வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளை உள்ளமைத்தல்

ஒரு Shopify வியாபாரி என்ற வகையில், உங்கள் வாடிக்கையாளர்களின் தனியுரிமையை உறுதிசெய்வது மிகவும் முக்கியமானது. பல பிராந்தியங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் தனியுரிமைக்கு அதிக மதிப்பளிக்கிறார்கள் மற்றும் ஒரு ஸ்டோரில் கொள்முதல் செய்வதற்கு அல்லது உலாவுவதற்கு முன்பு நம்பிக்கையின் அடையாளங்களாகக் குக்கீ பேனர்கள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள். தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்குவதற்கு உதவ, உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளை நீங்கள் தானியங்குபடுத்தலாம் மற்றும் நிர்வகிக்கலாம். தானியங்குபடுத்தப்பட்ட தனியுரிமைக் கொள்கை, குக்கீ பேனர் மற்றும் தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கம் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம், நீங்கள் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தலாம் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தரவு மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கலாம். நீங்கள் வணிகம் செய்யும் இடம் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் உள்ள இடத்தின் சட்டங்கள், மற்றும் சேவை விதிமுறைகள் மற்றும் தரவுச் செயலாக்க இணைப்பு போன்ற Shopify-உடனான உங்கள் ஒப்பந்தங்களின் அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்புகளையும் கட்டுப்பாடுகளையும் நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்.

வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளைப் புரிந்துகொள்ளுதல்

இந்த அமைப்புகள் உங்கள் வணிகச் செயல்பாடுகள் மற்றும் உங்கள் ஸ்டோருடன் ஒருங்கிணைக்கப்பட்ட மூன்றாம் தரப்புச் சேவைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றனவா என்பதை மதிப்பிடுவதற்கு, முதலில் உங்கள் Shopify நிர்வாகியின் வாடிக்கையாளர் தனியுரிமை பிரிவில் உள்ள இயல்புநிலை உள்ளடக்கம் மற்றும் அமைப்புகளை மதிப்பாய்வு செய்து சரிபார்க்க வேண்டும்.

Shopify Network Intelligence

Shopify Network Intelligence இயக்கப்பட்டிருக்கும்போது, பின்வருபவை உட்பட, உங்கள் வணிகத்தைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் மற்றும் மேம்படுத்தவும் உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட சேவைகள் எனப்படும் மேம்பட்ட அம்சங்களை இயக்குவதற்கான நுண்ணறிவுகளை உருவாக்க, பிற வணிகர்களிடமிருந்து பெறப்படும் வாடிக்கையாளர் தரவுடன் உங்கள் வாடிக்கையாளர் தரவையும் Shopify பாதுகாப்பாகப் பயன்படுத்தும்:

  • உங்கள் ஸ்டோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்கம்.
  • மேம்படுத்தப்பட்ட ஸ்டோர் செயல்திறன்.
  • உங்கள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டைப் பெருமளவில் பயன்படுத்திக்கொள்ள உதவும் சிறந்த விளம்பர இலக்கிடல்.

குறிப்பிட்ட Shopify செயலிகள் மற்றும் அம்சங்களுக்கு Shopify Network Intelligence இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

வேறு எந்த வணிகரும் உங்கள் தரவை அணுக முடியாது. உங்கள் Shopify நிர்வாகியில் எந்த நேரத்திலும் Shopify Network Intelligence-ஐ முடக்கலாம். இருப்பினும், உங்கள் ஸ்டோருக்கான Shopify Network Intelligence-ஐ நீங்கள் முடக்கினால், அது உங்கள் வாடிக்கையாளர் தரவைப் பயன்படுத்துவதற்கான Shopify-இன் திறனையும், அது தேவைப்படும் செயலிகள் மற்றும் அம்சங்களுக்கான உங்கள் அணுகலையும் கட்டுப்படுத்தும்.

Shopify Network Intelligence-ஐ இயக்குதல் அல்லது முடக்குதல் தொடர்பான கவனிக்கவேண்டியவை

Shopify Network Intelligence இயக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு இந்தச் சேவைகளை வழங்க Shopify அவர்களின் தரவை எவ்வாறு செயலாக்குகிறது என்பது குறித்து உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்யக் கூடுதல் தேவைகள் உள்ளன. அவற்றை இங்கே மதிப்பாய்வு செய்யவும்.

Shopify-இன் சில செயலிகள் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்த Shopify Network Intelligence தேவை. Shopify Network Intelligence-ஐ முடக்குவதற்கு முன், இந்த அமைப்பை முடக்கும்போது செயலிழக்கச் செய்யப்படும் மற்றும் நிறுவல் நீக்கப்படும் செயலிகள் மற்றும் அம்சங்களின் பின்வரும் பட்டியலைக் கவனமாக மதிப்பாய்வு செய்யவும்:

Shopify Network Intelligence முடக்கப்படும்போது இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

Shopify Network Intelligence-ஐ முடக்கு

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify Network Intelligence பிரிவில், முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Shopify Network Intelligence-ஐச் செயலிழக்கச் செய்வதன் விளைவாக அகற்றப்படும் அம்சங்கள் மற்றும் செயலிகளை மதிப்பாய்வு செய்யவும்.

