உங்கள் தயாரிப்புகளுக்குப் பார்கோடுகளைப் பயன்படுத்துதல்
பார்கோடுகள் என்பவை கோடுகள், இடைவெளிகள், எழுத்துகள் மற்றும் எண்களால் ஆன ஸ்கேன் செய்யக்கூடிய குறியீடுகளாகும். சரக்கு இருப்பைத் தடமறிய நிறைவேற்ற மையங்களில், கணக்கியலுக்கு உதவ இன்வாய்ஸ்களில் அல்லது சில்லறை விற்பனை ஸ்டோர்களில் கொள்முதல் செயல்முறையின் ஒரு பகுதியாக என, விநியோகச் சங்கிலியின் பல்வேறு கட்டங்களில் தயாரிப்புகளை அடையாளம் காணவும் தடமறியவும் பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள உங்கள் தயாரிப்புகள் மற்றும் மாறுபாடுகளில் பார்கோடுகளைச் சேர்க்கலாம். சில்லறை விற்பனை ஸ்டோரில் செக்அவுட் செய்யும்போதோ அல்லது சரக்கு எண்ணிக்கையின்போதோ, பார்கோடை ஸ்கேன் செய்யும்போது அது ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டை அடையாளம் காட்டுகிறது. ஆன்லைன் சந்தைகளில் தயாரிப்புகளை அடையாளம் காணவும் பார்கோடுகளைப் பயன்படுத்தலாம். சில விற்பனைச் சேனல்களில் ஒரு தயாரிப்பை வெளியிடுவதற்கு முன்பு அதற்கு Global Trade Item Number (GTIN) தேவைப்படலாம்.
இந்தப் பக்கத்தில்
பார்கோடுகளைப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
உங்கள் தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்ப்பதற்கான பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டிற்கு 20 பார்கோடுகள் வரை நீங்கள் சேர்க்கலாம், எனவே வெவ்வேறு சப்ளையர்கள், பிராந்தியங்கள் அல்லது சந்தைகளின் குறியீடுகளை ஒரே உருப்படிக்குப் பயன்படுத்தலாம்.
- ஒரே பார்கோடு மதிப்பை, ஒரே தயாரிப்பு அல்லது மாறுபாட்டிற்கு இருமுறை பயன்படுத்த முடியாது.
- ஒரு தயாரிப்பிற்கான GTIN உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் அதை உற்பத்தியாளரிடம் கோரலாம். நீங்கள் உற்பத்தி செய்யும் தயாரிப்புக்கான GTIN ஐப் பெறுவது எப்படி என்பதை GS1 தரநிலை இணையதளத்தில் அறிந்துகொள்ளுங்கள்.
- Shopify POS இல், ஒரு தயாரிப்பின் பார்கோடுகள் அல்லது அதன் SKU ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது தேடுவதன் மூலம் அந்தத் தயாரிப்பைக் கண்டறியலாம். Shopify POS இல் தயாரிப்புகளைத் தேடுவது பற்றி மேலும் அறிக.
- Shopify POS மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பார்கோடுகளைப் பயன்படுத்தி, Google & YouTube சேனலில் தயாரிப்புகளை வெளியிடலாம்.
பார்கோடுகளை எப்போது பயன்படுத்த வேண்டும்
மூன்றாம் தரப்புச் சேவைகள் உங்கள் தயாரிப்புகளை நிர்வகிக்க உதவும்போதோ அல்லது உங்களிடம் விரிவான நிறைவேற்றம் அல்லது சரக்கு இருப்புத் தடமறியும் செயல்முறை இருக்கும்போதோ பார்கோடுகள் பயனுள்ளதாக இருக்கும். பின்வரும் சூழ்நிலைகளில் உங்கள் தயாரிப்புகளுக்குப் பார்கோடுகள் தேவைப்படலாம்:
- ஆன்லைன் சந்தைகளில் நீங்கள் தயாரிப்புகளை விற்கிறீர்கள்.
