ஜிப்ரால்டரில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் தேவைகள்

ஜிப்ரால்டரில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, விதிமுறைகளுக்கு இணங்குவதற்கும் நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்கும் நடைமுறையில் உள்ள தேவைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். Shopify Payments-ஐ அமைக்கும்போது, சரிபார்ப்புக்காகத் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறும், ஏற்கப்பட்ட ஆவண வகைகளைச் சமர்ப்பிக்குமாறும், உங்கள் சமர்ப்பிப்புகள் குறிப்பிட்ட இணக்க அளவுகோல்களைப் பூர்த்திசெய்வதை உறுதிப்படுத்துமாறும் நீங்கள் கோரப்படுவீர்கள்.

ஜிப்ரால்டரில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்

ஜிப்ரால்டரில் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

  • தகுதியான வணிக வகைகள்: சில வகையான வணிகங்களும் சேவைகளும் Shopify Payments-ஐப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் வணிகம் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்க, Shopify Payments சேவை விதிமுறைகளில் உள்ள ஜிப்ரால்டருக்கான தடைசெய்யப்பட்ட வணிக வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
  • வங்கிக் கணக்குத் தேவைகள்: Shopify Payments உடன் உங்கள் வங்கிக் கணக்கை இணைப்பதற்கு முன், அது பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:
    • வங்கிக் கணக்கு GBP நாணயத்தில் இருக்க வேண்டும்.
    • இந்த வங்கிக் கணக்கானது சிங்கிள் யூரோ பேமெண்ட்ஸ் ஏரியா (SEPA) பரிமாற்றங்களுக்குத் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
    • இந்த வங்கிக் கணக்கில், பின்வரும் ஏதேனும் ஒரு நாட்டுக் குறியீட்டில் தொடங்கும் சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN) இருக்க வேண்டும்: AT, BE, BG, CH, CY, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE அல்லது SI.

ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகைகள்

சில வங்கிக் கணக்கு வகைகள் Shopify Payments உடன் இணங்கக்கூடியவை அல்ல. பின்வரும் கணக்கு வகைகள் ஆதரிக்கப்படுவதில்லை:

  • வயர் பரிமாற்றங்களை மட்டுமே ஏற்கும் நடப்புக் கணக்குகள்: இந்தக் கணக்குகள் Shopify Payments உடன் செயல்படாது.
  • சேமிப்புக் கணக்குகள்: Shopify Payments பேஅவுட்களுக்குச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்த முடியாது.
  • Flex-currency கணக்குகள்: ஒரே நேரத்தில் பல நாணயங்களை ஆதரிக்கும் கணக்குகள் ஆதரிக்கப்படுவதில்லை.
  • பணப் பரிமாற்றச் சேவைகள்: சில ஃபின்டெக் இயங்குதளங்களைப் போன்று வங்கிக் கணக்குகளாகச் செயல்படும் சேவைகளை Shopify Payments உடன் பயன்படுத்த முடியாது.

Shopify சாராத மெய்நிகர் கணக்குகள் ஆதரிக்கப்பட்டாலும், இந்தக் கணக்குகள் மூலம் அதிக பேஅவுட் தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

உங்கள் பிராந்தியத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பரிமாற்ற வகையை உங்கள் கணக்கு ஏற்குமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கம்

நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஜிப்ரால்டர் விதிமுறைகளுக்கு இணங்க, நீங்களும் உங்கள் வணிகமும் குறித்த தகவல்களை Shopify-யும் அதன் வங்கிப் கூட்டாளர்களும் சேகரித்து சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். உள்ளூர் விதிகள் மற்றும் விதிமுறைகள் மாறும்போது, உங்கள் Shopify Payments கணக்குச் செயல்பாட்டில் உள்ளவரை கூடுதல் தகவல்களை வழங்குமாறு Shopify மற்றும் அதன் வங்கிப் கூட்டாளர்களிடமிருந்து உங்களுக்குத் தகவல் வரக்கூடும்.

வணிகத்தின் அடையாளம், வணிகத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் அடையாளங்கள் மற்றும் இந்த இரண்டுக்கும் இடையிலான உறவின் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தவே இத்தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

Shopify உங்களுக்கு எந்த ஆவணங்களையும் தபால் மூலம் அனுப்புவதில்லை. முக்கியமான ஆவணங்கள் அல்லது தகவல்தொடர்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அமைப்புகள் > பயனர்கள் பக்கத்தில் கடையின் உரிமையாளருக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கச் செய்யப்படும்.

உங்கள் தகவல்கள் எவ்வாறு ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி அறிய, Shopify-இன் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.

ஜிப்ரால்டரில் Shopify Payments-ஐச் செயல்படுத்தத் தேவைப்படும் தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்கள்

நீங்கள் வழங்க வேண்டிய தகவல்களைத் தீர்மானிப்பது உங்கள் வணிக வகையே என்பதால், அதை நீங்கள் சரியாகக் குறிப்பிட வேண்டும்.

