தயாரிப்பு நுண்ணறிவுகள்

கடந்த 90 நாட்களுக்கான உங்கள் தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த தரவைத் தயாரிப்பு நுண்ணறிவுகள் காண்பிக்கின்றன. குறிப்பிட்ட தயாரிப்புகளை யார் வாங்குகிறார்கள், அந்த வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோருக்கு எப்படி வந்தார்கள் மற்றும் அந்தத் தயாரிப்பு காலப்போக்கில் எப்படி விற்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும்.

தயாரிப்பு நுண்ணறிவுகளைப் பார்த்தல்

தயாரிப்பு விவரங்கள் பக்கத்திலிருந்து உங்களால் தயாரிப்பு நுண்ணறிவுகளைப் பார்க்க முடியும்.

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பார்க்க விரும்பும் தயாரிப்பின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் நுண்ணறிவுகள் என்பதன் கீழ், விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒவ்வொரு தயாரிப்பிற்கும், தயாரிப்பு நுண்ணறிவுகள் இவற்றைக் காண்பிக்கின்றன:

நுண்ணறிவுகள் பிரிவுகளின் விளக்கம்
பிரிவுவரையறை
நிகர விற்பனைதயாரிப்பின் யூனிட் விலையை, விற்கப்பட்ட மொத்த யூனிட்களின் எண்ணிக்கையால் பெருக்கி, அதிலிருந்து தள்ளுபடிகள் மற்றும் விற்பனைத் திரும்பப்பெறுதல்களைக் கழித்துப் பெறப்படுவது; முந்தைய 90 நாள் காலகட்டத்தின் நிகர விற்பனையுடன் ஒப்பிடப்படும்.
காலப்போக்கில் நிகர விற்பனைநிகர விற்பனைக்குக் காரணமான அனைத்து மதிப்புகளின் பிரிப்பு; மொத்த விற்பனையிலிருந்து தள்ளுபடிகள் மற்றும் விற்பனைத் திரும்பப்பெறுதல்களைக் கழிப்பதன் மூலம் நிகர விற்பனை கண்டறியப்படுகிறது.
சேனல் வாரியாக நிகர விற்பனைஇந்தத் தயாரிப்பின் அதிக நிகர விற்பனையை உருவாக்கிய விற்பனைச் சேனல்கள்.
டிராஃபிக் ஆதாரம் வாரியாக விற்கப்பட்ட நிகர யூனிட்கள்உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டுவந்து அதிக யூனிட்கள் விற்கப்படக் காரணமான டிராஃபிக் ஆதாரங்கள்; விற்கப்பட்டதை விட அதிக உருப்படிகள் திருப்பியளிக்கப்பட்டால் எதிர்மறை மதிப்புகள் காட்டப்படலாம்.
வாடிக்கையாளர்கள்குறைந்தது ஒரு முறையாவது கடந்த காலத்தில் கொள்முதல் செய்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடுகையில், உங்கள் ஸ்டோரிலிருந்து முதல் முறையாகக் கொள்முதல் செய்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.