- சில்லறை விற்பனை ஸ்டோர்களுக்கு நீங்கள் தயாரிப்புகளை மொத்த விற்பனை செய்கிறீர்கள்.
- உங்கள் தயாரிப்புகள் ஒரு கிடங்கு, விநியோக மையம் அல்லது நிறைவேற்றச் சேவை வழியாகச் செல்கின்றன.
பார்கோட்டின் நன்மைகள்
பார்கோடுகளைப் பயன்படுத்துவதன் பின்வரும் நன்மைகளை மதிப்பாய்வு செய்யவும்:
| நன்மை | விளக்கம் | செயல் |
|---|---|---|
| துல்லியமான சரக்கு இருப்பைத் தடமறிதல் | மேனுவலாக உள்ளிடப்பட்ட தரவை விட, பார்கோடு தரவு மிகவும் நம்பகமானது. சரக்கு இருப்பு, விலை நிர்ணயத் தகவல் மற்றும் காலாவதியாகும் தேதி அல்லது எடை போன்ற தயாரிப்புத் தகவலைக்கூட பார்கோடுகளால் தடமறிய முடியும். | கிடங்குகள் மற்றும் தரவுத்தளங்களில் சரக்கு இருப்பைத் தடமறிதல். |
| நிகழ்நேரத் தரவு | பார்கோடுகள் ஏறக்குறைய உடனடியாகவே தயாரிப்புத் தகவலை வழங்குகின்றன. தரவு உள்ளீடு அல்லது மீட்டெடுப்பிற்காக நீங்கள் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியதில்லை. | ஆன்லைன் சந்தைக்குள் பார்கோடைப் பயன்படுத்தி ஒரு தயாரிப்பைத் தேடுதல். |
| குறைந்தபட்சப் பயிற்சித் தேவைகள் | பார்கோடு ஸ்கேனர்களைப் பயன்படுத்தவோ பார்கோடுகளை ஸ்கேன் செய்யவோ பணியாளர்களுக்கு விரிவான பயிற்சி தேவையில்லை. | நிறைவேற்ற மையங்களில் பார்கோடுகளை ஸ்கேன் செய்தல். |
| உலகளாவிய ஏற்பு | பார்கோடுகள் உலகெங்கிலும் பல துறைகளில் பயன்படுத்தப்படுவதோடு ஏற்கவும் படுகின்றன. | வெவ்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் பார்கோடுகளைப் பயன்படுத்துதல். |
பார்கோடு கலைச்சொற்கள்
பொதுவான பார்கோடு கலைச்சொற்கள் பற்றி அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:
| வார்த்தை | வரையறை |
|---|---|
| Global Trade Item Number (GTIN) | GTIN என்பது ஒரு தயாரிப்புக்கான தனித்துவமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்காட்டியாகும். GTIN என்பது பார்கோடு குறியீட்டிற்கு கீழே அச்சிடப்பட்ட எண் ஆகும். UPC-கள், EAN-கள் மற்றும் ISBN-கள் ஆகியவை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட GTIN-களின் வகைகளாகும். GTIN-களைப் பற்றி மேலும் அறிக. |
| European Article Number (EAN) | EAN என்பது GTIN-13 எனவும் அழைக்கப்படுகிறது, இது பொதுவாக வட அமெரிக்காவிற்கு வெளியே உலகளவில் நுகர்வோர் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் பார்கோடு வகையாகும். |
| Universal Product Code (UPC) | UPC என்பது GTIN-12 எனவும் அழைக்கப்படுகிறது, இது பொதுவாக வட அமெரிக்காவில் நுகர்வோர் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் பார்கோடு வகையாகும். |
| International Standard Book Number (ISBN) | ISBN என்பது ஒவ்வொரு தனிப்பட்ட புத்தகப் பதிப்பிற்கும் அதன் மாறுபாட்டிற்கும் ஒதுக்கப்படும் எண்களாலான வணிகப் புத்தக அடையாளங்காட்டியாகும். உலகின் எந்தப் பகுதியிலும் ஒரு புத்தகத்தைத் தனித்துவமாக அடையாளம் காண ISBN குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. |
| GS1 | GS1 என்பது பார்கோடுகள் போன்ற தரநிலைகளை உருவாக்கி பராமரிக்கும் ஒரு இலாப நோக்கற்ற, சர்வதேச அமைப்பாகும். |
