Luxembourg-இல் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் தேவைகள்
Luxembourg-இல் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, விதிமுறைகளுக்கு இணங்குவதற்கும் நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்குமான தேவைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் அடையாளத்தையும் வணிக விவரங்களையும் சரிபார்க்கத் தனிப்பட்ட தகவல் சேகரிக்கப்படுகிறது, மேலும் இந்த நோக்கத்திற்காக சில வகையான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இப்பக்கத்தில்
- Luxembourg-இல் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கம்
- Luxembourg-இல் Shopify Payments-ஐச் செயல்படுத்தத் தேவைப்படும் தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்கள்
- ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்
- ஆவணப்படுத்தல் இணக்கத்தை உறுதிசெய்தல்
- பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- Luxembourg-இல் Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
Luxembourg-இல் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
Luxembourg-இல் Shopify Payments-ஐப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்:
- தகுதியான வணிக வகைகள்: குறிப்பிட்ட வகையான வணிகங்கள் மற்றும் சேவைகள் Shopify Payments-ஐப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் வணிகம் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்க, Shopify Payments சேவை விதிமுறைகள் என்பதில் Luxembourg-க்குத் தடைசெய்யப்பட்ட வணிக வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
- வங்கிக் கணக்குத் தேவைகள்: Shopify Payments உடன் அதை இணைப்பதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கு பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- வங்கிக் கணக்கு EUR நாணயத்தில் இருக்க வேண்டும்.
- வங்கிக் கணக்கு சிங்கிள் யூரோ பேமெண்ட்ஸ் ஏரியா (SEPA) இடமாற்றங்களுக்குத் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
- வங்கிக் கணக்கானது பின்வரும் நாட்டின் குறியீடுகளில் ஏதேனும் ஒன்றில் தொடங்கும் சர்வதேச வங்கிக் கணக்கு எண்ணைக் (IBAN) கொண்டிருக்க வேண்டும்: AT, BE, BG, CH, CY, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE அல்லது SI.
ஆதரிக்கப்படாத வங்கிக் கணக்கு வகைகள்
சில வங்கிக் கணக்கு வகைகள் Shopify Payments-க்கு உகந்தவை அல்ல. பின்வரும் கணக்கு வகைகளுக்கு ஆதரவளிக்கப்படாது:
- வயர் பரிமாற்றங்களை மட்டுமே ஏற்கும் நடப்புக் கணக்குகள்: இந்தக் கணக்குகள் Shopify Payments-உடன் வேலை செய்யாது.
- சேமிப்புக் கணக்குகள்: Shopify Payments பேஅவுட்களுக்குச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்த முடியாது.
- நெகிழ்வான நாணயக் கணக்குகள்: ஒரே நேரத்தில் பல நாணயங்களை ஆதரிக்கும் கணக்குகளுக்கு ஆதரவளிக்கப்படாது.
- பணப் பரிமாற்றச் சேவைகள்: சில ஃபின்டெக் தளங்கள் போன்று வங்கிக் கணக்குகளைப் போலவே செயல்படும் சேவைகளை Shopify Payments-உடன் பயன்படுத்த முடியாது.
Shopify-அல்லாத மெய்நிகர் கணக்குகளுக்கு ஆதரவளிக்கப்பட்டாலும், இந்தக் கணக்குகளில் நீங்கள் அதிக பேஅவுட் தோல்விகளைச் சந்திக்கக்கூடும்.
உங்கள் பிராந்தியத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள பரிமாற்ற வகையை உங்கள் கணக்கு ஏற்குமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
தகவல் சேகரிப்பதன் நோக்கம்
நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக Luxembourg-இல் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க, உங்களைப் பற்றியும் உங்கள் வணிகத்தைப் பற்றியும் தகவல்களைச் சேகரித்துச் சரிபார்க்க வேண்டிய அவசியம் Shopify-க்கும் அதன் வங்கிக் கூட்டாளர்களுக்கும் உள்ளது. உள்ளூர் விதிகளும் விதிமுறைகளும் மாறிக்கொண்டே இருப்பதால், உங்கள் Shopify Payments கணக்கு பயன்பாட்டில் இருக்கும் காலமளவும் கூடுதல் தகவல்களைக் கோருவதற்காக Shopify-யும் அதன் வங்கிக் கூட்டாளர்களும் உங்களைத் தொடர்புகொள்ளக்கூடும்.
சேகரிக்கப்படும் தகவலானது வணிகத்தின் அடையாளம், வணிகத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் அடையாளங்கள் மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான உறவின் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
Shopify ஒருபோதும் ஆவணங்களை உங்களுக்கு அஞ்சலில் அனுப்பாது. முக்கியமான ஆவணங்கள் அல்லது தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மின்னஞ்சல் செய்யப்படுகின்றன அல்லது உங்கள் Shopify நிர்வாகியின் அமைப்புகள் > பயனர்கள் பக்கத்தில் கடையின் உரிமையாளருக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கச் செய்யப்படுகின்றன.
உங்கள் தகவல் எப்படி ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுகிறது என்பதைப் பற்றி அறிய, Shopify-இன் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.
Luxembourg-இல் Shopify Payments-ஐச் செயல்படுத்தத் தேவையான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்
நீங்கள் வழங்க வேண்டிய தகவலை இது தீர்மானிப்பதால், உங்கள் வணிக வகையைச் சரியாக அடையாளம் காண்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
நீங்கள் எந்தவொரு அரசு நிறுவனத்திலும் பதிவுசெய்யவில்லை என்றால் அல்லது நீங்கள் பதிவுசெய்திருந்து, வணிகத்தை ஒற்றை வர்த்தகராக (தனிநபர் உரிமைகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உட்பட) நடத்தினால், தனிநபர் / ஒற்றை வர்த்தகர் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து, ஒரு RCS எண் (Registre de Commerce et des Sociétés) வைத்திருந்தால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- RCS எண்களைக் கொண்ட கூட்டாண்மைகள் (SENC, SCS, SCSp), பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- RCS எண்களைக் கொண்ட லாப நோக்கற்ற நிறுவனங்கள் (ASBL, அறக்கட்டளைகள்), பதிவுசெய்யப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பு வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- RCS எண்களைக் கொண்ட மற்ற அனைத்து வணிகங்களும் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். SARL, SAS மற்றும் SCA ஆகியவை பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.
