உள்ளமைவு விருப்பங்கள், Shopify இன் வெளிப்படைத்தன்மை அறிக்கை மற்றும் பொது அதிகாரிகளின் கோரிக்கைகளைக் கையாளுதல்

உள்ளமைவு விருப்பங்கள்

நீங்கள் Shopify சேவைகளைப் பயன்படுத்தும்போது, நீங்கள் செயல்படும் அல்லது வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அதிகார வரம்புகளின் சட்டங்களுக்கு உங்கள் பிசினஸ் இணங்குவதை உறுதிசெய்வதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

Shopify ஐப் பயன்படுத்துவது மட்டுமே, ஒரு வணிகர் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு (GDPR) இணங்குவார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. இணக்கத்தை உறுதிசெய்ய, உங்களது சொந்த பிசினஸ் நடைமுறைகளை நீங்களே பகுப்பாய்வு செய்ய வேண்டும். வணிகர்களுக்கு அவர்களின் இணக்க முயற்சிகளுக்கு உதவும் வகையில், Shopify விரிவான உள்ளமைவு விருப்பங்களை வழங்குகிறது.

Shopify வெளிப்படைத்தன்மை அறிக்கை மற்றும் பொது அதிகாரிகளின் கோரிக்கைகளைக் கையாளுதல்

உலகெங்கிலும் உள்ள எங்கள் வணிகர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பேணுவதில் Shopify உறுதியாக உள்ளது. அந்த நம்பிக்கைக்கு வெளிப்படைத்தன்மை இன்றியமையாதது என்பதை நாங்கள் அறிவோம், அத்துடன் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதை எங்கள் வணிகர்களும் வாடிக்கையாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் பெறும் கோரிக்கைகளின் ஆண்டு வெளிப்படைத்தன்மை அறிக்கையை Shopify வெளியிடுகிறது.

பொது அதிகாரிகளிடம் இருந்து சட்டப்பூர்வ அணுகல் கோரிக்கை விடுக்கப்பட்டால், அத்தகைய கோரிக்கைகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பது குறித்த வழிகாட்டுதல்களின் தொகுப்பை Shopify பின்பற்றுகிறது.