தயாரிப்புகளுக்கான விற்பனை விலைகளை அமைத்தல்
தயாரிப்பின் விலையை நீங்கள் குறைக்கும்போது, விலைகளுக்கு இடையிலான ஒப்பீட்டை வாடிக்கையாளர் புரிந்துகொள்ள விரும்புவீர்கள்.
விற்பனை விலையை அமைக்க, உங்கள் Shopify நிர்வாகியில் ஒப்பீட்டு விலை புலத்தில் தயாரிப்பின் அசல் விலையை உள்ளிடவும். விற்பனை விலையைக் காண்பிக்க, விலை புலத்தில் உள்ள மதிப்பைவிட, ஒப்பீட்டு விலை புலத்தில் உள்ள மதிப்பு அதிகமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
விற்பனை விலைகளைப் பயன்படுத்துவது தள்ளுபடிகளை அமைப்பதிலிருந்து வேறுபட்டது. நீங்கள் ஒரு விற்பனை விலை மற்றும் ஒப்பீட்டு விலையை அமைத்தால், இந்த இரண்டு தொகைகளையும் தயாரிப்புப் பக்கங்கள் மற்றும் சேகரிப்புப் பக்கங்களில் காட்ட முடியும், ஆனால் செக்அவுட்டில் விற்பனை விலை மட்டுமே காட்டப்படும்.
தயாரிப்புப் பக்கங்கள் மற்றும் சேகரிப்புப் பக்கங்களில் குறுக்குக் கோடிடப்பட்ட (அடிக்கப்பட்ட) விலைகளுடன் தள்ளுபடிகளில் கிடைக்கும் சேமிப்பைக் காட்ட, நீங்கள் ஒரு மூன்றாம் தரப்புத் தள்ளுபடிச் செயலியைப் பயன்படுத்த வேண்டும் அல்லது உங்களுக்காகத் தனிப்பயன் தீர்வை உருவாக்க Shopify பார்ட்னர் ஒருவரைப் பணியமர்த்த வேண்டும். தானியங்கு தள்ளுபடிகள் அல்லது குறியீட்டை உள்ளிட வேண்டிய தள்ளுபடிகளில் கிடைக்கும் சேமிப்புகள் எப்போதுமே செக்அவுட்டில் குறுக்குக் கோடிடப்பட்ட விலையுடன் காட்டப்படும்.
இந்தப் பக்கத்தில்
விற்பனை விலைகளைக் காட்டுதல்
உங்கள் Shopify நிர்வாகியில் விற்பனை விலைகளை அமைக்கிறீர்கள். உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் விற்பனை விலைகள் காட்டப்படுமா மற்றும் அவை எங்கு காட்டப்படும் என்பதை உங்கள் தீம் கட்டுப்படுத்துகிறது.
உதாரணமாக, உங்கள் தீம் தயாரிப்புப் பட்டியல் மற்றும் சேகரிப்புப் பக்கங்களில் ஒரு செய்தி அல்லது தள்ளுபடி சதவீதத்துடன் ஒரு பேட்ஜைச் சேர்க்கலாம். உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் உள்ள விற்பனை விலை ஸ்டைலிங்கை பெரும்பாலும் உங்கள் தீம் அமைப்புகள் மூலம் தனிப்பயனாக்கலாம். என்னென்ன தனிப்பயனாக்க அமைப்புகள் உள்ளன என்பதை அறிய, உங்கள் தீமின் ஆவணங்களைப் பார்க்கவும் அல்லது ஆதரவுக்காக உங்கள் தீம் டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும்.
ChatGPT மற்றும் Microsoft Copilot போன்று Shopify Catalog மூலம் தயாரிப்புகளைக் கண்டறியும் AI சேனல்களில் விற்பனை விலைகள் எப்படிக் காட்டப்படுகின்றன என்பதை உங்கள் தீம் கட்டுப்படுத்தாது. உங்கள் ஸ்டோர் Shopify Catalog-க்குத் தகுதி பெற்றிருந்தால், AI ஏஜெண்டுகளுக்கு Shopify Catalog விலையை அல்லது ஒப்பீட்டு விலையைப் பட்டியல் விலையாகப் பயன்படுத்துகிறதா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். ஒவ்வொரு AI சேனலும் நடப்பு விலைக்கு அடுத்துப் பட்டியல் விலையைக் காட்ட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கிறது.
விற்பனை விலையை அமைப்பதற்கான உதாரணம்
உதாரணமாக, சீசனுக்கேற்ற வடிவமைப்புகளைக் கொண்ட டி-ஷர்ட்களை $30-க்கு விற்கிறீர்கள். புதிய சீசன் தொடங்கும் போது, முந்தைய சீசன் வடிவமைப்புகளை $10-க்கு விற்பனைக்கு வைக்கிறீர்கள்.
