ஹங்கேரியில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் தேவைகள்
ஹங்கேரியில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, விதிமுறைகளுக்கு இணங்கவும் நிதிக்குற்றங்களைத் தடுக்கவும் நடைமுறையிலுள்ள தேவைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட தகவல் ஏன் சேகரிக்கப்படுகிறது என்பதையும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் வகைகளையும் பின்வரும் பிரிவுகள் விளக்குகின்றன; மேலும் உங்கள் ஆவணங்கள் தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன.
இந்தப் பக்கத்தில் உள்ளவை
- ஹங்கேரியில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- தகவலைச் சேகரிப்பதன் நோக்கம்
- ஹங்கேரியில் Shopify Paymentsஐச் செயல்படுத்த தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்
- ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்
- ஆவணங்களின் இணக்கத்தை உறுதிப்படுத்துதல்
- பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- ஹங்கேரியில் உள்ள Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
ஹங்கேரியில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
ஹங்கேரியில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிசெய்யவும்:
- தகுதிபெறும் வணிக வகைகள்: சில வகையான வணிகங்களும் சேவைகளும் Shopify Paymentsஐப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் வணிகம் தகுதிபெறுவதா என்பதைத் தீர்மானிக்க, Shopify Payments சேவை விதிமுறைகளில் ஹங்கேரிக்காகத் தடைசெய்யப்பட்ட வணிக வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
- வங்கிக் கணக்குத் தேவைகள்: உங்கள் வங்கிக் கணக்கை Shopify Payments உடன் இணைப்பதற்கு முன், அது பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- வங்கிக் கணக்கு EUR நாணயத்தில் இருக்க வேண்டும் அல்லது வங்கிக் கணக்கு ஹங்கேரியைத் தளமாகக் கொண்டிருந்தால், அது HUF நாணயத்தில் இருக்கலாம்.
- வங்கிக் கணக்கு சிங்கிள் யூரோ பேமெண்ட்ஸ் ஏரியா (SEPA) பரிமாற்றங்களுக்குத் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
- வங்கிக் கணக்கில், பின்வரும் ஏதேனும் ஒரு நாட்டுக் குறியீட்டில் தொடங்கும் சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN) இருக்க வேண்டும்: AT, BE, BG, CH, CY, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE அல்லது SI.
ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகைகள்
குறிப்பிட்ட வங்கிக் கணக்கு வகைகள் Shopify Payments உடன் இணக்கமானவை அல்ல. பின்வரும் கணக்கு வகைகள் ஆதரிக்கப்படுவதில்லை:
- வயர் பரிமாற்றங்களை மட்டுமே ஏற்கும் நடப்புக் கணக்குகள்: இந்தக் கணக்குகள் Shopify Payments உடன் செயல்படாது.
- சேமிப்புக் கணக்குகள்: Shopify Payments பேஅவுட்களுக்குச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்த முடியாது.
- ஃப்ளெக்ஸ் நாணயக் கணக்குகள்: ஒரே நேரத்தில் பல நாணயங்களை ஆதரிக்கும் கணக்குகள் ஆதரிக்கப்படுவதில்லை.
- பணப் பரிமாற்றச் சேவைகள்: சில ஃபின்டெக் பிளாட்ஃபார்ம்கள் போன்ற வங்கிக் கணக்குகளைப் போன்றே செயல்படும் சேவைகளை Shopify Payments உடன் பயன்படுத்த முடியாது.
Shopify அல்லாத விர்ச்சுவல் கணக்குகள் ஆதரிக்கப்பட்டாலும், இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தும்போது அதிக பேஅவுட் தோல்விகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.
உங்கள் பிராந்தியத்திற்குப் பட்டியலிடப்பட்டுள்ள பரிமாற்ற வகையை உங்கள் கணக்கு ஏற்குமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
தகவலைச் சேகரிப்பதன் நோக்கம்
நிதிக்குற்றங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஹங்கேரியிலுள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதற்காக, நீங்களும் உங்கள் வணிகமும் குறித்த தகவலைச் சேகரித்து சரிபார்க்க வேண்டியது Shopify மற்றும் அதன் வங்கியியல் கூட்டாளர்களுக்கு அவசியமாகும். உள்ளூர் விதிகளும் விதிமுறைகளும் மாறுபடும்போது, உங்கள் Shopify Payments கணக்கின் வாழ்நாள் முழுவதும் கூடுதல் தகவலை வழங்குவதற்காக Shopify மற்றும் அதன் வங்கியியல் கூட்டாளர்களால் நீங்கள் தொடர்புகொள்ளப்படலாம்.
சேகரிக்கப்படும் தகவலானது வணிகத்தின் அடையாளம், வணிகத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் அடையாளங்கள் மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான உறவின் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தப் பயன்படுகிறது.
Shopify உங்களுக்கான ஆவணங்களை ஒருபோதும் நேரடியாக அஞ்சலில் அனுப்புவதில்லை. ஏதேனும் முக்கியமான ஆவணங்கள் அல்லது தகவல்தொடர்புகள் மின்னஞ்சல் செய்யப்படுகின்றன அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அமைப்புகள் > பயனர்கள் பக்கத்தில் கடையின் உரிமையாளருக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கச் செய்யப்படுகின்றன.
உங்கள் தகவல் எவ்வாறு ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுகிறது என்பதைப் பற்றி அறிய, Shopifyஇன் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.