உங்களிடம் பதிவுசெய்யப்பட்ட வணிகம் இருந்து, RCS எண் இல்லை என்றால், பின்வரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உங்கள் வணிக வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- RCS எண்கள் இல்லாத கூட்டாண்மைகள், பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- RCS எண்கள் இல்லாத லாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பதிவுசெய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்பு வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியவில்லை என்றால், சரியானதைத் தேர்ந்தெடுக்க உதவி பெற, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
தனிநபர்கள் / ஒற்றை வர்த்தகர்கள்
தனிநபர்கள் என்பது அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத மற்றும் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்யும் ஒற்றை உரிமையாளர் வணிகங்கள். ஒற்றை வர்த்தகர்கள் என்பது அரசாங்கத்தில் தங்களின் தனிப்பட்ட தகவல்களின் கீழ் பதிவுசெய்துள்ள ஒற்றை உரிமையாளர் வணிகங்கள். இவை இரண்டும் Luxembourg-இல் வசிக்கும் ஒரு தனிநபருக்குச் சொந்தமான மற்றும் அவரால் கட்டுப்படுத்தப்படும் வணிகங்களாகும். இதில் சுயாதீனப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் சிறு வணிக நடத்துநர்கள் அடங்குவர்.
இந்த வணிக வகைகள் ஒரே மாதிரியாகக் கருதப்படுவதால், இவையும் அதே தகவலை வழங்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் ஒற்றை வர்த்தகர்கள் பின்வருவனவற்றை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணத்தில் தோன்றுவது போன்ற உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள தொலைபேசி எண்.
- Luxembourg-இல் உள்ள குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணங்களுடன் பொருந்தும் வகையிலான உங்களின் வீட்டு முகவரி.
உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை என்றால், உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், உங்களின் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கெனத் தீர்வுகாணலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடுவதோடு சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் (SARL, SAS, SCA)
பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என்பது அதன் பங்குகளாகப் பிரிக்கப்பட்ட சமபங்குகளைக் கொண்டதும், பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படுவதுமான ஒரு வணிகமாகும். ஒரு நிறுவனம், அதை நடத்தும் மக்களிடமிருந்து தனித்தனியாக, அதன் சொந்த சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுகிறது. அவை பொதுவாக ஒரு இயக்குநர்கள் குழுவையும் கொண்டிருக்கும்.
பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தங்கள் கணக்குப் பிரதிநிதியாகப் பலனடையும் உரிமையாளரையோ முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு நிர்வாகியையோ நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணத்தில் தோன்றுவது போன்ற உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள தொலைபேசி எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணங்களுடன் பொருந்தும் வகையிலான உங்களின் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- சமபங்கு: பொருந்தினால், வணிகத்தில் நீங்கள் வைத்திருக்கும் சமபங்குச் சதவீதம்.
உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை என்றால், உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், உங்களின் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கெனத் தீர்வுகாணலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடுவதோடு சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் வணிகம் பற்றிய பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி உள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- RCS எண் (Registre de Commerce et des Sociétés): அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி வணிகத்தின் RCS எண்.
- VAT எண்: பொருந்தினால், உங்களின் VAT பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டிலுள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify-இன் வங்கிக் கூட்டாளர்கள் Luxembourg-இல் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலைச் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.
வணிகம் தொடர்பாக நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், RCS எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து, தேவைப்பட்டால் ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்.
நிறுவனத்தின் பலனடையும் உரிமையாளர்களாக உள்ள வேறு நபர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் அரசாங்க ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளபடி அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் வீட்டு முகவரிகளைச் சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை என்றால், அவர்கள் புகைப்பட ID அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருத்தம் இல்லை எனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கும்படி அல்லது உரிமை ஆவணத்தின் சான்றை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவது, பொருந்தாததைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள், உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்திற்குப் பொருந்தும்படி உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஹோல்டிங் நிறுவனம் (முழுமையாக அல்லது பகுதியாக) உங்கள் வணிகத்தை வைத்திருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
உங்கள் வணிகத்திற்கு உரிமையாளர்கள் இல்லை எனில், அதற்குப் பதிலாக ஒரு சான்றளிப்பில் கையெழுத்திடவோ உங்கள் இயக்குநர்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கவோ உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள், உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்திற்குப் பொருந்தும்படி உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் (SENC, SCS, SCSp)
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை என்பது, வணிக நடவடிக்கைக்குப் பதிவுசெய்து RCS எண்ணைப் பெற்றுள்ள குறைந்தபட்சம் இரண்டு கூட்டாளர்களுக்ககுச் சொந்தமான வணிகமாகும். பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள் பங்கு மதிப்பைக் கொண்டுள்ளன, மேலும் கூட்டாண்மை என்பது உரிமையாளர்களிடமிருந்து தனித்த ஒரு நிறுவனம் ஆகும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள், தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஒரு உரிமையாளரை அல்லது கூட்டாளரைக் குறிப்பிட வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணத்தில் தோன்றுவது போன்ற உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள தொலைபேசி எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணங்களுடன் பொருந்தும் வகையிலான உங்களின் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- சமபங்கு: பொருந்தினால், வணிகத்தில் நீங்கள் வைத்திருக்கும் சமபங்குச் சதவீதம்.
உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை என்றால், உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், உங்களின் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கெனத் தீர்வுகாணலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடுவதோடு சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைகள், தங்கள் வணிகம் குறித்துப் பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி உள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- RCS எண் (Registre de Commerce et des Sociétés): அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி வணிகத்தின் RCS எண்.
