அயர்லாந்தில் Shopify Paymentsஐப் பயன்படுத்தத் தேவையான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் நிபந்தனைகள்

அயர்லாந்தில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கு முன், விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியவும் நிதிக் குற்றங்களைத் தடுக்கவும் நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட தகவல்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன மற்றும் ஏற்கப்படும் ஆவண வகைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. மேலும், உங்களின் ஆவணங்கள் தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

அயர்லாந்தில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள்

அயர்லாந்தில் Shopify Paymentsஐப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:

  • தகுதியான வணிக வகைகள்: குறிப்பிட்ட சில வணிகங்கள் மற்றும் சேவைகள் Shopify Paymentsஐப் பயன்படுத்த அனுமதியில்லை. உங்கள் வணிகம் தகுதி பெற்றுள்ளதா என்பதைத் தீர்மானிக்க, Shopify Payments சேவை விதிமுறைகளில் அயர்லாந்தில் தடைசெய்யப்பட்ட வணிக வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
  • வங்கிக் கணக்கு நிபந்தனைகள்: உங்கள் வங்கிக் கணக்கை Shopify Payments உடன் இணைப்பதற்கு முன், அது பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
    • வங்கிக் கணக்கு EUR நாணயத்தில் இருக்க வேண்டும்.
    • வங்கிக் கணக்கானது, SEPA (Single Euro Payments Area) இடமாற்றங்களுக்குத் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
    • பின்வரும் ஏதேனும் ஒரு நாட்டுக் குறியீட்டில் தொடங்கும் IBAN (International Bank Account Number) எண்ணை வங்கிக் கணக்கு கொண்டிருக்க வேண்டும்: AT, BE, BG, CH, CY, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE அல்லது SI.

ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகைகள்

சில வகையான வங்கிக் கணக்குகள் Shopify Paymentsக்கு ஏற்றவை அல்ல. பின்வரும் கணக்கு வகைகள் ஆதரிக்கப்படுவதில்லை:

  • வயர் பரிமாற்றங்களை மட்டுமே ஏற்கும் நடப்புக் கணக்குகள்: இந்தக் கணக்குகள் Shopify Payments உடன் செயல்படாது.
  • சேமிப்புக் கணக்குகள்: சேமிப்புக் கணக்குகளை Shopify Payments பேஅவுட்களுக்குப் பயன்படுத்த முடியாது.
  • ஃப்ளெக்ஸ்-கரன்சி கணக்குகள்: ஒரே நேரத்தில் பல நாணயங்களை ஆதரிக்கும் கணக்குகள் ஆதரிக்கப்படுவதில்லை.
  • பணப் பரிமாற்றச் சேவைகள்: சில ஃபின்டெக் பிளாட்ஃபார்ம்கள் போன்று, வங்கிக் கணக்குகளை ஒத்திருக்கும் சேவைகளை Shopify Payments உடன் பயன்படுத்த முடியாது.

Shopify அல்லாத மெய்நிகர் கணக்குகள் ஆதரிக்கப்பட்டாலும், இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தும்போது அதிக பேஅவுட் தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

உங்கள் பிராந்தியத்திற்கெனப் பட்டியலிடப்பட்ட பரிமாற்ற வகையை உங்கள் கணக்கு ஏற்குமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கம்

நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக அயர்லாந்தில் வடிவமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிய, நீங்களும் உங்கள் வணிகமும் குறித்த தகவல்களை Shopify மற்றும் அதன் வங்கிச் சேவைக் கூட்டாளர்கள் சேகரித்து சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். உள்ளூர் விதிகள் மற்றும் விதிமுறைகள் மாறும்போது, உங்கள் Shopify Payments கணக்கு உள்ளவரை கூடுதல் தகவல்களை வழங்குமாறு Shopify மற்றும் அதன் வங்கிச் சேவைக் கூட்டாளர்களிடமிருந்து உங்களைத் தொடர்புகொள்ளக்கூடும்.

சேகரிக்கப்படும் தகவல்கள், வணிகத்தின் அடையாளம், வணிகத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் அடையாளம் மற்றும் இவை இரண்டுக்குமிடையேயான உறவின் தன்மையை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும்.

Shopify ஒருபோதும் அஞ்சல் மூலமாக ஆவணங்களை உங்களுக்கு அனுப்பாது. முக்கியமான ஆவணங்கள் அல்லது தகவல் தொடர்புகள் மின்னஞ்சல் செய்யப்படும் அல்லது உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள அமைப்புகள் > பயனர்கள் பக்கத்தில் கடையின் உரிமையாளருக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கும்.

உங்களின் தகவல்கள் எவ்வாறு ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள Shopifyஇன் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.

அயர்லாந்தில் Shopify Paymentsஐச் செயல்படுத்தத் தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்கள்

உங்கள் வணிக வகையை நீங்கள் சரியாக அடையாளம் காண வேண்டும், ஏனெனில் நீங்கள் வழங்க வேண்டிய தகவல்களை இதுவே தீர்மானிக்கிறது.

