சான்றளிப்பில் கையெழுத்திடுவதுதான், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக (முழுமையாகவோ பகுதியாகவோ) இருந்தால், சரிபார்ப்பை நிறைவுசெய்ய, சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
உங்கள் வணிகத்திற்குப் பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லை என்றால், ஒரு சான்றளிப்பில் கையெழுத்திட அல்லது உங்கள் இயக்குநர்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் (VOS, KS)
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை என்பது குறைந்தபட்சம் இரு கூட்டாளர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும், அவர்கள் வணிகச் செயல்பாட்டிற்காகப் பதிவுசெய்து நிறுவன அடையாள எண்ணைப் பெற்றிருப்பார்கள். பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகளுக்குப் பங்கு மூலதனம் (equity) இருக்கும், மேலும் இந்தக் கூட்டாண்மையானது உரிமையாளர்களிடமிருந்து தனித்து இயங்கும் ஒரு தனி நிறுவனமாகும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் பிரதிநிதியாக உரிமையாளர் அல்லது கூட்டாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு பொருந்தும் உங்கள் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, அதன்பிறகும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையை நீங்கள் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- நிறுவன அடையாள எண் (IČO): வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் நிறுவன அடையாள எண்.
- VAT எண்: பொருந்தினால், உங்கள் VAT பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டிலுள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வ பதிவுசெய்யப்பட்ட முகவரி.
செக்கியாவில் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்களின் தகவல்களை Shopify வங்கி கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம் (case), நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவன அடையாள எண், வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உரிமையாளர்கள் அல்லது கூட்டாளர்களாக உள்ள மற்ற நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளபடியே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் விவரங்கள், உங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழி சான்றளிப்பில் கையெழுத்திடுவதுதான், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக (முழுமையாகவோ பகுதியாகவோ) இருந்தால், சரிபார்ப்பை நிறைவுசெய்ய, சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள்
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை என்பது குறைந்தபட்சம் இரு கூட்டாளர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும், அவர்கள் நிறுவன அடையாள எண்ணுக்காகப் பதிவுசெய்திருக்க மாட்டார்கள், ஆனால் கூட்டாண்மை ஒப்பந்தத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் உரிமையாளர்களே சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுவார்கள், மேலும் வணிகமானது ஒரு தனி நிறுவனம் அல்ல.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் பிரதிநிதியாக ஒரு உரிமையாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு பொருந்தும் உங்கள் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, அதன்பிறகும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையை நீங்கள் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- VAT எண்: பொருந்தினால், உங்கள் VAT பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டிலுள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளபடி, வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
செக்கியாவில் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்களின் தகவல்களை Shopify வங்கி கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம் (case), நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயரும் வணிக முகவரியும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உரிமையாளர்கள் அல்லது கூட்டாளர்களாக உள்ள மற்ற நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளபடியே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் விவரங்கள், உங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழி சான்றளிப்பில் கையெழுத்திடுவதுதான், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக (முழுமையாகவோ பகுதியாகவோ) இருந்தால், சரிபார்ப்பை நிறைவுசெய்ய, சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
பதிவுசெய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்கள்
இலாபநோக்கற்ற நிறுவனம் (NPO) என்பது இலாபம் ஈட்டுவதைத் தவிரப் பிற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். பொதுமக்களுக்கோ சமூகப் பலனுக்கோ சேவையாற்றுவதே இதன் முதன்மைப் பணியாகும். பதிவுசெய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காகப் பதிவுசெய்து நிறுவன அடையாள எண்ணைப் பெற்றிருக்கும்.
பதிவுசெய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்கள் ஒரு இயக்குநரையோ முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகியையோ தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு பொருந்தும் உங்கள் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, அதன்பிறகும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையை நீங்கள் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்கள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- நிறுவன அடையாள எண் (IČO): வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் நிறுவன அடையாள எண்.
- VAT எண்: பொருந்தினால், உங்கள் VAT பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டிலுள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வ பதிவுசெய்யப்பட்ட முகவரி.
