தயாரிப்பு விளக்கங்களைத் தானாக உருவாக்குதல்

தானியங்கி உரை உருவாக்கத்தைப் பயன்படுத்தித் தயாரிப்பு விளக்கங்களை எழுத, நீங்கள் Shopify Magic ஐப் பயன்படுத்தலாம். இந்த அம்சம், நீங்கள் வழங்கும் தயாரிப்புத் தலைப்பு மற்றும் முக்கியச் சொற்கள் போன்ற விவரங்களை எடுத்துக்கொண்டு, தயாரிப்பு விளக்கத்திற்கான ஒரு பரிந்துரையை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது.

உங்கள் தயாரிப்பு விளக்கங்களுக்குத் தானியங்கி உரையை உருவாக்குவதற்கு முன்பு, AI-ஆல் இயக்கப்படும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து அறியவும்.

ஆதரிக்கப்படும் மொழிகள்

Shopify ஆதரிக்கும் அனைத்து மொழிகளிலும் தயாரிப்பு விளக்கத்தைத் தானாக உருவாக்கும் வசதி கிடைக்கிறது. உங்கள் பிராம்ட்டை எந்த மொழியிலும் நீங்கள் எழுதலாம், மேலும் உருவாக்கப்படும் உள்ளடக்கம் உங்கள் பிராம்ட்டின் மொழியுடன் பொருந்தும். சிறந்த முடிவுகளுக்கு, உங்கள் தயாரிப்பு விளக்கம் எந்த மொழியில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதே மொழியில் உங்கள் பிராம்ட்டை எழுதவும்.

முழுமையான தயாரிப்பு விளக்கத்தை வரைவாக உருவாக்குதல்

நீங்கள் ஒரு புதிய தயாரிப்பு விளக்கத்தை எழுத வேண்டியிருக்கும் போது, தொடங்குவதற்கு உதவியாகத் தானாக உருவாக்கப்படும் விளக்கங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் எந்தத் தயாரிப்புக்கு விளக்கத்தை வரைவாக உருவாக்க விரும்புகிறீர்களோ, அதைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்பு விளக்க உரைப் பெட்டியில், கருவிப்பட்டியில் உள்ள உரையை உருவாக்கு ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் உருவாக்க விரும்பும் உள்ளடக்கத்தை விவரிக்கும் பிராம்ட்டை உள்ளிட்டு, அதைச் சமர்ப்பிக்கவும். உருவாக்கப்பட்ட உரை, நேரடியாகத் தயாரிப்பு விளக்கத்தில் பயன்படுத்தப்படும். நீங்கள் சேர்க்கும் விவரங்கள் அதிகரிக்க, பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கமும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். தயாரிப்பு அம்சங்கள், முக்கியச் சொற்கள், விரும்பும் தொனி அல்லது வேறு ஏதேனும் அறிவுறுத்தல்களை நேரடியாக உங்கள் பிராம்ட்டிலேயே சேர்க்கலாம்.

  5. உங்கள் தயாரிப்பு மற்றும் பிராண்டிற்குப் பொருந்தும் வகையில் தயாரிப்பு விளக்கத்தைத் திருத்தி வடிவமைத்து, பின்னர் சேமி என்பதைக் கிளிக் செய்யவும். வெளியிடப்பட்ட தயாரிப்புகள் உடனடியாகப் புதிய தயாரிப்பு விளக்கத்தைக் காட்டும்.

நீங்கள் பெறும் உள்ளடக்கப் பரிந்துரைகளை மேம்படுத்துதல்

​ உங்கள் தயாரிப்பு விளக்கங்களுக்காக உருவாக்கப்படும் பரிந்துரைகளை மதிப்பிடும்போது, சிறந்த தயாரிப்பு விளக்கத்தை உருவாக்குவது எது என்பதைக் கருத்தில் கொள்ளவும். தயாரிப்பு விளக்கங்கள், உங்கள் ஸ்டோரின் பிராண்டைப் பிரதிபலிக்கும் வகையில், உங்கள் தயாரிப்பின் பலன்களைப் பொதுவான முறையில் அல்லாமல் தனித்துவமாகத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் விளக்க உள்ளடக்கத்தைத் தானாக உருவாக்கும்போது, உங்களின் பிராம்டில் அதிக விவரங்களைச் சேர்ப்பதன் மூலம் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்.