நீங்கள் எந்தவொரு அரசு நிறுவனத்திலும் பதிவுசெய்யவில்லை என்றால் அல்லது பதிவுசெய்து தனியுரிமை வணிகராக (sole trader) வணிகத்தை நடத்தினால், தனிநபர் / தனியுரிமை வணிகர் (Individual / Sole trader) வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து, ஒரு நிறுவன எண்ணைக் (incorporation number) கொண்டிருந்தால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • LLP அல்லது LP போன்ற நிறுவன எண்களைக் கொண்ட கூட்டாண்மைகள், இணைக்கப்பட்ட கூட்டாண்மை (Incorporated partnership) வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நிறுவன எண்களைக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள், இணைக்கப்பட்ட இலாப நோக்கற்றது (Incorporated non-profit) வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • LTD போன்ற நிறுவன எண்களைக் கொண்ட மற்ற அனைத்து வணிகங்களும் தனியார் நிறுவனம் (Private corporation) வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களிடம் பதிவுசெய்யப்பட்ட வணிகம் இருந்து, நிறுவன எண் இல்லை என்றால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • நிறுவன எண்கள் இல்லாத கூட்டாண்மைகள் இணைக்கப்படாத கூட்டாண்மை (Unincorporated partnership) வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நிறுவன எண்கள் இல்லாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைக்கப்படாத இலாப நோக்கற்றது (Unincorporated non-profit) வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுப்பது என உங்களுக்குத் தெரியவில்லை என்றால், சரியான வகையைத் தேர்ந்தெடுக்க உதவியைப் பெற Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தனிநபர்கள் / தனியுரிமை வணிகர்

தனிநபர்கள் என்பவர்கள், அரசிடம் பதிவுசெய்யாமல் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆவர். தனியுரிமை வணிகர்கள் என்பவர்கள், தங்களின் தனிப்பட்ட தகவல்களின் கீழ் அரசிடம் பதிவுசெய்துள்ள ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆவர். இரண்டுமே ஜிப்ரால்டரில் வசிக்கும் ஒரு தனிநபருக்குச் சொந்தமான மற்றும் அவரால் கட்டுப்படுத்தப்படும் வணிகங்களாகும். இதில் சுயாதீனப் பணியாளர்களும் சுயதொழில் செய்யும் சிறு வணிக நடத்துநர்களும் அடங்குவர்.

இந்த வணிக வகைகள் ஒரே மாதிரியாகக் கருதப்படுவதால், இவை ஒரே தகவலையே வழங்க வேண்டும். தனிநபர்களும் தனியுரிமை வணிகர்களும் வழங்க வேண்டியவை:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளபடியான உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: நீங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு தொலைபேசி எண்.
  • ஜிப்ரால்டரிலுள்ள வசிப்பிட முகவரி: ஆவணத்தில் உள்ள முகவரியுடன் பொருந்தும் உங்கள் வீட்டு முகவரி.

உங்கள் தகவலைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்கள் தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்து, இன்னும் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவலானது உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
தனியார் நிறுவனங்கள் (LTD)

ஒரு தனியார் நிறுவனம் (private corporation) என்பது பங்குதாரர்களுக்குச் சொந்தமான, அதன் ஈக்விட்டி பங்குகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு வணிகமாகும். ஒரு கார்ப்பரேஷன் என்பது அதை நடத்தும் நபர்களிடமிருந்து வேறுபட்ட, அதன் சொந்தச் சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறது. அவை பொதுவாக ஒரு இயக்குநர் குழுவையும் கொண்டிருக்கும்.

தனியார் நிறுவனங்கள், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு பலனடையும் உரிமையாளர் அல்லது நிர்வாகியைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளபடியான உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: நீங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணப்படுத்தலுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.

உங்கள் தகவலைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்கள் தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்து, இன்னும் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவலானது உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

தனியார் நிறுவனங்கள், வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி உள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • கார்ப்பரேட் பதிவு எண்: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடியான வணிகத்தின் கார்ப்பரேட் பதிவு எண்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால் உங்கள் VAT பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள ஒரு தொடர்பின் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடியான வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவு முகவரி.

ஜிப்ரால்டரில் (Gibraltar) உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்துகளின் நிலை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், கார்ப்பரேட் பதிவு எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

நீங்கள் நிறுவனத்தின் பலனடையும் உரிமையாளராக இருந்தால், பலனடையும் உரிமையாளர்களாக உள்ள வேறு எந்த நபர்களையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைத் துல்லியமாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தாமை கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும் நீங்கள் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஹோல்டிங் நிறுவனத்திற்குச் (முழுமையாக அல்லது பகுதியாக) சொந்தமானதாக இருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையொப்பமிடவும்.

உங்கள் வணிகத்திற்கு உரிமையாளர்கள் இல்லை எனில், சான்றளிப்பில் கையொப்பமிடுமாறு அல்லது அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் (LLP, LP)

இணைக்கப்பட்ட கூட்டாண்மை (incorporated partnership) என்பது குறைந்தபட்சம் இரண்டு கூட்டாளர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும், அவர்கள் வணிக நடவடிக்கைகளுக்காகப் பதிவுசெய்து கார்ப்பரேட் பதிவு எண்ணைப் பெற்றுள்ளவர்கள் ஆவர். இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் ஈக்விட்டியைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த வகையான கூட்டாண்மை என்பது உரிமையாளர்களிடமிருந்து வேறுபட்ட, அதன் சொந்த நிறுவனமாகும்.

இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஓர் உரிமையாளர் அல்லது கூட்டாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளபடியான உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: நீங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணப்படுத்தலுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.