செக்கியாவில் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்களின் தகவல்களை Shopify வங்கி கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம் (case), நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவன அடையாள எண், வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உங்கள் இயக்குநர்கள் குழுவில் உள்ளவர்கள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளபடியே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்களின் விவரங்கள், உங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது இயக்குநர் பொறுப்பிற்கானச் சான்று ஆவணத்தை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழி சான்றளிப்பில் கையெழுத்திடுவதுதான், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்படாத இலாபநோக்கற்ற நிறுவனங்கள்
இலாபநோக்கற்ற நிறுவனம் (NPO) என்பது இலாபம் ஈட்டுவதைத் தவிரப் பிற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். பொதுமக்களுக்கோ சமூகப் பலனுக்கோ சேவையாற்றுவதே இதன் முதன்மைப் பணியாகும். பதிவுசெய்யப்படாத இலாபநோக்கற்ற நிறுவனத்திற்கு நிறுவன அடையாள எண் இருக்காது, ஆனால் உள்ளூர் நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்டு, இலாபநோக்கற்ற நிலையைக் கொண்டிருக்கும்.
பதிவுசெய்யப்படாத இலாபநோக்கற்ற நிறுவனங்கள் ஒரு முக்கிய முடிவெடுப்பவரையோ அமைப்பாளரையோ தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமித்து, அந்த நபரை நிர்வாகியாகக் குறிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- ஃபோன் எண்: செல்லுபடியாகும், செயல்பாட்டிலுள்ள ஃபோன் எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு பொருந்தும் உங்கள் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல்கள் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, அதன்பிறகும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையை நீங்கள் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் கோரிக்கையை நீங்கள் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்படாத இலாபநோக்கற்ற நிறுவனங்கள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- VAT எண்: பொருந்தினால், உங்கள் VAT பதிவு எண்.
- வணிக ஃபோன் எண்: வணிகத்திற்கான, செயல்பாட்டிலுள்ள தொடர்பு ஃபோன் எண்.
- வணிக முகவரி: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளபடி, வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
செக்கியாவில் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்களின் தகவல்களை Shopify வங்கி கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம் (case), நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயரும் வணிக முகவரியும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும். ஏற்கக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உங்கள் இயக்குநர்கள் குழுவில் உள்ளவர்கள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளபடியே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்களின் விவரங்கள், உங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது இயக்குநர் பொறுப்பிற்கானச் சான்று ஆவணத்தை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழி சான்றளிப்பில் கையெழுத்திடுவதுதான், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
ஏற்கக்கூடிய ஆவண வகைகள்
உங்கள் அடையாளம், வணிக விவரங்கள் ஆகியவற்றைச் சரிபார்க்க எந்தெந்த ஆவணங்களை நீங்கள் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பிரிவு விளக்குகிறது.
அடையாள ஆவணங்கள்
அடையாளச் சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படும். நீங்கள் வழங்கும் அடையாள ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள தகவலுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள பெயரும் பிறந்த தேதியும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் செல்லுபடியாகும் வகையிலும் காலாவதியாகாமலும் இருக்க வேண்டும்.
- பாஸ்போர்ட்
- ஓட்டுநர் உரிமம் (முன்புறம், பின்புறம் ஆகிய இரண்டின் புகைப்படங்களும் தேவை)
- அடையாள அட்டை (முன்புறம், பின்புறம் ஆகிய இரண்டின் புகைப்படங்களும் தேவை)
- குடியிருப்பு அனுமதி (முன்புறம், பின்புறம் ஆகிய இரண்டின் புகைப்படங்களும் தேவை)
முகவரி ஆவணங்கள்
முகவரிச் சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படும். நீங்கள் வழங்கும் முகவரி ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தகவலுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள பெயரும் முகவரியும் புதுப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் ஏற்கனவே உங்கள் அடையாள அட்டையைப் புகைப்பட ID ஆகப் பயன்படுத்தியிருந்தால், அதை முகவரிச் சான்றாக இரண்டாவது முறையாகப் பயன்படுத்த முடியாது, நீங்கள் வேறொரு ஆவணத்தை வழங்க வேண்டும்.