நீங்கள் எந்த அரசு முகமையிலும் பதிவு செய்யவில்லை என்றாலோ, பதிவு செய்திருந்தும் தனியுரிமை வணிகராக வணிகத்தை நடத்துகிறீர்கள் என்றாலோ, தனிநபர் / தனியுரிமை வணிகர் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து, CRN (Company Registration Number) வைத்திருந்தால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • கம்பெனிப் பதிவு எண்களைக் (LP) கொண்ட கூட்டாண்மைகள் இணைக்கப்பட்ட கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • கம்பெனிப் பதிவு எண்களைக் (CLG) கொண்ட லாப நோக்கற்ற நிறுவனங்கள், இணைக்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பு வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • LTD, DAC அல்லது ULC போன்ற கம்பெனிப் பதிவு எண்களைக் கொண்ட மற்ற அனைத்து வணிகங்களும், தனியார் நிறுவனம் வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களிடம் பதிவுசெய்யப்பட்ட வணிகம் இருந்து, அதற்குக் கம்பெனிப் பதிவு எண் இல்லை என்றால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • கம்பெனிப் பதிவு எண்கள் இல்லாத கூட்டாண்மைகள் (பொதுக் கூட்டாண்மைகள்), இணைக்கப்படாத கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நிறுவனப் பதிவு எண்கள் இல்லாத லாபநோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் (சங்கங்கள், அறக்கட்டளைகள்) இணைக்கப்படாத லாபநோக்கமற்ற நிறுவனம் (Unincorporated non-profit) என்ற வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சரியானதைத் தேர்ந்தெடுக்க உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தனிநபர்கள் / தனி வணிகர்கள்

தனிநபர்கள் (Individuals) என்பவர்கள் அரசு அமைப்புகளில் பதிவு செய்யாமல் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்களைக் குறிக்கிறது. தனி வணிகர்கள் (Sole traders) என்பவர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசில் பதிவு செய்து வணிகம் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்களைக் குறிக்கிறது. இவை இரண்டுமே அயர்லாந்தில் வசிக்கும் ஒரு தனிநபரால் சொந்தமாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் வணிகங்களாகும். இதில் சுயாதீனப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் சிறு வணிக ஆப்பரேட்டர்களும் அடங்குவர்.

இந்த வணிக வகைகள் ஒரே மாதிரியாகவே கருதப்படுகின்றன, மேலும் ஒரே மாதிரியான தகவல்களை வழங்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் தனி வணிகர்கள் பின்வருவனவற்றை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணங்களில் உள்ளபடி உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான, செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான, செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • அயர்லாந்தில் உள்ள இருப்பிட முகவரி: ஆவணங்களில் உள்ளது போன்ற உங்கள் வீட்டு முகவரி.

உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல்கள் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கான தீர்வை நீங்கள் பெறலாம்:

  • சரியான புகைப்பட ஐடியுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியாக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
தனியார் நிறுவனங்கள் (LTD, DAC, ULC)

தனியார் நிறுவனம் என்பது அதன் பங்குகளாகப் பிரிக்கப்பட்டு பங்குதாரர்களுக்குச் சொந்தமாக உள்ள வணிகமாகும். நிறுவனம் என்பது அதை நடத்துபவர்களிடமிருந்து தனித்த, ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக இவற்றில் இயக்குநர்கள் குழுவொன்றும் இருக்கும்.

தனியார் நிறுவனங்கள் பலனடையும் உரிமையாளர் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு நிர்வாகியைக் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணங்களில் உள்ளபடி உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான, செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான, செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • இருப்பிட முகவரி: ஆவணங்களில் உள்ளது போன்ற உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • பங்கு (Equity): பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமாக உள்ள பங்கின் சதவீதம்.

உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல்கள் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கான தீர்வை நீங்கள் பெறலாம்:

  • சரியான புகைப்பட ஐடியுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியாக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

தனியார் நிறுவனங்கள் வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • நிறுவனப் பதிவு எண் (CRN): CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் CRN.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்துமானால், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை அயர்லாந்து அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பார்கள். சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள், குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும்.

வணிகத்தைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், வணிகச் சரிபார்ப்பு ஆவணமொன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவனப் பதிவு எண், வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

வணிகத்தில் பலனடையும் உரிமையாளர்களாக உள்ள வேறு நபர்களின் பட்டியலையும் நீங்கள் கூடுதலாகச் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ஐடி அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் விவரங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமை ஆவணச் சான்றை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். சான்றளிப்பதில் கையெழுத்திடுவதே, முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும், நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், கணக்கில் உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகமானது (முழுமையாக அல்லது பகுதியாக) ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.

உங்கள் வணிகத்திற்கு உரிமையாளர்கள் இல்லை எனில், நீங்கள் ஒரு சான்றளிப்பில் கையெழுத்திட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்க வேண்டும். நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், கணக்கில் உள்ள இயக்குநர்களின் பெயர்கள் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் (LP)

இணைக்கப்பட்ட கூட்டாண்மை என்பது வணிகச் செயல்பாட்டிற்காகப் பதிவுசெய்து, நிறுவனப் பதிவு எண்ணைப் பெற்ற குறைந்தது இரண்டு கூட்டாளர்களால் சொந்தமாக்கப்பட்ட ஒரு வணிகமாகும். இணைக்கப்பட்ட கூட்டாண்மைகளுக்குப் பங்குகள் (Equity) இருக்கும், மேலும் இந்தக் கூட்டாண்மையானது உரிமையாளர்களிடமிருந்து தனித்த ஒரு நிறுவனமாகும்.

இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் ஒரு உரிமையாளரை அல்லது கூட்டாளரைத் தங்களின் Shopify Payments கணக்குப் பிரதிநிதியாகக் குறிப்பிட வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணங்களில் உள்ளபடி உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான, செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான, செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • இருப்பிட முகவரி: ஆவணங்களில் உள்ளது போன்ற உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • பங்கு (Equity): பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமாக உள்ள பங்கின் சதவீதம்.

உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல்கள் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கான தீர்வை நீங்கள் பெறலாம்:

  • சரியான புகைப்பட ஐடியுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியாக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்பட்ட கூட்டாண்மைகள் வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • நிறுவனப் பதிவு எண் (CRN): CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் CRN.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்துமானால், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை அயர்லாந்து அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பார்கள். சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள், குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும்.

வணிகத்தைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், வணிகச் சரிபார்ப்பு ஆவணமொன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவனப் பதிவு எண், வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

வணிகத்தில் பலனடையும் உரிமையாளர்களாக உள்ள வேறு நபர்களின் பட்டியலையும் நீங்கள் கூடுதலாகச் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ஐடி அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் விவரங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமை ஆவணச் சான்றை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். சான்றளிப்பதில் கையெழுத்திடுவதே, முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும், நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், கணக்கில் உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகமானது (முழுமையாக அல்லது பகுதியாக) ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.

இணைக்கப்படாத கூட்டாண்மைகள் (பொதுக் கூட்டாண்மைகள்)

இணைக்கப்படாத கூட்டாண்மை என்பது நிறுவனப் பதிவு எண்ணுக்குப் பதிவு செய்யாமல், கூட்டாண்மை ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள, குறைந்தது இரண்டு கூட்டாளர்களால் சொந்தமாக்கப்பட்ட ஒரு வணிகமாகும். இதில் உரிமையாளர்களே சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுவார்கள், மேலும் வணிகம் என்பது ஒரு தனித்த நிறுவனமல்ல.

இணைக்கப்படாத கூட்டாண்மைகள் ஒரு உரிமையாளரைத் தங்களின் Shopify Payments கணக்குப் பிரதிநிதியாகக் குறிப்பிட வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணங்களில் உள்ளபடி உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான, செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான, செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • இருப்பிட முகவரி: ஆவணங்களில் உள்ளது போன்ற உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • பங்கு (Equity): பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமாக உள்ள பங்கின் சதவீதம்.

உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல்கள் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கான தீர்வை நீங்கள் பெறலாம்:

  • சரியான புகைப்பட ஐடியுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியாக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்படாத கூட்டாண்மைகள் வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்துமானால், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை அயர்லாந்து அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பார்கள். சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள், குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும்.

வணிகத்தைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், வணிகச் சரிபார்ப்பு ஆவணமொன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

வணிகத்தில் பலனடையும் உரிமையாளர்களாக உள்ள வேறு நபர்களின் பட்டியலையும் நீங்கள் கூடுதலாகச் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ஐடி அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் உரிமையாளர்களின் விவரங்கள் அரசின் வணிகப் பதிவேட்டில் உள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனத் தெரியவந்தால், கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிக்கும் செயல்முறையை முடிக்குமாறு அல்லது உரிமை ஆவணச் சான்றை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். சான்றளிப்பதில் கையெழுத்திடுவதே, முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும். எனினும், நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், கணக்கில் உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் உங்கள் ஆவணத்தில் உள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். உங்கள் வணிகமானது (முழுமையாக அல்லது பகுதியாக) ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.

இணைக்கப்பட்ட லாபநோக்கமற்ற நிறுவனங்கள் (CLG)

லாபநோக்கமற்ற நிறுவனம் (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கு லாபத்தை உருவாக்குவதைத் தவிர்த்து மற்ற நோக்கங்களுக்காக நிறுவப்படும் ஒரு நிறுவனமாகும். பொது அல்லது சமூக நலனுக்குச் சேவை செய்வதே அதன் முதன்மைப் பணியாகும். இணைக்கப்பட்ட லாபநோக்கமற்ற நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காகப் பதிவுசெய்து, நிறுவனப் பதிவு எண்ணைப் பெற்றிருக்கும்.

இணைக்கப்பட்ட லாபநோக்கமற்ற நிறுவனங்கள் ஒரு இயக்குநரை அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகியைக் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணங்களில் உள்ளபடி உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான, செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான, செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • இருப்பிட முகவரி: ஆவணங்களில் உள்ளது போன்ற உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • பங்கு (Equity): பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமாக உள்ள பங்கின் சதவீதம்.

உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல்கள் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கான தீர்வை நீங்கள் பெறலாம்:

  • சரியான புகைப்பட ஐடியுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியாக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

இணைக்கப்பட்ட லாபநோக்கமற்ற நிறுவனங்கள் வணிகம் குறித்த பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • நிறுவனப் பதிவு எண் (CRN): CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் CRN.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்துமானால், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: CRO தரவுத்தளத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை அயர்லாந்து அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பார்கள். சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள், குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும்.

வணிகத்தைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், வணிகச் சரிபார்ப்பு ஆவணமொன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், நிறுவனப் பதிவு எண், வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

இயக்குநர்கள் குழுவில் உள்ள பிறர் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்களின் பட்டியலையும் நீங்கள் கூடுதலாகச் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ஐடி அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் இயக்குநர்கள், அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கும்படியோ இயக்குநருக்கான ஆதார ஆவணத்தை வழங்கும்படியோ உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவதே இந்தப் பொருந்தாமைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், கணக்கில் உள்ள இயக்குநர்களின் பெயர்களும் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களின் பெயர்களும் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில் ஆவணத்திற்குப் பொருந்தும் வகையில், கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்ற அமைப்புகள் (சங்கங்கள், அறக்கட்டளைகள்)

இலாப நோக்கற்ற அமைப்பு (NPO) என்பது பங்குதாரர்களுக்கு இலாபம் ஈட்டுவதைத் தவிரப் பிற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும். பொதுமக்களுக்கோ சமூகத்துக்கோ நன்மையளிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்ற அமைப்புக்கு நிறுவனப் பதிவு எண் இருக்காது, ஆனால் உள்ளூர் நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புக்கான அந்தஸ்தைக் கொண்டிருக்கும்.

பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்ற அமைப்புகள் ஒரு முக்கிய முடிவெடுப்பவரையோ அமைப்பாளரையோ தங்கள் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்கி, அந்த நபரை நிர்வாகியாகக் குறிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:

  • சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணங்களில் உள்ளபடி உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
  • பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதி.
  • மின்னஞ்சல் முகவரி: சரியான, செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண்: சரியான, செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண்.
  • இருப்பிட முகவரி: ஆவணங்களில் உள்ளது போன்ற உங்கள் வீட்டு முகவரி.
  • பதவி: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவி.
  • பங்கு (Equity): பொருந்தினால், வணிகத்தில் உங்களுக்குச் சொந்தமாக உள்ள பங்கின் சதவீதம்.

உங்கள் தகவல்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரும் கோரிக்கை ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

தகவல்கள் சரியாக இருந்தும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கான தீர்வை நீங்கள் பெறலாம்:

  • சரியான புகைப்பட ஐடியுடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • தனித்தனியாக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
    • ஆவணங்களில் உள்ள தகவல்கள் உங்கள் கணக்கில் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.

பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்ற அமைப்புகள் வணிகம் தொடர்பான பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:

  • பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளவாறு சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
  • மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்: பொருந்துமானால், உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்.
  • வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டில் உள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
  • வணிக முகவரி: ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளவாறு வணிகத்தின் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.

Shopify வங்கியியல் கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை அயர்லாந்து அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பார்கள். சரியான எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள், குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும்.

வணிகத்தைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவல்களைச் சரிபார்க்க முடியாவிட்டால், வணிகச் சரிபார்ப்பு ஆவணமொன்றை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, ஆவணத்தில் உள்ளவாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

இயக்குநர்கள் குழுவில் உள்ள பிறர் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்களின் பட்டியலையும் நீங்கள் கூடுதலாகச் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், அவர்கள் புகைப்பட ஐடி அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் வழங்கும் இயக்குநர்கள், அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருந்தவில்லை எனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கும்படியோ இயக்குநருக்கான ஆதார ஆவணத்தை வழங்கும்படியோ உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவதே இந்தப் பொருந்தாமைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், கணக்கில் உள்ள இயக்குநர்களின் பெயர்களும் ஆவணத்தில் உள்ள இயக்குநர்களின் பெயர்களும் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில் ஆவணத்திற்குப் பொருந்தும் வகையில், கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்

உங்கள் அடையாளம் மற்றும் வணிக விவரங்களைச் சரிபார்க்க எந்தெந்த ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது.

அடையாள ஆவணங்கள்

Shopify Payments கணக்கில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை நீங்கள் வழங்கும் அடையாள ஆவணத்தில் உள்ள தகவலுக்குப் பொருந்தும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் செல்லுபடியாகும் வகையிலும் காலாவதியாகாமலும் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் தவிரப் பிற ஆவணங்களின் முன் மற்றும் பின்புறப் புகைப்படங்கள் தேவை. அடையாளச் சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்:

  • பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • தேசிய வயது அட்டை
  • ஐரிஷ் குடியிருப்பு அனுமதி

முகவரி ஆவணங்கள்

Shopify Payments கணக்கில் உள்ள பெயர் மற்றும் முகவரி ஆகியவை நீங்கள் வழங்கும் முகவரி ஆவணங்களில் உள்ள தகவலுக்குப் பொருந்தும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும். வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, அனைத்து ஆவணங்களும் கடந்த 6 மாதங்களுக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். முகவரிச் சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்:

  • பயன்பாட்டுக் கட்டணப் பில்
  • வங்கி அறிக்கை
  • கார் காப்பீட்டுக் கொள்கை
  • வீட்டுக் காப்பீட்டுக் கொள்கை
  • சமூகக் காப்பீட்டு ஆவணம்
  • வரி கிரெடிட் சான்றிதழ் (12 மாதங்களுக்குட்பட்ட தேதியிடப்பட்டது)
  • வருவாய் இலாகாவிலிருந்து பொறுப்பு அறிக்கை (12 மாதங்களுக்குட்பட்ட தேதியிடப்பட்டது)
  • அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணம் (12 மாதங்களுக்குட்பட்ட தேதியிடப்பட்டது)

வணிகச் சரிபார்ப்பு ஆவணங்கள்

வணிகச் சரிபார்ப்புக்குப் பின்வரும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இவற்றில் உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயர், நிறுவனப் பதிவு எண் மற்றும் முகவரி ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் வழங்கும் ஆவணங்களில் உள்ள தகவலுக்குப் பொருந்தும் வகையில், Shopify Payments கணக்கிலுள்ள விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்:

  • நிறுவனங்களின் பதிவு அலுவலகம் (CRO) வணிகப் பதிவேட்டின் சுருக்கம்
  • பதிவுச் சான்றிதழ்
  • கூட்டாண்மை ஒப்பந்தம்
  • கூட்டிணைப்புச் சான்றிதழ்
  • நிறுவன அமைப்பு விதிகள்
  • மதிப்புக்கூட்டு வரிப் பதிவு

உரிமை ஆவணங்கள்

உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனப் பெயரும் வணிக உரிமையாளர்கள் அனைவரின் முழுப்பெயர்களும் காட்டப்பட்டிருந்தால், உரிமைக்கான சான்றாகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

  • நிறுவன அரசியலமைப்பு (கூட்டிணைப்பு விதிகள்)
  • நிறுவனத்தின் கூட்டிணைப்பு ஆவணங்கள் / பதிவுக்கான சான்று (எ.கா. நிறுவன அமைப்பு விதிகள், அமைப்புச் சான்றிதழ்)
  • ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கான கார்ப்பரேட் / நிறுவனத் தாக்கல்கள் (எ.கா. வருடாந்திர ரிட்டர்ன்கள், இயக்குநர்களின் மாற்றம்)
  • தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் (மூன்றாம் தரப்புத் தணிக்கை நிறுவனம் அல்லது சட்ட நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட நிதி அறிக்கைகள்)

உங்களின் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு பலனடையும் உரிமையாளரும், உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு அவர்களுக்கு உரிமையாளர் பங்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். பலனடையும் உரிமையாளர் என்பவர் 25% அல்லது அதற்கும் மேலான வணிகப் பங்குகளுக்கு உரிமையுள்ளவர் ஆவார். தேவையெனில் ஆவணத்திற்குப் பொருந்தும் வகையில் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

வணிகத்திற்குப் பலனடையும் உரிமையாளர்கள் எவரும் இல்லை எனில், அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்களைச் சரிபார்க்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அதே ஆவணங்கள் தகுதியானவை. ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு இயக்குநரும், Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட்டு அவர்களுக்கு இயக்குநர் பங்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். தேவையெனில் ஆவணத்திற்குப் பொருந்தும் வகையில் கணக்கின் தகவலைப் புதுப்பிக்கவும்.

உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றால், உரிமையாளர்களும் இயக்குநர்களும் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதை முதலில் உறுதிசெய்துவிட்டு, பிறகு கையெழுத்திடு பொத்தானை அழுத்தி டிஜிட்டல் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கவும்.

ஆவணமாக்கலுக்கான இணக்கத்தை உறுதிசெய்தல்

ஆவணங்களை வழங்கும்போது, அவை தேவையான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதை உறுதிசெய்யவும். இணக்கத்தை உறுதிசெய்யப் பின்வரும் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • துல்லியம்: ஆவணங்களில் உள்ள தகவல் உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ளவற்றுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும். தேவையெனில் ஆவணங்களுக்குப் பொருந்தும் வகையில் உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும்.
  • தெளிவு மற்றும் வாசிப்புத்திறன்: ஆவணங்கள் தெளிவாகவும் படிக்கும் அளவுக்குப் பெரியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். ஆவணம் முழுவதும் புகைப்படத்தில் தெரிவதை உறுதிப்படுத்தவும்.
  • முழுமை: தேவையான அனைத்து விவரங்களும் ஆவணத்தில் தெரிவதை உறுதிசெய்யவும். ஆவணத்தில் சேர்க்க வேண்டிய விவரங்களைப் புரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகளை மதிப்பாய்வு செய்யவும்.
  • அசல் ஆவணமாக்கல்: கேமராவைப் பயன்படுத்தி ஆவணத்தின் அசல் புகைப்படத்தை எடுக்கவும். ஆவணங்களை நகலெடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ, திரைப்பிடிப்பு எடுக்கவோ வேண்டாம். ஆவணங்களின் புகைப்படங்களை மற்ற ஆவணங்களில் ஒட்ட வேண்டாம். கணினித் திரைகளையோ பிரின்ட்-அவுட்களையோ புகைப்படம் எடுக்க வேண்டாம்.
    • ஆவணம் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டிருந்தால், அனைத்துப் பக்கங்களையும் உள்ளடக்கிய PDF கோப்பை எவ்வித மாற்றங்களுமின்றி அசலாக வழங்கப்பட்டபடியே சமர்ப்பிக்கவும்.
  • செல்லுபடியாகும் தன்மை: புகைப்பட ID-கள் காலாவதியாகாமல் இருப்பதையும், முகவரிச் சான்று சமீபத்தில் வழங்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும். வணிகப் பதிவுக்கான சான்றை வழங்கினால், உங்கள் வணிகம் தற்போதும் செயலில் இருக்க வேண்டும், அத்துடன் நன்மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், பழக்கப்படுத்துதல் தொடர்பான பின்வரும் பொதுவான சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

நான் ஒரு கூட்டாண்மை வணிகம் நடத்துகிறேன், என்னிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்படுகிறது, ஆனால் என்னிடம் அது இல்லை.

நீங்கள் ஒரு கூட்டாண்மை வணிகத்தை நடத்தி, உங்களிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்பட்டு, உங்களிடம் அது இல்லை என்றால், தவறான வணிக வகையை அமைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கணக்கை அமைக்கும் செயல்முறையில் இருந்தால், வணிக வகையைத் தேர்ந்தெடுக்கும் திரைக்குத் திரும்பி, பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை (Unincorporated partnership) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஏற்கெனவே கணக்கை அமைத்திருந்து, சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உங்களிடம் நிறுவனப் பதிவு எண் கேட்கப்பட்டால், அமைப்புகள் > பொது என்பதற்குச் சென்று உங்கள் வணிக வகையைப் புதுப்பிக்கலாம். வணிக விவரங்களுக்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, பின்னர் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வணிக வகையைப் புதுப்பிப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

எனது ஆவணம் நிராகரிக்கப்பட்டது.