- VAT எண்: பொருந்தினால், உங்களின் VAT பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டிலுள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify-இன் வங்கிக் கூட்டாளர்கள் Luxembourg-இல் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலைச் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், RCS எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதையும், தேவைப்பட்டால் ஆவணத்திற்குப் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிப்பதையும் உறுதிசெய்யவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உரிமையாளர்களாக அல்லது கூட்டாளர்களாக இருக்கும் பிறரையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ID) அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருத்தம் இல்லை எனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கும்படி அல்லது உரிமை ஆவணத்தின் சான்றை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவது, பொருந்தாததைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள், உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்திற்குப் பொருந்தும்படி உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஹோல்டிங் நிறுவனம் (முழுமையாக அல்லது பகுதியாக) உங்கள் வணிகத்தை வைத்திருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள்
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை என்பது, RCS எண்ணுக்குப் பதிவுசெய்யாமல் கூட்டாண்மை ஒப்பந்தத்தை வைத்துள்ள குறைந்தபட்சம் இரண்டு கூட்டாளர்களுக்குச் சொந்தமான வணிகமாகும். இந்தச் சூழ்நிலையில், உரிமையாளர்களே சட்டப்பூர்வ நிறுவனமாகக் கருதப்படுவார்கள் மற்றும் வணிகம் ஒரு தனி நிறுவனம் அல்ல.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள், தங்கள் Shopify Payments கணக்கின் கணக்குப் பிரதிநிதியாக ஒரு உரிமையாளரைக் குறிப்பிட வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணத்தில் தோன்றுவது போன்ற உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள தொலைபேசி எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணங்களுடன் பொருந்தும் வகையிலான உங்களின் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- சமபங்கு: பொருந்தினால், வணிகத்தில் நீங்கள் வைத்திருக்கும் சமபங்குச் சதவீதம்.
உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை என்றால், உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், உங்களின் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கெனத் தீர்வுகாணலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடுவதோடு சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்படாத கூட்டாண்மைகள், தங்கள் வணிகம் குறித்துப் பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- VAT எண்: பொருந்தினால், உங்களின் VAT பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டிலுள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் அதிகாரப்பூர்வ பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify-இன் வங்கிக் கூட்டாளர்கள் Luxembourg-இல் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலைச் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயரும் வணிக முகவரியும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதையும், தேவைப்பட்டால் ஆவணத்திற்குப் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிப்பதையும் உறுதிசெய்யவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உரிமையாளர்களாக அல்லது கூட்டாளர்களாக இருக்கும் பிறரையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ID) அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் உரிமையாளர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் பொருந்த வேண்டும். பொருத்தம் இல்லை எனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கும்படி அல்லது உரிமை ஆவணத்தின் சான்றை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவது, பொருந்தாததைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்கள், உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்திற்குப் பொருந்தும்படி உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும். ஹோல்டிங் நிறுவனம் (முழுமையாக அல்லது பகுதியாக) உங்கள் வணிகத்தை வைத்திருந்தால், சரிபார்ப்பை முடிக்கச் சான்றளிப்பில் கையெழுத்திடவும்.
பதிவுசெய்யப்பட்ட லாப நோக்கற்ற அமைப்புகள் (ASBL, அறக்கட்டளைகள்)
லாப நோக்கற்ற அமைப்பு (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கு லாபத்தை உருவாக்குவதைத் தவிர்த்து மற்ற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட நிறுவனமாகும். பொது அல்லது சமூக நலனுக்குச் சேவை செய்வதே இதன் முதன்மைப் பணியாகும். பதிவுசெய்யப்பட்ட லாப நோக்கற்ற அமைப்புகள் வணிக நோக்கங்களுக்காகப் பதிவுசெய்து RCS எண்ணைப் பெற்றுள்ளன.
பதிவுசெய்யப்பட்ட லாப நோக்கற்ற அமைப்புகள், தங்கள் கணக்குப் பிரதிநிதியாக ஒரு இயக்குநரையோ முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகியையோ நியமிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணத்தில் தோன்றுவது போன்ற உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள தொலைபேசி எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணங்களுடன் பொருந்தும் வகையிலான உங்களின் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- சமபங்கு: பொருந்தினால், வணிகத்தில் நீங்கள் வைத்திருக்கும் சமபங்குச் சதவீதம்.
உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை என்றால், உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், உங்களின் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கெனத் தீர்வுகாணலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடுவதோடு சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட லாப நோக்கற்ற அமைப்புகள், தங்கள் வணிகம் குறித்துப் பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி உள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- RCS எண் (Registre de Commerce et des Sociétés): அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி வணிகத்தின் RCS எண்.
- VAT எண்: பொருந்தினால், உங்களின் VAT பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டிலுள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளபடி வணிகத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify-இன் வங்கிக் கூட்டாளர்கள் Luxembourg-இல் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலைச் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயர், RCS எண் மற்றும் வணிக முகவரி ஆகியவை ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதையும், தேவைப்பட்டால் ஆவணத்திற்குப் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிப்பதையும் உறுதிசெய்யவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உங்கள் இயக்குநர் குழுவில் உள்ள அல்லது முக்கிய முடிவெடுப்பவர்களாக இருக்கும் பிற நபர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ID) அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருத்தம் இல்லை எனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கும்படி அல்லது இயக்குநருக்கான ஆவணத்தின் சான்றை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவது, பொருந்தாததைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள், உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்திற்குப் பொருந்தும்படி உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்புகள்
லாப நோக்கற்ற அமைப்பு (NPO) என்பது அதன் பங்குதாரர்களுக்கு லாபத்தை உருவாக்குவதைத் தவிர்த்து மற்ற நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட நிறுவனமாகும். பொது அல்லது சமூக நலனுக்குச் சேவை செய்வதே இதன் முதன்மைப் பணியாகும். பதிவுசெய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்புக்கு RCS எண் இருக்காது, ஆனால் உள்ளூர் நீதிமன்றங்களில் பதிவுசெய்து லாப நோக்கற்ற நிலையைப் பெற்றிருக்கும்.