ஹங்கேரியில் Shopify Paymentsஐச் செயல்படுத்த தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்
நீங்கள் வழங்க வேண்டிய தகவலைத் தீர்மானிப்பது அதுவே என்பதால், உங்கள் வணிக வகையை நீங்கள் சரியாகக் கண்டறிய வேண்டும்.
நீங்கள் எந்தவொரு அரசு நிறுவனத்திலும் பதிவு செய்யவில்லை என்றால் அல்லது பதிவு செய்திருந்தாலும் வணிகத்தைத் தனிநபர் உரிமையாக (egyéni vállalkozó, தனி வணிகர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உட்பட) நடத்தினால், தனிநபர் / தனிநபர் உரிமையாளர் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து, நிறுவனப் பதிவு எண்ணைக் (Cégjegyzékszám) கொண்டிருந்தால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- நிறுவனப் பதிவு எண்களைக் கொண்ட கூட்டாண்மைகள் (Bt., Kkt), பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நிறுவனப் பதிவு எண்களைக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்புகள் (Egyesület, Alapítvány), இணைக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பு வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- Kft. அல்லது Zrt. போன்ற நிறுவனப் பதிவு எண்களைக் கொண்ட பிற வணிகங்கள் அனைத்தும், தனியார் கார்ப்பரேஷன் வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் பதிவுசெய்யப்பட்ட வணிகத்தைக் கொண்டிருந்தும், நிறுவனப் பதிவு எண்ணைக் கொண்டிருக்கவில்லை எனில், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- நிறுவனப் பதிவு எண்கள் இல்லாத கூட்டாண்மைகள் (Pjt), பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நிறுவனப் பதிவு எண்கள் இல்லாத இலாப நோக்கற்ற அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் இணைக்கப்படாத இலாப நோக்கற்ற அமைப்பு வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், சரியானதைத் தேர்ந்தெடுக்க உதவுவதற்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
தனிநபர்கள் / தனி உரிமையாளர்
தனிநபர்கள் என்பவர்கள் அரசாங்கத்திடம் பதிவு செய்யாமல் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆகும். தனி உரிமையாளர்கள் என்பவர்கள் தங்களின் தனிப்பட்ட தகவலின் கீழ் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒற்றை உரிமையாளர் வணிகங்கள் ஆகும். இந்த இரண்டும் ஹங்கேரியில் வசிக்கும் ஒருவரால் சொந்தமாக வைத்துக் கட்டுப்படுத்தப்படும் வணிகங்களாகும். இதில் சுயாதீனப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் புரியும் சிறு வணிக ஆபரேட்டர்களும் அடங்குவர்.
இந்த வணிக வகைகள் ஒரே மாதிரியாகக் கருதப்படுவதால், இவை ஒரே மாதிரியான தகவல்களை வழங்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் தனி உரிமையாளர்கள் பின்வருவனவற்றை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் இறுதிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள தொலைபேசி எண்.
- ஹங்கேரியில் உள்ள வசிப்பிட முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் வீட்டு முகவரி.
உங்களின் தகவலைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், நீங்கள் உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
தனியார் நிறுவனங்கள் (Kft, Zrt)
தனியார் நிறுவனம் என்பது அதன் ஈக்விட்டி பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, பங்குதாரர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும். ஒரு கார்ப்பரேஷன் என்பது அதனை நடத்துபவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட தனிப்பட்ட சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக, அவற்றில் இயக்குநர் குழு ஒன்றும் இருக்கும்.
தனியார் நிறுவனங்கள், பலனடையும் உரிமையாளரை அல்லது முடிவெடுக்கும் அதிகாரமுள்ள ஒரு நிர்வாகியைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் இறுதிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள தொலைபேசி எண்.
- வசிப்பிட முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் வீட்டு முகவரி.
- பணிப் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பணிப் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்களின் தகவலைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், நீங்கள் உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
தனியார் நிறுவனங்கள் வணிகம் பற்றிய பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- நிறுவனத்தின் பதிவு எண் (Cégjegyzékszám): அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு வணிகத்தின் நிறுவனப் பதிவு எண்.
- மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால், உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்களின் தகவலை ஹங்கேரிய அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கின்றனர். நீங்கள் சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
நீங்கள் வழங்கும் வணிகம் பற்றிய தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவனப் பதிவு எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
நீங்கள் நிறுவனத்தின் பலனடையும் உரிமையாளராக இருந்தால், பலனடையும் உரிமையாளர்களாக உள்ள பிறரையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். முரண்பாடு கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமை ஆவணத்தின் சான்றை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவதே முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும், ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தால் (முழுவதுமாக அல்லது பகுதியளவாக), சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
உங்கள் வணிகத்திற்கு உரிமையாளர்கள் இல்லை எனில், நீங்கள் சான்றளிப்பில் கையெழுத்திட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்க வேண்டும். ஆவணத்தைச் சமர்ப்பிக்க நீங்கள் விரும்பினால், உங்கள் கணக்கில் உள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் (Bt, Kkt)
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை என்பது வணிகச் செயல்பாட்டிற்காகப் பதிவுசெய்து, நிறுவனப் பதிவு எண்ணைப் பெற்ற குறைந்தது இரண்டு கூட்டாளர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும். பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகளில் ஈக்விட்டி இருக்கும். மேலும், அக்கூட்டாண்மை உரிமையாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அதற்கெனச் சொந்தமான தனிப்பட்ட நிறுவனமாகும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஓர் உரிமையாளர் அல்லது கூட்டாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் இறுதிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள தொலைபேசி எண்.