உங்கள் தகவலைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்கள் தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்து, இன்னும் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவலானது உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி உள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • கார்ப்பரேட் பதிவு எண்: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடியான வணிகத்தின் கார்ப்பரேட் பதிவு எண்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால் உங்கள் VAT பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள ஒரு தொடர்பின் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடியான வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவு முகவரி.

ஜிப்ரால்டரில் (Gibraltar) உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்துகளின் நிலை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், கார்ப்பரேட் பதிவு எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

நீங்கள் ஓர் உரிமையாளர் அல்லது கூட்டாளராக இருந்தால், உரிமையாளர்களாகவோ கூட்டாளர்களாகவோ உள்ள வேறு நபர்களையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைத் துல்லியமாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தாமை கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும் நீங்கள் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஹோல்டிங் நிறுவனத்திற்குச் (முழுமையாக அல்லது பகுதியாக) சொந்தமானதாக இருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையொப்பமிடவும்.

இணைக்கப்படாத கூட்டாண்மைகள்

இணைக்கப்படாத கூட்டாண்மை (unincorporated partnership) என்பது குறைந்தது இரண்டு கூட்டாளர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும். இவர்கள் கார்ப்பரேட் பதிவு எண்ணைப் பெறப் பதிவுசெய்திருக்க மாட்டார்கள், ஆனால் கூட்டாண்மை ஒப்பந்தத்தை வைத்திருப்பார்கள். இந்தச் சூழலில் உரிமையாளர்கள் சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுவார்கள் மற்றும் வணிகம் என்பது ஒரு தனி நிறுவனம் அல்ல.

இணைக்கப்படாத கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஓர் உரிமையாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளபடியான உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: நீங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணப்படுத்தலுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.

உங்கள் தகவலைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்கள் தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்து, இன்னும் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவலானது உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்படாத கூட்டாண்மைகள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடியான சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால் உங்கள் VAT பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள ஒரு தொடர்பின் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடியான வணிகத்தின் அதிகாரப்பூர்வ பதிவு முகவரி.

ஜிப்ரால்டரில் (Gibraltar) உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்துகளின் நிலை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

நீங்கள் ஓர் உரிமையாளர் அல்லது கூட்டாளராக இருந்தால், உரிமையாளர்களாகவோ கூட்டாளர்களாகவோ உள்ள வேறு நபர்களையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைத் துல்லியமாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தாமை கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமைச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும் நீங்கள் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஹோல்டிங் நிறுவனத்திற்குச் (முழுமையாக அல்லது பகுதியாக) சொந்தமானதாக இருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையொப்பமிடவும்.

இணைக்கப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனங்கள்

இலாப நோக்கமற்ற நிறுவனம் (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கான இலாபத்தை உருவாக்குவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதன் முதன்மைப் பணி பொதுமக்கள் அல்லது சமூக நலனுக்காகச் சேவை செய்வதாகும். இணைக்கப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காகப் பதிவுசெய்து கார்ப்பரேட் பதிவு எண்ணைப் பெற்றுள்ளன.

இணைக்கப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு இயக்குநர் அல்லது நிர்வாகியைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளபடியான உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: நீங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணப்படுத்தலுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.

உங்கள் தகவலைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்கள் தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்து, இன்னும் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவலானது உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி உள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • கார்ப்பரேட் பதிவு எண்: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடியான வணிகத்தின் கார்ப்பரேட் பதிவு எண்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால் உங்கள் VAT பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள ஒரு தொடர்பின் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: Companies House இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடியான வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவு முகவரி.

ஜிப்ரால்டரில் (Gibraltar) உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்துகளின் நிலை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், கார்ப்பரேட் பதிவு எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

நீங்கள் இயக்குநர் குழுவில் இருந்தால், உங்கள் இயக்குநர் குழுவில் உள்ள அல்லது முக்கிய முடிவெடுக்கும் நபர்களாக உள்ள வேறு நபர்களையும் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைத் துல்லியமாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் இயக்குநர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தாமை கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது இயக்குநர் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும் நீங்கள் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்படாத இலாப நோக்கமற்ற நிறுவனங்கள்

இலாப நோக்கமற்ற நிறுவனம் (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கான இலாபத்தை உருவாக்குவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதன் முதன்மைப் பணி பொதுமக்கள் அல்லது சமூக நலனுக்காகச் சேவை செய்வதாகும். இணைக்கப்படாத இலாப நோக்கமற்ற நிறுவனம் கார்ப்பரேட் பதிவு எண்ணைக் கொண்டிருக்காது, ஆனால் அது உள்ளூர் நீதிமன்றங்களில் பதிவுசெய்து இலாப நோக்கற்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.

இணைக்கப்படாத இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் நபர் அல்லது அமைப்பாளரைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் மற்றும் அந்த நபரை ஒரு நிர்வாகியாகக் குறிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ளபடியான உங்கள் முழுச் சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: நீங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான மற்றும் செயலில் உள்ள ஒரு தொலைபேசி எண்.
  • குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணப்படுத்தலுடன் பொருந்தக்கூடிய உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.

உங்கள் தகவலைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்கள் தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல் சரியாக இருந்து, இன்னும் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:

  • செல்லுபடியாகும் புகைப்பட ID உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • உங்கள் ஆவணங்களில் உள்ள தகவலானது உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்படாத இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடியான சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால் உங்கள் VAT பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள ஒரு தொடர்பின் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடியான வணிகத்தின் அதிகாரப்பூர்வ பதிவு முகவரி.

