தனியுரிமை
Shopify தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. உங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு இது முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்கிறது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தகவல் மீதான வெளிப்படைத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் வழங்கும் வகையில் Shopify அதன் தளத்தை வடிவமைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்கும் வகையில் எங்கள் தளத்தை நீங்கள் பயன்படுத்துவதை எளிதாக்க வேண்டும் என Shopify நம்புகிறது. கூடுதல் தகவலுக்கு Shopify தனியுரிமைக் கொள்கை மற்றும் Shopify தரவுச் செயலாக்க இணைப்பு ஆகியவற்றைப் பார்க்கவும்.
Shopify உங்களை வெற்றிகரமாகச் செயல்பட வைக்க எங்களால் இயன்றதைச் செய்கிறது, ஆனால் நீங்கள் சுயமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் உள்ளன. உங்களுக்கு எந்தச் சட்டங்கள் பொருந்தும் என்பது தொடர்பான குறிப்பிட்ட சட்ட ரீதியான கேள்விகளோ உங்கள் பிசினஸ் தொடர்பான குறிப்பிட்ட கேள்விகளோ இருந்தால், தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை நன்கு அறிந்த உள்ளூர் வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்கவும்.