நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் தோல்வியடைந்த கட்டண முயற்சிகளைப் புரிந்துகொள்ளுதல்

நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் தோல்வியடைந்த கட்டண முயற்சிகளை வங்கிகள் எப்படிக் கையாளுகின்றன என்பதைப் பற்றி இந்தப் பக்கம் விளக்குவதுடன், இந்தச் சூழ்நிலைகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

நிலுவையில் உள்ள கட்டணங்களை வங்கிகள் கையாளும் விதம்

கட்டணம் செலுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்போது, அந்தப் பேமெண்ட் தோல்வியடைந்தாலும்கூட, பல வங்கிகள் உடனடியாகக் கட்டணங்களைக் காண்பிக்கும். பெரும்பாலான நேரங்களில், தோல்வியடைந்த கட்டண முயற்சிகள் நிலுவையில் உள்ள கட்டணங்களாகத் தோன்றும்; எனினும், சில வங்கிகள் அவற்றை வழக்கமான கட்டணங்களாகக் காட்டுகின்றன. நிலையைப் பொருட்படுத்தாமல் இந்தக் கட்டணங்கள், திருப்பிச் செலுத்தப்படுவதற்கு முன் குறுகிய காலத்திற்குக் காண்பிக்கப்படும்.

வாடிக்கையாளரின் கணக்கில் கட்டணம் காண்பிக்கப்படும் நேரமானது வங்கியைப் பொறுத்தது, ஆனால் இது பொதுவாக 3-5 நாட்களாக இருக்கும்.

நிலுவையில் உள்ள கட்டணங்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் தொடர்புகொள்ளுதல்

தங்களுக்குத் தெரியாத ஒரு கட்டணத்தைப் பற்றி வாடிக்கையாளர் உங்களைத் தொடர்புகொண்டால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. கட்டணத் தொகைக்கு இணையான ஆர்டர் உங்களிடம் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  2. ஆர்டர் எதுவும் இல்லை எனில், வாடிக்கையாளரிடம் பின்வருபவற்றை விளக்குங்கள்:
  • இந்தக் கட்டணம் தோல்வியடைந்த கட்டண முயற்சியிலிருந்து நிலுவையில் உள்ள அங்கீகாரமாக இருக்கக்கூடும்
  • 3-5 வணிக நாட்களுக்குள் கட்டணம் தானாகவே திரும்பப் பெறப்படும்
  • இந்தக் கட்டணம் வெறும் அங்கீகாரமா, தோல்வியடைந்த கட்டணமா அல்லது வெற்றிகரமான பரிவர்த்தனையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்கள் தங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளலாம்

வாடிக்கையாளரின் கணக்கில் ஆர்டர் எதுவும் இல்லாமல் 5 வணிக நாட்களுக்கு மேலாகவும் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டிருந்து, எதற்கான கட்டணம் என்பதை வாடிக்கையாளரின் வங்கியால் தீர்மானிக்க முடியவில்லை எனில், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.