உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளைப் புரிந்துகொள்ளுதல்

Shopify மூலம் தயாரிப்புகளை விற்கும்போது, உங்கள் பிசினஸுக்குப் பொருந்தக்கூடிய தனியுரிமை, தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவது முக்கியமாகும். தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகியவை ஈகாமர்ஸின் அடிப்படை அம்சங்கள் என்பதுடன் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் முக்கியமானவை. இந்தத் தேவைகள் தரவுக் குறைப்பு, வெளிப்படைத்தன்மை, கட்டுப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் Shopify நிர்வாகியில் உள்நுழையும்போது, நீங்கள் தனியுரிமைக் கொள்கையை அமைக்கலாம், குக்கீ பேனரைச் சேர்க்கலாம், பார்வையாளர்களின் தரவு விற்கப்படுவதையோ பகிரப்படுவதையோ அவர்கள் விலக்க அனுமதிக்கலாம், உங்கள் Shopify Network Intelligence அமைப்புகளைப் புதுப்பிக்கலாம் மற்றும் உங்கள் தரவின் புவியியல் சேமிப்பக இடம் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். Shopify Network Intelligence அம்சம் தொடர்பான அமைப்புகள் உலகளவில் செயல்படும், ஆனால் குக்கீ பேனர்கள் மற்றும் தரவுப் பகிர்வுக்கான அமைப்புகளைப் பிராந்திய வாரியாக நிர்வகிக்கலாம்.

கிடைக்கும் அனைத்து நாடுகள் மற்றும் மாநிலங்களைப் பட்டியலிடும் உரையாடலைக் கொண்டுள்ள பிராந்தியத் தேர்வி கார்டுகள், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் எங்கு ஒப்புதல் பேனர் மற்றும் விலகல் பக்கத்தைக் காட்ட வேண்டும் என்பதை உள்ளமைக்கப் பயன்படுகின்றன. நீங்கள் உள்ளமைத்துள்ள சந்தைகளின் அடிப்படையில் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிராந்தியங்களை இந்தக் கார்டுகள் காட்டும்.

உங்கள் வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளை இங்கே உள்ளமைக்கவும்.

மூன்றாம் தரப்புத் தனியுரிமைச் செயலிகள்

மாறாக, மூன்றாம் தரப்புத் தனியுரிமைச் செயலியைப் பயன்படுத்த விரும்பினால், Shopify App Store இல் உள்ள தனியுரிமை வகையைப் பார்க்கலாம். இந்தத் தனியுரிமைச் செயலிகளை Shopify இன் வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். Shopify App Store இன் ஸ்டோர் நிர்வாகம் > தனியுரிமை மற்றும் பாதுகாப்பு > தனியுரிமை பிரிவுக்குச் செல்வதன் மூலம் இந்த வகையில் கிடைக்கும் விருப்பங்களை நீங்கள் ஆராயலாம்.

மேலும், உங்கள் ஸ்டோர் அமைவுக்குப் பொருந்தினால், வாடிக்கையாளர் தனியுரிமை > நிறுவப்பட்ட தனியுரிமைச் செயலிகள் அமைப்புகளில் நீங்கள் ஏற்கெனவே நிறுவியுள்ள மூன்றாம் தரப்புத் தனியுரிமைச் செயலிகளைப் பார்த்து அணுகலாம்.

Google Consent Mode v2 என்பது பயனர் ஒப்புதலைக் கையாள்வதற்காக Google டேக்குகளுடன் இணைந்து செயல்படும் அம்சமாகும். Google Consent Mode v2 இயக்கப்பட்டு முறையான ஒப்புதல் பெறப்பட்டாலன்றி, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) போன்ற இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து Google க்கு அனுப்பப்படும் நிகழ்வுத் தரவுகள் எதுவும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படாது.

ஒப்புதல் சரியாக Google க்கு அனுப்பப்படுவதையும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்குத் தரவு பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய, நீங்கள் உங்கள் வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளைச் சரியாக உள்ளமைக்க வேண்டும்.