  4. பெட்டியில் UNINSTALL என உள்ளிடவும்.

  5. நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் Shopify Network Intelligence-ஐ முடக்கிய பிறகு, மேம்படுத்தப்பட்ட சேவைகளை இயக்க, உங்கள் ஸ்டோரில் உள்ள கூடுதல் வாடிக்கையாளர் தரவை இனிமேல் Shopify பயன்படுத்தாது.

நீங்கள் எந்த நேரத்திலும் Shopify Network Intelligence-ஐ மீண்டும் இயக்கலாம், ஆனால் நிறுவல் நீக்கப்பட்ட எந்தச் செயலிகளும் மீட்டமைக்கப்படாது. இந்தச் செயலிகளை நீங்கள் மீண்டும் நிறுவி அமைக்க வேண்டும்.

Shopify Network Intelligence மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் தேர்வுகள்

Shopify-இன் தானியங்கு தனியுரிமை அமைப்புகளை (எடுத்துக்காட்டாக, குக்கீ பேனர் மற்றும்/அல்லது விலகுவதற்கான பக்கம்) அல்லது Customer Privacy API-உடன் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்புக் கருவிகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், Shopify Network Intelligence-இல் உங்கள் தளத்தில் வாடிக்கையாளரின் ஒப்புதல் தேர்வுகளை Shopify மதிக்கிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான கூடுதல் விவரங்களை நாங்கள் கீழே வழங்கியுள்ளோம்.

Shopify Network Intelligence இயக்கப்பட்டிருக்கும்போது:

  • வாடிக்கையாளர் ஒரு வணிகருடன் தங்கள் தரவின் விற்பனை/பகிர்விலிருந்து விலகினால், அதாவது உலகளாவிய தனியுரிமைக் கட்டுப்பாடு (GPC) தலைப்பு, Shopify-இன் தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கம் அல்லது Customer Privacy API-உடன் சரியாக ஒருங்கிணைக்கப்பட்ட மூன்றாம் தரப்புக் கருவி ஆகியவற்றைப் பயன்படுத்தி விலகினால், அந்த வாடிக்கையாளரின் தளச் செயல்பாடு குறியிடப்படும், இதனால் விளம்பர நோக்கங்களுக்காக அதனை Shopify Network Intelligence பயன்படுத்தாது.
  • Shopify-இன் குக்கீ ஒப்புதல் பேனர் அல்லது Customer Privacy API-உடன் (மேலும் பரிந்துரைக்கப்பட்ட உரை எங்களிடம் இங்கே உள்ளது) சரியாக ஒருங்கிணைக்கப்பட்ட மூன்றாம் தரப்புக் குக்கீ பேனர் செயலியைப் பயன்படுத்தி, தேவையற்ற குக்கீகள் அல்லது பிற கண்காணிப்புத் தொழில்நுட்பங்களை வணிகரிடம் பயன்படுத்த வாடிக்கையாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அந்தத் தளத்திலிருந்து பெறப்படும் வாடிக்கையாளரின் சாதனத் தரவு குறியிடப்படும், இதனால் விளம்பர நோக்கங்கள் உள்பட (அதற்கு மட்டும் கட்டுப்படாமல்) தேவையற்ற எந்தவொரு நோக்கங்களுக்காகவும் அதனை Shopify Network Intelligence பயன்படுத்தாது.
  • வாடிக்கையாளர் ஒருவர் வணிகரிடம் தனது தரவை நீக்குமாறு கோரினால், அவரது தரவு Shopify Network Intelligence-இல் இருந்தும் நீக்கப்படும். வாடிக்கையாளர் Shopify தனியுரிமைப் போர்ட்டலை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பர நோக்கங்களுக்காகத் தனது தரவை Shopify பகிர்வதிலிருந்து நீக்கக் கோரலாம் அல்லது அதிலிருந்து விலகலாம்.