பதிவுசெய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்புகள், முக்கிய முடிவெடுப்பவரையோ அமைப்பாளரையோ தங்கள் கணக்குப் பிரதிநிதியாக நியமித்து, அந்த நபர் ஒரு நிர்வாகி என்று குறிக்க வேண்டும். கணக்குப் பிரதிநிதி பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:
- சட்டப்பூர்வ முதல் மற்றும் கடைசிப் பெயர்: அரசு வழங்கிய ஆவணத்தில் தோன்றுவது போன்ற உங்களின் முழுமையான சட்டப்பூர்வப் பெயர்.
- பிறந்த தேதி: உங்களின் பிறந்த தேதி.
- மின்னஞ்சல் முகவரி: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி.
- தொலைபேசி எண்: செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டிலுள்ள தொலைபேசி எண்.
- குடியிருப்பு முகவரி: உங்கள் ஆவணங்களுடன் பொருந்தும் வகையிலான உங்களின் வீட்டு முகவரி.
- பதவியின் பெயர்: வணிகத்தில் நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர்.
- சமபங்கு: பொருந்தினால், வணிகத்தில் நீங்கள் வைத்திருக்கும் சமபங்குச் சதவீதம்.
உங்கள் தகவலைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை என்றால், உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற உங்களின் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், உங்களின் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
தகவல் சரியாக இருந்து, இன்னும் நீங்கள் சரிபார்ப்புக்கான கோரிக்கையைப் பெற்றால், பின்வரும் ஏதேனும் ஒரு பணியை முடிப்பதன் மூலம் அதற்கெனத் தீர்வுகாணலாம்:
- செல்லுபடியாகும் புகைப்பட ID-உடன் செல்ஃபி எடுத்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- தனித்தனியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை உங்கள் Shopify நிர்வாகியில் பதிவேற்றவும்.
- உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் கணக்கில் நீங்கள் உள்ளிடுவதோடு சரியாகப் பொருந்த வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஆவணங்களுடன் பொருந்துமாறு கணக்குத் தகவலைப் புதுப்பிக்கவும்.
பதிவுசெய்யப்படாத லாப நோக்கற்ற அமைப்புகள், தங்கள் வணிகம் குறித்துப் பின்வரும் விவரங்களையும் வழங்க வேண்டும்:
- பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள சட்டப்பூர்வ வணிகப் பெயர்.
- VAT எண்: பொருந்தினால், உங்களின் VAT பதிவு எண்.
- வணிகத் தொலைபேசி எண்: வணிகத்திற்கான செயல்பாட்டிலுள்ள தொடர்புத் தொலைபேசி எண்.
- வணிக முகவரி: ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள வணிகத்தின் அதிகாரப்பூர்வ பதிவுசெய்யப்பட்ட முகவரி.
Shopify-இன் வங்கிக் கூட்டாளர்கள் Luxembourg-இல் உள்ள அரசுப் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, உங்கள் தகவலைச் சரிபார்ப்பார்கள். எழுத்து வடிவம், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும்.
வணிகம் குறித்து நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை எனில், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். இந்த ஆவணத்தை வழங்கும்போது, உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்ட பெயரும் வணிக முகவரியும் ஆவணத்தில் உள்ள தகவலுடன் சரியாகப் பொருந்துவதையும், தேவைப்பட்டால் ஆவணத்திற்குப் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிப்பதையும் உறுதிசெய்யவும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
உங்கள் இயக்குநர் குழுவில் உள்ள அல்லது முக்கிய முடிவெடுப்பவர்களாக இருக்கும் பிற நபர்களையும் நீங்கள் கூடுதலாகப் பட்டியலிட வேண்டும். அவர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், வீட்டு முகவரிகள் ஆகியவற்றை அவர்களின் அரசு ஆவணங்களில் உள்ளவாறே சரியாக உள்ளிடுவதை உறுதிசெய்யவும். அவர்களின் அடையாளங்களைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ID) அல்லது முகவரிச் சான்றை வழங்க வேண்டியிருக்கலாம்.
நீங்கள் வழங்கும் இயக்குநர்கள் உங்கள் அரசாங்கத்தின் வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் பொருந்த வேண்டும். பொருத்தம் இல்லை எனில், கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்து சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கும்படி அல்லது இயக்குநருக்கான ஆவணத்தின் சான்றை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும். சான்றளிப்பில் கையெழுத்திடுவது, பொருந்தாததைத் தீர்ப்பதற்கான விரைவான வழியாகும், ஆனால் நீங்கள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களின் பெயர்கள், உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், உங்கள் ஆவணத்திற்குப் பொருந்தும்படி உங்கள் கணக்கில் உள்ள தகவலைப் புதுப்பிக்கவும்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்
உங்கள் அடையாளத்தையும் வணிக விவரங்களையும் சரிபார்க்க நீங்கள் எந்தெந்த ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது.
அடையாள ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்கள் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நீங்கள் வழங்கும் அடையாள ஆவணத்தில் உள்ள தகவலுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கிலுள்ள பெயரும் பிறந்த தேதியும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் செல்லுபடியாகக் கூடியதாக இருக்க வேண்டும் மற்றும் காலாவதியாகியிருக்கக் கூடாது.
- Passeport / Reisepass (பாஸ்போர்ட்)
- Permis de conduire / Führerschein (ஓட்டுநர் உரிமம்) - முன், பின் என இரண்டு பக்கங்களின் புகைப்படங்களும் தேவை.
- Carte d'identité / Personalausweis (அடையாள அட்டை) - முன், பின் என இரண்டு பக்கங்களின் புகைப்படங்களும் தேவை.