- பயன்பாட்டுக் கட்டண ரசீதுகள் (கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டவை)
- வங்கிக் கணக்கு அறிக்கை (கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டவை)
- வங்கிக் கணக்கிற்கானச் சான்றுக் கடிதம்
- அடமான அறிக்கைகள் (கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டவை)
- அடையாள அட்டை (முன்புறம், பின்புறம் ஆகிய இரண்டின் புகைப்படங்களும் தேவை)
- வாடகைச் சொத்து நிறுவனத்திடமிருந்து பெற்ற வாடகை ஒப்பந்தம்
- சொத்து விற்பனைக்கான ஒப்பந்தம்
- சொத்துப் பதிவேட்டில் இருந்தான அறிக்கை
வணிகச் சரிபார்ப்பு ஆவணங்கள்
வணிகச் சரிபார்ப்புக்குப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படும். அவற்றில் சட்டப்பூர்வ நிறுவனப் பெயர், நிறுவன அடையாள எண், உங்கள் வணிக முகவரி ஆகியவை தெளிவாகக் காட்டப்பட வேண்டும். நீங்கள் வழங்கும் ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தகவலுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
- Výpis z obchodního rejstříku (வணிகப் பதிவேட்டுச் சுருக்கம்)
- Registrace obchodu (வர்த்தகப் பதிவு)
- Stanovy akciové společnosti (சங்கத்தின் விதிகள்)
- Registrace DPH (VAT பதிவு)
உரிமை ஆவணங்கள்
உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயரும் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களின் முழுப் பெயர்களும் காட்டப்பட்டிருந்தால், உரிமை அல்லது இயக்குநர் பதவிக்கான சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படும்.
- Registr skutečných majitelů (இறுதியாகப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)
- Zakladatelský akt (பதிவு ஆவணம்)
- Zakladatelský dokument (நிறுவனச் சாசன விதிகள்)
- Výpis z obchodního rejstříku (வணிகப் பதிவேட்டுச் சுருக்கம்)
உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு பலனடையும் உரிமையாளரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு, அவர்களுக்கு உரிமையாளர் பங்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். வணிகப் பங்குகளில் 25% அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர் பலனடையும் உரிமையாளராக வரையறுக்கப்படுகிறார். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகத்தில் பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லை எனில், அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இது போன்ற சூழல்களில், மேலே உள்ள அதே ஆவணங்கள் பொருந்தும். உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு இயக்குநரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு, அவர்களுக்கு இயக்குநர் பங்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தால், முதலில் உங்கள் உரிமையாளர்களும் இயக்குநர்களும் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதை உறுதிசெய்து, பின்னர் கையெழுத்திடு பொத்தானை அழுத்தி டிஜிட்டல் சான்றளிப்புச் செயல்முறையை நிறைவுசெய்யவும்.
ஆவண இணக்கத்தை உறுதிசெய்தல்
உங்கள் ஆவணங்களை வழங்கும்போது, அவை தேவையான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். இணக்கத்தை உறுதிசெய்யப் பின்வரும் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யவும்:
- துல்லியம்: உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள், உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும்.
- தெளிவு மற்றும் படிக்கக்கூடிய தன்மை: உங்கள் ஆவணங்கள் தெளிவாகவும் படிப்பதற்கு ஏற்ற அளவு பெரிதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும். புகைப்படத்தில் முழு ஆவணமும் தெரிவதை உறுதிசெய்யவும்.
- முழுத்தன்மை: தேவையான அனைத்து விவரங்களும் உங்கள் ஆவணத்தில் தெரிவதை உறுதிப்படுத்தவும். ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகளை மதிப்பாய்வு செய்யவும்.
- அசல் ஆவணங்கள்: உங்கள் ஆவணத்தைக் கேமராவைப் பயன்படுத்தி அசலாகப் புகைப்படம் எடுக்கவும். உங்கள் ஆவணங்களை நகலெடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ திரைப்பிடிப்பு எடுக்கவோ கூடாது. ஆவணங்களின் புகைப்படங்களை மற்ற ஆவணங்களில் ஒட்ட வேண்டாம். கணினித் திரைகளையோ பிரிண்ட்அவுட்களையோ புகைப்படம் எடுக்கக் கூடாது.