- வசிப்பிட முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் வீட்டு முகவரி.
- பணிப் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பணிப் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்களின் தகவலைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், நீங்கள் உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் வணிகம் பற்றிய பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- நிறுவனத்தின் பதிவு எண் (Cégjegyzékszám): அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு வணிகத்தின் நிறுவனப் பதிவு எண்.
- மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால், உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்களின் தகவலை ஹங்கேரிய அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கின்றனர். நீங்கள் சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
நீங்கள் வழங்கும் வணிகம் பற்றிய தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவனப் பதிவு எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
நீங்கள் உரிமையாளர் அல்லது கூட்டாளராக இருந்தால், உரிமையாளர் அல்லது கூட்டாளர்களாக இருக்கும் பிறரையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். முரண்பாடு கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமை ஆவணத்தின் சான்றை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவதே முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும், ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தால் (முழுவதுமாக அல்லது பகுதியளவாக), சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் (Pjt)
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை என்பது நிறுவனப் பதிவு எண்ணுக்குப் பதிவுசெய்யாமல் கூட்டாண்மை ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள குறைந்தது இரண்டு கூட்டாளர்களுக்குச் சொந்தமான ஒரு வணிகமாகும். இந்த நிலையில் உரிமையாளர்கள் சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுவார்கள் மற்றும் வணிகம் என்பது ஒரு தனிப்பட்ட நிறுவனம் அல்ல.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஓர் உரிமையாளரை நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் இறுதிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள தொலைபேசி எண்.
- வசிப்பிட முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் வீட்டு முகவரி.
- பணிப் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பணிப் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்களின் தகவலைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், நீங்கள் உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள் வணிகம் பற்றிய பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் உள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால், உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: ஆவணத்தில் உள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்களின் தகவலை ஹங்கேரிய அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கின்றனர். நீங்கள் சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
நீங்கள் வழங்கும் வணிகம் பற்றிய தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
நீங்கள் உரிமையாளர் அல்லது கூட்டாளராக இருந்தால், உரிமையாளர் அல்லது கூட்டாளர்களாக இருக்கும் பிறரையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். முரண்பாடு கண்டறியப்பட்டால், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமை ஆவணத்தின் சான்றை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவதே முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும், ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தால் (முழுவதுமாக அல்லது பகுதியளவாக), சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் (Egyesület, Alapítvány)
இலாப நோக்கற்ற நிறுவனம் (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கு இலாபம் ஈட்டுவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதன் முதன்மை நோக்கம் பொது அல்லது சமூக நலனுக்குச் சேவை செய்வதாகும். பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காகப் பதிவுசெய்து, நிறுவனப் பதிவு எண்ணைப் பெற்றிருக்கும்.
பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள், ஒரு இயக்குநரை அல்லது முடிவெடுக்கும் அதிகாரமுள்ள ஒரு நிர்வாகியைத் தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் இறுதிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள தொலைபேசி எண்.
- வசிப்பிட முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் வீட்டு முகவரி.
- பணிப் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பணிப் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்களின் தகவலைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், நீங்கள் உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் வணிகம் பற்றிய பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- நிறுவனத்தின் பதிவு எண் (Cégjegyzékszám): அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு வணிகத்தின் நிறுவனப் பதிவு எண்.
- மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால், உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்களின் தகவலை ஹங்கேரிய அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கின்றனர். நீங்கள் சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
நீங்கள் வழங்கும் வணிகம் பற்றிய தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவனப் பதிவு எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
நீங்கள் இயக்குநர் குழுவில் இருந்தால், இயக்குநர் குழுவில் உள்ள மற்றவர்களையும் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்களையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்கள், உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையொப்பமிடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது இயக்குநர்ப் பதவியின் சான்று ஆவணத்தை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள்
இலாப நோக்கற்ற நிறுவனம் (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கான இலாபத்தை உருவாக்குவதைத் தவிர பிற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் முதன்மை நோக்கம் பொது அல்லது சமூக நலனுக்காகச் சேவை செய்வதாகும். இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனத்திடம் நிறுவனப் பதிவு எண் இருக்காது, ஆனால் உள்ளூர் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு இலாப நோக்கற்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.
இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒரு முக்கிய முடிவெடுப்பவர் அல்லது அமைப்பாளரைத் தங்களின் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்கி, அந்த நபரை நிர்வாகியாகக் குறிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் இறுதிப் பெயர்: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள தொலைபேசி எண்.
- வசிப்பிட முகவரி: உங்கள் ஆவணத்தில் உள்ளவாறு உங்கள் வீட்டு முகவரி.
- பணிப் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பணிப் பெயர்.
- ஈக்விட்டி: பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமான ஈக்விட்டி சதவீதம்.
