நெதர்லாந்தில் Shopify Payments மூலம் பேஅவுட்டுகள் மற்றும் செட்டில்மெண்ட் நேரங்கள்
நெதர்லாந்தில் Shopify Payments மூலம் அனைத்துச் சந்தாத் திட்டங்களிலும் EUR நாணயத்தில் நீங்கள் பேஅவுட்டுகளைப் பெறலாம். உங்கள் ஸ்டோர் Advanced Shopify திட்டம் அல்லது Shopify Plus திட்டத்தில் இருந்தால், நீங்கள் பல நாணயங்களில் பேஅவுட்டுகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களுக்குப் பணம் செலுத்தப் பயன்படுத்தும் நாணயமும் Shopify Payments-இலிருந்து நீங்கள் பேஅவுட்டுகளைப் பெறும் நாணயமும் வெவ்வேறாக இருக்கலாம். வெவ்வேறு நாணயங்களில் விற்பனை செய்வது மற்றும் பேமெண்ட்டுகளைப் பெறுவது பற்றி மேலும் அறிக.
பேஅவுட் நாணயங்கள், செட்டில்மெண்ட் நேரங்கள், செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் நெதர்லாந்தில் Shopify Payments மூலம் உங்கள் பரிவர்த்தனை வரலாற்றை எவ்வாறு பார்ப்பது ஆகியவற்றை இந்த வழிகாட்டி விளக்குகிறது.
இந்தப் பக்கத்தில்
நெதர்லாந்தில் Shopify Payments-க்கான கட்டணங்கள்
Shopify Payments கட்டணங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். கட்டணங்கள் குறித்த மிகத் துல்லியமான, விரிவான தகவல்களைப் பெற, நெதர்லாந்திற்கான திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயப் பக்கத்திற்குச் செல்லவும். நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் அடிப்படையில் Shopify Payments தொடர்பான கட்டண விவரங்களை இந்தப் பக்கம் வழங்குகிறது.
உங்கள் Shopify நிர்வாகியில் கட்டண விகிதங்களைப் பார்க்கவும்
நீங்கள் ஏற்கெனவே ஒரு Shopify வணிகராக இருந்தால், உங்கள் ஸ்டோர் இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்திற்குப் பொருந்தக்கூடிய குறிப்பிட்ட கட்டணங்கள் பற்றிய தகவல்களை அணுகலாம்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.
- Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- வெவ்வேறு கட்டண முறைகளுக்குப் பொருந்தும் கட்டண விகிதங்களைப் பார்க்கவும்.
நெதர்லாந்தில் Shopify Payments-க்கான செட்டில்மெண்ட் நேரங்கள்
வாடிக்கையாளரின் பேமெண்ட் பெறப்பட்டதற்கும், உங்கள் வங்கிக் கணக்கிற்கு அந்த நிதி அனுப்பக் கிடைப்பதற்கும் இடைப்பட்ட நேரமே செட்டில்மெண்ட் நேரம் எனப்படும். வாடிக்கையாளரின் பேமெண்ட் பெறப்பட்டதற்கான நேர முத்திரையானது ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் (UTC) பதிவு செய்யப்படுகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெறப்படும் பேமெண்ட்டுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே பேஅவுட்டாக அனுப்பப்படும்.
நெதர்லாந்தில், குறைந்தபட்சச் செட்டில்மெண்ட் நேரம் 3 வணிக நாட்கள் ஆகும். நீங்கள் பேஅவுட்டுகளைப் பெறத் தொடங்கும்போது, செட்டில்மெண்ட் நேரம் அதிகமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஆர்டர்களைத் தொடர்ந்து சரியான நேரத்திற்கு நிறைவேற்றும்போது, உங்கள் பிராந்தியத்திற்கான குறைந்தபட்சச் செட்டில்மெண்ட் நேரத்திற்கு ஏற்பக் குறையக்கூடும்.
நெதர்லாந்தில் Shopify Payments-க்கான குறைந்தபட்சப் பேஅவுட் தொகை €1 EUR ஆகும். பேஅவுட் தொகை இதைவிடக் குறைவாக இருந்தால், பேஅவுட் செய்யப் போதுமான நிதி கிடைக்கும் வரை அது நிலுவையில் உள்ள நிலையில் இருக்கும்.
Shopify Payments மூலம் பேமெண்ட் பெறுவது பற்றி மேலும் அறிக.