- உங்கள் ஆவணம் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டிருந்தால், அனைத்துப் பக்கங்களையும் கொண்ட PDF கோப்பினை எவ்வித மாற்றங்களுமின்றி அசலாக வழங்கப்பட்டபடியே வழங்கவும்.
- செல்லுபடியாகும் தன்மை: புகைப்பட அடையாள ஆவணங்களின் காலம் முடிவடையவில்லை என்பதையும், முகவரிச் சான்று சமீபத்தில் வழங்கப்பட்டதையும் உறுதிசெய்யவும். வணிகப் பதிவுச் சான்றை வழங்கினால், உங்கள் வணிகம் தற்போதும் செயலில் பதிவுசெய்யப்பட்ட நிலையிலும் நல்ல நிலையிலும் இருக்க வேண்டும்.
பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், இந்தப் பொதுவான பழக்கப்படுத்துதல் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.
எனது ஆவணம் நிராகரிக்கப்பட்டது.
உங்கள் கணக்கில் உள்ள தகவல்கள் நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணத்தில் உள்ள தகவல்களுடன் பொருந்துவதை உறுதிசெய்து, தேவைப்பட்டால் ஆவணங்களுக்கு ஏற்ப உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும். உங்கள் ஆவணங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இந்தப் பக்கத்தில் உள்ள பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:
- ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்: எந்தெந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் அவற்றில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும். திரைப்பிடிப்புகள், ஆன்லைன் தேடல்களின் பிரிண்ட்அவுட்கள் மற்றும் பதிவேட்டுத் திரைப்பிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
- ஆவண இணக்கத்தை உறுதிசெய்தல்: துல்லியம், தெளிவு, முழுமை, அசல் ஆவணம் மற்றும் செல்லுபடியாகும் தன்மைக்கான நிபந்தனைகள்.
எனது வங்கிக் கணக்குத் தகவல் செயல்படவில்லை.
உங்கள் கணக்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதையும், ஆதரிக்கப்படும் கணக்கு வகையை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா என்பதையும் உறுதிப்படுத்தவும். உங்கள் பேஅவுட் தோல்வியடைந்தால், உங்கள் கணக்குத் தகவல்களைச் சரியான வடிவத்தில் உள்ளிட்டுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும். இந்தப் பக்கத்தில் உள்ள பின்வரும் பிரிவைப் பார்க்கவும்:
- செக்கியாவில் Shopify Payments சேவையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள்: ஆதரிக்கப்படும் நாணயங்கள் (EUR அல்லது CZK), SEPA தகுதிநிலை, IBAN நாட்டுக் குறியீடுகள் மற்றும் ஆதரிக்கப்படாத கணக்கு வகைகள் உள்ளிட்ட வங்கிக் கணக்கு நிபந்தனைகள்.
எனது வங்கிக் கணக்கைப் புதுப்பித்த பிறகு பேஅவுட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
Shopify Payments இல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கும்போது, புதிய பேஅவுட்களுக்குத் தானாக 3-5 வணிக நாட்கள் வரை பாதுகாப்புரீதியாக நிறுத்திவைப்புச் செய்யப்படும். அங்கீகரிக்கப்படாத மாற்றங்களிலிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அம்சம் இதுவாகும்.
இந்தக் காலகட்டத்தில்:
- புதுப்பித்தலின்போது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பேஅவுட்கள் உங்களின் முந்தைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.
- புதுப்பித்தலுக்குப் பிறகு உருவாக்கப்படும் புதிய பேஅவுட்கள் 3-5 வணிக நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படும்.
- இந்த நிறுத்திவைப்பு முடிந்த பிறகு, உங்களின் பேஅவுட் அட்டவணைப்படி நீங்கள் புதுப்பித்த வங்கிக் கணக்கிற்குப் புதிய பேஅவுட்கள் செயலாக்கப்படத் தொடங்கும்.
இந்த நிறுத்திவைப்பை அகற்ற முடியாது மற்றும் இது அனைத்து வங்கிக் கணக்கு மாற்றங்களுக்கும் பொருந்தும்.