உங்களின் தகவலைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், நீங்கள் உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் பணிகளில் ஏதேனும் ஒன்றை முடிப்பதன் மூலம் கோரிக்கையைத் தீர்க்கலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-யுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைத் தனித்தனியாகப் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடும் தகவலுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
இணைக்கப்படாத இலாப நோக்கற்ற நிறுவனங்களும் வணிகம் குறித்துப் பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் உள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்தினால், உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயலில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: ஆவணத்தில் உள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்களின் தகவலை ஹங்கேரிய அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கின்றனர். நீங்கள் சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
நீங்கள் வழங்கும் வணிகம் பற்றிய தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
நீங்கள் இயக்குநர் குழுவில் இருந்தால், இயக்குநர் குழுவில் உள்ள மற்றவர்களையும் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்களையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்கள், உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையொப்பமிடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை நிறைவுசெய்ய அல்லது இயக்குநர்ப் பதவியின் சான்று ஆவணத்தை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையொப்பமிடுவதே பொருந்தாமையைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்களுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
ஏற்கக்கூடிய ஆவண வகைகள்
உங்கள் அடையாளம் மற்றும் வணிக விவரங்களைச் சரிபார்க்க எந்த ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பிரிவு விளக்குகிறது.
அடையாள ஆவணங்கள்
நீங்கள் வழங்கும் அடையாள ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள தகவல்களுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கில் பெயர் மற்றும் பிறந்த தேதி புதுப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் செல்லுபடியாகும் வகையிலும் காலாவதியாகாமலும் இருக்க வேண்டும். பின்வரும் ஆவணங்கள் அடையாளச் சான்றாக ஏற்கப்படுகின்றன:
- கடவுச்சீட்டு
- அடையாள அட்டை (முன்புறம் மற்றும் பின்புறப் புகைப்படங்கள் தேவை)
- குடியிருப்பு அனுமதி (முன்புறம் மற்றும் பின்புறப் புகைப்படங்கள் தேவை)
முகவரி ஆவணங்கள்
நீங்கள் வழங்கும் முகவரி ஆவணங்களில் உள்ள தகவல்களுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கில் பெயர் மற்றும் முகவரி புதுப்பிக்கப்பட வேண்டும். அனைத்து ஆவணங்களும் கடந்த 6 மாதங்களுக்குள் உள்ள வழங்கல் தேதியைக் கொண்டிருக்க வேண்டும்.
முகவரிச் சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன:
- பயன்பாட்டுப் பில்
- வங்கி அறிக்கை
- அடமான அறிக்கை
- முகவரி அட்டை (Lakcímigazolvány) - முன்புறம் மற்றும் பின்புறப் புகைப்படங்கள் தேவை
வணிகச் சரிபார்ப்பு ஆவணங்கள்
வணிகச் சரிபார்ப்புக்குப் பின்வரும் ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன. உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயர், நிறுவனப் பதிவு எண் மற்றும் முகவரி ஆகியவற்றை அவை தெளிவாகக் காட்ட வேண்டும். நீங்கள் வழங்கும் ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தகவல்களுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கில் உள்ள விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்:
- வணிகப் பதிவேட்டின் சுருக்கம் (Cégkivonat)
- நிறுவன ஒருங்கிணைப்புச் சான்றிதழ் (Cégbejegyzési tanúsítvány)
- மதிப்புக்கூட்டு வரிப் பதிவு (Áfaregisztráció)
உரிமை ஆவணங்கள்
உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயர் மற்றும் உங்கள் வணிகத்தின் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களின் முழுப் பெயர்களைக் காட்டும் பட்சத்தில், பின்வரும் ஆவணங்கள் உரிமை அல்லது இயக்குநர்ப் பதவியின் சான்றாக ஏற்கப்படும்.
உரிமையாளர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள்:
- Alapító okirat (நிறுவன ஒருங்கிணைப்பு விதிகள்)
- Cégkivonat (வணிகப் பதிவேட்டின் சுருக்கம்)
- Társulási megállapodás (கூட்டாண்மை ஒப்பந்தங்கள்)
- Bejegyzési dokumentum (பதிவு ஆவணம்)
- Valódi tulajdonosok nyilvántartása (இறுதிப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)
இயக்குநர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள்:
- Éves beszámoló (ஆண்டு அறிக்கைகள்)
- Alapító okirat (நிறுவன ஒருங்கிணைப்பு விதிகள்)
- Cégkivonat (வணிகப் பதிவேட்டின் சுருக்கம்)
- Bejegyzési dokumentum (பதிவு ஆவணம்)
- Valódi tulajdonosok nyilvántartása (இறுதிப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)
உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பலனடையும் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு உரிமையாளர் என்ற பங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். வணிகப் பங்குகளின் 25% அல்லது அதற்கு மேல் சொந்தமாகக் கொண்டுள்ளவர் பலனடையும் உரிமையாளர் என வரையறுக்கப்படுகிறார். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகத்திற்குப் பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லையென்றால், அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களைச் சரிபார்க்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில், இயக்குநர்களுக்காக மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்கள் தகுதியானவை. உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு இயக்குநரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு அவர்களுக்கு இயக்குநர் என்ற பங்கு ஒதுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றால், முதலில் உங்கள் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களின் தகவல்கள் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துவிட்டு, அதற்குப் பதிலாக கையொப்பமிடு பொத்தானை அழுத்தி டிஜிட்டல் சான்றளிக்கும் செயல்முறையை நிறைவுசெய்யவும்.