தானியங்கு தனியுரிமை அமைப்புகள்

உங்கள் ஸ்டோர் அமைப்புகளில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு ஏற்ப தானாகவே மாறுவதன் மூலம், தனியுரிமைச் சட்டங்களுக்கு உங்கள் ஸ்டோர் இணங்க, தானியங்கு தனியுரிமை அமைப்புகள் உதவும். இந்தப் பொதுக் கூறு, செக்அவுட்டிலும் தீம்களிலும் ஆதரிக்கப்படும் அனைத்து 32 மொழிகளையும் ஆதரிக்கிறது; வெளிப்படைத்தன்மைக்காக அனைத்துப் புதுப்பிப்புகளும் உங்களின் ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவில் பதிவுசெய்யப்படும். உங்களின் ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவை நீங்கள் இங்கே அணுகலாம். நீங்கள் அனைத்துப் பதிப்புகளையும் ஏற்றுமதி செய்யலாம். உங்கள் தனியுரிமைக் கொள்கையைத் தானாகவே புதுப்பிக்கும் அமைப்புகளின் பட்டியலுக்கு, Liquid மாறிகள் மூலம் உங்கள் தனியுரிமை அமைப்புகளைத் தனிப்பயனாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

நீங்கள் ஒரு புதிய ஸ்டோரை அமைக்கும்போது, தானியங்கு தனியுரிமை அமைப்புகள் இயல்பாகவே செயல்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள ஸ்டோர்களுக்கு, நீங்கள் இந்தத் தானியங்கு தனியுரிமை அமைப்புகளைச் செயல்படுத்தலாம். எனவே, உங்களின் Shopify Network Intelligence அமைப்பை மாற்றுவது போன்ற சில அமைப்புகளை நீங்கள் மாற்றியமைக்கும்போது உங்கள் தனியுரிமைக் கொள்கையானது தானாகவே புதுப்பிக்கப்படும்.

உங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கைமுறையாகத் தனிப்பயனாக்க, தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்து பொத்தான் முடக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் திருப்பியளிப்பு மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை, ஷிப்பிங் கொள்கை மற்றும் தொடர்புத் தகவல் போன்ற பிற ஸ்டோர் கொள்கைகளுக்கான தானியக்கமாக்கல், அமைப்புகள் > கொள்கைகள் என்பதில் தனியாக நிர்வகிக்கப்படும். தானியங்கு ஸ்டோர் கொள்கைகள் பற்றி மேலும் அறிக.

தானியங்கு தனியுரிமை அமைப்புகளை அமைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.

  2. தனியுரிமைக் கொள்கை, குக்கீ பேனர் அல்லது தரவுப் பகிர்வு விலகல் பக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. தானியங்கு தனியுரிமை அமைப்புகளைச் செயல்படுத்த அல்லது முடக்க, நிலைமாற்று பொத்தானைப் பயன்படுத்தவும்.

  4. உங்கள் கொள்கை அல்லது அமைப்புகளைக் கைமுறையாகத் திருத்த, தானியங்கு அமைப்புகளை முடக்கிவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தனியுரிமைக் கொள்கையை உருவாக்கி நிர்வகித்தல்

தனியுரிமைக் கொள்கை என்பது, உங்களின் வணிகம் தனது வாடிக்கையாளர்கள் அல்லது இணையதளப் பார்வையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, சேமிக்கிறது மற்றும் பாதுகாக்கிறது என்பதை விவரிக்கும் ஒரு சட்ட ஆவணமாகும்.

நீங்கள் ஒரு புதிய ஸ்டோரை அமைக்கும்போது, தானியங்கு தனியுரிமை அமைப்புகள் இயல்பாகவே செயல்படுத்தப்படும். இருப்பினும், உங்கள் தனியுரிமைக் கொள்கையைக் கைமுறையாக வரைய, "தானியங்கு கொள்கையைப் பயன்படுத்து" என்பதை நீங்கள் முடக்கலாம்.

நீங்கள் Shopify Network Intelligence-ஐ இயக்கியிருந்தால், கூடுதல் சேவைகளுக்கான விதிமுறைகள் மற்றும் இங்குள்ள எங்களின் உதவி ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்களின் தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் சேர்க்க வேண்டியவை குறித்த கூடுதல் தேவைகளை மதிப்பாய்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் தானியங்கு தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்தினால், தேவையான பல வெளிப்படுத்தல்கள் ஏற்கனவே தானியங்கு தனியுரிமைக் கொள்கையில் சேர்க்கப்பட்டிருக்கும், ஆனால் எங்களால் தானியங்குபடுத்த முடியாத சில விஷயங்களும் உள்ளன, அவற்றை நீங்கள் இதுவரை மதிப்பாய்வு செய்து சேர்க்கவில்லை என்றால், இனி சேர்க்க வேண்டியிருக்கும். அனைத்து தானியங்கு தனியுரிமை அமைப்புகளையும் போலவே, உங்களின் தனியுரிமைக் கொள்கை உங்கள் வணிகத்திற்குப் பொருந்துகிறதா, உங்களின் நடைமுறைகளைத் துல்லியமாக விவரிக்கிறதா மற்றும் உங்களின் சட்டக் கடமைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்த அதைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.

  2. தனியுரிமைக் கொள்கை என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் தனியுரிமைக் கொள்கையைக் கைமுறையாக வரையவும் அல்லது உங்களின் அமைப்புகள் மாறும்போது தானாகவே புதுப்பிக்கப்படும் Shopify-இன் வார்ப்புரு தனியுரிமைக் கொள்கை உரையைச் செயல்படுத்த தானியங்கு கொள்கையைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டோர் கொள்கைகளைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.

