தயாரிப்புத் தொகுப்புகளைப் பயன்படுத்துவதற்கான தகுதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவையும்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்புத் தொகுப்புகளைச் சேர்ப்பதற்கு முன்பாக நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டிய சில தகுதித் தேவைகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளும் உள்ளன; தயாரிப்புத் தொகுப்புகளுடன் இணக்கமான மற்றும் இணக்கமற்ற அம்சங்கள், தயாரிப்புத் தொகுப்புகளுடன் சரக்கு இருப்புகளும் ரிட்டர்ன்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பவை இவற்றில் அடங்கும்.

தொகுப்பு வகைகள்

நீங்கள் பின்வரும் வகையிலான தொகுப்புகளை உருவாக்கலாம்:

  • நிலையானது: முன்னரே தீர்மானிக்கப்பட்ட தயாரிப்புகளின் தொகுப்பு மற்றும் தொடர்புடைய மாறுபாடுகளால் உருவாக்கப்பட்ட தொகுப்பு. தொகுப்பில் உள்ள ஏதேனும் தயாரிப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாறுபாடுகள் இருந்தால், உங்கள் வாடிக்கையாளர் தொடர்புடைய மாறுபாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
    "முடி மற்றும் சருமத் தொகுப்பு" எனப்படும் நிலையான தொகுப்புடன் கூடிய தயாரிப்புப் பக்கம். இந்தத் தொகுப்பு 3 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது: தேங்காய் ஷாம்பு, தேங்காய் கண்டிஷனர் மற்றும் மாய்ஸ்சரைசர். வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு தயாரிப்புக்கும் கீழே 2 அல்லது 3 மாறுபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • மல்டிபேக்: ஒன்றுக்கும் மேற்பட்ட அதே தயாரிப்புகளைக் கொண்ட தொகுப்பு.
    "போலோ சட்டை 3-பேக்" எனப்படும் மல்டிபேக் தொகுப்புடன் கூடிய தயாரிப்புப் பக்கம். இந்தத் தொகுப்பு 3 ஒரே மாதிரியான சட்டை தயாரிப்புகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு சட்டைக்கும் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தேர்வு உள்ளது. வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு தயாரிப்புக்கும் கீழே அதே 4 மாறுபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • கலந்து பொருத்து: ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ளக்கூடிய தயாரிப்புகளால் உருவாக்கப்பட்ட தொகுப்பு. தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய மாறுபாடுகளில் இருந்து தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர் தொகுப்பை உருவாக்கலாம்.
    "உங்கள் பிரத்தியேகப் படுக்கை விரிப்புத் தொகுப்பை உருவாக்குங்கள்" எனப்படும் கலந்து பொருத்தும் தொகுப்புடன் கூடிய தயாரிப்புப் பக்கம். இந்தத் தொகுப்பில் ஷீட்கள், டுவெட் மற்றும் தலையணை உறைகளைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தேர்வு உள்ளது. முதலில், வாடிக்கையாளர்கள் தங்கள் ஷீட் செட்டின் அளவு மற்றும் நிறத்தைத் தேர்ந்தெடுப்பார்கள், அதன்பின் டுவெட்டைத் தேர்ந்தெடுத்து, இறுதியாகத் தலையணை உறைகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

நீங்கள் நிலையான அல்லது மல்டிபேக் தொகுப்புகளை உருவாக்க விரும்பினால், கட்டணமில்லா Shopify Bundles செயலியைப் பயன்படுத்தலாம். இந்தச் செயலி அனைத்து Shopify திட்டங்களுக்கும் கிடைக்கிறது.

நீங்கள் கலந்து பொருத்தும் தொகுப்புகளை உருவாக்க விரும்பினால், பின்வரும் விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:

தயாரிப்புத் தொகுப்புகளுக்கான தகுதித் தேவைகள்

தயாரிப்புத் தொகுப்புகளை விற்க, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

நீங்கள் இதற்கு முன்பு தொகுப்புகளை உருவாக்கியிருந்து, பின்னர் உங்கள் ஸ்டோர் தகுதியற்றதாக மாறினால், பின்வரும் செயல்களில் ஒன்று நடைபெறும்:

உங்கள் ஸ்டோர் மீண்டும் தகுதியைப் பெறும்போது மட்டுமே உங்களால் தொகுப்புகளை விற்க முடியும்.

தொகுப்புகள் API பற்றி மேலும் அறிக.