உருவாக்கப்படும் பரிந்துரைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி, உங்கள் பிராம்டில் உங்கள் தயாரிப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குவதாகும். விளக்கத்தை உருவாக்குவதற்கு முன்பாக, குறைந்தபட்சம் ஒரு தயாரிப்புத் தலைப்பு மற்றும் குறைந்தது 2 தயாரிப்பு அம்சங்கள் அல்லது முக்கியச் சொல் உருப்படிகளை வழங்கவும். நீங்கள் அதிக முக்கியச் சொற்கள் அல்லது சொற்றொடர்களைச் சேர்த்தால், மிகவும் துல்லியமான மற்றும் தனித்துவமான உள்ளடக்கத்தைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் விரும்பும் தொனி அல்லது எழுத்து நடையை நேரடியாக உங்கள் பிராம்டிலேயே குறிப்பிடலாம்.

முடிவுகளை மேம்படுத்த, பின்வரும் வகையான தகவல்களை உங்கள் தயாரிப்பு விளக்கங்களில் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • தயாரிப்பு வகை முக்கியச் சொற்கள்: உங்கள் தயாரிப்புத் தலைப்பானது தயாரிப்பின் வகையைத் தெளிவாக விவரிக்கவில்லை எனில், எடுத்துக்காட்டாக, கண்ணாடிகள் என்று குறிப்பிடாமல் Washington என்பது போன்ற தயாரிப்பின் பெயராக இருந்தால் குறைந்த தரத்திலான முடிவுகளை நீங்கள் பெறலாம். தயாரிப்பு வகை அல்லது பகுப்பைக் குறிக்கும் வகையிலான hot sauce அல்லது bar soap போன்ற முக்கியச் சொற்களை வழங்கவும்.
  • வாடிக்கையாளர் பற்றிய தகவல்: சிறந்த தயாரிப்பு விளக்கங்கள், உங்கள் இலக்கு வாடிக்கையாளரின் தேவைகளையும் விருப்பங்களையும் பிரதிபலிக்கும். அவர்களின் மக்கள்தொகையியல் (இளம் பெற்றோர்) அல்லது அவர்களின் மதிப்புகள் (சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வுள்ளவர், வெளியில் சுற்றுபவர்) போன்ற யாருக்குத் தயாரிப்பு மிகச் சிறந்தது என்பது குறித்த சில முக்கியச் சொற்களைச் சேர்க்கவும். தயாரிப்பின் பலன்களை உருவாக்கவும் உங்கள் முடிவுகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் வகையைத் தீர்மானிக்கவும் இந்தத் தகவல் உதவியாக இருக்கும்.
  • பொருள்கள், தயாரிப்பு முறை, அளவு, பயன்படுத்த உத்தேசித்துள்ள விதம் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள்: நீங்கள் வழங்கும் எந்தவொரு தயாரிப்பு விவரக்குறிப்பையும், உருவாக்கப்படும் விளக்கங்களில் பத்திகளாக மாற்ற முடியும்.
  • முக்கியமான பிராண்ட் முக்கியச் சொற்கள் அல்லது சொற்களஞ்சியம்: நீங்கள் வழங்கும் தகவல்களுக்கான வெவ்வேறு சொற்றொடர்களை முடிவுகள் உள்ளடக்கியிருந்தாலும், பிராண்ட் பெயர்கள் அல்லது தனித்துவமான விளக்கச் சொற்கள் போன்ற சிறப்பு வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் பெரும்பாலும் அப்படியே வைக்கப்படும். எடுத்துக்காட்டாக, நீங்கள் வழங்கும் முக்கியச் சொற்களில் உங்களின் மின்ட் லிப் பாமை mint-astic என்று விவரித்தால், உருவாக்கப்படும் பரிந்துரைகளில் பெரும்பாலும் அந்தச் சொல் சேர்க்கப்படும்.
  • பிற தயாரிப்பு விவரங்கள்: என்னென்ன முக்கியச் சொற்களை வழங்கலாம் என்பது பற்றிய யோசனைகளைப் பெறுவதற்கு, Shopify இல் உங்கள் தயாரிப்பில் நீங்கள் சேர்த்த விவரங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் தயாரிப்பு மாறுபாடுகளைக் கொண்டிருந்தால், அளவு மற்றும் நிறம் போன்ற மாறுபாடு விருப்பங்களை முக்கியச் சொற்களாக வழங்கலாம். விற்பனையாளர், வகை அல்லது சேகரிப்புப் பெயர்கள் போன்ற பிற தயாரிப்பு விவரங்களையும் கருத்தில் கொள்ளலாம்.