அமெரிக்காவிற்கான Shopify Payments
உங்கள் Shopify ஸ்டோரில் செக்அவுட்டின் போது பல்வேறு கட்டண முறைகளை ஏற்பதற்கு அமெரிக்காவில் நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்தலாம். உங்களின் Shopify கணக்கை அமைக்கும்போது Shopify Payments ஐச் செயல்படுத்தலாம். உங்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் வணிகத் தகவலை நீங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். Shopify Payments ஐப் பயன்படுத்தும்போது தேவைப்படும் தகவல்கள் பற்றி மேலும் அறியவும்.
Shopify Payments மூலம், உங்களின் கட்டணச் செயலாக்கம் மற்றும் ஆர்டர் மேலாண்மைச் சிஸ்டங்களை நேரடியாக உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நிர்வகிக்கலாம். மோசடிக் கண்டறிதல் மற்றும் 3D Secure போன்ற குறியாக்க முறைகள் வாயிலாக வாடிக்கையாளர்களின் தரவை Shopify Payments பாதுகாக்கிறது. வாடிக்கையாளரின் கார்டு மூலம் செய்யப்படும் கொள்முதல்களுக்கு Shopify Payments இல் உங்களிடம் விதிக்கப்படும் கட்டணச் செயலாக்க விகிதங்கள் உங்கள் Shopify கணக்கிற்கான சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது.
அமெரிக்காவிற்கான Shopify Payments மூலமாக நீங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பேமெண்ட்டுகள் மற்றும் விரைவான செக்அவுட் பேமெண்ட்டுகளை ஏற்கலாம். ஆர்டர்களுக்குப் பணம் செலுத்தும்போது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதல் வசதியை வழங்கும் உள்ளூர் கட்டண முறைகளையும் நீங்கள் ஏற்கலாம்.
இந்தப் பிரிவில்
அமெரிக்காவில் Shopify Payments ஐப் பயன்படுத்துவதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல் தேவைகள்
அமெரிக்காவில் Shopify Payments உடன் உங்கள் வங்கிக் கணக்கை இணைத்தல்
அமெரிக்காவில் Shopify Payments மூலமான வாடிக்கையாளர் கட்டண முறைகள்
அமெரிக்காவிற்கான Shopify Payments மூலம் படிவம் 1099-K வரி அறிக்கை அளித்தல்