தயாரிப்புத் தொகுப்புகள்
தொகுப்பு என்பது பொதுவாகத் தள்ளுபடியில் வழங்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்புடைய தயாரிப்புகளின் தொகுப்பாகும். நீங்கள் ஆன்லைன் ஸ்டோர், Shop மற்றும் Shopify POS விற்பனைச் சேனல்கள் மூலமாகவும் Google & YouTube விற்பனைச் சேனலில் நிலையான தயாரிப்புத் தொகுப்புகளுடன் மட்டுமே தொகுப்புகளை விற்கலாம். தொகுப்புகளை விற்பதன் மூலம் பின்வரும் பலன்களைப் பெறலாம்:
- உங்கள் சராசரி ஆர்டர் மதிப்பை அதிகரித்தல்
- உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரியான பொருட்களைத் தொகுத்து வழங்குவதன் மூலம் மதிப்பளித்தல்
- வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகளை வழங்குதல்
- பழைய சரக்கு இருப்பைக் குறைத்தல்
- உங்கள் தயாரிப்புகளுக்கு அதிகக் கவன ஈர்ப்பைப் பெறுதல்
உங்கள் ஸ்டோரில் தயாரிப்புத் தொகுப்புகளை உருவாக்க, உங்கள் Shopify ஸ்டோரில் தொகுப்புகள் செயலி ஒன்றை நிறுவியிருக்க வேண்டும்.