பாதுகாப்பற்ற இணைப்பு எச்சரிக்கையைப் புரிந்துகொள்ளுதல்
மற்றொரு இணையதளத்தில் உள்ள ஸ்டோரின் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்குச் செல்லும் shopify.com இணைப்பைக் கிளிக் செய்யும் போது, இந்த இணைப்பு பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்ற பக்கம் திறக்கப்படலாம். இந்தப் பக்கம் என்பது ஒரு பாதுகாப்புச் சரிபார்ப்பாகும். ஃபிஷிங் இணைப்புகள் Shopify-லிருந்து வருவது போல் தோன்றி வேறு எதற்காவது உங்களை வழிநடத்தலாம் என்பதால், நீங்கள் தொடர்வதற்கு முன்பு இணைப்பு எங்கு செல்கிறது என்பதைச் சரிபார்க்கும் வாய்ப்பை இது உங்களுக்கு வழங்குகிறது.
நீங்கள் அந்த ஸ்டோரின் வாடிக்கையாளராக இருந்தால், வாடிக்கையாளராக எச்சரிக்கைக்குப் பதிலளித்தல் என்பதைப் பார்க்கவும். அந்த இணைப்புக்குச் சொந்தமான ஸ்டோரின் உரிமையாளராக நீங்கள் இருந்தால், உங்கள் ஸ்டோரின் இணைப்புகளிலிருந்து எச்சரிக்கையை அகற்றுதல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
பாதுகாப்பற்ற இணைப்பு எச்சரிக்கை எவ்வாறு செயல்படுகிறது
Shopify-இல் உள்ள ஸ்டோர்களில் அவற்றின் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்கு shopify.com/1234567890/account என்பது போன்று shopify.com முகவரி இருக்கும். ஒரு ஸ்டோர் தனது வாடிக்கையாளர் கணக்குகளுக்கு account.example.com போன்ற சொந்த டொமைனைப் பயன்படுத்தும் போது, shopify.com முகவரி பார்வையாளர்களை அந்த டொமைனுக்குத் திருப்பிவிடும்.
பார்வையாளர் திருப்பிவிடப்படுவதற்கு முன்பு, தானியங்குப் பாதுகாப்புச் சரிபார்ப்புகள் இலக்கு மற்றும் ஸ்டோர் ஆகிய இரண்டையும் மதிப்பாய்வு செய்யும். ஸ்டோரின் வாடிக்கையாளர் கணக்கு டொமைன் Shopify-இல் ஹோஸ்ட் செய்யப்படாமல் இருந்து, இந்த இணைப்பு பாதுகாப்பானது என்பதைச் சரிபார்ப்புகளால் உறுதிப்படுத்த முடியாவிட்டால், எச்சரிக்கைப் பக்கம் திறக்கப்படும். இந்த எச்சரிக்கை பெரும்பாலும் புதிய ஸ்டோர்களையே பாதிக்கிறது. எச்சரிக்கைப் பக்கமானது இலக்கு URL-ஐயும் பின்வரும் விருப்பத்தேர்வுகளையும் காண்பிக்கும்:
- திரும்பிச் செல்: நீங்கள் வந்த பக்கத்திற்கே உங்களைத் திருப்பியனுப்பும்.
- எப்படியும் தொடர்: இலக்கைத் திறக்கும்.
- நான் ஏன் இதைப் பார்க்கிறேன்?: இந்த உதவி மையப் பக்கத்தைத் திறக்கும்.
இந்த எச்சரிக்கை, ஸ்டோர் அல்லது இணையதளம் பாதுகாப்பற்றது என்பதைக் குறிக்கவில்லை. இணைப்பு பாதுகாப்பானது என்பதைச் சரிபார்ப்புகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதையே இது குறிக்கிறது. இந்த எச்சரிக்கையானது வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்கான shopify.com இணைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
வாடிக்கையாளராக எச்சரிக்கைக்குப் பதிலளித்தல்
இந்த இணைப்பு பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்ற பக்கம் திறக்கப்படும்போது, நீங்கள் தொடர்வதற்கு முன்பு பக்கத்தில் உள்ள இலக்கு URL-ஐ மதிப்பாய்வு செய்யவும்:
- ஸ்டோரின் இணையதளத்தை உங்களால் அடையாளம் காணமுடிந்து, நீங்கள் அங்குதான் செல்ல விரும்பினீர்கள் எனில், எப்படியும் தொடர் என்பதைக் கிளிக் செய்யவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஸ்டோரின் இணையதளத்தில் உள்ள உள்நுழைவு அல்லது கணக்கு இணைப்பைக் கிளிக் செய்திருக்கலாம்.