ஆவணங்கள் இணக்கத்திற்கு உட்பட்டிருப்பதை உறுதிசெய்தல்
ஆவணங்களை வழங்கும்போது, அவை தேவையான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இணக்கத்தை உறுதிசெய்யப் பின்வரும் வழிகாட்டுதல்களைப் படித்துப் பார்க்கவும்:
- துல்லியம்: உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும்.
- தெளிவு மற்றும் படிக்கக்கூடிய தன்மை: உங்கள் ஆவணங்கள் தெளிவாகவும் படிக்கும் அளவுக்குப் பெரியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். புகைப்படத்தில் முழு ஆவணமும் தெரிவதை உறுதிசெய்யவும்.
- முழுமை: தேவையான அனைத்து விவரங்களும் உங்கள் ஆவணத்தில் தெரிவதை உறுதிசெய்யவும். ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏற்கக்கூடிய ஆவண வகைகளைப் படித்துப் பார்க்கவும்.
- அசல் ஆவணங்கள்: கேமராவைப் பயன்படுத்தி உங்கள் ஆவணத்தின் அசல் புகைப்படத்தை எடுக்கவும். உங்கள் ஆவணங்களை நகலெடுக்க, ஸ்கேன் செய்ய அல்லது திரைப்பிடிப்பு எடுக்க வேண்டாம். பிற ஆவணங்களில் ஆவணங்களின் புகைப்படங்களை ஒட்ட வேண்டாம். கணினித் திரைகள் அல்லது அச்சிடப்பட்ட ஆவணங்களைப் புகைப்படம் எடுக்க வேண்டாம்.
- உங்கள் ஆவணம் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டிருந்தால், எந்த மாற்றமும் இல்லாமல் அது உங்களுக்கு வழங்கப்பட்ட நிலையிலேயே அனைத்துப் பக்கங்களையும் கொண்ட PDF கோப்பை வழங்கவும்.
- செல்லுபடியாகும் தன்மை: புகைப்பட ID-கள் காலாவதியாகாமல் இருப்பதையும், முகவரிச் சான்று சமீபத்தில் வழங்கப்பட்டதையும் உறுதிசெய்யவும். வணிகப் பதிவுச் சான்றை வழங்கினால், உங்கள் வணிகத்தின் பதிவு இன்னும் செயலில் மற்றும் நன்மதிப்புடன் இருக்க வேண்டும்.
பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், பழக்கப்படுத்துதலின் பொதுவான சிக்கல்களையும் அவற்றின் தீர்வுகளையும் படித்துப் பார்க்கவும்.
என் ஆவணம் நிராகரிக்கப்பட்டது.
உங்கள் கணக்கில் உள்ள தகவல்கள் ஆவணத்துடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, தேவையெனில் உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும். உங்கள் ஆவணங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இந்தப் பக்கத்தில் உள்ள பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:
- ஏற்கக்கூடிய ஆவண வகைகள்: ஏற்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தேவையான விவரங்கள். திரைப்பிடிப்புகள், பிரிண்ட் அவுட்டுகள் மற்றும் பதிவேட்டுத் திரைப்பிடிப்புகள் ஏற்கப்படாது.
- ஆவணங்கள் இணக்கத்திற்கு உட்பட்டிருப்பதை உறுதிசெய்தல்: துல்லியம், தெளிவு, முழுமை மற்றும் செல்லுபடியாகும் தன்மைக்கான தேவைகள்.
என் முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை.
ஹங்கேரிக்கான Shopify Payments-ல் உங்கள் முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை எனில், செல்ஃபி எடுக்கும் செயல்முறையை நிறைவுசெய்யவோ முகவரிச் சான்று ஆவணத்தை வழங்கவோ உங்களிடம் கேட்கப்படும்.
செல்ஃபி எடுக்கும் செயல்முறையை நிறைவுசெய்வது பரிந்துரைக்கப்படுகிறது. சரிபார்ப்பு தேவைப்படும் தனிநபர் செல்ஃபி பொத்தானைக் கிளிக் செய்து, சரிபார்ப்பதற்காகத் தங்களின் புகைப்பட ID மற்றும் தங்களைப் புகைப்படம் எடுக்கலாம். முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குவதற்குப் பதிலாக நீங்கள் செல்ஃபி எடுக்கும் செயல்முறையை நிறைவுசெய்யலாம்.
நீங்கள் ஆவணத்தைக் கைமுறையாக வழங்க விரும்பினால், அவ்வாறே செய்யலாம். முகவரிச் சான்று ஆவணங்களில் உங்கள் முழுப் பெயரும் வீட்டு முகவரியும் இருக்க வேண்டும். பின்வருவனவற்றை உறுதிசெய்யவும்:
- ஆவணத்தில் உள்ள பெயரும் முகவரியும் உங்கள் Shopify Payments கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பெயருக்கும் முகவரிக்கும் சரியாகப் பொருந்த வேண்டும்.
- ஆவணம் கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டிருக்க வேண்டும்.
- ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவரி ஆவண வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
உங்கள் பெயரைக் காட்டும் ஆவணத்தை நீங்கள் வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக: உங்கள் பயன்பாட்டுக் கட்டணப் பில்களில் (utility bills) உங்கள் பெயர் இல்லை எனில், விருப்பப் பட்டியலிலிருந்து வேறு ஆவணத்தைத் தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும்.
எனது உரிமையாளர் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை.