| Shopify மூலம் ஒதுக்கப்பட்டது | இது Shopify Fulfillment Network (SFN) என்பதில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளுக்கும் தானாகவே ஒதுக்கப்படும் ஒரு பார்கோடு வகையாகும். |
| Fulfillment Network Stock Keeping Unit (FNSKU) | இது Fulfillment by Amazon (FBA) விற்பனையாளர்களால் பயன்படுத்தப்படும் Amazon-க்கான பிரத்தியேக பார்கோடு ஆகும். ஒவ்வொரு FNSKU-வும் X அல்லது B என்ற எழுத்துடன் தொடங்கும். |
| Amazon Standard Identification Number (ASIN) | இது தனித்துவமான மற்றும் ஒரு தயாரிப்பு அல்லது தயாரிப்பு மாறுபாட்டுடன் தொடர்புடைய ஒரு வகையான Amazon அகக் கேட்டலாக் எண் ஆகும். ஒவ்வொரு ASIN-உம் 10 இலக்கங்களைக் கொண்டது, மேலும் எழுத்துகள் மற்றும் எண்களின் கலவையைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ASIN-உம் X அல்லது B என்ற எழுத்துடன் தொடங்கும். |
பார்கோடு வகைகள்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஒவ்வொரு பார்கோடும், அதன் மதிப்பு எந்தத் தொழில்துறை தரநிலையைப் பின்பற்றுகிறது என்பதைப் பதிவு செய்யும் ஒரு வகையைக் கொண்டிருக்கலாம். நீங்கள் உள்ளிடும் மதிப்பு, அந்தத் தரநிலையின் நீள வரம்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட எழுத்துகளுடன் பொருந்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட தரநிலையைப் பின்பற்றாத பார்கோடு உங்களிடம் இருந்தால், பார்கோடு வகையை தனிப்பயன் என வைத்திருக்கவும்.
உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பார்கோடு வகைகளைப் பற்றி அறிய, பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்:
| பார்கோடு வகை | ஏற்கப்படும் மதிப்புகள் | பயன்பாடு |
|---|---|---|
| தனிப்பயன் | அதிகபட்சம் 255 எழுத்துகள் நீளம் வரையிலான எந்தவொரு பார்கோடு மதிப்பும் இருக்கலாம். இதுவே இயல்புநிலை பார்கோடு வகையாகும். | எழுத்துகள் மற்றும் எண்களை என்கோட் செய்யக்கூடிய Code 39, Code 128 போன்ற GTIN அல்லாத பார்கோடுகள் உட்பட, ஒரு குறிப்பிட்ட தரநிலையைப் பின்பற்றாத பார்கோடுகள். Code 39 ஆனது முக்கியமாக கிடங்கு பராமரிப்பிலும், வாகன மற்றும் மின்னணுவியல் போன்ற தொழில்துறைப் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. Code 128 ஆனது உலகெங்கிலும் கிடங்கு பராமரிப்பு, ஆடைகள், உணவு பதப்படுத்துதல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணத் தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. |
| GTIN | 8, 12, 13 அல்லது 14 இலக்கங்கள். | ஒரு தயாரிப்புக்கான தனித்துவமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்காட்டி. UPC-கள், EAN-கள் மற்றும் ISBN-கள் ஆகியவை GTIN-களின் வகைகளாகும். |
| UPC | 8 அல்லது 12 இலக்கங்கள். | சில்லறை விற்பனைத் தயாரிப்புகள், பெரும்பாலும் வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான சில்லறை விற்பனைத் தயாரிப்புகளில் UPC-A பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சூயிங்கம் பேக்குகள் போன்ற சிறிய பேக்கேஜ்கள் அல்லது தயாரிப்புகளில் UPC-E பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. |
