தயாரிப்பு விவரங்கள்

ஒரு தயாரிப்பில் நீங்கள் சேர்க்கும் விவரங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்பு எப்படிக் காட்டப்படுகிறது என்பதைப் பாதிப்பதுடன், உங்கள் தயாரிப்புகளை ஒழுங்கமைக்கவும், தேடிக் கண்டறியவும், விற்கவும் எளிதாக்கும். ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒவ்வொரு விவரத்தையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள தயாரிப்புகள் பிரிவிலிருந்து, தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் தயாரிப்பு விவரங்களைச் சேர்க்கலாம் மற்றும் திருத்தலாம்.

தயாரிப்புகளை விவரித்தல்

ஒரு தெளிவான தயாரிப்பு விளக்கம் வாடிக்கையாளர்கள் என்ன வாங்குகிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறது. Shopify-இன் நிலையான தயாரிப்பு வகைப்பாட்டிலிருந்து ஒரு வகையை ஒதுக்குவது, தயாரிப்புகளை ஒழுங்கமைக்கவும், துல்லியமாக வரிகளை வசூலிக்கவும், பிற விற்பனைச் சேனல்களில் விற்கவும் உங்களுக்கு உதவுகிறது.

தயாரிப்புகளை ஒழுங்கமைத்தல்

உங்களின் சொந்தத் தயாரிப்பு வகைகள் மற்றும் டேக்குகள் மூலம் தயாரிப்புகளை நீங்கள் குழுவாக்கலாம், பிறகு உங்கள் தயாரிப்புப் பட்டியலை வடிகட்டவும் சேகரிப்புகளை உருவாக்கவும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

தயாரிப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் தடமறிதல்

ஸ்டாக் கீப்பிங் யூனிட்கள் (SKU-கள்) உங்கள் பிசினஸில் உள்ள தயாரிப்புகளை அடையாளம் காண்கின்றன. Shopify POS-இல் தயாரிப்புகளை ஸ்கேன் செய்யவும், சரக்கு இருப்பை எண்ணவும், ஆன்லைன் சந்தைகளில் தயாரிப்புகளை அடையாளம் காணவும் பார்கோடுகள் உங்களை அனுமதிக்கின்றன.

தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயித்தல் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்

விற்பனை விலைகள், யூனிட் விலைகள் மற்றும் உங்கள் உருப்படிக்கான செலவு உள்ளிட்ட தயாரிப்பு விலைகளை நீங்கள் அமைக்கலாம். நீங்கள் விற்கத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு தயாரிப்பும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பாய்வு செய்யத் தயாரிப்பு நுண்ணறிவுகளைப் பயன்படுத்தலாம்.

இந்தப் பிரிவில்