எனது வணிகத் தகவல்கள் சரிபார்க்கப்படவில்லை.
உங்கள் வணிகத் தகவல்களை உள்ளிடும்போது, உங்கள் வணிகப் பெயர், நிறுவன அடையாள எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை வணிக நீதிமன்றப் பதிவேட்டில் உள்ளதைப் போலவே சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். இதில் அடங்குபவை:
- சரியான எழுத்து நிலை (பெரிய மற்றும் சிறிய எழுத்துகள்)
- சரியான நிறுத்தற்குறிகள் மற்றும் இடைவெளி
- பதிவுசெய்யப்பட்டுள்ள முழுமையான வணிகப் பெயர்
எங்கள் வங்கிப் கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை அதிகாரப்பூர்வப் பதிவேடுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் தானாகவே சரிபார்ப்பார்கள். சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் சரிபார்ப்புத் தோல்வியடையக்கூடும். நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் சட்டப்பூர்வப் பெயர், நிறுவன அடையாள எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை காட்டப்படுவதையும், இந்த விவரங்கள் உங்கள் கணக்கில் உள்ள விவரங்களுடன் பொருந்துவதையும் உறுதிப்படுத்தவும். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும்.
எனது முகவரியைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை.
Shopify Payments செக்கியாவைப் பொறுத்தவரை, உங்கள் முகவரியைத் தானாகச் சரிபார்க்க முடியாவிட்டால், செல்ஃபிச் செயல்முறையை நிறைவுசெய்யவோ அல்லது முகவரிச் சான்று ஆவணத்தை வழங்கவோ நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
செல்ஃபிச் செயல்முறையை நிறைவுசெய்வது பரிந்துரைக்கப்படுகிறது, அத்துடன் முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குவதற்குப் பதிலாக இதைச் செய்ய முடியும். சரிபார்ப்புத் தேவைப்படும் தனிநபர் செல்ஃபி பொத்தானைக் கிளிக் செய்து, தன் புகைப்பட அடையாளச் சான்றையும் தன்னையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்துச் சரிபார்க்கலாம்.
ஆவணத்தை நீங்களே வழங்க விரும்பினால், அதற்குப் பதிலாக நீங்கள் அவ்வாறு செய்யலாம். முகவரிச் சான்று ஆவணங்கள் உங்கள் முழுப் பெயரையும் வீட்டு முகவரியையும் காட்ட வேண்டும், அத்துடன் அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவண வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் பின்வருபவற்றையும் உறுதிசெய்ய வேண்டும்:
- உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ள முகவரியானது, உங்கள் முகவரிச் சான்று ஆவணத்தில் உள்ள முகவரியுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
- தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கவும்.
- உங்கள் முகவரிச் சான்று ஆவணத்தின் தெளிவான புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
- நீங்கள் பதிவேற்றும் ஆவணம் உங்களின் முழுப் பெயரைக் காட்டுவதை உறுதிசெய்யவும். எடுத்துக்காட்டாக, உங்களிடம் வேறொருவரின் பெயரில் மின்கட்டண ரசீது இருந்தால், நீங்கள் வேறு ஆவணத்தை வழங்க வேண்டும்.
எனது உரிமையாளர் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை.
செக்கியாவில் Shopify Payments சேவையைப் பயன்படுத்துவதற்கு, உங்கள் பலனடையும் உரிமையாளர்களின் பெயர்களை நீங்கள் உள்ளிட வேண்டும், இதனால் அப்பட்டியலில் உள்ள பெயர்கள், உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர் பெயர்களுடன் பொருந்தும். பொருந்தக்கூடிய பதிவேட்டில் உங்கள் உரிமையாளர் தகவலைத் தேடி, அங்கு காட்டப்பட்டுள்ளவாறே பெயர்களைச் சரியாக உள்ளிடுமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்குப் பலனடையும் உரிமையாளர்கள் இல்லை எனில், அதற்குப் பதிலாக உங்கள் அனைத்து இயக்குநர்களையும் கணக்கில் பட்டியலிட வேண்டும்.
