உங்கள் தரவை அழிக்கவும்
உங்கள் வணிகர் தனிப்பட்ட தரவு என்பது உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவிலிருந்து வேறுபட்டது. உங்கள் Shopify கணக்கை நிர்வகிக்கும் நபர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற தகவல்கள் உங்கள் தனிப்பட்ட தரவில் அடங்கும்.
வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவை அழிக்க, வாடிக்கையாளர் தரவுக் கோரிக்கைகளைச் செயலாக்குதல் என்பதைப் பார்க்கவும்.
வாடிக்கையாளர் சுயவிவரத்தைத் திருத்த அல்லது நீக்க, வாடிக்கையாளர்களை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.
வணிகராக Shopify இன் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்களின் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான தேர்வுகள் உங்களுக்கு உள்ளன. உங்கள் தனிப்பட்ட தரவு என்பது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் Shopify கணக்கை நிர்வகிக்கும் நபர்களின் பெயர்கள், தொடர்புத் தகவல் போன்றவை உங்கள் தனிப்பட்ட தரவில் அடங்கும்.
இந்தப் பக்கத்தில்
வணிகராக Shopify-இலிருந்து உங்கள் தனிப்பட்ட தரவை அழித்தல்
வணிகராக நீங்கள் Shopify சேவைகளைப் பயன்படுத்தும்போது Shopify ஆல் செயலாக்கப்படும் தனிப்பட்ட தரவுகளில், நீங்கள் மற்றும் உங்கள் வணிகத்தை இயக்குவது தொடர்புடைய பிற நபர்களின் தகவல்களும் அடங்கும். உங்கள் அனைத்து ஸ்டோர்களிலிருந்தும் பெறப்பட்ட பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, பேமெண்ட் விவரங்கள் மற்றும் பல ஸ்டோர்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய உங்களின் Shopify கணக்குத் தகவல் ஆகியவை இந்தத் தகவலில் அடங்கும்; எனினும் இந்தத் தரவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. உங்களின் தனிப்பட்ட தரவை அழிக்குமாறு Shopify-க்கு அறிவுறுத்துவது, நீங்கள் வைத்திருக்கும் அனைத்து Shopify ஸ்டோர்கள் மற்றும் கணக்குகளிலிருந்தும் தனிப்பட்ட தரவை அழிக்கும்.
உங்கள் தனிப்பட்ட தரவை அழிப்பதற்குக் கோரும் முன் பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:
- உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய அனைத்து ஸ்டோர்களையும் முடக்கிவிட்டு, அனைத்துக் கணக்குகளையும் மூடிய பிறகே உங்களின் வணிகர் தனிப்பட்ட தரவை அழிக்க முடியும். வணிகரின் தனிப்பட்ட தரவை அழிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக எல்லாக் கணக்குகளும் மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்படும்.
- உங்கள் தனிப்பட்ட தரவு அழிக்கப்பட்ட பிறகு, அதை மீட்டெடுக்க முடியாது.
உங்கள் தனிப்பட்ட தரவை அழிப்பதற்குக் கோர, Shopify தனியுரிமைக் கட்டுப்பாடுகள் பகுதிக்குச் சென்று, செயல்முறையைத் தொடங்க என் தரவை அழி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் கோரிக்கையைச் செயலாக்க Shopify-க்கு 30 நாட்கள் வரை ஆகலாம், மேலும் பொருந்தக்கூடிய சட்டத்தால் வழங்கப்படும் விதிவிலக்குகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு தரவு அழிக்கப்படலாம்.
உங்கள் ஸ்டோரிலிருந்து வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவை அழித்தல்
வாடிக்கையாளரிடமிருந்து அவரது தனிப்பட்ட தரவை நீக்குவதற்கான கோரிக்கையைப் பெற்ற Shopify வணிகராக நீங்கள் இருந்தால், வாடிக்கையாளர் தரவுக் கோரிக்கையைச் செயலாக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
முடக்கப்பட்ட ஸ்டோரிலிருந்து வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவை அழித்தல்
Shopify வணிகராக நீங்கள் உங்கள் ஸ்டோரை முடக்க முடிவுசெய்தால், ஸ்டோரை மீண்டும் திறக்க முடிவுசெய்வதற்கு வசதியாக உங்கள் ஸ்டோரின் அனைத்துத் தகவல்களும் 2 ஆண்டுகளுக்குத் தக்கவைக்கப்படும். இருப்பினும், அந்த இரண்டு ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் முடக்கப்பட்ட ஸ்டோரிலிருந்து வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவை அழிப்பதற்குக் கோரலாம்.
உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவை அழிப்பதற்குக் கோரும் முன் பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:
- முடக்கப்பட்ட ஸ்டோரிலிருந்து மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரின் தனிப்பட்ட தரவையும் அழிக்க முடியும்.
- வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவை அழிக்கும் செயல், முடக்குமாறு நீங்கள் கோரும் ஸ்டோருக்கு மட்டுமே பொருந்தும். உங்களுக்குச் செயல்படும் அல்லது செயல்படாத பிற Shopify ஸ்டோர்கள் இருந்தால், அந்த ஸ்டோர்களில் உள்ள வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவு அழிக்கப்படாது.
- தனிப்பட்ட தரவு அழிக்கப்பட்ட பிறகு, அதை மீட்டெடுக்க முடியாது மற்றும் ஸ்டோரை மீண்டும் திறக்க முடியாது.
- கடையின் உரிமையாளர் மட்டுமே அந்த ஸ்டோரின் வாடிக்கையாளர் தனிப்பட்ட தரவை அழிக்கக் கோர முடியும். கடையின் உரிமையாளர் சார்பாக வேறு எந்தப் பணியாளரும் கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியாது.
உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவை அழிப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். பொருந்தக்கூடிய சட்டத்தால் வழங்கப்படும் விதிவிலக்குகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு, கோரிக்கை நிறைவடைந்த 14 நாட்களுக்குள் உங்கள் ஸ்டோரின் வாடிக்கையாளர் தனிப்பட்ட தரவு அழிக்கப்படும்.
Shop அல்லது Shop Pay அழித்தல் கோரிக்கைகள்
உங்கள் வாடிக்கையாளர் Shop அல்லது Shop Pay ஐப் பயன்படுத்துபவராகவும், அவர்களைப் பற்றி Shopify வைத்துள்ள தனிப்பட்ட தரவை அழிக்க நினைப்பவராகவும் இருந்தால், அவர்கள் Shopify தனியுரிமைக் கட்டுப்பாடுகள் பகுதிக்குச் சென்று, செயல்முறையைத் தொடங்க என் தரவை அழி என்பதைக் கிளிக் செய்யலாம். அவர்கள் வாங்கிய எந்த வணிகர் ஸ்டோர்களிலிருந்தும் இது தனிப்பட்ட தரவை அழிக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.