| EAN | 8 அல்லது 13 இலக்கங்கள். | சில்லறை விற்பனைத் தயாரிப்புகள், பெரும்பாலும் வட அமெரிக்காவிற்கு வெளியே பயன்படுத்தப்படுகின்றன. EAN-13 பார்கோடுகள், காலமுறை இதழ்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. EAN-8 பார்கோடுகள் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சூயிங்கம் பேக்குகள் போன்ற சிறிய பேக்கேஜ்கள் அல்லது தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. |
| ISBN | 10 அல்லது 13 எழுத்துகள், இதில் X என்ற எழுத்தும் அடங்கும். | உலகெங்கிலும் உள்ள பிசிக்கல் புத்தகங்கள் மற்றும் மின் புத்தகங்கள். ஜனவரி 2007-க்கு முன் ஒதுக்கப்பட்ட ISBN-கள் 10 எழுத்துகளைக் கொண்டிருக்கும். |
| ASIN | 10 எழுத்துகள் அல்லது இலக்கங்கள். | ஒரு தயாரிப்பு அல்லது தயாரிப்பு மாறுபாட்டுக்கான Amazon-இன் அகக் கேட்டலாக் எண். |
| NS-PID | அதிகபட்சம் 255 எழுத்துகள் நீளம் வரையிலான எந்தவொரு மதிப்பும் இருக்கலாம். | மாடல் எண், பகுதி எண் அல்லது ஸ்டைல் குறியீடு போன்ற தரநிலைப்படுத்தப்படாத உற்பத்தியாளர் தயாரிப்பு அடையாளங்காட்டி. இது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஷிப்மென்ட்களின் சுங்கத்துறை அறிவிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. |
GS1-இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு பார்கோடை நீங்கள் உள்ளிட்டால், பார்கோடு வகையானது தானாகவே GTIN என அமைக்கப்படும். உங்கள் தயாரிப்பின் பெயரும் விற்பனையாளரும் அந்தப் பார்கோடுக்கான GS1 பட்டியலுடன் ஒப்பிடப்படும்போது அவை பொருந்தவில்லை எனில், ஒரு எச்சரிக்கை காட்டப்படும். உங்கள் தயாரிப்பு விவரங்களை GS1 பதிவுப் பட்டியலுடன் ஒப்பிட, எச்சரிக்கை ஐகானைக் கிளிக் செய்யவும்.
சேமிக்கப்பட்ட ஒரு பார்கோடு தனிப்பயன் வகையைக் கொண்டிருந்தால், அதன் மதிப்பு சரியான GTIN ஆக இருந்தால், அதன் வகையாக GTIN பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் அந்தப் பரிந்துரையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
நீங்கள் பார்கோடுகளைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், கனடாவுக்கான GS1 பார்கோடு விளக்கப்படம் அல்லது அமெரிக்காவுக்கான GS1 பார்கோடு விளக்கப்படம் ஆகியவற்றைப் பார்க்கவும்.
தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்த்தல்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டிற்கு நீங்கள் பார்கோடுகளைச் சேர்க்கலாம் அல்லது Shopify செயலியில் உங்கள் மொபைல் சாதனத்தின் கேமரா மூலம் அவற்றை ஸ்கேன் செய்தும் சேர்க்கலாம். நீங்கள் ஒரு பார்கோடைச் சேர்க்கும்போது, அதன் பார்கோடு வகையையும் நீங்கள் அமைக்கலாம்.
நீங்கள் மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தியும் அல்லது CSV கோப்பை இறக்குமதி செய்தும் பார்கோடுகளைச் சேர்க்கலாம். மொத்தத் திருத்தியில், பார்கோடுகளை உங்கள் கையால் உள்ளிடுவதற்குப் பதிலாக பார்கோடு ஸ்கேனரைக் கொண்டும் உள்ளிடலாம். மொத்தத் திருத்தியில் பார்கோடுகளை ஸ்கேன் செய்வது குறித்து மேலும் அறிக.