தயாரிப்புத் தொகுப்புகளுக்கான இணக்கமின்மை குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டியவை

சில அம்சங்கள் தயாரிப்புத் தொகுப்புகளுடன் இணங்குவதில்லை. கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • சந்தாக்கள், முன்பதிவுகள் மற்றும் வாங்குவதற்கு முன் முயன்று பாருங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வாங்குவதற்கான விருப்பத்தேர்வுகளுடன் தொகுப்புகள் இணங்குவதில்லை.
  • Shopify Subscriptions செயலியுடன் தொகுப்புகள் இணங்குவதில்லை.
  • தொகுப்புகளுக்குத் தனிப்பட்ட தயாரிப்புகளின் SKUகளிலிருந்து வேறுபட்ட ஒரு SKU ஒதுக்கப்படுகிறது. ஒரு கூறின் SKU மாறினால், நீங்கள் முழுத் தொகுப்பையும் நீக்கிவிட்டு மீண்டும் உருவாக்க வேண்டும்.
    • விரிவான கூறுக் கண்காணிப்பிற்கு, கூறு SKU தரவைச் சேமிக்க மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தப் பரிசீலிக்கவும் அல்லது சரக்கு மேலாண்மைக்கு மூன்றாம் தரப்புச் செயலிகளைப் பயன்படுத்தவும்.
  • தொகுப்புகளுக்கு எனத் தனியான ஷிப்பிங் சுயவிவரங்கள் இல்லை. அதற்குப் பதிலாக, தொகுப்பில் உள்ள தனிப்பட்ட தயாரிப்புகளின் ஷிப்பிங் சுயவிவரங்களின் அடிப்படையில் ஷிப்பிங் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன.
  • பிரத்தியேகத் தயாரிப்புகளுடன் தொகுப்புகள் இணங்குவதில்லை.
  • Shopify Bundles செயலியானது கலந்து பொருத்தும் தொகுப்புகளை ஆதரிக்காது.
  • தொகுப்புகளில் மற்ற தொகுப்புகள் இருக்க முடியாது.
  • இறக்குமதி, ஏற்றுமதி அல்லது மொத்தத் திருத்துதல் திறன்களைத் தொகுப்புகள் ஆதரிப்பதில்லை.
  • ஒரே மாதிரியான தொகுப்பிற்காகப் பரிமாற்றம் செய்யும்போதும் பரிமாற்றங்களில் தொகுப்புகளைப் பயன்படுத்த முடியாது

செக்அவுட் இணக்கத்தன்மை

தொகுப்புகளை ஆதரிக்காத பழைய செக்அவுட் பதிப்பிற்கு வரைவு ஆர்டர்கள் இயல்புநிலையாக மாறக்கூடும். Cart Transform API இன் update செயல்பாடு Shopify Plus சோதனை ஸ்டோர்களில் கிடைக்காது. முழுமையான Shopify Plus திட்டத்திலுள்ள ஸ்டோர்கள் அல்லது டெவலப்மெண்ட் ஸ்டோர்களால் மட்டுமே update செயல்பாடுகளுடன் கூடிய செயலிகளைப் பயன்படுத்த முடியும்.

சரக்கு இருப்பு

ஒரு தொகுப்பிற்குள் உள்ள ஒவ்வொரு தயாரிப்பின் சரக்கு இருப்பு நிலைகளால் தொகுப்பின் சரக்கு இருப்பு தீர்மானிக்கப்படும். எத்தனை தொகுப்புகளை விற்க முடியும் என்பதை, குறைவான சரக்கு இருப்பு நிலை கொண்ட தயாரிப்பு தீர்மானிக்கிறது. தயாரிப்பின் சரக்கு இருப்பு நிலைகள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும். தயாரிப்பின் சரக்கு இருப்பைத் தடமறியவில்லை என்றாலோ கையிருப்பில் இல்லாதபோது தொடர்ந்து விற்பனை செய் என அமைக்கப்பட்டிருந்தாலோ, தொகுப்பின் அளவைக் கணக்கிடும்போது தயாரிப்பின் சரக்கு இருப்பு சேர்க்கப்படாது.

இந்தச் சூழல்களில், தொகுப்பின் கிடைக்கும் அளவைத் தீர்மானிக்கும்போது தயாரிப்பின் சரக்கு இருப்பு புறக்கணிக்கப்படும்.

உங்கள் Shopify நிர்வாகியில் சரக்கு இருப்பைத் தடமறியும் வசதியை அமைக்கலாம் அல்லது கையிருப்பில் இல்லாதபோது தொடர்ந்து விற்குமாறு தயாரிப்புகளை உள்ளமைக்கலாம்.

சரக்கு இருப்புக் கணக்கீடு

தொகுப்பிலுள்ள தயாரிப்புகளின் கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பின் அடிப்படையில் தொகுப்பின் கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பு ஒரு மதிப்பீட்டை உருவாக்கும். இருப்பதிலேயே குறைவான அளவிலுள்ள சரக்கு இருப்பைக் கொண்டுள்ள தயாரிப்பைக் கருத்தில் கொண்டும், தொகுப்பை உருவாக்க அந்தத் தயாரிப்பு எவ்வளவு தேவைப்படும் என்பதைக் கணக்கில் கொண்டும் Shopify இதைக் கணக்கிடுகிறது. கிடைக்கக்கூடிய தொகுப்பின் சரக்கு இருப்பைக் கணக்கிட, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. தொகுப்பிலுள்ள ஒவ்வொரு தயாரிப்புக்கும், தயாரிப்பின் மொத்தக் கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பைத் தொகுப்பிற்குத் தேவைப்படும் அளவால் வகுக்கவும்.
  2. இறுதியாகக் கிடைக்கும் குறைவான எண்ணே (அருகிலுள்ள முழு எண்ணுக்குக் குறைக்கப்பட்டது) எத்தனை முழுமையான தொகுப்புகளை விற்க முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது.