நீங்கள் அவ்வாறு செய்தும் உங்களின் உரிமை அல்லது இயக்குநர் பதவியை இன்னமும் சரிபார்க்க முடியாவிட்டால், நீங்கள் வழங்கிய தகவல்கள் சரியானவை என்று டிஜிட்டல் முறையில் சான்றளிக்கச் சரிபார்ப்புப் பக்கத்தில் உள்ள கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். சான்றளிப்பில் கையெழுத்திடுவதே, தகவல்கள் பொருந்தாத சிக்கலைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும்.
நீங்கள் விரும்பினால், சான்றளிக்கும் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிடும் உரிமையாளர் மற்றும் இயக்குநர் தகவலானது, நீங்கள் பதிவேற்றும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் பொருந்த வேண்டும். ஒரு உரிமையாளர் அல்லது இயக்குநர் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டிருந்து, உங்கள் Shopify Payments கணக்கில் சேர்க்கப்படவில்லை எனில், அந்த நபரை உங்கள் கணக்கில் சேர்த்து, அவருக்கு உரிமையாளர் அல்லது இயக்குநர் பங்கை ஒதுக்க வேண்டும். உரிமையைச் சரிபார்க்க நீங்கள் வழங்கக்கூடிய ஆவண வகைகளின் பட்டியல் இங்கு கிடைக்கிறது.
உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்களும் இயக்குநர்களும் உங்கள் ஆவணத்தில் உள்ளவர்களுடன் 1:1 என்ற அளவில் பொருந்துவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் ஆவணங்களில் இல்லாத கூடுதல் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களைப் பட்டியலிட வேண்டாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
செக்கியாவில் உள்ள Shopify Payments தேவைகள் தொடர்பான இந்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை மதிப்பாய்வு செய்யவும்.
நான் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது இலாப நோக்கற்ற அமைப்பாக இருந்தால், என் புகைப்பட ID மற்றும் முகவரிச் சான்று ஏன் தேவை?
நீங்கள் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது இலாப நோக்கற்ற அமைப்பாக அமைக்கப்பட்டிருந்தாலும், செக்கியாவில் உள்ள விதிமுறைகளின்படி, வணிகத்துடன் தொடர்புடைய நபர்களின் அடையாளங்களையும் அவர்கள் இருக்கும் இடங்களையும் சரிபார்க்க வேண்டியது Shopify இன் வங்கிப் கூட்டாளர்களுக்கு அவசியமாகும்.
நான் செக்கியா குடிமகன் மற்றும் அங்கேயே பிறந்தேன், ஆனால் நான் தற்போது செக்கியாவில் வசிக்கவில்லை. நான் செக்கியாவில் Shopify Payments ஐப் பயன்படுத்த முடியுமா?
உங்கள் வணிக வகை தனிநபர் / தனிநபர் உரிமையாக இருந்தால், செக்கியாவில் Shopify Payments-க்குத் தகுதிபெற நீங்கள் செக்கியாவில் வசிக்க வேண்டியது கட்டாயமாகும். நீங்கள் தற்போது செக்கியாவில் வசிக்கவில்லை எனில், நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்க வேண்டும்.
உங்கள் ஸ்டோர் முகவரியை உங்களின் தற்போதைய இடத்திற்குப் புதுப்பிக்கவும். உங்கள் இடம் Shopify Payments-க்குத் தகுதிபெற்றிருந்தால், அதற்குப் பதிலாக அந்தப் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை நீங்கள் உருவாக்கலாம்.
