நியூசிலாந்துக்கான Shopify Payments
உங்கள் Shopify ஸ்டோர் செக்அவுட்டில் பல்வேறு கட்டண முறைகளை ஏற்க, நியூசிலாந்தில் நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தலாம். உங்கள் Shopify கணக்கை அமைக்கும்போது Shopify Payments-ஐச் செயல்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட தகவல் மற்றும் வணிகத் தகவலைச் சரிபார்க்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். Shopify Payments-ஐப் பயன்படுத்தும்போதான தகவல் தேவைகள் பற்றி மேலும் அறிக.
Shopify Payments மூலம் உங்களின் கட்டணச் செயலாக்கம் மற்றும் ஆர்டர் மேலாண்மை அமைப்புகள், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. 3D Secure போன்ற மோசடிக் கண்டறிதல் மற்றும் குறியாக்க முறைகள் வாயிலாக வாடிக்கையாளர்களின் தரவை Shopify Payments பாதுகாக்கிறது. Shopify Payments-இல் வாடிக்கையாளரின் கார்டு மூலம் செய்யப்படும் கொள்முதல்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணச் செயலாக்க விகிதங்கள், உங்களின் Shopify கணக்கிற்கான சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது.
நியூசிலாந்துக்கான Shopify Payments மூலம் நீங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பேமெண்ட்டுகள் மற்றும் விரைவான செக்அவுட் பேமெண்ட்டுகளை ஏற்கலாம். ஆர்டர்களுக்குப் பணம் செலுத்தும்போது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் உள்ளூர் கட்டண முறைகளையும் நீங்கள் ஏற்கலாம்.