அயர்லாந்தில் Shopify Payments மூலம் வாடிக்கையாளர் கட்டண முறைகள்
அயர்லாந்தில் Shopify Payments-ஐப் பயன்படுத்தும்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், விரைவான செக்அவுட்கள், உள்ளூர் கட்டண முறைகள் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றின் மூலம் நீங்கள் பேமெண்ட்டுகளை ஏற்கலாம். உங்கள் ஸ்டோருக்காகச் செயல்படுத்த வேண்டிய வாடிக்கையாளர் கட்டண முறைகளைத் தீர்மானிக்க, கிடைக்கும் விருப்பத்தேர்வுகளை மதிப்பாய்வு செய்யவும். Shopify Payments மூலம் கார்டு கொண்டு வாடிக்கையாளர்கள் செய்யும் கொள்முதல்களுக்கு விதிக்கப்படும் கட்டணச் செயலாக்க விகிதங்கள், உங்கள் Shopify கணக்கிற்கான சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது.
இந்தப் பக்கத்தில்
அயர்லாந்தில் Shopify Payments மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள்
Shopify Payments-ஐச் செயல்படுத்தும்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பேமெண்ட்டுகள் தானாகவே செயல்படுத்தப்படும், கூடுதல் அமைவு எதுவும் தேவையில்லை. நீங்கள் பின்வரும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பிராண்டுகளின் பேமெண்ட்டுகளை ஏற்கலாம்:
- American Express
- Maestro
- Mastercard
- UnionPay
- Visa
அயர்லாந்தில் Shopify Payments மூலம் விரைவான செக்அவுட்கள்
அயர்லாந்தில் உள்ள Shopify Payments-இல் பின்வரும் விரைவான செக்அவுட் கட்டண முறைகள் கிடைக்கின்றன:
அயர்லாந்தில் Shopify Payments மூலம் உள்ளூர் கட்டண முறைகள்
உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள பேமெண்ட்டுகள் பிரிவில் உள்ளூர் கட்டண முறைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
உங்கள் ஸ்டோரின் இருப்பிடத்தை வைத்து அல்லாமல், உங்கள் வாடிக்கையாளரின் இருப்பிடத்தை வைத்தே செக்அவுட்டில் உள்ளூர் கட்டண முறைகள் காட்டப்படும். அதாவது, பல்வேறு நாடுகளிலிருக்கும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் உள்ளூர் கட்டண முறைகளைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பேமெண்ட்டுகளை நீங்கள் ஏற்கலாம்.
எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோர் அயர்லாந்தில் உள்ளது, iDEAL | Wero-ஐ உள்ளூர் கட்டண முறையாகச் செயல்படுத்தியிருக்கிறீர்கள், நெதர்லாந்தில் உங்கள் வாடிக்கையாளர் இருக்கிறார் என்றால் அந்த வாடிக்கையாளருக்குச் செக்அவுட்டின்போது iDEAL | Wero கட்டண விருப்பத்தேர்வாகக் காட்டப்படும்.
நீங்கள் எந்தெந்தக் கட்டண முறைகளைச் செயல்படுத்தலாம் மற்றும் செக்அவுட்டில் இந்த விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்த உங்கள் வாடிக்கையாளர்கள் எந்தெந்த நாடுகளில் இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
| கட்டண முறை | வாடிக்கையாளர் இருப்பிடம் |
|---|---|
| Bancontact | பெல்ஜியம் |
| iDEAL | Wero | நெதர்லாந்து |
| BLIK | போலந்து |
| Przelewy24 | போலந்து |
| Klarna | ஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, கிரீஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் |
| MB WAY | போர்ச்சுகல் |
| MobilePay | டென்மார்க், பின்லாந்து |
| Satispay | இத்தாலி |
| TWINT | சுவிட்சர்லாந்து |
குறிப்பிட்ட உள்ளூர் கட்டண முறைகளுக்கான கூடுதல் தகுதித் தேவைகள்
சில உள்ளூர் கட்டண முறைகளுக்குக் கூடுதல் தகுதித் தேவைகள் உள்ளன:
- MB WAY: உங்கள் வாடிக்கையாளர்கள் போர்ச்சுகலில் இருக்க வேண்டும், EUR நாணயத்தில் பேமெண்ட் செலுத்த வேண்டும் மற்றும் அவர்களின் MB WAY கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்க வேண்டும். Shopify Payments உடன் MB WAY-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள் பற்றி மேலும் அறிக.
அயர்லாந்தில் Shopify Payments மூலம் கிரிப்டோகரன்சி
அயர்லாந்தில் உள்ள Shopify Payments மூலம் நீங்கள் USD Coin (USDC) வடிவில் கிரிப்டோகரன்சி பேமெண்ட்டுகளை ஏற்கலாம். கிரிப்டோகரன்சி பேமெண்ட்டுகளை ஏற்பது குறித்து மேலும் அறிக.
விற்பனைப் புள்ளி
Shopify Payments-ஐப் பயன்படுத்தும் அயர்லாந்திலுள்ள வணிகங்கள், Shopify POS மூலம் ஆன்லைனிலும் நேரில் சந்தித்தும் பேமெண்ட்டுகளை ஏற்கலாம். Shopify POS மூலம் நேரில் சந்தித்துப் பேமெண்ட்டுகளை ஏற்க, பின்வரும் விருப்பத்தேர்வுகளில் ஏதேனுமொன்றைப் பயன்படுத்தலாம்:
- Shopify Payments உடன் Shopify ஆதரிக்கும் கார்டு ரீடர்
- மூன்றாம் தரப்பு கட்டணச் செயலியுடன் உள்ள வெளிப்புற கார்டு டெர்மினல்