போலந்தில் Shopify Payments உடனான பேஅவுட்கள் மற்றும் செட்டில்மெண்ட் நேரங்கள்
போலந்தில் Shopify Payments மூலம், எல்லா சந்தாத் திட்டங்களிலும் நீங்கள் EUR அல்லது PLN-இல் பேஅவுட்களைப் பெறலாம். உங்கள் ஸ்டோர் Advanced திட்டம் அல்லது Shopify Plus திட்டத்தில் இருந்தால், நீங்கள் பல நாணயங்களில் பேஅவுட்களைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களுக்குப் பணம் செலுத்தப் பயன்படுத்தும் நாணயமும், Shopify Payments-இல் இருந்து நீங்கள் பெறும் பேஅவுட்களின் நாணயமும் வெவ்வேறாக இருக்கலாம். வெவ்வேறு நாணயங்களில் விற்பனை செய்வது மற்றும் பேமெண்ட் பெறுவது பற்றி மேலும் அறிக.
போலந்தில் Shopify Payments-ஐப் பயன்படுத்தும்போது பேஅவுட் நாணயங்கள், செட்டில்மெண்ட் நேரங்கள், செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் உங்களின் பரிவர்த்தனை வரலாற்றை எப்படிக் காண்பது என்பதை இந்த வழிகாட்டி விளக்குகிறது.
இந்தப் பக்கத்தில்
போலந்தில் Shopify Payments-க்கான செட்டில்மெண்ட் நேரங்கள்
வாடிக்கையாளரின் பேமெண்ட் பெறப்படும் நேரத்திற்கும், அந்த நிதி உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படக் கிடைக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட கால அளவே செட்டில்மெண்ட் நேரம் ஆகும். வாடிக்கையாளரின் பேமெண்ட் பெறப்பட்டதற்கான நேர முத்திரையானது, ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் (UTC) பதிவுசெய்யப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெறப்படும் பேமெண்ட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே பேஅவுட்டாக அனுப்பப்படும்.
போலந்தில், குறைந்தபட்ச செட்டில்மெண்ட் நேரம் 3 வணிக நாட்களாகும். நீங்கள் பேஅவுட்களைப் பெறத் தொடங்கும்போது உங்கள் செட்டில்மெண்ட் நேரம் அதிகமாக இருக்கும், ஆனால் நீங்கள் சரியான நேரத்தில் ஆர்டர்களை நம்பகமான முறையில் நிறைவேற்றும்போது, உங்கள் பிராந்தியத்திற்கான குறைந்தபட்ச செட்டில்மெண்ட் நேரத்திற்கு ஏற்ப உங்கள் செட்டில்மெண்ட் நேரமும் குறையலாம்.
போலந்தில் Shopify Payments-க்கான குறைந்தபட்ச பேஅவுட் தொகை €1 EUR ஆகும். பேஅவுட் இதைவிடக் குறைவாக இருந்தால், பேஅவுட் செய்யப் போதுமான நிதி கிடைக்கும் வரை அது நிலுவையில் இருக்கும்.
Shopify Payments மூலம் பேமெண்ட் பெறுவது பற்றி மேலும் அறிக.
போலந்தில் Shopify Payments-க்கான கட்டணங்கள்
Shopify Payments கட்டணங்கள் இடத்தைப்பொறுத்து மாறுபடும். கட்டணங்கள் குறித்த துல்லியமான மற்றும் விரிவான தகவல்களைப் பெற, போலந்திற்கான திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயப் பக்கத்தைப் பார்வையிடவும். நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் அடிப்படையில் Shopify Payments தொடர்பான கட்டண விகிதங்கள் மற்றும் கட்டணங்களின் பிரத்தியேக விவரங்களை இந்தப் பக்கம் வழங்குகிறது.
உங்கள் Shopify நிர்வாகியில் பேமெண்ட் கட்டண விகிதங்களைக் காணுதல்
போலந்தில் நீங்கள் Shopify Payments-ஐ அமைத்திருந்தால், உங்கள் கடை இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்திற்குப் பொருந்தக்கூடிய குறிப்பிட்ட விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்களை உங்களால் அணுக முடியும். பொருந்தக்கூடிய கட்டணங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து Shopify Payments சேவை விதிமுறைகளை அணுகலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்கள் என்பதற்குச் செல்லவும்.
Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
வெவ்வேறு கட்டண முறைகளுக்குப் பொருந்தும் கட்டண விகிதங்களைக் காணவும்.
போலந்தில் Shopify Payments மூலம் பல நாணயங்களில் பேஅவுட்களைப் பெறுதல்
நீங்கள் பேஅவுட்களைப் பெறும் நாணயமும், உங்கள் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் நாணயமும் வெவ்வேறாக இருக்கலாம். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாணயங்களில் பேஅவுட்களைப் பெற முடியுமா என்பது உங்கள் Shopify திட்டத்தைப் பொறுத்தது.