உங்கள் தனியுரிமைக் கொள்கை வரலாற்றை ஏற்றுமதி செய்தல்

உங்கள் தனியுரிமைக் கொள்கையில் செய்யப்படும் மாற்றங்கள் காப்பகப்படுத்தப்பட்டு, உள்ளமைக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் அவற்றை அணுக முடியும். முந்தைய தனியுரிமைக் கொள்கைகளை Shopify 2 ஆண்டுகளுக்குச் சேமித்துவைக்கும். தேவைக்கேற்ப உங்களின் கொள்கைகளில் செய்யப்படும் மாற்றங்களின் பதிவுகளைப் பராமரிப்பது உங்களின் பொறுப்பாகும்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > கொள்கைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. எழுத்துப்பூர்வக் கொள்கைகள் பிரிவில், Horizontal menu > முந்தைய தனியுரிமைக் கொள்கைகளைப் பெறுக என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தனியுரிமைக் கொள்கை வரலாற்றை ஏற்றுமதி செய்க உரையாடலில், உங்கள் ஏற்றுமதி விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்துவிட்டு, தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுமதி செய்க என்பதைக் கிளிக் செய்யவும்.

Liquid மாறிகள் மூலம் உங்கள் தனியுரிமை அமைப்புகளைத் தனிப்பயனாக்குதல்

குறிப்பிட்ட ஸ்டோர் அமைப்புகளின் அடிப்படையில் உங்களின் தனியுரிமைக் கொள்கையை மாறும் வகையில் தனிப்பயனாக்க, Liquid மாறிகள் அனுமதிக்கின்றன.

நிலையான மாறிகள்

ஸ்டோர் தகவல் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட நிலையான Liquid மாறிகளின் பட்டியல் மற்றும் விளக்கங்கள்.
மாறிவிளக்கம்
{{address}}ஸ்டோர் முகவரி
{{email}}ஸ்டோர் மின்னஞ்சல்
{{shop_domain}}ஸ்டோர் டொமைன்
{{shop_name}}ஸ்டோர் பெயர்
{{last_updated}}தனியுரிமைக் கொள்கை கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி
{{data_sharing_opt_out_page_url}}Shopify-இன் தரவுப் பகிர்வு விலகல் பக்க அம்சத்தைப் பயன்படுத்தினால், தரவுப் பகிர்வு விலகல் பக்கத்தின் URL.

நிபந்தனைக்குட்பட்ட மாறிகள்

பிராந்தியம், நிறுவப்பட்ட செயலிகள் மற்றும் தரவு, குக்கீ ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையிலான நிபந்தனைகள் உள்ளிட்ட நிபந்தனைக்குட்பட்ட Liquid மாறிகளின் பட்டியல் மற்றும் விளக்கங்கள்.
மாறிவிளக்கம்
{% if selling_to_united_states %} ... {% endif %}அமெரிக்காவை (US) செயலில் உள்ள சந்தையாகக் கொண்டு விற்பனை செய்தல்
{% if selling_to_europe %} ... {% endif %}ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA), ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது சுவிட்சர்லாந்தைச் செயலில் உள்ள சந்தையாகக் கொண்டு விற்பனை செய்தல்
{% if using_additional_customer_data %} ... {% endif %}வாடிக்கையாளர் கணக்குகள் வகையைச் சேர்ந்த செயலி ஒன்று நிறுவப்பட்டுள்ளது
{% if shop_app_installed %} ... {% endif %}Shop செயலி நிறுவப்பட்டுள்ளது
{% if shop_pay_enabled %} ... {% endif %}Shop Pay செயல்படுத்தப்பட்டுள்ளது
{% if data_sale_opt_out_enabled %} ... {% endif %}Shopify தரவுப் பகிர்வு விலகல் பக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது
{% if shopify_network_intelligence_enabled %} ... {% endif %}Shopify Network Intelligence இயக்கப்பட்டுள்ளது
{% if cookie_banner_enabled %} ... {% endif %}எந்தவொரு பிராந்தியத்திலும் குக்கீ ஒப்புதல் அவசியமாகும்
{% if using_user_generated_content %} ... {% endif %}பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் வகையைச் சேர்ந்த செயலி ஒன்று நிறுவப்பட்டுள்ளது

குக்கீ பேனர்கள்

குக்கீ பேனர் என்பது குக்கீகளின் பயன்பாடு குறித்துப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க இணையதளத்தில் காண்பிக்கப்படும் ஓர் அறிவிப்பாகும், மேலும் இது குக்கீகள் மற்றும் அதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அவர்களின் ஒப்புதலைக் கேட்கிறது. குக்கீ ஒப்புதல் பேனரைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் privacy policy-ஐ வெளியிட வேண்டும்.

உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சேவைகளை வழங்க உதவும் குக்கீகள் மற்றும் Shopify Pixels உள்ளிட்ட Shopify-குறிப்பிட்ட கருவிகளை Shopify குக்கீ பேனர் நிர்வகிக்கிறது. உங்கள் ஸ்டோரில் உள்ள செயலிகள் மூலம் மூன்றாம் தரப்புக் குக்கீகள் அல்லது பிக்சல்களை நீங்கள் மேனுவலாக நிறுவியிருந்தால் அல்லது ஒருங்கிணைத்திருந்தால், மூன்றாம் தரப்புக் குக்கீ பேனரை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கலாம் அல்லது அவை வாடிக்கையாளர் ஒப்புதலை மதிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த பிரத்தியேக லாஜிக்கைச் சேர்க்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் புதிய ஸ்டோரை அமைக்கும்போது, தானியங்கு தனியுரிமை அமைப்புகள் இயல்பாகவே செயல்படுத்தப்படும், அதாவது UK மற்றும் EEA பிராந்தியங்களில் உங்களுக்குச் செயல்படும் சந்தைகள் இருந்தால், இந்தப் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களுக்காக உங்கள் குக்கீ பேனரை நாங்கள் தானாகவே உள்ளமைப்போம். எனினும், உங்கள் குக்கீ பேனரை மேனுவலாக உருவாக்க Use automated settings என்பதை நீங்கள் முடக்கலாம். உள்ளமைக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களுக்கு Shopify குக்கீ பேனரானது, ஸ்டோர்ஃபிரண்ட், கார்ட் மற்றும் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களில் காட்டப்படலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.

  2. Cookie banner என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Regions and content பிரிவில், தானியங்கு அமைப்புகள் அல்லது மேனுவல் தனிப்பயனாக்கம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்த, Use automated settings பொத்தான் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இல்லையெனில், நிலைமாற்றியைப் பயன்படுத்தி அதனைச் செயல்படுத்தவும். பிராந்தியங்கள் மற்றும் உள்ளடக்கத்திற்கான Shopify-இன் சமீபத்திய பரிந்துரைகளுடன் உங்கள் அமைப்புகள் இணைந்திருப்பதை இந்த விருப்பம் உறுதிசெய்கிறது.
    • மேனுவல் பிராந்தியத் தனிப்பயனாக்கத்திற்கு, Regions பிரிவில் Edit என்பதைக் கிளிக் செய்து, குக்கீ பேனர் காட்டப்பட வேண்டிய பிராந்தியங்களைத் தேர்ந்தெடுத்து, Done என்பதைக் கிளிக் செய்த பின்னர், Save என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மேனுவல் உள்ளடக்கத் தனிப்பயனாக்கத்திற்கு, Content பிரிவில் Edit என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மாற்றங்களைச் செய்து, Done என்பதைக் கிளிக் செய்த பின்னர், Save என்பதைக் கிளிக் செய்யவும்..
  4. உங்கள் ஸ்டோரின் பிராண்டிங்கிற்கு ஏற்றவாறு வண்ணங்கள் மற்றும் விருப்பத்தேர்வுகள் உட்பட உங்கள் குக்கீ பேனரின் தோற்றத்தை மாற்றி அமைத்து, பின்னர் Save என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. Position பிரிவில், உங்கள் பேனர் நிலைகளைத் தேர்வுசெய்து, பின்னர் Save என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. விருப்பத்தேர்வு: உங்கள் ஸ்டோரில் குக்கீ பேனரை முன்காண்பதற்கு, Position பிரிவில் View என்பதைக் கிளிக் செய்யவும்.

குக்கீ விருப்பத்தேர்வுகளை மாற்றுதல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள தரவு சேகரிப்புகளுக்கான ஒப்புதல் விருப்பத்தேர்வுகளை குக்கீ பேனர் மூலமாக வாடிக்கையாளர்கள் அணுக அனுமதிக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தேர்வுகளை அணுகும்போது, தரவு சேகரிப்பிற்கான தங்கள் விருப்பத்தேர்வுகளையும் புதுப்பிக்கவும் மாற்றவும் முடியும். உங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்தேர்வுகளுக்கான இணைப்பு உங்கள் ஸ்டோரின் கொள்கைகள் பிரிவிலும், பேனர் காட்டப்படும்போதெல்லாம் சேர்க்கப்படும்.

செக்அவுட்டில் குக்கீ பேனரைக் காட்டுவது செயல்படுத்தப்படவில்லை எனில், உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரின் அடிக்குறிப்பு மெனுவில் உள்ள Cookie preferences என்பதைப் பயன்படுத்தித் தங்களின் குக்கீ விருப்பத்தேர்வுகளை மேனுவலாக அணுகலாம்.

