தனிப்பட்ட தரவு இடமாற்றங்களின் பாதுகாப்பு
உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாக வைப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகளை உள்ளடக்கிய விரிவான தகவல் பாதுகாப்புத் திட்டத்தை Shopify பராமரிக்கிறது. மேலும், இது அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறது, அத்துடன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அத்தகைய நடவடிக்கைகளைப் புதுப்பிக்கலாம்.
Shopify-இன் தகவல் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள சில பாதுகாப்புகளின் சுருக்கத்தை இந்தப் பக்கம் வழங்குகிறது. மேலும் தகவலுக்கு, Shopify பாதுகாப்பைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
அணுகல் கட்டுப்பாடுகள்
உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவை அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே அணுகுவதற்கும், தனது சேவைகளைப் பராமரிக்கவும் வழங்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே அதை அணுகவும் Shopify அனுமதிக்கிறது. ஃபயர்வால் பயன்பாடு, பிற தொழில்நுட்பம் மற்றும் அங்கீகாரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றின் மூலம் அணுகலுக்கான அங்கீகாரங்களை நிர்வகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகளை Shopify பராமரிக்கிறது.
பாதுகாப்பு மதிப்பீடுகள்
தீங்கு மதிப்பீடு மற்றும் ஊடுருவல் சோதனைத் திட்டத்தை Shopify பராமரிக்கிறது, இது தனது சேவைகளில் கண்டறியப்படும் சிக்கல்களை விசாரிப்பதற்கும், தேவையெனில் அவற்றைத் தீர்க்கும் வரை கண்காணிப்பதற்கும் பொறுப்பாகும்.
செயலிப் பாதுகாப்பு
செயலிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து தனது சேவைகளைப் பாதுகாக்கும் செயலிப் பாதுகாப்புத் திட்டத்தை Shopify பராமரிக்கிறது.
மாற்ற நிர்வாகம்
தனது தற்போதைய சேவைகளின் ஆதாரங்களில் செய்யும் மாற்றங்களைப் பதிவுசெய்யவும், சோதிக்கவும், அங்கீகரிக்கவும், அத்துடன் தனது மாற்ற நிர்வாகம் அல்லது வரிசைப்படுத்தல் கருவிகளில் மாற்ற விவரங்களை ஆவணப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை Shopify பராமரிக்கிறது. உற்பத்திக்கு வரிசைப்படுத்துவதற்கு முன்பு, தனது மாற்ற நிர்வாகத் தரநிலைகளின்படி எந்தவொரு மாற்றத்தையும் Shopify சோதிக்கிறது.
தரவு ஒருமைப்பாடு
பொருத்தமான வகையில், தனது சேவைகளில் பரிமாற்றம், சேமிப்பகம் மற்றும் செயலாக்கத்தின்போது தரவு ஒருமைப்பாட்டை வழங்க வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை Shopify பராமரிக்கிறது.
கிடைக்கும் தன்மை
தனது சேவைகளில் ஏற்படும் செயலிழப்பின் பாதிப்பைக் குறைப்பதற்குச் சேவைகளுக்கான மாற்று ஏற்பாட்டைப் பொருத்தமான இடங்களில் Shopify செயல்படுத்துகிறது, தோல்விகளை முன்கூட்டியே கணித்துச் சமாளிக்கும் வகையில் இது தனது சேவைகளை வடிவமைக்கிறது, அத்துடன் தோல்விகளிலிருந்து மீள்வதற்குத் தேவைப்படும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர் தரவு டிராஃபிக்கை நகர்த்த வடிவமைக்கப்பட்ட பொருத்தமான செயல்முறைகளைச் செயல்படுத்துகிறது
வணிகத் தொடர்ச்சி மற்றும் பேரிடர் மீட்பு
வணிகர்கள் பெறும் சேவைகளை Shopify வழங்குவதைத் தடுக்கக்கூடிய அல்லது பெரிதும் பாதிக்கக்கூடிய நிகழ்வுகளைக் கண்டறிதல், அதற்குப் பதிலளித்தல் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் உட்பட தனது முக்கியமான வணிகச் செயல்பாடுகளின் தொடர்ச்சியை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இடர் நிர்வாகத் திட்டத்தை Shopify பராமரிக்கிறது.
நிகழ்வு நிர்வாகம்
பாதுகாப்பு அல்லது கிடைக்கும் தன்மை நிகழ்வுகளைப் புகாரளிப்பதற்கும், பாதுகாப்பு அல்லது கிடைக்கும் தன்மை குறித்துக் கேள்விகளைக் கேட்பதற்கும், அத்துடன் சாத்தியமான பாதுகாப்பு அல்லது கிடைக்கும் தன்மைச் சிக்கல்கள் பற்றிய தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கும் வணிகர்களுக்கான ஆவணங்களை Shopify வழங்குகிறது.
தனது சேவைகளுக்கான சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய, தணிக்க, விசாரிக்க மற்றும் பதிலளிக்க வடிவமைக்கப்பட்ட நிகழ்வுப் பதிலளிப்புத் திட்டங்களை Shopify பராமரிக்கிறது.
பருநிலைப் பாதுகாப்பு
தனது சேவைகளைப் பாதுகாக்கத் தேவையான இடங்களில், Shopify:
- தனது சேவைகளில் அங்கீகரிக்கப்படாத பருநிலை அணுகல், சேதம் அல்லது தலையீட்டைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட நியாயமான நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறது;
- அத்தகைய அணுகலுக்கு நியாயமான வணிகத் தேவையைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே தனது சேவைகளை அணுகுவதைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட பொருத்தமான கட்டுப்பாட்டுச் சாதனங்களைப் பயன்படுத்துகிறது; அத்துடன்
- இந்தத் தரநிலைகளைக் கடைப்பிடிப்பதைச் சரிபார்க்க அவ்வப்போது மதிப்பாய்வுகளைச் செய்கிறது.