ஜிப்ரால்டரில் (Gibraltar) உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலை Shopify வங்கியியல் கூட்டாளர்கள் சரிபார்ப்பார்கள். எழுத்துகளின் நிலை, நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

நீங்கள் இயக்குநர் குழுவில் இருந்தால், உங்கள் இயக்குநர் குழுவில் உள்ள அல்லது முக்கிய முடிவெடுக்கும் நபர்களாக உள்ள வேறு நபர்களையும் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைத் துல்லியமாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானியங்கியாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் இயக்குநர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தாமை கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது இயக்குநர் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும் நீங்கள் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

ஏற்கத்தக்க ஆவண வகைகள்

உங்கள் அடையாளத்தையும் வணிக விவரங்களையும் சரிபார்க்க எந்தெந்த ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பிரிவு விளக்குகிறது.

அடையாள ஆவணங்கள்

நீங்கள் வழங்கும் அடையாள ஆவணத்தில் உள்ள தகவலுடன் பொருந்தும்படி உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள பெயரும் பிறந்த தேதியும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் செல்லுபடியாகக் கூடியவையாகவும் காலாவதியாகாமலும் இருக்க வேண்டும். அடையாளச் சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன:

  • பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • அடையாள அட்டை

முகவரி ஆவணங்கள்

நீங்கள் வழங்கும் முகவரி ஆவணங்களில் உள்ள தகவலுடன் பொருந்தும்படி உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள பெயரும் முகவரியும் புதுப்பிக்கப்பட வேண்டும். புகைப்பட ID அட்டைகளை (ஓட்டுநர் உரிமம் போன்றவை) அடையாள ஆவணமாகவோ முகவரி ஆவணமாகவோ ஒரு முறை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். ஓட்டுநர் உரிமத்தை அடையாளச் சான்றாக நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தால், அதை மீண்டும் முகவரிச் சான்றாகப் பயன்படுத்த முடியாது; பட்டியலிலிருந்து வேறொரு ஆவணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிரத்தியேகமான காலாவதி தேதி உள்ள ஆவணங்களைத் தவிர்த்து, அனைத்து ஆவணங்களிலும் கடந்த 6 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட தேதி இருக்க வேண்டும். முகவரிச் சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன:

  • பயன்பாட்டுப் பில்
  • வங்கி அறிக்கை
  • ஓட்டுநர் உரிமம்

வணிகச் சரிபார்ப்பு ஆவணங்கள்

வணிகச் சரிபார்ப்புக்குப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன. அவற்றில் சட்டப்பூர்வ நிறுவனப் பெயர், ஒருங்கிணைப்பு எண், உங்கள் வணிக முகவரி ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் வழங்கும் ஆவணங்களில் உள்ள தகவலுடன் பொருந்தும்படி உங்கள் Shopify Payments கணக்கிலுள்ள விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்:

  • Companies House ஆவணம்
  • ஒருங்கிணைப்புச் சான்றிதழ்

உரிமை ஆவணங்கள்

பின்வரும் ஆவணங்களில் உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயரும் உரிமையாளர்கள் அல்லது இயக்குனர்களின் முழுப் பெயர்களும் காட்டப்பட்டிருந்தால், அவை உரிமை அல்லது இயக்குனர் பதவிக்கான சான்றாக ஏற்கப்படும்.

உரிமையாளர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள்:

  • வருடாந்திர ரிட்டர்ன்
  • பதவியிலிருப்பதற்கான சான்றிதழ்
  • Companies House பிரித்தெடுப்பு
  • கூட்டாண்மை ஒப்பந்தம்
  • உறுப்பினர்களின் பதிவேடு

இயக்குனர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள்:

  • வருடாந்திர ரிட்டர்ன்
  • பதவியிலிருப்பதற்கான சான்றிதழ்
  • Companies House பிரித்தெடுப்பு
  • உறுப்பினர்களின் பதிவேடு

உங்கள் ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள பலனடையும் உரிமையாளர் ஒவ்வொருவரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு, உரிமையாளர் என்ற பங்கு ஒதுக்கப்பட வேண்டும். வணிகத்தின் பங்குகளில் 25% அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர் பலனடையும் உரிமையாளர் என வரையறுக்கப்படுகிறார். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்தும்படி உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.

உங்கள் வணிகத்தில் பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லையென்றால், அதற்குப் பதிலாக உங்கள் இயக்குனர்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில், இயக்குனர்களுக்காக மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்கள் தகுதியானவை. உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு இயக்குனரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு, இயக்குனர் என்ற பங்கு ஒதுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்தும்படி உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.

உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது எனில், உங்கள் உரிமையாளர்களும் இயக்குனர்களும் சரியாக உள்ளிடப்பட்டிருப்பதை முதலில் உறுதிசெய்து, பின்னர் கையொப்பமிடு பொத்தானை அழுத்துவதன் மூலம் டிஜிட்டல் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கவும்.

