Shopify-இன் இணக்க அறிக்கைகளைப் பார்த்தல்

தகவல் பாதுகாப்புத் தரநிலைகளுடன் Shopify-இன் இணக்கத்தை மதிப்பிட்ட பிறகு உருவாக்கப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் பார்க்க, உதவி மையத்தில் உள்ள இணக்க அறிக்கைகள் பக்கத்திற்குச் செல்லவும். Shopify-இல் பாதுகாப்பு குறித்து மேலும் அறிக.

Shopify-இன் அறிக்கைகள் குறித்த கண்ணோட்டத்தை இந்தப் பக்கம் வழங்குகிறது.

கட்டண அட்டைத் துறை (PCI) அறிக்கைகள்

கட்டண அட்டைத் துறை தரவுப் பாதுகாப்புத் தரநிலை (PCI DSS) என்பது கிரெடிட் கார்டு தகவலைச் சேமிக்கிற, செயலாக்குகிற அல்லது அனுப்புகிற நிறுவனங்களுக்கான பாதுகாப்புத் தரநிலையாகும். மோசடியைக் குறைக்க, பேமெண்ட் தரவைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகளை அதிகரிக்க இத்தரநிலை உருவாக்கப்பட்டது. PCI பாதுகாப்புத் தரநிலைகள் கவுன்சில் வகுத்துள்ள PCI DSS தேவைகளுக்கு எதிரான நிறுவனத்தின் மதிப்பீட்டை PCI அறிக்கைகள் வழங்குகின்றன.

PCI அறிக்கைகளின் விளக்கம்
அறிக்கையின் பெயர்விளக்கம்
PCI இணக்கச் சான்று (AoC)இணக்க அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி, தனது வருடாந்திர PCI DSS இணக்க மதிப்பீட்டின் முடிவுகளைச் சான்றளிப்பதற்கான படிவமே AoC ஆகும். ஒவ்வொரு வருடாந்திர PCI DSS இணக்க மதிப்பீட்டிற்குப் பிறகும் இந்தப் படிவத்தை Shopify மீண்டும் வெளியிடும். இந்த அறிக்கையைப் பார்க்க உங்கள் Shopify கணக்கில் உள்நுழைய வேண்டும்.
ஸ்கேன் இணக்கத்தின் PCI வெளிப்புற ASV பாதிப்பு ஸ்கேன் சான்று (AoSC)இது அங்கீகரிக்கப்பட்ட ஸ்கேனிங் விற்பனையாளர் (ASV) ஸ்கேன் இணக்கம் குறித்த Shopify-இன் காலாண்டுச் சான்றாகும். ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு புதிய சான்று வெளியிடப்படும்.

சேவை நிறுவனக் கட்டுப்பாட்டு (SOC) அறிக்கைகள்

தனியுரிமை, செயலாக்க நேர்மை, பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை மற்றும் ரகசியத்தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளைச் சேவை நிறுவனக் கட்டுப்பாட்டு (SOC) அறிக்கைகள் மதிப்பிடுகின்றன. அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சர்ட்டிஃபைடு பப்ளிக் அக்கவுண்டன்ட்ஸ் தணிக்கைத் தரநிலைகள் வாரியத்தால் (AICPA) தீர்மானிக்கப்படும் ட்ரஸ்ட் சர்வீசஸ் கிரிட்டீரியாவை (TSC) பூர்த்தி செய்யும் விதமாக SOC அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன.

SOC அறிக்கைகளின் விளக்கம்
அறிக்கையின் பெயர்விளக்கம்
SOC 3SOC 3 அறிக்கையில் Shopify-இன் பாதுகாப்பு மற்றும் கிடைக்கும் தன்மைப் பாதுகாப்புகள், அத்துடன் இந்தப் பாதுகாப்புகள் குறித்த வெளிப்புறத் தணிக்கைக் கருத்து ஆகியவை உள்ளன. இந்த அறிக்கையை இலவசமாகப் பகிரலாம்.
SOC 2 வகை 2SOC 2 வகை 2 அறிக்கையில் Shopify-இன் பாதுகாப்பு மற்றும் கிடைக்கும் தன்மைப் பாதுகாப்புகள், அத்துடன் இந்தப் பாதுகாப்புகள் குறித்த வெளிப்புறத் தணிக்கைக் கருத்து ஆகியவை உள்ளன.
SOC 2 பிரிட்ஜ் லெட்டர்SOC 2 அறிக்கையின் முடிவுத் தேதியான அறிக்கையிடல் காலத்திற்கும் பிரிட்ஜ் லெட்டர் வழங்கப்படும் காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இந்தக் கடிதத்தை Shopify வழங்குகிறது.
SOC 1 வகை 2SOC 1 வகை 2 அறிக்கையில் வணிகர் நிதி அறிக்கையிடல் தொடர்பான Shopify-இன் பாதுகாப்புகள், அத்துடன் இந்தப் பாதுகாப்புகள் குறித்த வெளிப்புறத் தணிக்கைக் கருத்து ஆகியவை உள்ளன.

PCI மற்றும் SOC அறிக்கைகள் குறித்து மேலும் அறிக.