உள்நாட்டு, சர்வதேச மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) கிரெடிட் கார்டுகளைப் புரிந்துகொள்ளுதல்

உள்நாட்டு, சர்வதேச மற்றும் EEA போன்ற வெவ்வேறு வகையான கிரெடிட் கார்டுகள் குறித்த விரிவான மேலோட்டத்தை இந்தப் பக்கம் வழங்குகிறது. உள்நாட்டு கார்டுகள் என்பவை வணிகம் நடைபெறும் அதே நாட்டில் வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படுபவை, சர்வதேச கார்டுகள் என்பவை வேறொரு நாட்டில் வழங்கப்பட்டவை என்பதை இது விளக்குகிறது. கூடுதலாக, பல்வேறு EEA நாடுகளில் வழங்கப்பட்டிருந்தாலும் உள்நாட்டுக் கார்டுகளைப் போலவே கருதப்படும் EEA கார்டுகள் குறித்தும், ஒவ்வொரு வகைக்கும் ஆதரிக்கப்படும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியல்கள் குறித்தும் இந்தப் பக்கம் விவரிக்கிறது.

உள்நாட்டுக் கார்டுகள்

உள்நாட்டு கார்டுகள் என்பவை உங்கள் பிசினஸ் அமைந்துள்ள அதே நாடு அல்லது பிராந்தியத்தில் வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகள் ஆகும். அதாவது, கிரெடிட் கார்டை வழங்கிய நிதி நிறுவனமானது உங்கள் பிசினஸ் அமைந்துள்ள அதே நாடு அல்லது பிராந்தியத்தில் உள்ளது.

உதாரணமாக, உங்கள் பிசினஸ் ஜப்பானில் அமைந்துள்ளது என வைத்துக்கொள்வோம், ஒரு வாடிக்கையாளர் ஜப்பானைச் சேர்ந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்திக் கொள்முதல் செய்கிறார். இது ஒரு உள்நாட்டு கிரெடிட் கார்டு கொள்முதல் ஆகும்.

சர்வதேச கார்டுகள்

சர்வதேச கார்டுகள் என்பவை உங்கள் பிசினஸ் அமைந்துள்ள இடத்தைவிட வேறு நாடு அல்லது பிராந்தியத்தில் வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகள் ஆகும். அதாவது, கிரெடிட் கார்டை வழங்கிய நிதி நிறுவனமானது உங்கள் பிசினஸ் அமைந்துள்ள நாட்டைவிட வேறு நாட்டில் உள்ளது.

உதாரணமாக, உங்கள் பிசினஸ் ஜெர்மனியில் அமைந்துள்ளது என வைத்துக்கொள்வோம், ஒரு வாடிக்கையாளர் யுனைடெட் ஸ்டேட்ஸைச் சேர்ந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்திக் கொள்முதல் செய்கிறார். வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு உங்கள் பிசினஸ் அமைந்துள்ள இடத்தைவிட வேறு நாடு அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்தது என்பதால், இது ஒரு சர்வதேச கிரெடிட் கார்டு கொள்முதல் ஆகும்.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) கார்டுகள்

EEA கார்டுகள் என்பவை ஐரோப்பாவில் உள்ள குறிப்பிட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகள் ஆகும். அதாவது, கிரெடிட் கார்டை வழங்கிய நிதி நிறுவனம் உங்கள் பிசினஸ் அமைந்துள்ள இடத்தைவிட வேறு நாடு அல்லது பிராந்தியத்தில் இருக்கலாம். EEA கார்டுகள் உள்நாட்டு கார்டுகளைப் போலவே கையாளப்படுகின்றன.

உதாரணமாக, உங்கள் பிசினஸ் நெதர்லாந்தில் அமைந்துள்ளது என வைத்துக்கொள்வோம், ஒரு வாடிக்கையாளர் அயர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்திக் கொள்முதல் செய்கிறார். இது ஒரு EEA கிரெடிட் கார்டு கொள்முதல் ஆகும். ஆதரிக்கப்படும் EEA நாடு அல்லது பிராந்தியத்தில் அது வழங்கப்பட்டதால், உங்கள் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு ஒரு EEA கிரெடிட் கார்டு ஆகும்.

பின்வரும் அட்டவணைகளில் EEA கார்டுகளாக ஆதரிக்கப்படும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியல் உள்ளது.

வட ஐரோப்பிய நாடுகளின் குறியீடுகள்

EEA கார்டுகள் ஆதரிக்கப்படும் வட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியல்.
நாடு அல்லது பிராந்தியம்நாட்டின் குறியீடு
டென்மார்க்DK
எஸ்டோனியாEE
ஃபரோ தீவுகள்FO
பின்லாந்துFI
கிரீன்லாந்துGL
குர்ன்சிGG
ஐஸ்லாந்துIS
லாட்வியாLV
ஐல் ஆஃப் மேன்IM
ஜெர்சிJE
லிதுவேனியாLT
நார்வேNO
ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மேயன்SJ
ஸ்வீடன்SE

தென் ஐரோப்பிய நாடுகளின் குறியீடுகள்

EEA கார்டுகள் ஆதரிக்கப்படும் தென் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியல்.
நாடு அல்லது பிராந்தியம்நாட்டின் குறியீடு
அண்டோராAD
குரோஷியாHR
சைப்ரஸ்CY
ஜிப்ரால்டர்GI
கிரீஸ்GR
ஹோலி சீ (வாட்டிகன் சிட்டி ஸ்டேட்)VA
இஸ்ரேல்IL
இத்தாலிIT
மால்டாMT
மாசிடோனியாMK
மாண்டினீக்ரோME
போர்ச்சுகல்PT
சான் மரினோSM
செர்பியாRS
ஸ்லோவேனியாSI
ஸ்பெயின்ES
துருக்கிTR

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் குறியீடுகள்

EEA கார்டுகள் ஆதரிக்கப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியல்.
நாடு அல்லது பிராந்தியம்நாட்டின் குறியீடு
பல்கேரியாBG
செக் குடியரசுCZ
ஹங்கேரிHU
போலந்துPL
ருமேனியாRO
ஸ்லோவாக்கியாSK

மேற்கு ஐரோப்பிய நாடுகளின் குறியீடுகள்

EEA கார்டுகள் ஆதரிக்கப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியல்.
நாடு அல்லது பிராந்தியம்நாட்டின் குறியீடு
ஆஸ்திரியாAT
பெல்ஜியம்BE
பிரான்ஸ்FR
ஜெர்மனிDE
அயர்லாந்துIE
லிச்சென்ஸ்டீன்LI
லக்ஸம்பர்க்LU
மொனாக்கோMC
நெதர்லாந்துNL
சுவிட்சர்லாந்துCH

செயின்ட் பியர் மற்றும் மிக்குயிலான் (PM)

இந்தப் பிராந்தியம் வட அமெரிக்காவில் உள்ள ஒரு பிரெஞ்சுப் பகுதியாகும். செயின்ட் பியர் மற்றும் மிக்குயிலானுக்கான நாட்டுக் குறியீடு PM ஆகும்.