கணக்கிலுள்ள தகவல் ஆவணத்துடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, தேவைப்பட்டால் கணக்கைப் புதுப்பிக்கவும். ஆவணங்கள் இன்னும் நிராகரிக்கப்பட்டால், இந்தப் பக்கத்திலுள்ள பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:

எனது முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை.

Shopify Payments அயர்லாந்தைப் பொறுத்தவரை, உங்கள் முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியாவிட்டால், செல்ஃபி செயல்முறையை நிறைவுசெய்யுமாறு அல்லது முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும்.

செல்ஃபி செயல்முறையை நிறைவுசெய்வது பரிந்துரைக்கப்படுகிறது. சரிபார்ப்புத் தேவைப்படும் தனிநபர், Selfie பொத்தானைக் கிளிக் செய்து, அதன்பின் சரிபார்ப்பதற்காகத் தமது புகைப்பட ID மற்றும் தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குவதற்குப் பதிலாக நீங்கள் செல்ஃபி செயல்முறையை நிறைவுசெய்யலாம்.

அதற்குப் பதிலாக ஆவணத்தை நீங்களாகவே வழங்க விரும்பினால், அவ்வாறு செய்யலாம். முகவரிச் சான்று ஆவணங்கள் உங்கள் முழுப் பெயர் மற்றும் வீட்டு முகவரியைக் காட்டுவதுடன், இங்கு காட்டப்பட்டுள்ள ஆவண வகைகளில் ஒன்றாகவும் இருக்க வேண்டும். பின்வருவனவற்றையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்:

  1. உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்ட முகவரியானது, உங்கள் முகவரிச் சான்று ஆவணத்திலுள்ள முகவரியுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
  2. தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உங்கள் தகவலைப் புதுப்பிக்கவும்.
  3. உங்கள் முகவரிச் சான்று ஆவணத்தின் தெளிவான புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
  4. நீங்கள் பதிவேற்றும் ஆவணம் உங்களது சொந்த முழுப் பெயரைக் காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். எடுத்துக்காட்டாக, உங்களிடம் வேறொருவரின் பெயரில் பயன்பாட்டு பில் இருந்தால், நீங்கள் வேறொரு ஆவணத்தை வழங்க வேண்டும்.
எனது உரிமையாளர் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை.

Shopify Payments அயர்லாந்தைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பெயர்கள் பொருந்துமாறு உங்கள் உரிமையாளர்களை நீங்கள் உள்ளிட வேண்டும். பதிவேட்டில் உங்கள் உரிமையாளர் தகவலைப் பார்த்து, அங்குள்ளவாறு பெயர்களைச் சரியாக உள்ளிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு உரிமையாளர்கள் எவருமில்லை எனில், அதற்குப் பதிலாக உங்கள் கணக்கில் உங்களின் இயக்குநர்கள் அனைவரையும் பட்டியலிட வேண்டும்.

நீங்கள் அவ்வாறு செய்திருந்தும் உங்கள் உரிமையையோ இயக்குநர் பதவியையோ இன்னும் சரிபார்க்க முடியாவிட்டால், நீங்கள் வழங்கிய தகவல் சரியானது என டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, உங்கள் சரிபார்ப்புப் பக்கத்தில் உள்ள கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் விரும்பினால், சான்றளிப்புச் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிடும் உரிமையாளர் மற்றும் இயக்குநர் தகவல், நீங்கள் பதிவேற்றும் ஆவணத்திலுள்ள தகவலுடன் பொருந்த வேண்டும். உங்கள் ஆவணத்தில் ஒரு உரிமையாளர் அல்லது இயக்குநர் பட்டியலிடப்பட்டிருந்து, அவர் உங்கள் Shopify Payments கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தால், அந்த நபரை உங்கள் கணக்கில் சேர்த்து, அவருக்கு உரிமையாளர் அல்லது இயக்குநர் பங்கை நீங்கள் ஒதுக்க வேண்டும். உரிமையைச் சரிபார்க்க நீங்கள் வழங்கக்கூடிய ஆவண வகைகளின் பட்டியல் இங்கே உள்ளது.

உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் உங்கள் ஆவணங்களுடன் முழுமையாகப் பொருந்துவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். உங்கள் ஆவணங்களில் காட்டப்படாத கூடுதல் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களைப் பட்டியலிட வேண்டாம்.

எனது வணிகத் தகவல் சரிபார்க்கப்படவில்லை.

அயர்லாந்திலுள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் Shopify வங்கிப் கூட்டாளர்கள் உங்கள் வணிகத் தகவலைச் சரிபார்க்கின்றனர். உங்கள் வணிகத்தை சரிபார்க்க முடியாவிட்டால், பின்வரும் விவரங்களைச் சரிபார்க்கவும்:

  • எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் உட்பட, உங்கள் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர் அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளது போலவே சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் நிறுவனப் பதிவு எண் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • அரசாங்க வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரியுடன் உங்கள் வணிக முகவரி பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

உங்கள் தகவலை இன்னும் சரிபார்க்க முடியாவிட்டால், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கலாம். உங்கள் ஆவணத்திலுள்ள தகவல் உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ள தகவலுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

நான் ஒரு தனி வணிகர். எனது வணிகத் தகவலை எப்படி வழங்குவது? எந்த வணிக வகையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்?