- Permis de conduire local / Aufenthaltserlaubnis (குடியிருப்பு அனுமதி ID) - முன், பின் என இரண்டு பக்கங்களின் புகைப்படங்களும் தேவை.
முகவரி ஆவணங்கள்
நீங்கள் வழங்கும் முகவரி ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தகவலுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கிலுள்ள பெயரும் முகவரியும் புதுப்பிக்கப்பட வேண்டும். பின்வரும் ஆவணங்கள் முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன:
- Facture d'un service public / Stromrechnung (பயன்பாட்டுப் பில்) - கடந்த 6 மாதங்களுக்குட்பட்ட தேதியிட்டிருக்க வேண்டும்
- Déclaration d'une institution financière / Erklärung eines Finanzinstituts (நிதி நிறுவனத்தின் அறிக்கை) - கடந்த 6 மாதங்களுக்குட்பட்ட தேதியிட்டிருக்க வேண்டும்
- Lettre émise par le gouvernement / Regierungsschreiben (அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடிதம்) - கடந்த 12 மாதங்களுக்குட்பட்ட தேதியிட்டிருக்க வேண்டும்
- Carte d'identité / Personalausweis (வீட்டு முகவரியுடன் கூடிய அடையாள அட்டை)
வணிகச் சரிபார்ப்பு ஆவணங்கள்
வணிகச் சரிபார்ப்புக்குப் பின்வரும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றில் சட்டப்பூர்வ நிறுவனத்தின் பெயர், RCS எண் மற்றும் உங்கள் வணிகத்தின் முகவரி ஆகியவை தெளிவாகக் காட்டப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் வழங்கும் ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தகவலுடன் பொருந்துமாறு உங்கள் Shopify Payments கணக்கிலுள்ள விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்:
- License commerciale / Handelslizenz (வர்த்தக உரிமம்)
- Publication des statuts / Veröffentlichung der Satzung (அமைப்பு விதிகள் தொடர்பான மெமோராண்டம் / வெளியீடு)
- Immatriculation à la TVA / Umsatzsteuerregistrierung (மதிப்புக்கூட்டு வரிப் பதிவு)
உரிமை ஆவணங்கள்
உங்கள் வணிகத்தின் சட்டப்பூர்வ நிறுவனத்தின் பெயரையும் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களின் முழுமையான பெயர்களையும் அவை காண்பிக்கும் பட்சத்தில், பின்வரும் ஆவணங்கள் உரிமை அல்லது நிர்வாகத்திற்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
- Comptes annuels (ஆண்டு அறிக்கைகள்)
- Déclaration annuelle (ஆண்டுத் தாக்கல்கள்)
- Acte de constitution (நிறுவன ஒருங்கிணைப்பு விதிகள்)
- Registre des bénéficiaires effectifs (இறுதியாகப் பலனடையும் உரிமையாளர் பதிவேடு)
உங்கள் ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு பலனடையும் உரிமையாளரும் உங்கள் Shopify Payments கணக்கிலும் பட்டியலிடப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு உரிமையாளர் என்ற பங்கு ஒதுக்கப்பட வேண்டும். பலனடையும் உரிமையாளர் என்பவர் வணிகப் பங்குகளில் 25% அல்லது அதற்கு மேல் உரிமை கொண்டவர் என வரையறுக்கப்படுகிறார். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகத்திற்குப் பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லையென்றால், நீங்கள் அதற்குப் பதிலாக இயக்குநர்களைச் சரிபார்க்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மேலே பட்டியலிடப்பட்டுள்ள அதே ஆவணங்கள் தகுதியானவை. உங்கள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு இயக்குநரும் உங்கள் Shopify Payments கணக்கில் பட்டியலிடப்பட வேண்டும் மற்றும் இயக்குநர் என்ற பங்கு ஒதுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், ஆவணத்துடன் பொருந்துமாறு உங்கள் கணக்கிலுள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும்.
உங்கள் வணிகம் ஒரு ஹோல்டிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றால், முதலில் உங்கள் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சரியாக உள்ளிடப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும், பிறகு கையெழுத்திடு பொத்தானை அழுத்துவதன் மூலம் டிஜிட்டல் சான்றளிப்புச் செயல்முறையை முடிக்கவும்.
ஆவண இணக்கத்தை உறுதிசெய்தல்
உங்கள் ஆவணங்களை வழங்கும்போது, அவை தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். இணக்கத்தை உறுதிப்படுத்த, பின்வரும் வழிகாட்டுதல்களைச் சரிபார்க்கவும்:
- துல்லியம்: உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல், உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், உங்கள் ஆவணங்களுக்குப் பொருந்துமாறு கணக்கைப் புதுப்பிக்கவும்.
- தெளிவு மற்றும் படிக்கக்கூடிய தன்மை: உங்கள் ஆவணங்கள் தெளிவாகவும் படிக்கும் அளவுக்குப் பெரியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். ஆவணம் முழுவதும் புகைப்படத்தில் தெரிவதை உறுதிப்படுத்தவும்.
- முழுமை: தேவையான அனைத்து விவரங்களும் உங்கள் ஆவணத்தில் தெரிவதை உறுதிசெய்யவும். ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகளைச் சரிபார்க்கவும்.
- அசல் ஆவணங்கள்: கேமராவைப் பயன்படுத்தி உங்கள் ஆவணத்தை அசல் புகைப்படம் எடுக்கவும். உங்கள் ஆவணங்களை நகலெடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ அல்லது திரைப்பிடிப்பு எடுக்கவோ வேண்டாம். ஆவணங்களின் புகைப்படங்களை மற்ற ஆவணங்களில் ஒட்ட வேண்டாம். கணினித் திரைகள் அல்லது பிரிண்ட்அவுட்களைப் புகைப்படம் எடுக்க வேண்டாம்.
- உங்களின் ஆவணம் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டிருந்தால், எந்த மாற்றங்களும் இல்லாமல் அது உங்களுக்கு முதலில் வழங்கப்பட்டபடியே அனைத்துப் பக்கங்களும் கொண்ட PDF கோப்பை வழங்கவும்.