பல-நாணய பேஅவுட்கள் இல்லாமல் பேஅவுட்களைப் பெறுதல்
உங்கள் ஸ்டோர் Advanced திட்டம் அல்லது Shopify Plus திட்டத்தில் இல்லையென்றால், நீங்கள் பல-நாணய பேஅவுட்களைப் பெறத் தகுதிபெற மாட்டீர்கள், மேலும் ஒரு பேஅவுட் நாணயத்தை மட்டுமே உங்களால் அமைக்க முடியும். நீங்கள் தொடர்ந்து பல நாணயங்களில் விற்கலாம், ஆனால் அனைத்துப் பேஅவுட்களும் உங்களின் ஒற்றைப் பேஅவுட் நாணயத்திற்கு மாற்றப்படும். உங்கள் பேஅவுட் நாணயத்திலிருந்து வேறுபட்ட நாணயத்தில் ஒரு ஆர்டரைப் பெற்றால், அந்த நிதி உங்கள் பேஅவுட் நாணயத்திற்கு மாற்றப்பட்டு உங்களுக்கு ஒரு நாணய மாற்றக் கட்டணம் விதிக்கப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் பேஅவுட் நாணயம் EUR ஆகவும், நீங்கள் PLN இல் ஒரு ஆர்டரைப் பெற்றால், PLN ஆனது EUR ஆக மாற்றப்பட்டு, அதற்கான மாற்றக் கட்டணம் விதிக்கப்படும்.
பல-நாணய பேஅவுட்கள் மூலம் பேஅவுட்களைப் பெறுதல்
உங்கள் ஸ்டோர் Advanced திட்டம் அல்லது Shopify Plus திட்டத்தில் இருந்தால், பல-நாணய பேஅவுட்களைப் பயன்படுத்தி ஒன்றிற்கும் மேற்பட்ட நாணயங்களில் நீங்கள் பேஅவுட்களைப் பெறலாம். ஆதரிக்கப்படும் எந்தவொரு பேஅவுட் நாணயத்தையும் உங்கள் இயல்புநிலை பேஅவுட் நாணயமாகத் தேர்ந்தெடுக்கலாம், அத்துடன் பிற நாணயங்களில் பேஅவுட்களைப் பெற வங்கிக் கணக்குகளைச் சேர்க்கலாம். பேஅவுட் நாணயம் மற்றும் நாணய மாற்றம் நிகழ்கிறதா என்பதைப் பொறுத்து, இரண்டு வகையான கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
நாணய மாற்றம் ஏதும் நிகழாவிட்டாலும், உள்நாட்டைச் சேராத நாணயத்தில் நீங்கள் பேஅவுட்டைப் பெறும்போதெல்லாம் ஒரு பல-நாணய பேஅவுட் கட்டணம் விதிக்கப்படும். கட்டணத் தொகையானது உங்கள் இருப்பிடம் மற்றும் Shopify திட்டத்தைப் பொறுத்து மாறுபடும். உங்கள் EUR அல்லது PLN உள்நாட்டு நாணயத்தில் பேஅவுட்களைப் பெறும்போது உங்களுக்குப் பல-நாணய பேஅவுட் கட்டணம் விதிக்கப்படாது.
ஒரு ஆர்டர் வேறு பேஅவுட் நாணயத்திற்கு மாற்றப்படும்போது நாணய மாற்றக் கட்டணம் விதிக்கப்படும். வங்கிக் கணக்கு இல்லாத நாணயத்தில் நீங்கள் ஒரு ஆர்டரைப் பெறும்போது இது நிகழும், எனவே அந்த நிதி உங்கள் இயல்புநிலை நாணய வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும். ஆர்டரின் நாணயத்திற்குப் பொருந்தும் வங்கிக் கணக்கு உங்களிடம் இருந்தால், நாணய மாற்றக் கட்டணம் ஏதும் விதிக்கப்படாது.
போலாந்தில் உள்ள Shopify Payments மூலம் ஆதரிக்கப்படும் பேஅவுட் நாணயங்கள்
போலாந்தில் Shopify Payments ஐப் பயன்படுத்தும்போது எந்தெந்த நாணயங்களில் நீங்கள் பேஅவுட்களைப் பெறலாம், வங்கிக் கணக்கு எங்கு இருக்க வேண்டும், மற்றும் அவற்றிற்குப் பல-நாணய பேஅவுட் கட்டணங்கள் விதிக்கப்படுமா என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| பேஅவுட் நாணயம் | வங்கிக் கணக்கு இருப்பிடம் | உள்நாட்டு நாணயம் | பல-நாணய பேஅவுட் கட்டணம் |
|---|---|---|---|
| EUR | ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜிப்ரால்டர், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலாந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் | ஆம் | இல்லை |
| PLN | போலாந்து | ஆம் | இல்லை |
| AUD, CAD, CHF, CZK, DKK, GBP, HKD, HUF, JPY, NOK, NZD, RON, SEK, SGD, ZAR | ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜிப்ரால்டர், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலாந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் | இல்லை | ஆம் |
| USD | ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜிப்ரால்டர், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலாந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம், அமெரிக்கா | இல்லை | ஆம் |
நீங்கள் பல நாணயங்களில் பேஅவுட்களைப் பெற விரும்பினால், நாணயம், Shopify சந்தாத் திட்டம், இருப்பிடம் மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான சில குறிப்பிட்ட தேவைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். பல-நாணய பேஅவுட்கள் குறித்து மேலும் அறிக.