நீங்கள் ஒரு தனி வணிகராக இருந்தால், வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்புக்கு உரிமையாளரின் தனிப்பட்ட தகவல் மட்டுமே தேவை. உங்கள் வணிக வகையாக தனிநபர் / தனி வணிகர் (Individual / Sole trader) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஒரு தனி வணிகர் என்றால், வேறுபட்ட வணிக வகையாகப் பதிவுசெய்ய முயற்சிக்க வேண்டாம். சரிபார்ப்பில் தேர்ச்சி பெறுவதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படலாம்.

என்னிடம் நிறுவனப் பதிவு எண் இல்லை, ஆனால் நான் ஒரு தனிநபர் அல்லது தனி வணிகர் அல்ல.

உங்களிடம் நிறுவனப் பதிவு எண் இல்லையென்றால், உங்கள் வணிக வகையாக இணைக்கப்படாத கூட்டாண்மை (Unincorporated partnership) அல்லது இணைக்கப்படாத இலாப நோக்கமற்றது (Unincorporated non-profit) என்பதை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அயர்லாந்தில் உங்கள் வணிகம் கூறப்பட்ட வணிக வகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதையும் அயர்லாந்து வணிக முகவரியைக் கொண்டுள்ளது என்பதையும் காட்டும் ஆவணங்களை நீங்கள் இன்னும் வழங்க வேண்டும்.

இந்த வணிக வகைகளில் ஏதும் உங்கள் வணிகத்திற்குப் பொருந்தவில்லை என்றால், தனிநபர் / தனி வணிகர் (Individual / Sole trader) என்பதைத் தேர்ந்தெடுத்து, முக்கிய முடிவெடுப்பவர் அல்லது உரிமையாளரைக் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அயர்லாந்தில் Shopify Payments தேவைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் பின்வரும் கேள்விகளை மதிப்பாய்வு செய்யவும்.

நான் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது இலாப நோக்கமற்ற அமைப்பு. உங்களுக்கு ஏன் எனது புகைப்பட ID அல்லது முகவரிச் சான்று தேவை?

நீங்கள் ஒரு நிறுவனம், கூட்டாண்மை அல்லது இலாப நோக்கமற்ற அமைப்பாகப் பதிவுசெய்திருந்தாலும், அயர்லாந்திலுள்ள ஒழுங்குமுறைச் சட்டங்களின்படி வணிகத்துடன் தொடர்புடைய நபர்களின் அடையாளங்கள் மற்றும் இடங்களைச் சரிபார்க்க வேண்டியது Shopify வங்கிப் கூட்டாளர்களுக்கு அவசியமாகும்.

நான் அயர்லாந்து நாட்டுக் குடிமகன், ஆனால் தற்போது அங்கு வசிக்கவில்லை. நான் Shopify Payments அயர்லாந்தைப் பயன்படுத்தலாமா?

உங்கள் வணிக வகை தனிநபராக இருந்தால், Shopify Payments அயர்லாந்திற்குத் தகுதிபெற நீங்கள் அயர்லாந்தில் வசிக்க வேண்டியது அவசியம். நீங்கள் தற்போது அயர்லாந்தில் வசிக்கவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்க வேண்டும்.

உங்கள் ஸ்டோர் முகவரியை உங்களின் தற்போதைய இடத்திற்குப் புதுப்பிக்கவும். உங்கள் இடம் Shopify Payments தகுதியுடையதாக இருந்தால், அதற்குப் பதிலாக அந்தப் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை நீங்கள் உருவாக்கலாம்.

நீங்கள் ஒரு வகையான கூட்டாண்மை, நிறுவனம் அல்லது இலாப நோக்கமற்றவராக இருந்தால், நீங்கள் அயர்லாந்தில் வசிக்க வேண்டியதில்லை, ஆனால் உங்கள் வணிகம் அங்கு பதிவுசெய்யப்பட்டு, அயர்லாந்து வணிக முகவரியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

நான் அயர்லாந்தில் பொதுப் பங்குவர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு நிறுவனம். நான் எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

நீங்கள் தனியார் கார்ப்பரேஷன் (Private corporation) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வணிகச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான செயல்முறை ஒன்றுதான். உரிமையாளர்களைச் சேர்க்கும்படி கோரும் கணக்கு அமைவுப் படிவத்தின் பிரிவை நீங்கள் தவிர்க்கலாம். உங்களுக்குப் பலனடையும் உரிமையாளர்கள் எவருமில்லை என்றால், எவரையும் நீங்கள் பட்டியலிட வேண்டியதில்லை.

நீங்கள் அயர்லாந்தில் பொதுப் பங்குவர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு நிறுவனம் எனில், நீங்கள் ஏற்கெனவே Shopify Payments கணக்கை அமைத்து, இப்போது உங்கள் சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உரிமைத் தகவலைக் கேட்டால், உங்களுக்கு உரிமையாளர்கள் எவருமில்லை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் உங்கள் உரிமை விவரங்களைப் புதுப்பிக்கவும். கோப்பிலுள்ள எவரிடமிருந்தும் உரிமையாளர் (Owner) பங்கை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உங்கள் இயக்குநர்கள் அனைவரும் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதையும் அவர்களுக்கு இயக்குநர் (Director) பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.

பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர் பதவி சரியானதா என்பதை உறுதிப்படுத்தும்படி உங்களிடம் கேட்கப்படலாம். அது சரியாக இருப்பதை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், கோப்பிலுள்ள தகவலுக்கு டிஜிட்டல் முறையில் சான்றளிக்க கையெழுத்திடு (Sign) பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இந்தச் செயல்முறையில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

நான் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர். நான் Shopify Payments அயர்லாந்தைப் பயன்படுத்தலாமா?

இல்லை. வடக்கு அயர்லாந்திலுள்ள வணிகர்களுக்கு Shopify Payments அயர்லாந்து கணக்கு அல்ல, Shopify Payments யுனைடெட் கிங்டம் கணக்கு தேவை. வடக்கு அயர்லாந்திலுள்ள உங்கள் சரியான இடத்திற்கு உங்கள் ஸ்டோர் முகவரியைப் புதுப்பித்துவிட்டு, அதற்குப் பதிலாக யுனைடெட் கிங்டமிற்கான Shopify Payments-ஐ அமைக்கவும்.

எனது Shopify Payments கணக்குத் தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?

கணக்குச் சரிபார்ப்பை நிறைவுசெய்யுமாறு உங்களிடம் தொடர்ந்து கேட்கப்பட்டால், கோரப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதுடன், சரிபார்ப்புப் பக்கத்திலிருந்து உங்கள் தகவலில் ஏதேனும் புதுப்பிப்புகளை நீங்கள் செய்யலாம்.

சரிபார்ப்புச் செயல்முறைக்கு வெளியே, அமைப்புகள் > பொது > வணிக விவரங்கள் மூலம் கடையின் உரிமையாளர் இந்த விவரங்களைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக நிறுவனத்திற்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, வணிக வகை உட்பட அந்த வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க திருத்து (Edit) என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் இங்கு செய்யும் மாற்றங்கள் மதிப்பாய்விற்காக எங்கள் வங்கிப் கூட்டாளர்களுக்குத் தானாகவே அனுப்பப்படும் என்பதையும், புதிய தகவல் அவர்களின் சரிபார்ப்புச் செயல்முறை மூலம் மீண்டும் இயக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். மாற்றங்கள் தானாகவே மறு சரிபார்ப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது, ஆனால் துணை ஆவணங்களையும் உங்களிடம் கேட்கப்படலாம்.

உங்களிடம் நிலுவையில் உள்ள Shopify Capital ரொக்க முன்பணம் இருந்தால், அந்த ரொக்க முன்பணத்தை முழுமையாகச் செலுத்தி முடிக்கும் வரை உங்கள் வணிகத் தகவல்கள் சிலவற்றைப் புதுப்பிக்க முடியாமல் போகலாம். தற்போது கோப்பில் உள்ள வணிகத்திற்கே உங்கள் ரொக்க முன்பணம் வழங்கப்பட்டது, எனவே அதனை வேறொரு வணிகத்திற்கு மாற்ற முடியாது. உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

எனது சரிபார்ப்புக்கான காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?

சரிபார்ப்புச் செயல்முறை முடிவடையும் வரை உங்கள் பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். முதல் காலக்கெடு முடிந்து பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, Shopify Payments மூலம் ஆர்டர்களை ஏற்கும் உங்கள் திறன் எப்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைக் குறிக்கும் இரண்டாவது காலக்கெடுவைக் காண்பீர்கள்.

இந்த இடைநிறுத்தங்கள் அனைத்தும் தற்காலிகமானவை, நீங்கள் சரிபார்ப்பை முடித்ததும் தானாகவே இவை நீக்கப்படும். காலக்கெடுகளை அறிய உங்கள் நிர்வாகப் பக்கத்தைப் பார்க்கவும்.

ஜூன் 2026 முதல், முற்றிலும் புதிய Shopify Payments அயர்லாந்து கணக்குகளில் சரிபார்ப்பை முடிக்க, முதல் ஆர்டர் செயலாக்கப்பட்டதில் இருந்து 90 நாட்கள் கால அவகாசம் இருக்கும். 90 நாட்கள் கடந்துவிட்டால், Shopify Payments மூலம் நீங்கள் செயலாக்கிய எந்தவொரு ஆர்டர்களுக்கான பணமும் தானாகவே திரும்பப்பெறப்படலாம்.

இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையானது ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், அத்துடன் ஜூன் 2026-இலோ அல்லது அதற்குப் பிறகோ உருவாக்கப்பட்ட முற்றிலும் புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை உங்களுக்குப் பொருந்தினால், பணத்தைத் திரும்பப்பெறுதல் எப்போது செயலாக்கப்படும் என்பதை எச்சரிக்கைகள் மூலம் கடையின் உரிமையாளருக்குத் தெரிவிக்கப்படும்.

அயர்லாந்தில் Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க பின்வரும் தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்:

  • வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கியமான தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில், நீங்கள் பெற்ற பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள்
  • அமைவின்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக வகை
  • உங்களின் நிறுவனப் பதிவு எண் (CRN) (பொருந்தினால்)
  • நீங்கள் சிக்கலைச் சந்தித்த குறிப்பிட்ட படி
  • நீங்கள் பயன்படுத்தும் உலாவி மற்றும் சாதனம்
  • முழுமையான கணக்கு எண் இல்லாமல், உங்கள் வங்கிக் கணக்கின் நாடு, நாணயம் மற்றும் கணக்கு வகை

இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருப்பது, Shopify ஆதரவு உங்களுக்கு இன்னும் திறம்பட உதவ வசதியாக இருக்கும்.