மாறுபாடுகள் இல்லாத தயாரிப்பில் பார்கோடுகளைச் சேர்த்தல்
நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கும்போது அல்லது ஏற்கனவே உள்ள தயாரிப்பைத் திருத்தும்போது பார்கோடுகளைச் சேர்க்கலாம். Shopify செயலியில், உங்கள் மொபைல் சாதனத்தின் கேமரா மூலம் பார்கோடை ஸ்கேன் செய்யலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
ஏற்கனவே உள்ள ஒரு தயாரிப்பைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய தயாரிப்பை உருவாக்கவும்.
சரக்கு இருப்பு பிரிவில், பார்கோடுகள் புலத்தைக் கிளிக் செய்யவும்.
பார்கோடு புலத்தில், பார்கோடு எண்ணை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: பார்கோடுக்குரிய தொழில்துறைத் தரநிலையை அமைக்க, தனிப்பயன் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் பார்கோடு வகையைத் தேர்ந்தெடுக்கவும். பதிவுசெய்யப்பட்ட GTIN பார்கோடு மதிப்புகள் தானாகவே கண்டறியப்பட்டு, உங்களுக்காக GTIN பார்கோடு வகை தேர்ந்தெடுக்கப்படும்.
விருப்பத்தேர்வு: வேறொரு பார்கோடைச் சேர்க்க,
பார்கோடைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் 4 மற்றும் 5 ஆகிய படிகளை மீண்டும் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- முன்பே உள்ள தயாரிப்பைத் தட்டவும் அல்லது புதிய தயாரிப்பை உருவாக்கவும்.
- சரக்கு இருப்பு பிரிவில், திருத்து என்பதைத் தட்டவும்.
- பார்கோடுகள் (EAN, GTIN, ISBN, UPC போன்றவை) என்பதைத் தட்டவும்.
ஐகானைத் தட்டி, உங்கள் மொபைல் சாதனக் கேமரா மூலம் பார்கோடை ஸ்கேன் செய்யவும்.
- விருப்பத்திற்குரியது: பார்கோடுக்குரிய துறைசார் தரநிலையை அமைக்க, தனிப்பயன் கீழ்தோன்றும் மெனுவைத் தட்டி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் பார்கோடு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்திற்குரியது: மற்றொரு பார்கோடைச் சேர்க்க,
பார்கோடைச் சேர் என்பதைத் தட்டி, 5, 6 ஆகிய படிகளை மீண்டும் செய்யவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
தயாரிப்பு மாறுபாடுகளுக்குப் பார்கோடுகளைச் சேர்த்தல்
தயாரிப்பில் மாறுபாடுகள் இருந்தால், ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் நீங்கள் பார்கோடுகளைச் சேர்க்க வேண்டும். Shopify செயலியில், உங்கள் மொபைல் சாதனத்தின் கேமரா மூலம் பார்கோடை ஸ்கேன் செய்யலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
மாறுபாடுகள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் மாறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து,
> பார்கோடுகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பார்கோடுகளைத் திருத்து உரையாடலில் உள்ள ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
பார்கோடு புலத்தில், பார்கோடு எண்ணை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: பார்கோடுக்குரிய தொழில்துறைத் தரநிலையை அமைக்க, தனிப்பயன் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் பார்கோடு வகையைத் தேர்ந்தெடுக்கவும். பதிவுசெய்யப்பட்ட GTIN பார்கோடு மதிப்புகள் தானாகவே கண்டறியப்பட்டு, உங்களுக்காக GTIN பார்கோடு வகை தேர்ந்தெடுக்கப்படும்.
விருப்பத்திற்குரியது: மாறுபாட்டிற்கு மற்றொரு பார்கோடைச் சேர்க்க,
பார்கோடைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, 5, 6 ஆகிய படிகளை மீண்டும் செய்யவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பைத் தட்டவும்.