பேஅவுட்களைப் பார்த்தல்
உங்கள் Shopify நிர்வாகியின் நிதி பக்கத்திலிருந்து உங்கள் பேஅவுட்களை நீங்கள் பார்க்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > பேஅவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
நிதி என்பதைத் தட்டவும்.
பேஅவுட்களைக் காட்டு என்பதைத் தட்டவும்.
வரி அறிக்கையிடல்
ஒரு வணிகராக, வரி அறிக்கையிடல் உட்பட, பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் அதிகார வரம்பைப் பொறுத்து, உள்ளூர் வரி அதிகாரிகளிடம் உங்கள் விற்பனையைப் புகாரளிக்க Shopify Payments க்கும் வேண்டியிருக்கலாம்.
அயர்லாந்தைத் தவிர ஐரோப்பாவில் உள்ள ஸ்டோர்களுக்கான Shopify Payments கட்டணங்களில் மதிப்புக்கூட்டு வரி (VAT) சேர்க்கப்படவில்லை. உங்கள் VAT அறிக்கையில் உள்ளூரில் பொருந்தக்கூடிய வரி வீதத்தில் நீங்கள் VAT கணக்கிட வேண்டியிருக்கலாம். இந்தத் தகவலைப் பெற, நீங்கள் உருவாக்கப்பட்ட ஒரு விலைப்பட்டியலைப் பதிவிறக்கலாம் அல்லது உங்களின் பரிவர்த்தனைத் தகவல்களுடன் ஒரு கோப்பை ஏற்றுமதி செய்யலாம்.
அயர்லாந்தில் உள்ள ஸ்டோர்களுக்கு, Shopify Payments கட்டணங்களுடன் சேர்த்து 23% VAT விதிக்கப்படும்.
உருவாக்கப்பட்ட ஒரு விலைப்பட்டியலைப் பதிவிறக்குதல்
உங்கள் வரிக் கோரிக்கையுடன் சமர்ப்பிக்க மாதாந்திர விலைப்பட்டியல்களை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு விலைப்பட்டியலிலும் அந்த மாதம் உங்கள் ஸ்டோரில் செய்யப்பட்ட அனைத்து ஆர்டர்களுக்கான பரிவர்த்தனைக் கட்டணங்களில் செலுத்தப்பட்ட மொத்த VAT அடங்கும். உருவாக்கப்பட்ட விலைப்பட்டியல்கள் UTC நேரமண்டலத்தைப் பயன்படுத்துகின்றன, இது உங்கள் ஸ்டோரின் நேரமண்டலத்திலிருந்து மாறுபட்டிருக்கலாம். உங்கள் ஸ்டோரின் நேரமண்டலத்தைப் பயன்படுத்தும் அறிக்கை உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்கள் ஸ்டோரின் பரிவர்த்தனைகளின் பட்டியலை நீங்கள் ஒரு CSV கோப்பாக ஏற்றுமதி செய்யலாம்.
ஒவ்வொரு மாதத்திற்குமான விலைப்பட்டியல் அடுத்த மாதத்தின் 5ஆம் தேதியன்று உருவாக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஜூன் மாதத்திற்கான விலைப்பட்டியல் ஜூலை 5ஆம் தேதி உருவாக்கப்படும். ஒரு மாதத்தில் Shopify Payments மூலம் எந்தப் பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லையெனில், அந்த மாதத்திற்கு எந்த விலைப்பட்டியலும் உருவாக்கப்படாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > பேஅவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி ஆவணங்கள் உரையாடல் பெட்டியில், நீங்கள் பதிவிறக்க விரும்பும் விலைப்பட்டியலுக்கு, PDFஐப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிவர்த்தனைகளை ஏற்றுமதி செய்தல்
உங்கள் ஸ்டோரின் பரிவர்த்தனைகளின் பட்டியலை நீங்கள் ஒரு CSV கோப்பாக ஏற்றுமதி செய்யலாம். CSV கோப்பானது ஐரோப்பிய வணிகர்களுக்கான VAT நெடுவரிசையை உள்ளடக்கியிருக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > பேஅவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
பரிவர்த்தனைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் உலாவியில் ஒரு CSV கோப்பு பதிவிறக்கப்படும்.
விரிதாள் எடிட்டரில் CSV கோப்பைத் திறக்கவும். CSV கோப்பின் கடைசி நெடுவரிசையானது ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வசூலிக்கப்பட்ட VAT தொகையைக் காட்டுகிறது.
நீங்கள் வசூலித்துள்ள மொத்த VAT தொகையைக் கணக்கிட SUM கருவியைப் பயன்படுத்தவும்.