மூன்றாம் தரப்புக் குக்கீ பேனர் செயலி அல்லது ஒப்புதல் மேலாண்மைத் தளம் (consent management platform) மூலம் குக்கீ பேனரை நீங்கள் உள்ளமைக்கலாம். உங்கள் ஸ்டோரின் குக்கீ பேனர் உள்ளமைவு தொடர்பான கேள்விகளுக்கு, செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும்.

வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளிலும் உங்கள் மூன்றாம் தரப்புச் செயலி அமைப்புகளிலும் ஒரே ஒப்புதல் பிராந்தியங்களைப் பயன்படுத்துங்கள். இந்தப் பிராந்தியங்கள் பொருந்தவில்லை எனில், பார்வையாளர் ஒப்புதல் வழங்குவதற்கு முன்பே அத்தியாவசியமற்ற தரவு செயலாக்கப்படலாம்.

படிகள்:

  1. செயலியைக் கண்டறிந்து நிறுவ, Shopify App Store இல் உள்ள குக்கீ ஒப்புதல் வகை என்பதை ஆராயுங்கள். செயலியை நிறுவிய பிறகு, அதன் குக்கீ பேனரை இயக்கி, அந்தப் பேனர் காட்டப்படும் பிராந்தியங்களை உள்ளமையுங்கள்.
  2. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.
  3. Privacy settings பிரிவில், Cookie banner என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. குக்கீ பேனரை அகற்று என்பது இருந்தால், கிடைமட்ட மெனு > குக்கீ பேனரை அகற்று என்பதைக் கிளிக் செய்து, பின்னர் அகற்று என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
  5. Shopify நிர்வாகியில் ஒப்புதல் பிராந்தியங்களை அமைக்கவும்:
    • பிரத்தியேகப் பேனர் பிராந்தியங்களை அமை என்பது இருந்தால், கிடைமட்ட மெனு > பிரத்தியேகப் பேனர் பிராந்தியங்களை அமை என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
    • இல்லையெனில், பிராந்தியங்கள் பிரிவில், திருத்து என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
  6. உங்கள் மூன்றாம் தரப்புச் செயலி அதன் குக்கீ பேனரைக் காட்டும் ஒவ்வொரு பிராந்தியத்தையும் தேர்ந்தெடுத்து, பின்னர் சேமி என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

மூன்றாம் தரப்புக் குக்கீ பேனர் அல்லது ஒப்புதல் மேலாண்மைத் தளத்தை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் குக்கீ பேனரில் பின்வரும் புதுப்பிப்புகளைச் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது:

  • உங்கள் குக்கீ பேனரில் Shopify-ஐ அதன் பெயரால் குறிப்பிடவும், உதாரணமாகப் பின்வரும் வார்த்தைகளில்:உங்களின் அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும் விளம்பரங்களைக் காட்டவும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளவும் Shopify உட்பட நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் குக்கீகளையும் பிற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். மேலும், நீங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த நோக்கங்களுக்காகக் குக்கீகளையோ பிற தொழில்நுட்பங்களையோ நாங்கள் பயன்படுத்த மாட்டோம். எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் அறிக.
  • உங்களின் தனியுரிமைக் கொள்கைக்கு இணைக்கவும், அதில் Shopify நுகர்வோர் தனியுரிமைக் கொள்கைக்கான இணைப்பும் இருக்க வேண்டும், இது Shopify எவ்வாறு வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவைச் சேகரித்துப் பயன்படுத்துகிறது என்பதையும், Shopify உடனான வாடிக்கையாளரின் தனியுரிமை உரிமைகளையும் விவரிக்கிறது. Shopify Network Intelligence-ஐப் பயன்படுத்தும்போது உங்களின் தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் சேர்க்க வேண்டிய வார்த்தைகள் குறித்த விரிவான தகவலுக்கு, Shopify Network Intelligence இயக்கப்பட்டிருக்கும்போதான தேவைகள் என்பதைப் பரிசீலிக்கவும்.

தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கத்தைச் சேர்

தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கம் என்பது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள ஒரு பிரத்யேகப் பக்கமாகும். இது Shopify மற்றும் பிற மூன்றாம் தரப்பினருடனான தங்கள் தனிப்பட்ட தரவுகளின் விற்பனை அல்லது பகிர்விலிருந்து பார்வையாளர்கள் விலகுவதற்கும், தனியுரிமைச் சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ளபடி "இலக்குவைக்கப்பட்ட விளம்பரமாகக்" கருதப்படக்கூடிய தரவுச் செயலாக்கத்திலிருந்து விலகுவதற்கும் அனுமதிக்கிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தகவல்களின் பயன்பாடு மற்றும் விநியோகத்தின் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். உலகளாவிய தனியுரிமைக் கட்டுப்பாட்டு (GPC) ஹெடர் இருக்கும்போது, தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கத்தை நீங்கள் பயன்படுத்தும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களுக்கு Shopify மற்றும் மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தரவு விற்பனை, பகிர்வு அல்லது இலக்குவைக்கப்பட்ட விளம்பரம் ஆகியவற்றிலிருந்து விலகுவது செயல்படுத்தப்படும். விற்பனை, பகிர்வு மற்றும் இலக்குவைக்கப்பட்ட விளம்பரம் பற்றிய மேலும் தகவலுக்கு, இங்கே உள்ள எங்கள் பக்கத்தைப் பார்க்கவும். தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் தனியுரிமைக் கொள்கையை வெளியிட வேண்டும்.