ஆவணப்படுத்தல் இணக்கத்தை உறுதிசெய்தல்

உங்கள் ஆவணங்களை வழங்கும்போது, அவை தேவையான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். இணக்கத்தை உறுதிசெய்ய, பின்வரும் வழிகாட்டுதல்களைச் சரிபார்க்கவும்:

  • துல்லியம்: ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ளவற்றுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்தும்படி கணக்கைப் புதுப்பிக்கவும்.
  • தெளிவு மற்றும் வாசிப்புத்திறன்: உங்கள் ஆவணங்கள் தெளிவாகவும் படிக்கும் அளவுக்குப் பெரியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். ஆவணம் முழுவதும் புகைப்படத்தில் தெரிவதை உறுதிப்படுத்தவும்.
  • முழுத்தன்மை: தேவையான விவரங்கள் அனைத்தும் உங்கள் ஆவணத்தில் தெரிவதை உறுதிப்படுத்தவும். ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏற்கத்தக்க ஆவண வகைகளைச் சரிபார்க்கவும்.
  • அசல் ஆவணங்கள்: கேமராவைப் பயன்படுத்தி உங்கள் ஆவணத்தை அசல் புகைப்படம் எடுக்கவும். ஆவணங்களை நகலெடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ, திரைப்பிடிப்பு எடுக்கவோ வேண்டாம். ஆவணங்களின் புகைப்படங்களை மற்ற ஆவணங்களில் ஒட்ட வேண்டாம். கணினித் திரைகளையோ அச்சுப் பிரதிகளையோ புகைப்படம் எடுக்க வேண்டாம்.
    • உங்களின் ஆவணம் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டிருந்தால், அதை எவ்வித மாற்றமும் செய்யாமல், முதலில் உங்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே அனைத்துப் பக்கங்களையும் கொண்ட PDF கோப்பாக வழங்கவும்.
  • செல்லுபடியாகும் தன்மை: புகைப்பட ID-கள் காலாவதியாகாமல் இருப்பதையும் முகவரிச் சான்று சமீபத்தில் வழங்கப்பட்டதையும் உறுதிப்படுத்தவும். வணிகப் பதிவுக்கான சான்றை வழங்கினால், உங்கள் வணிகம் இன்னும் செயலில் பதிவுசெய்யப்பட்ட நிலையிலும் நல்ல நிலையிலும் இருக்க வேண்டும்.

பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், பழக்கப்படுத்துதல் சார்ந்த இந்தப் பொதுவான சிக்கல்களையும் அவற்றின் தீர்வுகளையும் சரிபார்க்கவும்.

எனது ஆவணம் நிராகரிக்கப்பட்டது.

உங்கள் கணக்கில் உள்ள தகவல், நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, தேவைப்பட்டால் ஆவணங்களுக்கு ஏற்றவாறு உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும். உங்கள் ஆவணங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இந்தப் பக்கத்திலுள்ள பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:

  • ஏற்கத்தக்க ஆவண வகைகள்: எந்தெந்த ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன, அவற்றில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும். திரைப்பிடிப்புகள், ஆன்லைன் தேடல்களின் அச்சுப் பிரதிகள், பதிவேட்டின் திரைப்பிடிப்புகள் போன்றவை ஏற்கப்படாது.
  • ஆவணப்படுத்தல் இணக்கத்தை உறுதிசெய்தல்: துல்லியம், தெளிவு, முழுத்தன்மை, அசல் ஆவணங்கள், செல்லுபடியாகும் தன்மை ஆகியவற்றிற்கான தேவைகள்.
எனது வங்கிக் கணக்கைப் புதுப்பித்த பிறகு பேஅவுட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Shopify Payments இல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கும்போது, புதிய பேஅவுட்கள் மீது தானாகவே 3-5 வணிக நாட்களுக்குப் பாதுகாப்பு நிறுத்திவைப்பு செயல்படுத்தப்படும். இது அங்கீகரிக்கப்படாத மாற்றங்களிலிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு அம்சமாகும்.

இந்த நேரத்தில்:

  • புதுப்பிக்கும்போது ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பேஅவுட்கள் உங்களின் முந்தைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.
  • புதுப்பிப்பிற்குப் பிறகு உருவாக்கப்படும் புதிய பேஅவுட்கள் 3-5 வணிக நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படும்.
  • நிறுத்திவைப்பு முடிந்ததும், உங்கள் பேஅவுட் திட்டத்தின்படி உங்கள் புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்குப் புதிய பேஅவுட்கள் செயலாக்கப்படத் தொடங்கும்.

இந்த நிறுத்திவைப்பை அகற்ற முடியாது; அனைத்து வங்கிக் கணக்கு மாற்றங்களுக்கும் இது பொருந்தும்.

எனது வணிகத் தகவல் சரிபார்க்கப்படவில்லை.

உங்கள் வணிகத் தகவலை உள்ளிடும்போது, வணிகத்தின் பெயர், ஒருங்கிணைப்பு எண், முகவரி ஆகியவை Companies House இல் இருப்பதைப் போலவே சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். இதில் அடங்குபவை:

  • சரியான எழுத்து வடிவம் (பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து)
  • சரியான நிறுத்தற்குறிகள் மற்றும் இடைவெளி
  • பதிவுசெய்யப்பட்டுள்ளபடியான முழுமையான வணிகப் பெயர்

அதிகாரப்பூர்வப் பதிவேடுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் Shopify பேங்கிங் கூட்டாளர்கள் உங்கள் தகவலைத் தானாகவே சரிபார்க்கிறார்கள். சிறிய வேறுபாடுகள் இருந்தால்கூடச் சரிபார்ப்பு தோல்வியடையலாம். நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் உங்களின் சட்டப்பூர்வப் பெயர், ஒருங்கிணைப்பு எண், வணிக முகவரி ஆகியவை உள்ளதா என்பதையும், இந்த விவரங்கள் உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றுடன் பொருந்துகிறதா என்பதையும் உறுதிப்படுத்தவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்தும்படி உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும்.

என் முகவரியைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை.

Shopify Payments Gibraltar க்கு, உங்கள் முகவரியைத் தானாகச் சரிபார்க்க முடியாவிட்டால், செல்ஃபி எடுக்கும் செயல்முறையை முடிக்குமாறு அல்லது முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும்.

செல்ஃபி எடுக்கும் செயல்முறையை முடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. சரிபார்ப்பு தேவைப்படும் தனிநபர் செல்ஃபி பொத்தானைக் கிளிக் செய்து, புகைப்படம் உள்ள ID-யையும் தங்களையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்துச் சரிபார்க்கலாம். முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குவதற்குப் பதிலாகச் செல்ஃபி எடுக்கும் செயல்முறையை நீங்கள் முடிக்கலாம்.

நீங்கள் ஒரு ஆவணத்தை மேனுவலாக வழங்க விரும்பினால், அதற்குப் பதிலாக அவ்வாறு செய்யலாம். முகவரிச் சான்று ஆவணங்களில் உங்களின் முழுப் பெயரும் வீட்டு முகவரியும் இருக்க வேண்டும், மேலும் அவை இங்கு காட்டப்பட்டுள்ள ஆவண வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் பின்வருபவற்றையும் உறுதிசெய்ய வேண்டும்:

  1. உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்ட முகவரியானது, உங்கள் முகவரிச் சான்று ஆவணத்தில் உள்ள முகவரியுடன் சரியாகப் பொருந்த வேண்டும்.
  2. தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உங்கள் தகவலைப் புதுப்பிக்கவும்.
  3. உங்கள் முகவரிச் சான்று ஆவணத்தின் தெளிவான புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
  4. நீங்கள் பதிவேற்றும் ஆவணத்தில் உங்களின் சொந்த முழுப் பெயர் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்களிடம் வேறொருவர் பெயரில் பயன்பாட்டு பில் இருந்தால், நீங்கள் வேறொரு ஆவணத்தை வழங்க வேண்டும்.

அடையாளச் சரிபார்ப்பு அல்லது முகவரிச் சரிபார்ப்பாகப் புகைப்பட ID கார்டுகளை (ஓட்டுநர் உரிமம் போன்றவை) ஒரு முறை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். உங்களின் புகைப்பட ID-யாக உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், ஏற்கப்பட்ட முகவரி ஆவணங்கள் பட்டியலிலிருந்து வேறொரு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

எனது உரிமையாளர் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை.

Shopify Payments ஜிப்ரால்டருக்கு, பட்டியலிடப்பட்டுள்ள பெயர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்துமாறு, நீங்கள் உங்கள் உரிமையாளர்களை உள்ளிட வேண்டும். பதிவேட்டில் உங்கள் உரிமையாளர் தகவலைத் தேடிப் பார்த்து, அங்கு காட்டப்பட்டுள்ளவாறே பெயர்களைச் சரியாக உள்ளிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு உரிமையாளர்கள் எவரும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் கணக்கில் உங்கள் இயக்குநர்கள் அனைவரையும் பட்டியலிட வேண்டும்.

நீங்கள் அவ்வாறு செய்த பிறகும், உங்கள் உரிமை அல்லது இயக்குநர்ப்பதவியை இன்னமும் சரிபார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் வழங்கிய தகவல் சரியானது என்பதை டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, உங்கள் சரிபார்ப்புப் பக்கத்திலுள்ள கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் விரும்பினால், சான்றளிப்புச் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை நீங்கள் வழங்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிடும் உரிமையாளர் மற்றும் இயக்குநர் தகவல், நீங்கள் பதிவேற்றும் ஆவணத்திலுள்ள தகவலுடன் பொருந்த வேண்டும். உங்கள் ஆவணத்தில் உரிமையாளர் அல்லது இயக்குநர் பட்டியலிடப்பட்டு, ஆனால் உங்கள் Shopify Payments கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தால், நீங்கள் அந்த நபரை உங்கள் கணக்கில் சேர்த்து, அவருக்கு உரிமையாளர் அல்லது இயக்குநர் பங்கை ஒதுக்க வேண்டும். உரிமையைச் சரிபார்க்க நீங்கள் வழங்கக்கூடிய ஆவண வகைகளின் பட்டியல் இங்கே கிடைக்கிறது.

உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள், உங்கள் ஆவணத்தில் இருப்பவர்களுடன் சரியாக 1:1 என்ற அளவில் பொருந்துகிறார்கள் என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். உங்கள் ஆவணங்களில் காட்டப்படாத கூடுதல் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களைப் பட்டியலிட வேண்டாம்.

என்னிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்பட்டது, ஆனால் என்னிடம் அது இல்லை.

உங்களிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்பட்டு, உங்களிடம் அது இல்லை என்றால், உங்கள் கணக்கு தவறான வணிக வகையாக அமைக்கப்பட்டிருக்கலாம்.