ஒப்புதலைப் பெற நீங்கள் குக்கீ பேனரைப் பயன்படுத்தலாம். நீங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீ பேனரைத் தேர்வுசெய்தால், Shopify இன் வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளுடன் அதை ஒருங்கிணைக்கவும்.

நீங்கள் பிரத்தியேக வெப் பிக்சலைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், Google Consent Mode v2 ஐ இயக்க குறியீட்டுத் துணுக்கை நீங்களே நேரடியாகச் செருகவும். மேலும் தகவலுக்கு, Google Tag Manager பிரத்தியேகப் பிக்சலை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

Google Consent Mode குறித்த கூடுதல் தகவலுக்கு, Google இன் ஆதரவுப் பக்கத்தைப் பார்க்கவும்.

குக்கீ அடிப்படையிலான வாடிக்கையாளர் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வின் தாக்கம்

குறிப்பிட்ட பிராந்தியங்களில் குக்கீ பேனர் செயல்படும்போது, ஒப்புதல் பெற்ற பிறகு மட்டுமே அந்தப் பிராந்தியங்களைச் சேர்ந்த பார்வையாளர்களிடமிருந்து தரவு சேகரிக்கப்படும். இதன் விளைவாக, பகுப்பாய்வு, சந்தைப்படுத்தல் மற்றும் தனிப்பயனாக்க நோக்கங்களுக்குக் கிடைக்கும் தரவின் அளவு குறையக்கூடும். குறைந்த அமர்வு எண்ணிக்கைகள் மற்றும் மாற்று வீதங்கள் உள்ளிட்ட அமர்வுத் தரவைச் சார்ந்திருக்கும் பிற அளவீடுகள் மூலம் இதனைக் காண முடியும்.

குக்கீ அடிப்படையிலான வாடிக்கையாளர் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வின் தாக்கம் குறித்து மேலும் அறிய, பகுப்பாய்வு முரண்பாடுகள் குறித்த ஆவணங்களையும் Shopify இன் குக்கீ கொள்கையையும் பார்க்கவும்.

சந்தைப்படுத்தல் அமைப்புகளை உள்ளமைத்தல்

சந்தைப்படுத்தல் அமைப்புகள் பிரிவில், தனியுரிமைச் சூழலுக்குப் பொருத்தமான பின்வரும் பக்கங்கள் அல்லது அமைப்புகளுக்கான இணைப்புகளைக் காணலாம்:

  • செக்அவுட்டில் மின்னஞ்சல் மற்றும் SMS மார்க்கெட்டிங்: இந்த அம்சத்தின் மூலம் செக்அவுட் செயல்முறையின்போது வாடிக்கையாளரின் சந்தைப்படுத்தல் விருப்பங்களை நீங்கள் உறுதிப்படுத்த முடியும், இது தனியுரிமை ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும்.
  • சந்தைப்படுத்தலுக்கான இரட்டை ஒப்புதல் (Double opt-in): இந்த அமைப்பை இயக்குவதன் மூலம், சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்கான வாடிக்கையாளரின் தொடர்பு விவரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம், இது ஒப்புதல் மற்றும் தனியுரிமைப் பாதுகாப்பிற்கான கூடுதல் அடுக்கை வழங்குகிறது.

வாடிக்கையாளர் தரவு ஹோஸ்டிங் இடங்கள்

Customer data hosting location பிரிவில், உங்கள் ஸ்டோர் தரவு, ஆர்டர் தரவு மற்றும் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவை Shopify சேமித்து வைக்கும் முதன்மை இடத்தைக் கண்டறியலாம். தரவு ஹோஸ்டிங் இடங்கள் பற்றி மேலும் அறிய, தரவு ஹோஸ்டிங் இடங்கள் குறித்த ஆவணங்களைப் பார்க்கலாம்.