நீங்கள் Shopify Network Intelligence-ஐ இயக்கியிருந்து, பிற வணிகர்களுடனும் Shopify உடனுமான உங்கள் வாடிக்கையாளர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் விளம்பரங்களை இலக்கு வைப்பது போன்ற சில Shopify மேம்படுத்தப்பட்ட சேவைகளைப் பெற்றால், மற்றும் தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கம் தேவைப்படும் பிராந்தியங்களில் விற்பனை செய்தால், நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு விலகுவதற்கான உரிமையை வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, கூடுதல் சேவைகளுக்கான விதிமுறைகள் என்பதையும் வணிகருக்கான தேவைகள் பற்றிய எங்கள் உதவி மையப் பக்கத்தையும் இங்கே பார்க்கவும்.

தேவையான பணியாளர் அனுமதிகள்

தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கத்தைச் சேர்க்க, உங்களுக்குப் பின்வரும் பணியாளர் அனுமதிகள் தேவை:

  • ஸ்டோர் அமைப்புகள்: Manage settings
  • ஆன்லைன் ஸ்டோர்: Blog posts and pages
  • உள்ளடக்கம்: Menus

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.

  2. Data sharing opt-out page என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Regions and content பிரிவில், தானியங்கு அமைப்புகள் அல்லது மேனுவல் தனிப்பயனாக்கம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்த, Use automated settings பொத்தான் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இல்லையெனில், நிலைமாற்றியைப் பயன்படுத்தி அதனைச் செயல்படுத்தவும். பிராந்தியங்கள் மற்றும் உள்ளடக்கத்திற்கான Shopify-இன் சமீபத்திய பரிந்துரைகளுடன் உங்கள் அமைப்புகள் இணைந்திருப்பதை இந்த விருப்பம் உறுதிசெய்கிறது.
    • மேனுவல் பிராந்தியத் தனிப்பயனாக்கத்திற்கு, Regions பிரிவில் Edit என்பதைக் கிளிக் செய்து, தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கம் காட்டப்பட வேண்டிய பிராந்தியங்களைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Done என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மேனுவல் உள்ளடக்கத் தனிப்பயனாக்கத்திற்கு, Content பிரிவில் Edit என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மாற்றங்களைச் செய்து, பின்னர் Save என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Menus பிரிவில், உங்கள் ஸ்டோர் மெனுவிலிருந்து தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கத்தின் நிலையைத் தேர்வுசெய்து, பின்னர் Save என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தனியுரிமைத் தேர்வுகள் ஐகான்

வாடிக்கையாளர் தனியுரிமை அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோர் மெனுவில் தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கத்தின் இணைப்பைச் சேர்க்கும்போது, இணைப்பு உரைக்கு அடுத்து ஓர் ஐகான் தானாகவே புகுத்தப்படும். நீங்கள் வணிகம் செய்யும் அதிகார வரம்புகளில் இந்த ஐகான் தேவைப்படலாம்.

ஐகானின் தோற்றத்தை நீங்கள் தனிப்பயனாக்க வேண்டும் எனில், shopify-dns-link-icon என்ற CSS வகுப்பைப் பயன்படுத்தி அதை இலக்காகக் கொள்ளலாம்.

தனியுரிமை அமைப்பின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்

குக்கீ பேனர்கள் மற்றும் தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான அம்சங்களைச் செயல்படுத்துவது தரவு சேகரிப்பைப் பாதிக்கலாம்:

  • உள்ளமைக்கப்பட்ட குக்கீ பேனர் பிராந்தியங்களில்: ஒப்புதல் பெற்ற பின்னரே அவசியமற்ற தரவுகள் சேகரிக்கப்படுகின்றன, இதனால் பகுப்பாய்வு, மார்க்கெட்டிங் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் தரவு குறையக்கூடும். எடுத்துக்காட்டாக, குறைக்கப்பட்ட அமர்வு எண்ணிக்கைகள் மற்றும் மாற்று வீதங்கள் உட்பட அமர்வுத் தரவைச் சார்ந்திருக்கும் பிற அளவீடுகள் மூலம் இதைக் கவனிக்க முடியும். EEA மற்றும் UK போன்று, தரவு சேகரிப்பிற்கு ஒப்புதல் தேவைப்படும் பிராந்தியங்களில் பயன்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • UK, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) மற்றும் உள்ளமைக்கப்பட்ட பிற குக்கீ பேனர் பிராந்தியங்களுக்கு வெளியே: இயல்பாகவே இந்தப் பிராந்தியங்களில் குக்கீ பேனர் செயலில் இருக்காது. US போன்ற குக்கீ அடிப்படையிலான தரவு சேகரிப்புக்கு ஏற்பிசைவு ஒப்புதல் தேவைப்படாத பிராந்தியங்களில் பயன்படுத்துவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தவொரு பிராந்தியத்திலும் நீங்கள் குக்கீ பேனரைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யலாம்.
  • இயல்புநிலை அமைப்புகள்: நீங்கள் புதிய ஸ்டோரை அமைக்கும்போது இயல்பாகவே தானியங்கு தனியுரிமை அமைப்புகள் இயக்கப்பட்டிருக்கும். தானியங்கு தனியுரிமை அமைப்புகள் இயக்கப்படும்போது, நீங்கள் தற்பொழுது செயல்பாட்டில் வைத்துள்ள சந்தைகளுக்குத் தேவையெனில் குக்கீ பேனர் இயல்பாக இயக்கப்படும்.

குக்கீ அடிப்படையிலான வாடிக்கையாளர் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வின் தாக்கம் குறித்து மேலும் அறிய, பகுப்பாய்வு முரண்பாடுகள் குறித்த ஆவணங்களையும் Shopify இன் குக்கீ கொள்கையையும் பார்க்கவும். இந்தப் பிராந்தியங்களில் பெறப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் பிக்சல்கள் செயல்படும்.

தனியுரிமை அம்சங்களை உள்ளூர்மயமாக்குதல்

குக்கீ பேனர், தரவுப் பகிர்வு விலகல் பக்கம், தனியுரிமைக் கொள்கைப் பக்கம் போன்ற தனியுரிமை அம்சங்களை உள்ளூர்மயமாக்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் இந்தப் பக்கங்களை அணுகி பயன்படுத்த முடியும். உங்கள் இலக்குச் சந்தைகளின் மொழிகளில் இந்தப் பக்கங்களுக்கான இயல்புநிலை உள்ளடக்கத்தை உள்ளமைக்கலாம், முன்னோட்டம் பார்க்கலாம் மற்றும் அமைக்கலாம்.

வாடிக்கையாளர் தனியுரிமைப் பிரிவில் தனியுரிமை அம்சங்களை உள்ளூர்மயமாக்குதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.

  2. தனியுரிமை அமைப்புகள் பிரிவில், பின்வரும் படிகளில் ஒன்றை முடிக்கவும்:

    • Cookie banner என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Data sharing opt-out page என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Translate & Adapt செயலியைத் திறக்க, மேலும் செயல்கள் > உள்ளூர்மயமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். மாற்றாக, இணக்கமான வேறு மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலியைத் தேர்ந்தெடுக்கலாம்.

கொள்கைகள் பிரிவில் தனியுரிமை அம்சங்களை உள்ளூர்மயமாக்குதல்

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > கொள்கைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. Translate & Adapt செயலியைத் திறக்க, உள்ளூர்மயமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். மாற்றாக, இணக்கமான வேறு மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தனியுரிமை அம்சங்களை உள்ளூர்மயமாக்க Translate & Adapt செயலியைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Translate & Adapt என்பதற்குச் செல்லவும்.

  2. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், பின்வரும் படிகளில் ஒன்றை முடிக்கவும்:

    • Cookie banner என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கொள்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பக்கங்கள் > விலகல் பக்கத் தலைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இந்தத் தனியுரிமை அம்சங்களுக்கான உள்ளடக்கத்தை நேரடியாகவோ தானாகவோ மொழிபெயர்க்க, Translate & Adapt செயலியைப் பயன்படுத்தவும்.

மொழிகளை நிர்வகித்தல்

புதிய மொழியைச் சேர்க்கும்போது, Shopify உருவாக்கிய தீம்களுக்கான உங்கள் தனியுரிமைக் கொள்கை, குக்கீ பேனர், தரவுப் பகிர்வு விலகல் பக்கம் ஆகியவற்றுக்குத் தானாகவே தொழில்முறை மொழிபெயர்ப்புகள் வழங்கப்படும். மொழிகளை நிர்வகிப்பது குறித்தும் உங்கள் தனியுரிமைக் கொள்கை, குக்கீ பேனர் மற்றும் தரவுப் பகிர்வு விலகல் பக்கத்திற்குக் கிடைக்கும் மொழிபெயர்ப்புகள் குறித்தும் மேலும் அறியவும். ஒரு மொழி கிடைக்கவில்லை என்றால் எச்சரிக்கைச் செய்தி தோன்றும்.