நீங்கள் ஒரு கூட்டாண்மை, நிறுவனம் அல்லது இலாப நோக்கற்ற அமைப்பாக இருந்தால், நீங்கள் தனிப்பட்ட முறையில் செக்கியாவில் வசிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் உங்கள் வணிகம் செக்கியாவில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் செக்கியா வணிக முகவரியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நான் செக்கியாவில் கூட்டாண்மை வைத்துள்ளேன். நீங்கள் நிறுவன அடையாள எண்ணைக் கேட்கிறீர்கள், ஆனால் என்னிடம் அது இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
செக்கியாவில் உள்ள நீங்கள் கூட்டாண்மையாக இருந்து நிறுவன அடையாள எண் கேட்கப்பட்டு, அது உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் தவறான வணிக வகையை அமைத்துள்ளீர்கள். கணக்கை அமைக்கும் செயல்முறையில் நீங்கள் இருந்தால், வணிக வகையைத் தேர்ந்தெடுக்கும் திரைக்குத் திரும்பி, பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் ஏற்கனவே கணக்கை அமைத்து, சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக நிறுவன அடையாள எண் கேட்கப்பட்டால், அமைப்புகள் > பொது > வணிக விவரங்கள் மூலம் உங்கள் வணிக வகையைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிக அமைப்பிற்குப் பக்கத்தில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்து, வணிக வகை உட்பட வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நான் செக்கியாவில் ஒரு தனிநபர் உரிமையாளர். எனது வணிகப் பதிவு அல்லது தகவல் உங்களுக்குத் தேவையில்லையா?
செக்கியாவில் வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, நீங்கள் தனி வணிகர் அல்லது தனிநபர் உரிமையாளராக இருந்தால், உரிமையாளரின் தனிப்பட்ட தகவல் மட்டுமே தேவைப்படும்.
நீங்கள் ஒரு தனிநபர் உரிமையாளராக இருந்தால், வேறு வணிக வகையாகப் பதிவுசெய்ய முயற்சிக்க வேண்டாம். சரிபார்ப்பைக் கடந்து செல்வதில் உங்களுக்குச் சிக்கல் ஏற்படலாம்.
நான் செக்கியாவில் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனம். நான் எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நீங்கள் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வணிகச் சரிபார்ப்பைப் பொறுத்தவரை, பொது மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான செயல்முறை ஒன்றுதான். உரிமையாளர்களைச் சேர்க்கக் கோரும் கணக்கு அமைப்புப் படிவத்தின் பகுதியை நீங்கள் தவிர்க்கலாம். பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லை என்றால், நீங்கள் அவர்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் செக்கியாவில் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனமாக இருந்து, ஏற்கனவே Shopify Payments கணக்கை அமைத்து, உங்கள் சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக உரிமைத் தகவல் தற்போது உங்களிடம் கேட்கப்பட்டால், உங்களுக்கு உரிமையாளர்கள் எவரும் இல்லை என்பதைக் காட்டும் வகையில் உங்கள் உரிமை விவரங்களைப் புதுப்பிக்கவும். கோப்பில் உள்ளவர்களிடமிருந்து உரிமையாளர் பங்கை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்கள் அனைவரும் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதையும் அவர்களுக்கு இயக்குநர் பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.
பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர் குழு சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்தும்படி உங்களிடம் கேட்கப்படலாம். அது சரியாக இருப்பதாக உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், கோப்பில் உள்ள தகவலுக்கு டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்தச் செயல்முறையில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
என்னிடம் செக்கியாவில் நிறுவன அடையாள எண் இல்லை, ஆனால் நான் ஒரு தனிநபர் அல்லது தனி வணிகர் இல்லை. என்னுடையது வேறு வகையான வணிகம்.
உங்களிடம் நிறுவன அடையாள எண் இல்லை என்றால், பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை மற்றும் பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்ற அமைப்பு ஆகிய வணிக வகை விருப்பங்கள் Shopify இல் உள்ளன. இந்த இரண்டு வணிக வகைகளும், தாங்கள் செக்கியாவில் பதிவுசெய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் பொருந்தக்கூடிய வணிக ஆவணத்தை வழங்க வேண்டும்.
இந்த வணிக வகைகள் எதுவும் உங்கள் வணிகத்திற்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் தனிநபர் / தனிநபர் உரிமை என்பதைத் தேர்ந்தெடுத்து, முக்கிய முடிவெடுப்பவர் அல்லது உரிமையாளரைக் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்க வேண்டும்.
எனது Shopify Payments கணக்குத் தகவலை எப்படிப் புதுப்பிப்பது?