- மாறுபாடுகள் பிரிவில், தயாரிப்பின் மாறுபாடுகளைத் தட்டி, நீங்கள் திருத்த விரும்பும் மாறுபாட்டைத் தட்டவும்.
- சரக்கு இருப்பு பிரிவில், திருத்து என்பதைத் தட்டவும்.
- பார்கோடுகள் (EAN, GTIN, ISBN, UPC போன்றவை) என்பதைத் தட்டவும்.
ஐகானைத் தட்டி, உங்கள் மொபைல் சாதனக் கேமரா மூலம் பார்கோடை ஸ்கேன் செய்யவும்.
- விருப்பத்திற்குரியது: பார்கோடுக்குரிய துறைசார் தரநிலையை அமைக்க, தனிப்பயன் கீழ்தோன்றும் மெனுவைத் தட்டி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் பார்கோடு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்திற்குரியது: மற்றொரு பார்கோடைச் சேர்க்க,
பார்கோடைச் சேர் என்பதைத் தட்டி, 6, 7 ஆகிய படிகளை மீண்டும் செய்யவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
பார்கோடு அமைவிடம் மற்றும் அச்சிடல் குறித்த சிறந்த நடைமுறைகள்
நீங்கள் பார்கோடை அச்சிடும் விதமும் தயாரிப்பின் மீது அதை அமைக்கும் விதமும், உங்கள் பார்கோடைப் படிக்கும் ஸ்கேனர்களின் திறனைப் பாதிக்கலாம்.
பார்கோடு அச்சிடும் முறைகள்
உங்கள் தயாரிப்பைப் பொறுத்து, பல்வேறு முறைகளைப் பயன்படுத்திப் பார்கோடுகளை அச்சிடலாம். பார்கோடு அச்சிடும் முறைகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்:
| முறை | விளக்கம் | எடுத்துக்காட்டுத் தயாரிப்புகள் |
|---|---|---|
| தயாரிப்பின் மீது நேரடியாக அச்சிடப்படும் பார்கோடு. | பார்கோடைத் தயாரிப்பிலிருந்து பிரிக்கக் கூடாது எனும்போது, தயாரிப்பின் மீது நேரடியாகப் பார்கோடை அச்சிட லேசர் பிரிண்டர்களைப் பயன்படுத்தும் ஒரு பொதுவான முறை. | புத்தகங்கள், உலோகக் கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள். |
| தயாரிப்புடன் இணைக்கப்பட்டுள்ள லேபிளில் அச்சிடப்படும் பார்கோடு. | சிறு வணிகங்கள் அல்லது தயாரிப்பின் மீது நேரடியாகப் பார்கோடுகளை அச்சிடுவதற்கான லேசர் பிரிண்டர் வசதி இல்லாதவர்களால் பயன்படுத்தப்படுகிறது. | ஸ்டேஷனரி பொருட்கள், காபி, சில்லறை விளைபொருட்கள். |
| தயாரிப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொங்கும் லேபிளில் அச்சிடப்படும் பார்கோடு. | பார்கோடுகளுக்கு ஏற்ற மேற்பரப்பு இல்லாத தயாரிப்புகளுக்கும் லேபிள் ஒட்டும் பசையால் சேதமடையக்கூடிய தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. | ஆடைகள், பரிசுப் பொருட்கள், மேசைப் பொருட்கள். |
| தயாரிப்புப் பொதியாக்கத்தில் அச்சிடப்படும் பார்கோடு. | பெட்டி அல்லது பொதியில் வரும் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. | காலணிகள், ஸ்கேட்கள், மின்னணுவியல் மற்றும் எந்தவொரு பொதியாக்கப்பட்ட தயாரிப்புகளும். |
பார்கோடு அச்சிடுவதற்கான வழிகாட்டுதல்கள்
உங்கள் பார்கோடுகள் சரியான அளவிலும் நீங்கள் அச்சிடும் லேபிள்களில் வெட்டப்படாமலோ தவறாகச் சீரமைக்கப்படாமலோ இருப்பதை உறுதிசெய்ய, பார்கோடுகளைச் சரியாக அச்சிடுவது குறித்த பின்வரும் பொதுவான வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்:
- நீங்கள் பார்கோடுகளை அச்சிடுகிறீர்கள் என்றால், பார்கோடு ஸ்கேனர்கள் அவற்றை ஸ்கேன் செய்யும்படி, 300 dpi அல்லது அதற்கும் அதிகமான தெளிவுத்திறனைப் (resolution) பயன்படுத்தவும்.