நெதர்லாந்தில் Shopify Payments மூலம் பல நாணயங்களில் பேஅவுட்டுகளைப் பெறுதல்
உங்கள் ஸ்டோர் Advanced திட்டம் அல்லது Shopify Plus திட்டத்தில் இருந்தால், ஆதரிக்கப்படும் எந்தவொரு பேஅவுட் நாணயத்தையும் உங்கள் இயல்புநிலைப் பேஅவுட் நாணயமாகத் தேர்வுசெய்யலாம். பல நாணயப் பேஅவுட் கட்டணங்கள் மற்றும் நாணய மாற்றுறு கட்டணங்களுக்குப் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:
- உங்கள் இயல்புநிலைப் பேஅவுட் நாணயமாக உங்கள் உள்நாட்டு நாணயமான EUR இருந்தால், நீங்கள் பல நாணயப் பேஅவுட் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்காது.
- பேஅவுட்டுகளுக்காகக் கூடுதல் வங்கிக் கணக்குகளை அமைத்தால், உங்கள் இருப்பிடம் மற்றும் Shopify திட்டத்தின் அடிப்படையில் பல நாணயப் பேஅவுட் கட்டணங்கள் விதிக்கப்படும்.
- உங்கள் Shopify Payments கணக்கில் பேஅவுட்களைப் பெற அமைக்கப்படாத நாணயத்தில் ஆர்டர்கள் செய்யப்பட்டால், அவை உங்கள் இயல்புநிலை நாணய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- கணக்கு உள்நாட்டு அல்லாத நாணயத்தில் இருந்தால், நாணயப் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்படும்.
- உங்கள் உள்நாட்டு நாணயம் உங்களின் இயல்புநிலை பேஅவுட் நாணயமாக இல்லாவிட்டாலும், ஆர்டர்கள் உங்களின் உள்நாட்டு நாணயத்தில் இருந்து, உங்கள் உள்நாட்டுப் பிராந்தியத்திலுள்ள ஒரு வங்கிக்குச் செலுத்தப்பட்டால், உங்களுக்குக் கூடுதல் கட்டணம் ஏதும் விதிக்கப்படாது.
உங்கள் இயல்புநிலை நாணயமாக உள்நாட்டு அல்லாத நாணயத்தைத் தேர்வுசெய்தால், (உதாரணமாக நெதர்லாந்தில் Shopify Paymentsஐப் பயன்படுத்தும்போது, உங்களின் இயல்புநிலை நாணயமாக USDஐத் தேர்வுசெய்தால்) நீங்கள் பெறும் எந்தவொரு பேஅவுட்டிற்கும் உங்கள் இடம் மற்றும் Shopify திட்டத்தின் அடிப்படையில் பல-நாணய பேஅவுட் கட்டணம் வசூலிக்கப்படும்.
நெதர்லாந்தில் Shopify Payments மூலம் ஆதரிக்கப்படும் பேஅவுட் நாணயங்கள்
நெதர்லாந்தில் Shopify Payments மூலம் பல-நாணய பேஅவுட்களைப் பயன்படுத்தும்போது, நீங்கள் பின்வரும் நாணயங்களில் பேஅவுட்களைப் பெறலாம்:
| பேஅவுட் நாணயம் | வங்கிக் கணக்கு உள்ள இடம் | உள்நாட்டு நாணயம் | பல-நாணய பேஅவுட் கட்டணம் |
|---|---|---|---|
| EUR | ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜிப்ரால்டர், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் | ஆம் | இல்லை |
| AUD, CAD, CHF, CZK, DKK, GBP, HKD, HUF, JPY, NOK, NZD, PLN, RON, SEK, SGD, ZAR | ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜிப்ரால்டர், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் | இல்லை | ஆம் |
| USD | ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜிப்ரால்டர், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம், அமெரிக்கா | இல்லை | ஆம் |
நீங்கள் பல நாணயங்களில் பேஅவுட்களைப் பெற விரும்பினால், சில Shopify சந்தா, இடம் மற்றும் வங்கிக் கணக்குத் தேவைகளைப் பின்பற்ற வேண்டும். பல-நாணய பேஅவுட்கள் பற்றி மேலும் அறிக.
பேஅவுட்களைப் பார்த்தல்
உங்கள் Shopify நிர்வாகியின் நிதி பக்கத்திலிருந்து உங்கள் பேஅவுட்களைப் பார்க்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
- உங்கள் Shopify நிர்வாகியில், நிதி > பேஅவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
நிதி என்பதைத் தட்டவும்.