- உங்களுக்கு இணையதளத்தை அடையாளம் காணமுடியவில்லை என்றாலோ நீங்கள் அந்த இணைப்பை எதிர்பார்க்கவில்லை என்றாலோ, திரும்பிச் செல் என்பதைக் கிளிக் செய்யவும்.
தொடரலாமா என்பது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், இணைப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நீங்களே அதன் முகவரியை உள்ளிடுவதன் மூலம் ஸ்டோரின் இணையதளத்திற்குச் செல்லலாம். ஸ்டோரின் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தி நீங்கள் அந்த ஸ்டோரைத் தொடர்புகொள்ளலாம்.
உங்களுக்கு அறிமுகமில்லாத இணையதளத்தில் ஒருபோதும் கடவுச்சொற்கள், சரிபார்ப்புக் குறியீடுகள் அல்லது பேமெண்ட் விவரங்களை உள்ளிட வேண்டாம். வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக ஒரு ஸ்டோர் இது போன்ற இணைப்பைப் பயன்படுத்துகிறது என நீங்கள் நினைத்தால், அந்த ஸ்டோரைப் பற்றி Shopify-யிடம் புகாரளிக்கவும்.
உங்கள் ஸ்டோரின் இணைப்புகளிலிருந்து எச்சரிக்கையை அகற்றுதல்
உங்கள் ஸ்டோரின் கணக்கு இணைப்புகளை வாடிக்கையாளர்கள் திறக்கும்போது எச்சரிக்கை வருவதாக அவர்கள் புகாரளித்தால், அந்த எச்சரிக்கை காட்டப்படுவதை உங்களால் தடுக்க முடியும். வாடிக்கையாளர் கணக்குகளுக்குத் தங்களின் சொந்த துணை டொமைனைப் பயன்படுத்தும் ஸ்டோர்களுக்கும், அந்தத் துணை டொமைன் Shopify-இல் ஹோஸ்ட் செய்யப்படாமல் இருக்கும் போது மட்டுமே இந்த எச்சரிக்கை திறக்கப்படும்.
எச்சரிக்கையை அகற்ற, இந்த விருப்பத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்:
- உங்கள் துணை டொமைனை நேரடியாக Shopify-க்குச் சுட்டிக்காட்டவும்: மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர் மூலமாக உங்கள் துணை டொமைனை நீங்கள் இணைத்திருந்தால், உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனுக்கான வாடிக்கையாளர் கணக்குகளின் துணை டொமைனை உருவாக்கி இணைத்தல் என்பதில் விவரிக்கப்பட்டுள்ளபடி, அதன் DNS பதிவு நேரடியாக Shopify-ஐச் சுட்டிக்காட்டுவதை உறுதிசெய்யவும். மூன்றாம் தரப்பு ப்ராக்ஸி வழியாக வழிநடத்தப்படும் துணை டொமைன்கள் Shopify-இல் ஹோஸ்ட் செய்யப்பட்டதாக அடையாளம் காணப்படாமல் போகலாம்.
- உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் URL-க்கு நேரடியாக இணைக்கவும்: இணைப்பைக் கட்டுப்படுத்தும் இடங்களில் எல்லாம்
shopify.comமுகவரிக்குப் பதிலாக, உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் URL-ஐப் பயன்படுத்தவும். உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் URL-ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நேராக உங்கள் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்குச் செல்வார்கள். இதற்கான படிகளுக்கு, புதிய வாடிக்கையாளர் கணக்குகள் டொமைனுக்கு ஏதேனும் ஹார்ட்கோட் செய்யப்பட்ட இணைப்புகளைப் புதுப்பித்தல் என்பதைப் பார்க்கவும்.
எச்சரிக்கை தொடர்ந்தால் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்
ஒரு ஸ்டோருக்கான எச்சரிக்கையை Shopify ஆதரவால் முடக்க முடியாது. உங்களின் துணை டொமைன் நேரடியாக Shopify-ஐச் சுட்டிக்காட்டிய பிறகும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தொடர்ந்து காட்டப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:
- உங்கள் ஸ்டோரின் URL
- எச்சரிக்கைக்கு வழிகோலும் இணைப்பு
- உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் URL
- எச்சரிக்கைப் பக்கத்தின் திரைப்பிடிப்பு