- செல்லுபடியாகும் தன்மை: புகைப்பட ஐடிகளின் காலம் முடிவடையவில்லை என்பதையும், முகவரிச் சான்று சமீபத்தில் வழங்கப்பட்டதையும் உறுதிப்படுத்தவும். வணிகப் பதிவுச் சான்றை வழங்கினால், உங்கள் வணிகம் தற்போதும் செயலில் இருக்கும்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், பழக்கப்படுத்துதல் தொடர்பான பின்வரும் பொதுவான சிக்கல்களையும் அவற்றின் தீர்வுகளையும் சரிபார்க்கவும்.
நான் லக்சம்பர்க்கில் உள்ள ஒரு கூட்டாண்மை வணிகம், என்னிடம் RCS எண் கேட்கப்படுகிறது, ஆனால் என்னிடம் அது இல்லை.
நீங்கள் லக்சம்பர்க்கில் உள்ள ஒரு கூட்டாண்மை வணிகமாக இருந்து, உங்களிடம் RCS எண் கேட்கப்பட்டாலும், அது உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் தவறான வணிக வகையை அமைத்துள்ளீர்கள் என அர்த்தம். நீங்கள் உங்கள் Shopify Payments கணக்கை அமைக்கும் பணியில் இருந்தால், வணிக வகையைப் பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை எனப் புதுப்பிக்கவும்.
நீங்கள் ஏற்கனவே கணக்கை அமைத்திருந்து, உங்கள் சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக RCS எண் கேட்கப்பட்டால், அமைப்புகள் > பொது என்பதற்குச் சென்று உங்கள் வணிக வகையைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிக விவரங்களுக்கு அருகிலுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, பின்னர் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வணிக வகையைப் புதுப்பிப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவி பெற Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
என்னிடம் லக்சம்பர்க் RCS எண் இல்லை, மேலும் நான் ஒரு தனிநபர் அல்லது தனிப்பட்ட வர்த்தகரும் அல்ல.
உங்களிடம் RCS எண் இல்லையென்றால், பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை அல்லது பதிவுசெய்யப்படாத இலாப நோக்கற்ற அமைப்பு ஆகியவற்றை மட்டுமே உங்கள் வணிக வகையாகத் தேர்ந்தெடுக்க முடியும். உங்கள் வணிகம் லக்சம்பர்க்கில் மேற்குறிப்பிட்ட வணிக வகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் ஆவணங்களை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்.
இந்த வணிக வகைகளில் எதுவும் உங்கள் வணிகத்திற்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் தனிநபர் / தனிப்பட்ட வர்த்தகர் என்பதைத் தேர்ந்தெடுத்து, முக்கிய முடிவெடுப்பவர் அல்லது உரிமையாளரைக் கணக்குப் பிரதிநிதியாக ஒதுக்க வேண்டும்.
எனது முகவரியைத் தானாகவே சரிபார்க்க முடியவில்லை.
Shopify Payments Luxembourg-ஐப் பொறுத்தவரை, உங்கள் முகவரியைத் தானாகச் சரிபார்க்க முடியவில்லை எனில், உங்களை செல்ஃபி செயல்முறையை முடிக்க அல்லது முகவரி ஆவணச் சான்றை வழங்குமாறு கேட்கப்படும்.
செல்ஃபி செயல்முறையை முடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. சரிபார்ப்பு தேவைப்படும் நபர், செல்ஃபி பொத்தானைக் கிளிக் செய்து, சரிபார்ப்பதற்காகத் தங்களது புகைப்பட ஐடியையும் தங்களையும் புகைப்படம் எடுக்கலாம். முகவரிச் சான்று ஆவணத்தை வழங்குவதற்குப் பதிலாக, நீங்கள் செல்ஃபி செயல்முறையை முடிக்கலாம்.
நீங்கள் மேனுவலாக ஒரு ஆவணத்தை வழங்க விரும்பினால், அதற்குப் பதிலாக நீங்கள் அதைச் செய்யலாம். பின்வருபவற்றை உறுதிப்படுத்தவும்:
- ஆவணத்தில் உள்ள பெயரும் முகவரியும் உங்கள் Shopify Payments கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ள பெயருக்கும் முகவரிக்கும் துல்லியமாகப் பொருந்துகிறது.
- அந்த ஆவணம் கடந்த 6 மாதங்களுக்குள் தேதியிடப்பட்டதாக இருக்க வேண்டும்.
- அந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவரி ஆவண வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
உங்கள் சொந்தப் பெயரைக் காட்டும் ஆவணத்தை நீங்கள் வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக: உங்களின் பயன்பாட்டுக் கட்டணப் பில்களில் உங்கள் சொந்தப் பெயர் இல்லை எனில், விருப்பப் பட்டியலில் இருந்து வேறொரு ஆவணத்தைத் தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும்.
எனது உரிமையாளர் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை.
Shopify Payments Luxembourg-ஐப் பொறுத்தவரை, உங்களின் அரசாங்க வணிகப் பதிவேட்டில் உங்கள் வணிகத்திற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள உரிமையாளர்களின் பெயர்களுடன் பொருந்தும் வகையில் உங்களின் உரிமையாளர்களை நீங்கள் உள்ளிட வேண்டும். பதிவேட்டில் உள்ள உங்கள் உரிமையாளர் தகவலைப் பார்த்து, அங்குள்ளபடியே துல்லியமாகப் பெயர்களை உள்ளிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு உரிமையாளர்கள் இல்லையென்றால், கணக்கில் உங்கள் இயக்குநர்கள் அனைவரையும் பட்டியலிட வேண்டும்.