சரக்கு இருப்புக் கணக்கீட்டிற்கான எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டாக, ஹோம் ஆஃபீஸ் பொருட்களின் தயாரிப்புத் தொகுப்பில் 2 நாற்காலிகள் மற்றும் 1 மேஜை உள்ளதென்றால், சாத்தியமான தொகுப்புகளின் எண்ணிக்கையை நீங்கள் மேனுவலாகக் கணக்கிடலாம்:

  1. ஒவ்வொரு தயாரிப்பின் சரக்கு இருப்பு நிலைகளைச் சரிபார்க்கவும்:
    • நாற்காலியின் மொத்தக் கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பு 15 ஆகும்.
    • மேஜையின் மொத்தக் கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பு 8 ஆகும்.
  2. ஒவ்வொரு தயாரிப்பிற்குமான கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பைக் கணக்கிடவும்:
    • நாற்காலி: 15 ÷ 2 = 7.5 (7 ஆகக் குறைக்கப்பட்டது)
    • மேஜை: 8 ÷ 1 = 8
  3. "ஹோம் ஆஃபீஸ்" தொகுப்பின் கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பு 7 ஆகும்:
    • குறைவான எண் (7) தொகுப்பின் கிடைக்கும் தன்மையைத் தீர்மானிக்கிறது.
    • முழுமையான தயாரிப்புத் தொகுப்புகள் உங்களிடம் உள்ள அளவுக்கு மட்டுமே உங்களால் தொகுப்புகளை உருவாக்க முடியும்.

ரிட்டர்ன்கள்

ரிட்டர்ன் விதிகளை அமைக்கும்போது தொகுப்புகளை இறுதி விற்பனையாக வரையறுக்க முடியாது. தொகுப்பின் ரிட்டர்ன் தகுதியானது, உங்கள் ரிட்டர்ன் விதிகளில் தொகுப்பிற்குள் இருக்கும் தனிப்பட்ட தயாரிப்புகள் இறுதி விற்பனைப் பொருட்களாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து அமையும்.

சுய-சேவை திருப்பியளிப்புகளில், வாடிக்கையாளர்கள் தகுதியுள்ள ஏதேனும் தயாரிப்புகளுக்குத் தயாரிப்பு ரிட்டர்ன் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும். இறுதி விற்பனையாக அமைக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் ரிட்டர்ன்களைக் கோர முடியாது.

தயாரிப்புத் தொகுப்புகளைக் கண்டறிதல்

நீங்கள் ஒரு தொகுப்பை உருவாக்கியதும், உங்கள் Shopify நிர்வாகியின் தயாரிப்புகள் பிரிவில் தொகுப்பிற்கென ஒரு தனித் தயாரிப்புப் பட்டியல் இருக்கும். நீங்கள் பின்வரும் வழிகளில் ஒரு தொகுப்பின் தயாரிப்புப் பட்டியலைக் கண்டறியலாம்:

  • உங்கள் நிர்வாகியின் தயாரிப்புகள் பிரிவில், சரக்கு இருப்பு நெடுவரிசையானது "XX மாறுபாடுகளுடன் கூடிய தொகுப்பு" என்பதைக் காட்டும்.
  • தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் உள்ள தொகுக்கப்பட்ட தயாரிப்புகள் பிளாக்கில் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள தயாரிப்புகள் காட்டப்படும்.

ஆர்டர்களில் உள்ள தொகுப்புகள், நெஸ்டட் வரிசை உருப்படிகள் கொண்ட ஒரு குழுவாகக் காட்டப்படும். உங்கள் Shopify நிர்வாகி மற்றும் Shopify செக்அவுட்டில் உள்ள பின்வரும் பகுதிகளில் ஆர்டர்களில் உள்ள தொகுப்புகளைக் கண்டறியலாம்:

இந்தத் தொகுப்புக் குழுவில் பின்வரும் தகவல்கள் உள்ளன:

  • தொகுப்பின் தலைப்பு
  • தொகுப்பின் விலை
  • தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு உருப்படியின் தலைப்பு மற்றும் அளவு

பிரிக்கப்பட்ட நிறைவேற்றங்கள் மற்றும் ரிட்டர்ன்கள் மற்றும் பரிமாற்றங்கள் கொண்ட ஆர்டர்கள் போன்ற, தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வரிசை உருப்படியும் தனித்தனியாகக் கையாளப்படும் பகுதிகளில், தொகுப்பில் சேர்க்கப்பட்ட உருப்படிகள் தனித்தனி வரிசை உருப்படிகளாகக் காட்டப்படும்.