Shopify Payments Hungary-ஐப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பெயர்கள் பொருந்துமாறு உங்கள் உரிமையாளர்களின் விவரங்களை உள்ளிட வேண்டும். பதிவேட்டில் உங்கள் உரிமையாளர் தகவலைப் பார்த்து, அதில் உள்ளபடியே பெயர்களை உள்ளிடுமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்கு உரிமையாளர்கள் எவரும் இல்லை எனில், கணக்கில் உங்களின் அனைத்து இயக்குநர்களையும் பட்டியலிட வேண்டும்.
நீங்கள் அவ்வாறு செய்தும், உங்களின் உரிமை அல்லது இயக்குநர் பதவியை இன்னமும் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வழங்கிய தகவல் சரியானதுதான் என டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, உங்கள் சரிபார்ப்புப் பக்கத்தில் உள்ள கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்யப் பரிந்துரைக்கிறோம்.
நீங்கள் விரும்பினால், சான்றளிக்கும் செயல்முறைக்குப் பதிலாக உங்கள் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் வழங்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிடும் உரிமையாளர் மற்றும் இயக்குநர் தகவல்கள், நீங்கள் பதிவேற்றும் ஆவணத்தில் உள்ள தகவல்களுடன் பொருந்த வேண்டும். ஒரு உரிமையாளர் அல்லது இயக்குநர் உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டிருந்து, ஆனால் உங்கள் Shopify Payments கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தால், அந்த நபரைக் கணக்கில் சேர்த்து அவருக்கு 'உரிமையாளர்' (Owner) அல்லது 'இயக்குநர்' (Director) பங்கினை (role) ஒதுக்க வேண்டும். உரிமையைச் சரிபார்க்க நீங்கள் வழங்கக்கூடிய ஆவண வகைகளின் பட்டியல் இங்கே உள்ளது.
உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்களும் இயக்குநர்களும் உங்கள் ஆவணத்துடன் துல்லியமாகப் பொருந்துவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் ஆவணங்களில் இல்லாத கூடுதல் உரிமையாளர்களை அல்லது இயக்குநர்களைப் பட்டியலிட வேண்டாம்.
எனது வணிகத் தகவல் சரிபார்க்கப்படவில்லை.
Shopify பேங்கிங் கூட்டாளர்கள் உங்களின் வணிகத் தகவலை ஹங்கேரியில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பார்கள். உங்கள் வணிகத்தைச் சரிபார்க்க முடியவில்லை எனில், பின்வரும் விவரங்களைச் சரிபார்க்கவும்:
- உங்களின் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர் (registered business name) எழுத்து வடிவம் (பெரிய/சிறிய எழுத்து), நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் உட்பட அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளபடியே சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
- உங்களின் நிறுவனப் பதிவு எண் (Cégjegyzékszám) சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
- உங்களின் வணிக முகவரி அரசாங்க வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரியுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
இன்னமும் உங்களின் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். உங்கள் ஆவணத்தில் உள்ள தகவல்கள் உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டவற்றுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
எனது வங்கிக் கணக்குத் தகவல் வேலை செய்யவில்லை.
உங்கள் கணக்கானது வங்கிக் கணக்கிற்கான தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதையும், நீங்கள் ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகையைப் பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஹங்கேரிய IBAN 28 எழுத்துகளைக் கொண்டிருக்கும், மேலும் அது HU என்ற முன்னொட்டுடன் தொடங்கும்.
உங்கள் பேஅவுட் தோல்வியடைந்தால், நீங்கள் உங்கள் கணக்குத் தகவலைச் சரியாக உள்ளிட்டுள்ளீர்களா என்பதையும், ஆதரிக்கப்படும் கணக்கு வகையைப் பயன்படுத்துகிறீர்களா என்பதையும் சரிபார்க்கவும். உங்கள் கணக்கால் SEPA பரிமாற்றங்களை ஏற்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
விர்ச்சுவல் வங்கிக் கணக்கின் மூலம் எனது பேஅவுட்கள் தோல்வியடைகின்றன.
Revolut, Payoneer போன்ற விர்ச்சுவல் வங்கிக் கணக்குகள் பேஅவுட்களுக்கு ஏற்கப்பட்டாலும், பாரம்பரிய வங்கிக் கணக்குகளை விட இவற்றில் பேஅவுட் தோல்வி விகிதம் அதிகமாக உள்ளது. உங்கள் பேஅவுட்கள் தோல்வியடைந்தால், அதற்குப் பதிலாக நிலையான வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதைப் பரிசீலிக்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஹங்கேரியில் உள்ள Shopify Payments தேவைகள் தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் இந்தக் கேள்விகளைப் பார்க்கவும்.
நான் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது லாப நோக்கமற்ற அமைப்பாக இருக்கிறேன். உங்களுக்கு ஏன் எனது புகைப்பட ID அல்லது முகவரிச் சான்று தேவைப்படுகிறது?
நீங்கள் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது லாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், வணிகத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களையும் அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதையும் சரிபார்க்க வேண்டும் என ஹங்கேரியில் உள்ள ஒழுங்குமுறைச் சட்டங்கள் Shopify பேங்கிங் கூட்டாளர்களைக் கோருகின்றன.
நான் ஹங்கேரியின் குடிமகன், ஆனால் தற்போது அங்கு வசிக்கவில்லை. நான் Shopify Payments Hungary-ஐப் பயன்படுத்தலாமா?
