போலந்திற்கான Shopify Payments
உங்கள் Shopify ஸ்டோரில் செக்அவுட்டின் போது பல்வேறு கட்டண முறைகளை ஏற்க போலந்தில் Shopify Payments-ஐப் பயன்படுத்தலாம். உங்களின் Shopify கணக்கை அமைக்கும்போது Shopify Payments-ஐச் செயல்படுத்தலாம். உங்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் வணிகத் தகவலைச் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். Shopify Payments-ஐப் பயன்படுத்தும் போது தேவைப்படும் தகவல்கள் பற்றி மேலும் அறிக.
Shopify Payments மூலம், உங்கள் கட்டணச் செயலாக்கம் மற்றும் ஆர்டர் மேலாண்மைச் சிஸ்டம்கள் நேரடியாக உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நிர்வகிக்கப்படும். 3D Secure போன்ற மோசடி கண்டறிதல் மற்றும் குறியாக்க முறைகள் மூலம் Shopify Payments உங்கள் வாடிக்கையாளர்களின் தரவைப் பாதுகாக்கிறது. வாடிக்கையாளரின் கார்டு மூலம் செய்யப்படும் பர்சேஸ்களுக்கு Shopify Payments-இல் உங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணச் செயலாக்க விகிதங்கள், உங்கள் Shopify கணக்கிற்கான சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது.
போலந்திற்கான Shopify Payments, உங்களை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பேமெண்ட்டுகள் மற்றும் விரைவான செக்அவுட் பேமெண்ட்டுகளை ஏற்க அனுமதிக்கிறது. உங்களின் வாடிக்கையாளர்கள் ஆர்டர்களுக்கான பேமெண்ட்டைச் செலுத்தும்போது அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் உள்ளூர் கட்டண முறைகளையும் நீங்கள் ஏற்கலாம்.