நீங்கள் அப்படிச் செய்திருந்தும் உங்கள் உரிமை அல்லது இயக்குநர் பதவியை இன்னமும் சரிபார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் வழங்கிய தகவல் சரியானதுதான் என டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, உங்கள் சரிபார்ப்புப் பக்கத்திலுள்ள கையெழுத்திடு பொத்தானைக் கிளிக் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்கள் விரும்பினால், சான்றளிப்புச் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கலாம். உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிடும் உரிமையாளர் மற்றும் இயக்குநர் தகவல், நீங்கள் பதிவேற்றும் ஆவணங்களில் உள்ள தகவலுடன் பொருந்த வேண்டும். உங்கள் ஆவணத்தில் உரிமையாளர் அல்லது இயக்குநர் பட்டியலிடப்பட்டிருந்து, அது உங்கள் Shopify Payments கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றால், நீங்கள் அந்த நபரை உங்கள் கணக்கில் சேர்த்து, அவருக்கு உரிமையாளர் அல்லது இயக்குநர் பங்கை ஒதுக்க வேண்டும். உரிமையைச் சரிபார்க்க நீங்கள் வழங்கக்கூடிய ஆவண வகைகளின் பட்டியல் இங்கே உள்ளது.
உங்கள் கணக்கில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் உங்கள் ஆவணங்களுடன் 1:1 என்ற விகிதத்தில் பொருந்துவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் ஆவணங்களில் காட்டப்படாத கூடுதல் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களைப் பட்டியலிட வேண்டாம்.
எனது வணிகத் தகவல் சரிபார்க்கப்படவில்லை.
Shopify வங்கியியல் கூட்டாளர்கள், லக்சம்பர்க்கில் உள்ள அரசாங்கப் பதிவேடுகளுடன் உங்கள் வணிகத் தகவலை ஒப்பிட்டுச் சரிபார்ப்பார்கள். உங்கள் வணிகத்தைச் சரிபார்க்க முடியவில்லை எனில், பின்வரும் விவரங்களைச் சரிபார்க்கவும்:
- பெரிய/சிறிய எழுத்துகள், நிறுத்தற்குறிகள் மற்றும் குறியீடுகள் உட்பட, அரசாங்க வணிகப் பதிவேடுகளில் உள்ளபடியே உங்கள் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர் துல்லியமாகப் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
- உங்கள் RCS எண் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
- அரசாங்க வணிகப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரியுடன் உங்கள் வணிக முகவரி பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
இன்னமும் உங்கள் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் வணிகச் சரிபார்ப்பு ஆவணத்தை வழங்க வேண்டியிருக்கலாம். உங்கள் ஆவணத்தில் உள்ள தகவல், உங்கள் Shopify Payments கணக்கில் நீங்கள் உள்ளிட்டுள்ள தகவல்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
எனது ஆவணம் நிராகரிக்கப்பட்டது.
உங்கள் கணக்கில் உள்ள தகவல்கள் உங்கள் ஆவணத்துடன் துல்லியமாகப் பொருந்துவதை உறுதிசெய்து, தேவைப்பட்டால் உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவும். உங்களின் ஆவணங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இந்தப் பக்கத்தில் உள்ள பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:
- ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவண வகைகள்: ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் தேவையான விவரங்கள். திரைப்பிடிப்புகள், பிரிண்ட்அவுட்கள் மற்றும் பதிவேட்டுத் திரைப்பிடிப்புகள் ஏற்கப்படாது.
- ஆவண இணக்கத்தை உறுதிசெய்தல்: துல்லியம், தெளிவு, முழுமை மற்றும் செல்லுபடியாகும் தன்மைக்கான தேவைகள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
லக்சம்பர்க்கில் உள்ள Shopify Payments தேவைகள் தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் பின்வரும் கேள்விகளைச் சரிபார்க்கவும்.
நான் லக்சம்பர்க்கில் ஒரு நிறுவனம்/கூட்டாண்மை/இலாப நோக்கற்ற அமைப்பாக இருக்கும்போது, எனது புகைப்பட ID அல்லது முகவரிச் சான்று உங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது?
நீங்கள் நிறுவனம், கூட்டாண்மை அல்லது இலாப நோக்கற்ற அமைப்பு எனப் பதிவு செய்திருந்தாலும், வணிகத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களையும், அவர்கள் வசிக்கும் இடங்களையும் சரிபார்க்க லக்சம்பர்க் ஒழுங்குமுறை சட்டங்களின்படி எங்கள் வங்கி கூட்டாளர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
நான் ஒரு லக்சம்பர்க் குடிமகன், ஆனால் தற்போது அங்கு வசிக்கவில்லை. நான் Shopify Payments லக்சம்பர்க்கைப் பயன்படுத்த முடியுமா?
உங்கள் வணிக வகை தனிநபர் என்றால், Shopify Payments லக்சம்பர்க்கிற்குத் தகுதிபெற நீங்கள் லக்சம்பர்க்கில் வசிப்பது அவசியம். நீங்கள் தற்போது லக்சம்பர்க்கில் வசிக்கவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்க வேண்டும்.
உங்கள் ஸ்டோர் முகவரியைத் தற்போதைய இடத்திற்குப் புதுப்பிக்கவும். உங்கள் இடம் Shopify Payments சேவைக்குத் தகுதி பெற்றிருந்தால், அதற்குப் பதிலாக அந்தப் பிராந்தியத்திற்கான Shopify Payments கணக்கை உருவாக்கலாம்.
உங்கள் வணிகம் கூட்டாண்மை, நிறுவனம் அல்லது இலாப நோக்கற்ற வகையாக இருந்தால், நீங்கள் லக்சம்பர்க்கில் நேரடியாக வசிக்க வேண்டியதில்லை. ஆனால், உங்கள் வணிகம் அங்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மேலும் லக்சம்பர்க் வணிக முகவரியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நான் லக்சம்பர்க்கில் ஒரு தனிநபர் வணிகராக (sole trader) இருக்கிறேன். எனது வணிகப் பதிவு விவரங்களை உங்களுக்கு வழங்கலாமா?
லக்சம்பர்க்கில் வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, நீங்கள் ஒரு தனிநபர் வணிகராக இருந்தால் உரிமையாளரின் தனிப்பட்ட தகவல் மட்டுமே தேவை.