உங்கள் வணிக வகை தனிநபராக (individual) இருந்தால், Shopify Payments Hungary-ஐப் பயன்படுத்துவதற்கான தகுதியைப் பெற நீங்கள் ஹங்கேரியில் வசிப்பது அவசியமாகும். நீங்கள் தற்போது ஹங்கேரியில் வசிக்கவில்லை எனில், நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்க வேண்டும்.
உங்கள் ஸ்டோர் முகவரியை உங்களின் தற்போதைய இடத்திற்குப் புதுப்பிக்கவும். உங்கள் இடம் Shopify Payments-க்குத் தகுதியுடையதாக இருந்தால், அதற்குப் பதிலாக அந்தப் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை நீங்கள் உருவாக்கலாம்.
நீங்கள் கூட்டாண்மை, நிறுவனம் அல்லது லாப நோக்கமற்ற அமைப்பாக இருந்தால், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஹங்கேரியில் வசிக்க வேண்டியதில்லை. ஆனால், உங்கள் வணிகம் அங்குப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும், மேலும் ஹங்கேரிய வணிக முகவரியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நான் ஒரு கூட்டாண்மை, ஆனால் நீங்கள் நிறுவனப் பதிவு எண்ணைக் கேட்கிறீர்கள், என்னிடம் அது இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு கூட்டாண்மையான உங்களிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்பட்டும் அது உங்களிடம் இல்லை எனில், நீங்கள் தவறான வணிக வகையாக அமைக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கணக்கை அமைக்கும் செயல்முறையில் இருந்தால், வணிக வகைத் தேர்வுத் திரைக்குத் திரும்பிச் சென்று, பதிவு செய்யப்படாத கூட்டாண்மை (Unregistered partnership) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் ஏற்கனவே கணக்கை அமைத்திருந்து, சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உங்களிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்பட்டால், அமைப்புகள் > பொது என்பதற்குச் சென்று உங்கள் வணிக வகையைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக விவரங்களுக்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வணிக வகையைப் புதுப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், உதவிக்குச் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நான் ஒரு தனி உரிமையாளர். எனது வணிகத் தகவல் மற்றும் நிறுவனப் பதிவு எண்ணை எவ்வாறு உள்ளிடுவது?
நீங்கள் ஒரு தனி உரிமையாளராக இருந்தால், வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் நோக்கங்களுக்காக, உரிமையாளரின் தனிப்பட்ட தகவலை மட்டுமே Shopify சேகரித்துச் சரிபார்க்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப தனிநபர் / தனி உரிமையாளர் (Individual / Sole Proprietor) என்ற வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தனி உரிமையாளராக இருந்தால், வேறு வணிக வகையாகப் பதிவுசெய்ய முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் சரிபார்ப்பில் தேர்ச்சி பெறுவதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படலாம்.
நான் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனம். நான் எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
தனியார் கார்ப்பரேஷன் (Private corporation) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான செயல்முறை ஒன்றுதான். உரிமையாளர்களைச் சேர்க்கக் கோரும் கணக்கு அமைவுப் படிவத்தின் பகுதியை நீங்கள் தவிர்க்கலாம். பலனடையும் உரிமையாளர்கள் (beneficial owners) எவரும் இல்லை எனில், நீங்கள் யாரையும் பட்டியலிட வேண்டியதில்லை.
ஹங்கேரியில் உள்ள, பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனமான நீங்கள், ஏற்கனவே Shopify Payments கணக்கை அமைத்திருந்து, உங்கள் சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக இப்போது உங்களிடம் உரிமைத் தகவல் (ownership information) கேட்கப்பட்டால், உங்களுக்கு உரிமையாளர்கள் எவரும் இல்லை என்பதைக் காட்டும் வகையில் உங்கள் உரிமை விவரங்களைப் புதுப்பிக்கவும். கோப்பில் உள்ள எந்த நபரிடமிருந்தும் உரிமையாளர் (Owner) பங்கினை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உங்களின் அனைத்து இயக்குநர்களும் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளார்களா என்பதையும் அவர்களுக்கு இயக்குநர் (Director) பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிசெய்யவும்.
பட்டியலிடப்பட்ட இயக்குநர் பதவி சரியானதா என்பதை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்படலாம். அது சரியாக இருப்பதை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், கோப்பில் உள்ள தகவலை டிஜிட்டல் முறையில் சான்றளிக்க கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்தச் செயல்முறையில் ஏதேனும் சிரமம் இருந்தால், உதவிக்குச் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
என்னிடம் நிறுவனப் பதிவு எண் இல்லை, ஆனால் நான் ஒரு தனிநபர் அல்லது தனி உரிமையாளரும் இல்லை.
உங்களிடம் நிறுவனப் பதிவு எண் இல்லை எனில், உங்களின் வணிக வகையாகப் பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை (Unregistered partnership) அல்லது இணைக்கப்படாத லாப நோக்கமற்ற அமைப்பு (Unincorporated non-profit) என்பதை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஹங்கேரியில், குறிப்பிட்ட வணிக வகையாக உங்கள் வணிகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் வணிக ஆவணத்தை நீங்கள் இன்னமும் வழங்க வேண்டும்.