கணக்குச் சரிபார்ப்பை நிறைவுசெய்யும்படி உங்களிடம் தொடர்ந்து கேட்கப்பட்டால், கேட்கப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதோடு, சரிபார்ப்புப் பக்கத்திலிருந்து உங்கள் தகவலில் எந்தப் புதுப்பிப்புகளையும் நீங்கள் செய்யலாம்.
சரிபார்ப்புச் செயல்முறைக்கு வெளியே, கடையின் உரிமையாளர் அமைப்புகள் > பொது > வணிக விவரங்கள் மூலம் இந்த விவரங்களைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக அமைப்பிற்குப் பக்கத்தில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்து, வணிக வகை உட்பட வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
இங்கு நீங்கள் செய்யும் எந்த மாற்றங்களும் எங்கள் வங்கிப் கூட்டாளர்களின் மதிப்பாய்வுக்குத் தானாகவே அனுப்பப்படும், புதிய தகவலானது அவர்களின் சரிபார்ப்புச் செயல்முறை மூலம் மீண்டும் இயக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். மாற்றங்கள் தானாகவே மீண்டும் சரிபார்க்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் உங்களிடம் ஆதார ஆவணங்களும் கேட்கப்படலாம்.
எனது சரிபார்ப்புக் காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன ஆகும்?
சரிபார்ப்புச் செயல்முறை நிறைவடையும் வரை உங்கள் பேஅவுட்களில் தற்காலிக இடைநிறுத்தத்தைக் காண்பீர்கள். முதல் காலக்கெடு முடிந்ததும் பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, Shopify Payments மூலம் ஆர்டர்களை ஏற்கும் உங்கள் திறன் எப்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைக் குறிக்கும் இரண்டாவது காலக்கெடுவைக் காண்பீர்கள்.
இந்த இடைநிறுத்தங்கள் அனைத்தும் தற்காலிகமானவை, நீங்கள் சரிபார்ப்பை நிறைவுசெய்த பிறகு அவை தானாகவே நீக்கப்படும். உங்களின் காலக்கெடு விவரங்களுக்கு உங்கள் நிர்வாகப் பக்கத்தைப் பார்க்கவும்.
ஜூன் 2026 முதல், புதிதாகத் தொடங்கப்பட்ட செக்கியா Shopify Payments கணக்குகளுக்கான சரிபார்ப்பை நிறைவுசெய்ய, செயலாக்கப்பட்ட முதல் ஆர்டரிலிருந்து 90 நாட்கள் வழங்கப்படும். 90 நாட்கள் கடந்தால், Shopify Payments-ஐப் பயன்படுத்தி நீங்கள் செயலாக்கிய ஆர்டர்களுக்கான பணம் தானாகவே திரும்பப்பெறப்படலாம்.
இந்தக் கொள்கை ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் இது ஜூன் 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு உருவாக்கப்படும் புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தக் கொள்கை உங்களுக்குப் பொருந்தினால், பணத்தைத் திரும்பப்பெறுதல் செயல்முறையை எப்போது எதிர்பார்க்கலாம் என்பதை எச்சரிக்கைகள் கடையின் உரிமையாளருக்குத் தெரிவிக்கும்.
செக்கியாவில் Shopify Payments பற்றி Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன்
உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்ப்பதற்கு உதவ, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன், இந்தத் தகவலைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்:
- நீங்கள் பெற்ற பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள் (வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை மறைத்துவிடவும்)
- அமைவின் போது நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக வகை
- உங்கள் நிறுவன அடையாள எண், பொருந்தினால்
- நீங்கள் சிக்கலை எதிர்கொண்ட குறிப்பிட்ட படி
- நீங்கள் பயன்படுத்தும் உலாவி மற்றும் சாதனம்
- முழு IBAN-ஐயும் பகிராமல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் (கணக்கு வகை, நாணயம்)
- நீங்கள் பதிவேற்றிய ஏதேனும் ஆவணங்கள் மற்றும் அவற்றை நீங்கள் எப்போது பதிவேற்றினீர்கள் என்ற தகவல்
இந்தத் தகவலைத் தயாராக வைத்திருப்பது, Shopify ஆதரவு உங்களுக்கு இன்னும் சிறப்பாக உதவ வழிவகுக்கும்.