நீங்கள் கணக்கை அமைக்கும் செயலில் இருந்தால், வணிக வகையைத் தேர்ந்தெடுக்கும் திரைக்குத் திரும்பிச் சென்று, உங்கள் வணிகக் கட்டமைப்புக்கு ஏற்ப நிறுவனமாகப் பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை அல்லது நிறுவனமாகப் பதிவுசெய்யப்படாத லாப நோக்கற்ற நிறுவனம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஏற்கனவே கணக்கை அமைத்திருந்து, உங்கள் சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உங்களிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்பட்டால், அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் சென்று உங்கள் வணிக வகையைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக விவரங்களுக்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, பிறகு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வணிக வகையைப் புதுப்பிப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

உங்களிடம் நிறுவனப் பதிவு எண் இல்லை மற்றும் இந்த வணிக வகைகள் இரண்டுமே உங்கள் வணிகத்திற்குப் பொருந்தவில்லை என்றால், தனிநபர் / தனியுரிமை வணிகர் என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு முக்கிய முடிவெடுப்பவரை அல்லது உரிமையாளரைக் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்கிக் கொள்ளவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜிப்ரால்டரில் உள்ள Shopify Payments தேவைகள் தொடர்பான, அடிக்கடி கேட்கப்படும் இந்தக் கேள்விகளை மதிப்பாய்வு செய்யவும்.

நான் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது லாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தால், எனது புகைப்பட ID அல்லது முகவரிச் சான்று உங்களுக்கு ஏன் தேவை?

நீங்கள் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது லாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவுசெய்திருந்தாலும், வணிகத்துடன் தொடர்புடைய நபர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது உட்பட அவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்க வேண்டும் என, ஜிப்ரால்டரில் உள்ள ஒழுங்குமுறைச் சட்டங்கள் மூலம் Shopify வங்கிப் கூட்டாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நான் ஜிப்ரால்டரில் வசிக்கவில்லை என்றால், நான் Shopify Payments ஜிப்ரால்டரைப் பயன்படுத்தலாமா?

உங்கள் வணிக வகை தனிநபர் எனில், Shopify Payments ஜிப்ரால்டருக்குத் தகுதிபெற, நீங்கள் ஜிப்ரால்டரில் வசிக்க வேண்டியது அவசியம். நீங்கள் தற்போது ஜிப்ரால்டரில் வசிக்கவில்லை எனில், நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்காக ஒரு Shopify Payments கணக்கை உருவாக்க வேண்டும்.

உங்கள் ஸ்டோர் முகவரியை உங்களின் தற்போதைய இடத்திற்குப் புதுப்பிக்கவும். உங்கள் இடம் Shopify Payments-க்குத் தகுதிபெற்றிருந்தால், அதற்குப் பதிலாக அந்தப் பிராந்தியத்திற்கு நீங்கள் ஒரு Shopify Payments கணக்கை உருவாக்கலாம்.

நீங்கள் ஒரு வகையான கூட்டாண்மை, நிறுவனம் அல்லது லாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தால், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஜிப்ரால்டரில் வசிக்கத் தேவையில்லை, ஆனால் உங்கள் வணிகம் அங்கு பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் ஜிப்ரால்டர் வணிக முகவரியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

நான் ஒரு தனியுரிமை வணிகர். எனது வணிகத் தகவலை எவ்வாறு உள்ளிடுவது?

நீங்கள் ஒரு தனியுரிமை வணிகராக இருந்தால், வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, உரிமையாளரின் தனிப்பட்ட தகவலைச் சேகரித்துச் சரிபார்க்க மட்டுமே Shopify-க்குத் தேவைப்படும். அதன்படி தனிநபர் / தனியுரிமை வணிகர் என்ற வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஒரு தனியுரிமை வணிகராக இருந்தால், வேறுபட்ட வணிக வகையாகப் பதிவுசெய்ய முயற்சிக்க வேண்டாம். சரிபார்ப்பில் தேர்ச்சி பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் ஏற்படலாம்.

நான் ஜிப்ரால்டரில் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனம். நான் எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

தனியார் நிறுவனம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான செயல்முறை ஒன்றுதான். உரிமையாளர்களைச் சேர்க்கும்படிக் கோரும் கணக்கு அமைவுப் படிவத்தின் பகுதியை நீங்கள் தவிர்க்கலாம். பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லை என்றால், நீங்கள் அவர்களைப் பட்டியலிடத் தேவையில்லை.

நீங்கள் ஜிப்ரால்டரில் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனமாக இருந்து, ஏற்கனவே Shopify Payments கணக்கை அமைத்திருந்து, இப்போது உங்கள் சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உங்களிடம் உரிமைத் தகவல் கேட்கப்பட்டால், உங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை என்பதைக் காட்டுமாறு உங்கள் உரிமை விவரங்களைப் புதுப்பிக்கவும். கோப்பில் உள்ள எந்தவொரு நபரிடமிருந்தும் உரிமையாளர் பங்கை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்கள் அனைவரும் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதையும், அவர்களுக்கு இயக்குநர் பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.

பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்ப்பதவி சரியானது என்பதை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்படலாம். அது சரியானதாக இருப்பதை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், கோப்பில் உள்ள தகவலுக்கு டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இந்தச் செயல்முறையில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

எனது கணக்கு ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுவிட்டது. நான் ஏன் புதிய தகவலை வழங்கும்படிக் கேட்கப்படுகிறேன்?