- பெருமளவிலான பார்கோடுகளை அச்சிடுவதற்கு முன்பு, ஒரேயொரு சோதனைத் தாளை அச்சிட்டுப் பார்கோடுகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.
- குறியீட்டிற்குக் கீழே பார்கோடு எண்ணை அச்சிடுங்கள், இதனால் பார்கோடு சேதமடைந்தாலும் எண்ணைக் கொண்டு தயாரிப்பைக் கண்டறிய முடியும்.
- பார்கோடு குறைந்தபட்சம் 1.5 அங்குலம் அகலமும் 1 அங்குலம் உயரமும் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும். GS1 தரநிலைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவை மதிப்பாய்வு செய்யவும்.
- பார்கோடுகளை அச்சிடும்போது கருப்பு மை அல்லது மற்றொரு அடர் நிறத்தைப் பயன்படுத்தவும். சிவப்பு அல்லது பழுப்பு நிற மையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- விநியோகச் சங்கிலிக்குள் ஒவ்வொரு மாறுபாட்டையும் கண்டறிய, ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிற்கும் தனிப்பட்ட பார்கோடுகளை அச்சிடவும்.
பார்கோடு அமைவிடத்திற்கான வழிகாட்டுதல்கள்
பார்கோடுகளைச் சரியாக வைப்பது குறித்த பின்வரும் பொதுவான வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்:
- பார்கோடுகளைத் தயாரிப்பின் மீது தட்டையாக வைக்கவும், அவற்றை மடிக்க வேண்டாம்.
- பார்கோடை டேப் அல்லது ஷ்ரிங்க் ரேப் (shrink wrap) கொண்டு சுற்ற வேண்டாம்.
- உங்கள் பார்கோடுக்கு மிக அருகில் ஸ்டிக்கர்கள் அல்லது உரை கூறுகளை வைப்பதைத் தவிர்க்கவும்.
- உங்கள் லேபிளுக்கு இடமளிக்க, பார்கோடின் மேல் அல்லது கீழ் பகுதியை வெட்டவோ துண்டிக்கவோ வேண்டாம்.
- உங்கள் தயாரிப்பின் மீது பல பார்கோடுகளை வைக்க வேண்டாம்.
- பார்கோட்டின் மீது ஸ்டேப்லர்களை (staples) அடிக்க வேண்டாம்.
- போதுமான இடமில்லாத பகுதியில் தயாரிப்பின் மீது பார்கோடை வைக்க வேண்டாம்.
- தயாரிப்பின் விளிம்புகளில் பார்கோடுகளை வைக்க வேண்டாம்.
- உங்கள் தயாரிப்பு சதுரம், செவ்வகம், வட்டம், குழிவான அல்லது குவிந்த வடிவில் இருந்தால், ஸ்பாட் லேபிள்கள் (spot labels), தொங்கும் லேபிள்கள் அல்லது கார்டட் ஸ்லீவ்களைப் (carded sleeves) பயன்படுத்தப் பரிசீலிக்கவும்.
பார்கோடு அச்சிடல் மற்றும் லேபிள் அமைப்பிற்கான சிறந்த நடைமுறைகள் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், தயாரிப்புகளில் பார்கோடுகளை வைப்பதற்கான GS1 வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.