ஜிப்ரால்டருக்கான Shopify Payments
உங்கள் Shopify ஸ்டோரின் செக்அவுட்டில் பல்வேறு கட்டண முறைகளை ஏற்க, ஜிப்ரால்டரில் நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்தலாம். உங்கள் Shopify கணக்கை அமைக்கும்போது Shopify Payments ஐச் செயல்படுத்தலாம். தனிப்பட்ட தகவல் மற்றும் பிசினஸ் தகவலை நீங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். Shopify Payments ஐப் பயன்படுத்தும் போது தேவைப்படும் தகவல்கள் குறித்து மேலும் அறிக.
Shopify Payments மூலம், உங்கள் கட்டணச் செயலாக்கம் மற்றும் ஆர்டர் மேலாண்மை அமைப்புகளை நேரடியாக உங்கள் Shopify நிர்வாகியிலிருந்தே நிர்வகிக்கலாம். மோசடி கண்டறிதல் மற்றும் 3D Secure போன்ற குறியாக்க முறைகள் வாயிலாக வாடிக்கையாளர்களின் தரவை Shopify Payments பாதுகாக்கிறது. வாடிக்கையாளர்களின் கார்டு பர்ச்சேஸ்களுக்காக Shopify Payments இல் உங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணச் செயலாக்க விகிதங்கள், உங்கள் Shopify கணக்கிற்கு நீங்கள் வைத்துள்ள சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது.
ஜிப்ரால்டருக்கான Shopify Payments, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பேமெண்ட்டுகளையும் விரைவான செக்அவுட் பேமெண்ட்டுகளையும் ஏற்க உங்களை அனுமதிக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆர்டர்களுக்காகப் பணம் செலுத்தும்போது அவர்களுக்கு இன்னும்கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் உள்ளூர் கட்டண முறைகளையும் நீங்கள் ஏற்கலாம்.