பேஅவுட்களைப் பார் என்பதைத் தட்டவும்.
வரி அறிக்கையிடல்
ஒரு வணிகராக, வரி அறிக்கையிடல் உட்படப் பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் அதிகார வரம்பைப் பொறுத்து, உள்ளூர் வரி அதிகாரிகளிடம் உங்கள் விற்பனையைப் புகாரளிக்க வேண்டிய தேவை Shopify Payments நிறுவனத்திற்கும் இருக்கலாம்.
ஐரோப்பாவில் உள்ள ஸ்டோர்களுக்கான Shopify Payments கட்டணங்களில் மதிப்புக்கூட்டு வரி (VAT) சேர்க்கப்படுவதில்லை (அயர்லாந்து தவிர). உங்களின் VAT அறிக்கையிலுள்ள உள்ளூர் வரி வீதத்திற்குப் பொருந்தும் VAT-ஐ நீங்கள் கணக்கிட வேண்டியிருக்கலாம். இந்தத் தகவலைப் பெற, நீங்கள் உருவாக்கப்பட்ட விலைப்பட்டியலைப் பதிவிறக்கலாம் அல்லது உங்கள் பரிவர்த்தனைத் தகவல் அடங்கிய கோப்பை ஏற்றுமதி செய்யலாம்.
அயர்லாந்தில் உள்ள ஸ்டோர்களுக்கு, Shopify Payments கட்டணங்களுடன் சேர்த்து 23% VAT வசூலிக்கப்படுகிறது.
உருவாக்கப்பட்ட விலைப்பட்டியலைப் பதிவிறக்குதல்
உங்கள் வரிக் கோரிக்கையுடன் சமர்ப்பிக்க, மாதாந்திர விலைப்பட்டியல்களைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். அந்த மாதத்தில் உங்கள் ஸ்டோரில் செய்யப்பட்ட அனைத்து ஆர்டர்களுக்கான பரிவர்த்தனைக் கட்டணங்களில் செலுத்தப்பட்ட மொத்த VAT ஒவ்வொரு விலைப்பட்டியலிலும் இருக்கும். உருவாக்கப்பட்ட விலைப்பட்டியல்கள் UTC நேர மண்டலத்தைப் பயன்படுத்துகின்றன, இது உங்கள் ஸ்டோரின் நேர மண்டலத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம். உங்கள் ஸ்டோரின் நேர மண்டலத்தைப் பயன்படுத்தும் அறிக்கை உங்களுக்கு வேண்டுமென்றால், உங்கள் ஸ்டோரின் பரிவர்த்தனைப் பட்டியலை ஒரு CSV கோப்பாக ஏற்றுமதி செய்யலாம்.
ஒவ்வொரு மாதத்திற்குமான விலைப்பட்டியல் அடுத்த மாதத்தின் 5ஆம் தேதி உருவாக்கப்படும். உதாரணமாக, ஜூன் மாதத்திற்கான விலைப்பட்டியல் ஜூலை 5ஆம் தேதி உருவாக்கப்படும். ஒரு மாதத்திற்கு Shopify Payments வாயிலாக எந்தவொரு பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை எனில், அந்த மாதத்திற்கு எந்த விலைப்பட்டியலும் உருவாக்கப்படாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், நிதி > பேஅவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி ஆவணங்கள் உரையாடலில், நீங்கள் பதிவிறக்க விரும்பும் விலைப்பட்டியலுக்கு, PDFஐப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிவர்த்தனைகளை ஏற்றுமதி செய்தல்
உங்கள் ஸ்டோரின் பரிவர்த்தனைகளின் பட்டியலை ஒரு CSV கோப்பாக ஏற்றுமதி செய்யலாம். ஐரோப்பிய வணிகர்களுக்கான CSV கோப்பில் VAT நெடுவரிசை ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், நிதி > பேஅவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
பரிவர்த்தனைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் உலாவியில் ஒரு CSV கோப்பு பதிவிறங்கும்.
CSV கோப்பை ஒரு விரிதாள் எடிட்டரில் திறக்கவும். CSV கோப்பின் கடைசி நெடுவரிசை, ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வசூலிக்கப்பட்ட VAT தொகையைக் காட்டும்.
நீங்கள் வசூலித்துள்ள மொத்த VAT தொகையைக் கணக்கிட, SUM கருவியைப் பயன்படுத்தவும்.