நீங்கள் ஒரு தனிநபர் வணிகர் என்றால், வேறு வணிக வகையாகப் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம். சரிபார்ப்பை நிறைவு செய்வதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படலாம்.
நான் லக்சம்பர்க்கில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக இருக்கிறேன். நான் எந்த வணிக வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நீங்கள் registered company (பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வணிகம் மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான செயல்முறை ஒன்றுதான். உரிமையாளர்களைச் சேர்க்கக் கோரும் கணக்கு அமைவுப் படிவத்தின் பகுதியை நீங்கள் தவிர்க்கலாம். உங்களுக்குப் பலனடையும் உரிமையாளர்கள் யாரும் இல்லை என்றால், அவர்களைப் பட்டியலிட வேண்டியதில்லை.
லக்சம்பர்க்கில் நீங்கள் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக இருந்து, ஏற்கனவே Shopify Payments கணக்கை அமைத்திருந்தால், மேலும் இப்போது உங்களின் சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக உரிமைத் தகவலைக் கோரினால், உங்களுக்கு உரிமையாளர்கள் யாரும் இல்லை என்பதைக் காட்ட உங்கள் உரிமை விவரங்களைப் புதுப்பிக்கவும். கோப்பில் உள்ள எவரிடமிருந்தும் Owner பங்கினை அகற்றவும். அதற்குப் பதிலாக, உங்கள் இயக்குநர்கள் அனைவரும் கணக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதையும், அவர்களுக்கு Director பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.
பட்டியலிடப்பட்டுள்ள இயக்குநர் விவரங்கள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தும்படி உங்களிடம் கேட்கப்படலாம். அது சரியாக இருப்பதை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், கோப்பிலுள்ள தகவலை டிஜிட்டல் முறையில் சான்றளிக்க, Sign பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்தச் செயல்முறையில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
எனது Shopify Payments கணக்குத் தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?
கணக்குச் சரிபார்ப்பை நிறைவு செய்யும்படி உங்களிடம் கேட்கப்பட்டால், கேட்கப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதோடு, சரிபார்ப்புப் பக்கத்திலிருந்தே உங்கள் தகவல் தொடர்பான புதுப்பிப்புகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.
சரிபார்ப்புச் செயல்முறைக்கு வெளியே, அமைப்புகள் > பொதுவானவை > வணிக விவரங்கள் மூலம் கடையின் உரிமையாளர் இந்த விவரங்களைப் புதுப்பிக்கலாம். உங்கள் வணிகப் பிரிவுக்கு அருகில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, வணிக வகை உட்பட அந்த வணிகத்தின் தகவலைப் புதுப்பிக்க Edit என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் இங்கு செய்யும் மாற்றங்கள் எவையும் மதிப்பாய்வுக்காக எங்கள் வங்கிக் கூட்டாளர்களுக்குத் தானாகவே அனுப்பப்படும், அத்துடன் புதிய தகவல்கள் அவர்களின் சரிபார்ப்புச் செயல்முறையின் மூலமாக மீண்டும் சரிபார்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். மாற்றங்கள் தானாகவே மீண்டும் சரிபார்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன, எனினும் உங்களிடம் துணை ஆவணங்களும் கேட்கப்படலாம்.
எனது சரிபார்ப்பிற்கான காலக்கெடுவை நான் தவறவிட்டால் என்ன நடக்கும்?
சரிபார்ப்புச் செயல்முறை நிறைவடையும் வரை உங்கள் பேஅவுட்களில் தற்காலிகமான இடைநிறுத்தத்தைப் பார்ப்பீர்கள். முதல் காலக்கெடு முடிந்து பேஅவுட்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, Shopify Payments மூலம் நீங்கள் ஆர்டர்களை ஏற்கும் திறன் எப்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைக் காட்டும் இரண்டாவது காலக்கெடுவை நீங்கள் காணலாம்.
இந்த இடைநிறுத்தங்கள் அனைத்தும் தற்காலிகமானவை, மேலும் நீங்கள் சரிபார்ப்பை நிறைவு செய்ததும் இவை தானாகவே விலக்கிக் கொள்ளப்படும். உங்கள் காலக்கெடுவுக்கு உங்கள் நிர்வாகப் பக்கத்தைப் பார்க்கவும்.
ஜூன் 2026 தொடங்கி, புதிய Shopify Payments லக்சம்பர்க் கணக்குகள் முதல் ஆர்டர் செயலாக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும். 90 நாட்கள் கடந்தால், Shopify Paymentsஐப் பயன்படுத்தி நீங்கள் செயலாக்கிய எந்த ஆர்டர்களுக்கான பணமும் தானாகவே திரும்பக் கொடுக்கப்படலாம்.
இந்த பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை ஐரோப்பிய நாடுகளுக்கும், ஜூன் 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை உங்களுக்குப் பொருந்தினால், பணத்தைத் திரும்பப்பெறுதல் எப்போது செயலாக்கப்படும் என்பதை எச்சரிக்கைகள் கடையின் உரிமையாளருக்குத் தெரிவிக்கும்.
லக்சம்பர்க்கில் உள்ள Shopify Payments குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவ, Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன் பின்வரும் தகவலைச் சேகரித்து வைக்கவும்:
- நீங்கள் பெற்ற ஏதேனும் பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள் (வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை மறைத்துவிடவும்)
- அமைவின்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக வகை
- பொருந்தினால், உங்களின் RCS எண் (Registre de Commerce et des Sociétés)
- நீங்கள் சிக்கலை எதிர்கொண்ட குறிப்பிட்ட படி
- நீங்கள் பயன்படுத்தும் உலாவி மற்றும் சாதனம்
- உங்களின் முழு கணக்கு எண்ணைப் பகிராமல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் (நாடு, நாணயம், கணக்கு வகை)
இந்தத் தகவலைத் தயாராக வைத்திருப்பது, உங்களுக்குச் சிறப்பாக உதவ Shopify ஆதரவுக்கு உதவியாக இருக்கும்.