போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு (TLS)

உங்கள் Shopify நிர்வாகி மற்றும் உங்களின் ஸ்டோருடனான அனைத்து இணைப்புகளையும் பாதுகாக்க, Shopify போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பைப் (TLS) பயன்படுத்துகிறது.

போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு (TLS) என்பது இணையம் வழியான தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறியாக்க நெறிமுறையாகும். உங்கள் உலாவியின் முகவரிப் பட்டியில், https:// என்று தொடங்கும் URL-க்கு அருகில் ஒரு பூட்டு ஐகான் காட்டப்பட்டால், அந்த இணைப்பு TLS-ஐப் பயன்படுத்துகிறது என்று அர்த்தம். உங்களின் இணைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் இணைப்புகள் உட்பட, Shopify-க்கான அனைத்து இணைப்புகளுக்கும் TLS பொருந்தும். TLS நெறிமுறையின் TLS 1.2 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளை Shopify ஆதரிக்கிறது.

பழைய SSL (பாதுகாப்பான சாக்கெட்ஸ் லேயர்) நெறிமுறைக்கு மாற்றாக TLS வந்தபோதிலும், TLS மற்றும் SSL ஆகிய சொற்கள் இன்னமும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேறு வகையில் கூறினால், SSL சான்றிதழ் என்பது உண்மையில் ஒரு TLS சான்றிதழாகும்.

உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனை இணைத்த பிறகு, TLS சான்றிதழ் வழங்கப்பட 48 மணிநேரம் வரை ஆகலாம். 48 மணிநேரத்திற்குப் பிறகும், நீங்களோ அல்லது உங்கள் வாடிக்கையாளர்களோ Your connection is unsecure என்பது போன்ற பிழைச் செய்தியைக் கண்டால், நீங்கள் கூடுதல் சிக்கல் தீர்த்தலைச் செய்ய வேண்டியிருக்கலாம். மேலும் தகவலுக்கு, உங்கள் Shopify ஸ்டோருக்கான பாதுகாப்பான இணைப்புகளை இயக்குதல் என்பதைப் பார்க்கவும்.