காலப்போக்கில் ஏற்படும் ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் Shopify-இன் நிதி சார்ந்த கூட்டாளர்களிடமிருந்து வரும் தேவைகளுக்கான புதுப்பிப்புகள் காரணமாக, கணக்குதாரர்களிடமிருந்து கூடுதல் தகவலைச் சேகரிக்க வேண்டியிருக்கலாம். இந்த மதிப்பாய்வுகள், நிதிச் சேவைகளைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

இந்த மாற்றங்கள் நிகழும்போது, உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள பேனர் அல்லது விழிப்பூட்டல் மூலமாகவும், தொடர்புடைய மின்னஞ்சல் மூலமாகவும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். Shopify-இன் நிதிச் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த, இந்தக் கோரிக்கைகளை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும்.

எனது Shopify Payments கணக்குத் தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?

நீங்கள் தற்போது கணக்குச் சரிபார்ப்பை நிறைவுசெய்யும்படிக் கேட்கப்பட்டால், கோரப்படும் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிப்பதுடன், சரிபார்ப்புப் பக்கத்திலிருந்தே உங்கள் தகவலில் ஏதேனும் புதுப்பிப்புகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

சரிபார்ப்புச் செயல்முறைக்கு வெளியே, அமைப்புகள் > பொதுவானவை > வணிக விவரங்கள் வழியாகக் கடையின் உரிமையாளர் இந்த விவரங்களைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக நிறுவனத்திற்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, வணிக வகை உட்பட அந்த வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் இங்கு செய்யும் எந்தவொரு மாற்றங்களும் மதிப்பாய்வுக்காக எங்கள் வங்கிப் கூட்டாளர்களுக்குத் தானாகவே அனுப்பப்படும், அத்துடன் புதிய தகவல் அவர்களின் சரிபார்ப்புச் செயல்முறை மூலம் மீண்டும் இயக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். மாற்றங்கள் தானாகவே மீண்டும் சரிபார்க்கப்பட வாய்ப்புள்ளது, எனினும் ஆதரவு ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் உங்களிடம் கேட்கப்படலாம்.

எனது சரிபார்ப்புக் காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?

சரிபார்ப்புச் செயல்முறை நிறைவடையும் வரை உங்கள் பேஅவுட்களில் ஒரு தற்காலிக இடைநிறுத்தம் இருப்பதைக் காண்பீர்கள். முதல் காலக்கெடு முடிவடைந்து பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, Shopify Payments மூலம் ஆர்டர்களை ஏற்கும் உங்களின் திறன் எப்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைக் குறிக்கும் இரண்டாவது காலக்கெடுவை நீங்கள் காணலாம்.

இந்த இடைநிறுத்தங்கள் அனைத்தும் தற்காலிகமானவை, நீங்கள் சரிபார்ப்பை நிறைவுசெய்த பிறகு அவை தானாகவே நீக்கப்படும். உங்களின் காலக்கெடுவுக்காக உங்கள் நிர்வாகிப் பக்கத்தைப் பார்க்கவும்.

ஜூன் 2026-இலிருந்து, முற்றிலும் புதிய Shopify Payments ஜிப்ரால்டர் கணக்குகள் சரிபார்ப்பை நிறைவுசெய்வதற்கு, முதல் ஆர்டர் செயலாக்கப்பட்டதில் இருந்து 90 நாட்கள் கால அவகாசத்தைக் கொண்டுள்ளன. 90 நாட்கள் கடந்துவிட்டால், Shopify Payments-ஐப் பயன்படுத்தி நீங்கள் செயலாக்கிய ஆர்டர்களுக்கான பணம் தானாகவே திரும்பப் பெறப்படலாம்.

இந்த பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் ஜூன் 2026-அன்றோ அல்லது அதற்குப் பிறகோ உருவாக்கப்பட்ட முற்றிலும் புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை உங்களுக்குப் பொருந்தினால், பணத்தைத் திரும்பப்பெறுதல் செயல்முறை எப்போது நிறைவடையும் என்று கடையின் உரிமையாளர் எதிர்பார்க்கலாம் என்பதை எச்சரிக்கைகள் தெரிவிக்கும்.

ஜிப்ரால்டரில் Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவும் வகையில் இந்தத் தகவல்களைச் சேகரிக்கவும்:

  • நீங்கள் பெற்ற பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள் (வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை மறைத்துவிடவும்)
  • அமைவின்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக வகை
  • பொருந்தினால், உங்கள் நிறுவனப் பதிவு எண்
  • சிக்கலை நீங்கள் எதிர்கொண்ட குறிப்பிட்ட படிநிலை
  • நீங்கள் பயன்படுத்தும் உலாவி மற்றும் சாதனம்
  • முழு கணக்கு எண்ணையும் பகிராமல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் (IBAN நாட்டு குறியீடு, கணக்கின் வகை, நாணயம்)
  • நீங்கள் பதிவேற்றிய ஆவணங்கள் மற்றும் அவற்றை நீங்கள் பதிவேற்றிய நேரம் ஆகியவை

இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருப்பது, Shopify ஆதரவு உங்களுக்கு இன்னும் திறம்பட உதவ வசதியாக இருக்கும்.