இந்த வணிக வகைகள் எதுவும் உங்கள் வணிகத்திற்குப் பொருந்தவில்லை எனில், தனிநபர் / தனி உரிமையாளர் (Individual / Sole Proprietor) என்பதைத் தேர்ந்தெடுத்து, முக்கிய முடிவெடுப்பவர் அல்லது உரிமையாளரைக் கணக்குப் பிரதிநிதியாக நியமிக்கவும்.
எனது கணக்கு ஏற்கனவே சரிபார்க்கப்பட்டது. புதிய தகவலை வழங்குமாறு நான் ஏன் கேட்கப்படுகிறேன்?
ஒழுங்குமுறை மற்றும் நிதி கூட்டாளர்களின் தேவைகள் காலப்போக்கில் மாறக்கூடியவை. அவ்வாறு நிகழும்போது, இணக்கமாகத் தொடர நீங்கள் கூடுதல் தகவல்களை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த வகையான கோரிக்கைகளை உங்களின் நிர்வாகியில் (admin) உள்ள பேனர் அல்லது விழிப்பூட்டல் மூலமாகவும் அதற்குரிய மின்னஞ்சல் மூலமாகவும் பெறுவீர்கள். Shopify Payments-ஐத் தொடர்ந்து பயன்படுத்த இந்தக் கோரிக்கைகளை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும்.
எனது Shopify Payments கணக்குத் தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?
கணக்குச் சரிபார்ப்பை நிறைவுசெய்யுமாறு உங்களிடம் தொடர்ந்து கேட்கப்பட்டால், சரிபார்ப்புப் பக்கத்திலிருந்து உங்கள் தகவலில் எந்தவொரு புதுப்பிப்பையும் நீங்கள் செய்யலாம், அதோடு கோரப்படும் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கலாம்.
சரிபார்ப்புச் செயல்முறை தவிர்த்து, கடையின் உரிமையாளர் அமைப்புகள் > பொது > வணிக விவரங்கள் என்பதற்குச் சென்று இந்த விவரங்களைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக நிறுவனத்திற்குப் பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, வணிக வகை உட்பட அந்த வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க, திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: இங்கு நீங்கள் செய்யும் மாற்றங்கள் மதிப்பாய்வுக்காக எங்கள் வங்கிக் கூட்டாளர்களுக்குத் தானாகவே அனுப்பப்படும், மேலும் புதிய தகவல் அவர்களின் சரிபார்ப்புச் செயல்முறை மூலம் மீண்டும் சரிபார்க்கப்படும். இந்த மாற்றங்கள் தானாகவே மறுசரிபார்ப்புக்கு உட்படுத்தப்படலாம், ஆனால் உங்களிடம் துணை ஆவணங்களும் கேட்கப்பட வாய்ப்புள்ளது.
எனது சரிபார்ப்புக் காலக்கெடுவை நான் தவறவிட்டால் என்ன நடக்கும்?
சரிபார்ப்புச் செயல்முறை நிறைவடையும் வரை உங்கள் பேஅவுட்களில் தற்காலிக இடைநிறுத்தம் இருக்கும். முதல் காலக்கெடு முடிந்து, பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, Shopify Payments மூலம் ஆர்டர்களை ஏற்கும் உங்கள் திறன் எப்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைக் குறிக்கும் இரண்டாவது காலக்கெடுவை நீங்கள் காணலாம்.
இந்த இடைநிறுத்தங்கள் அனைத்தும் தற்காலிகமானவையே. நீங்கள் சரிபார்ப்பை நிறைவுசெய்த பிறகு இவை தானாகவே நீக்கப்படும். உங்களது காலக்கெடு குறித்த விவரங்களுக்கு உங்கள் நிர்வாகப் பக்கத்தைப் பார்க்கவும்.
ஜூன் 2026 முதல், புதிதாகத் தொடங்கப்படும் Shopify Payments ஹங்கேரி கணக்குகளுக்கான சரிபார்ப்பை, அவற்றின் முதல் ஆர்டர் செயலாக்கப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் நிறைவுசெய்ய வேண்டும். 90 நாட்கள் கடந்துவிட்டால், Shopify Payments மூலம் நீங்கள் செயலாக்கிய ஆர்டர்களுக்கான பணம் தானாகவே திரும்பவழங்கப்படலாம்.
இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் ஜூன் 2026 அன்று அல்லது அதற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை உங்களுக்குப் பொருந்தினால், பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் எப்போது செயலாக்கப்படும் என கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கைகள் மூலம் தெரிவிக்கப்படும்.
ஹங்கேரியில் Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருக்கவும்:
- வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கியமான தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில், நீங்கள் பெற்ற ஏதேனும் பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள்
- அமைவின் போது நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக வகை
- பொருந்துமானால், உங்கள் நிறுவனத்தின் பதிவு எண் (Cégjegyzékszám)
- நீங்கள் சிக்கலை எதிர்கொண்ட குறிப்பிட்ட படி
- நீங்கள் பயன்படுத்தும் உலாவி மற்றும் சாதனம்
- முழுக் கணக்கு எண்ணைப் பகிராமல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் (IBAN, கணக்கு வகை, நாணயம்)
- நீங்கள் பதிவேற்றிய ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் விவரங்கள் மற்றும் அவற்றை நீங்கள் பதிவேற்றிய நேரம்
இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருப்பது, உங்களுக்குச் சிறப்பாக உதவ Shopify ஆதரவுக்கு வழிவகுக்கும்.