உங்கள் Shopify நிர்வாகியில், விலை மதிப்பை $10 USD என மாற்றி, ஒப்பீட்டு விலை மதிப்பை $30 USD என அமைக்கிறீர்கள். உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில், உங்கள் தீம் ஒரு விற்பனைச் செய்தியைக் கொண்ட பேட்ஜுடன் இரு விலைகளையும் காட்டும்.
ஒப்பீட்டு விலையை அமைத்தல்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்பு விவரங்கள் பக்கத்திலிருந்து, ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டுக்கான ஒப்பீட்டு விலை மதிப்பை அமைக்கலாம். நீங்கள் பல மாறுபாடுகளை மொத்தமாகத் திருத்தவும் முடியும் அத்துடன் பல தயாரிப்புகளை மொத்தமாகத் திருத்தவும் முடியும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
ஒரு மாறுபாட்டைத் திருத்த, மாறுபாடுகள் பிரிவில், XX மாறுபாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
விலை பிரிவில், பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- ஒப்பிடும் விலை என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒப்பீட்டு விலை புலத்தில், அசல் விலையை உள்ளிடவும்.
- விலை புலத்தில், புதிய விலையை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும் .
- நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பைத் தட்டவும்.
- ஒரு தயாரிப்பைத் திருத்த, தயாரிப்பு விலைப் பகுதியைத் தட்டவும். மாறுபாட்டைத் திருத்த, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- மாறுபாடுகள் பிரிவில், XX மாறுபாடுகள் என்பதைத் தட்டவும்.
- நீங்கள் திருத்த விரும்பும் மாறுபாட்டைத் தட்டவும்.
- தயாரிப்பு மாறுபாட்டின் விலைப் பகுதியைத் தட்டவும்.
- ஒப்பீட்டு விலை புலத்தில், அசல் விலையை உள்ளிடவும்.
- விலை புலத்தில், புதிய விலையை உள்ளிடவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
விற்பனை விலைகளின் சிக்கல்களைத் தீர்த்தல்
விற்பனை விலைகளில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், பின்வரும் சிக்கல் தீர்த்தல் தகவல்களை மதிப்பாய்வு செய்யவும்.
சேகரிப்புப் பக்கங்களில் ஒப்பீட்டு விலை காட்டப்படவில்லை
உங்களின் ஒப்பீட்டு விலை தயாரிப்புப் பக்கங்களில் சரியாகக் காட்டப்பட்டு, சேகரிப்புப் பக்கங்களில் காட்டப்படவில்லை எனில், சில மாறுபாடுகளில் முரண்பாடான ஒப்பீட்டு விலைகள் இருப்பதே அதற்குக் காரணமாக இருக்கலாம்.
சேகரிப்புப் பக்கத்தில் ஒரு தயாரிப்பு காட்டப்படும் போது, அனைத்து மாறுபாடுகளுக்கும் பொருந்தக்கூடிய மிகவும் பொதுவான தகவல்களையே தயாரிப்பு காட்டும். சில மாறுபாடுகளில் சீரற்ற ஒப்பீட்டு விலைகள் (அதாவது, சில மாறுபாடுகளில் $0.00 USD என்ற ஒப்பீட்டு விலையைக் கொண்டிருப்பது அல்லது சில காலியாக இருப்பது அல்லது மாறுபாடுகளில் வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டிருப்பது) இருந்தால், தனிப்பட்ட மாறுபாடுகள் விற்பனையில் இருந்தாலும், தயாரிப்பு விற்பனையில் இருப்பதாகச் சேகரிப்புப் பக்கம் காட்டாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட மாறுபாட்டிற்கான விலையைக் காட்டுவதால், தயாரிப்புப் பக்கங்களில் ஒப்பீட்டு விலை சரியாகக் காட்டப்படும்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க, அனைத்து மாறுபாடுகளும் சீரான ஒப்பீட்டு விலையைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யவும்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.
- சிக்கல் உள்ள தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
- மாறுபாடுகள் பிரிவில், அனைத்து மாறுபாடுகளுக்குமான ஒப்பீட்டு விலைகளை மதிப்பாய்வு செய்யவும்.
- முரண்பாடான அனைத்து ஒப்பீட்டு விலைகளையும் அகற்றிவிட்டு அவற்றைக் காலியாக விடவும் அல்லது அனைத்து ஒப்பீட்டு விலைகளும் அவற்றின் வழக்கமான விலைகளை விட அதிகமாக இருப்பதை உறுதிசெய்யவும். $0.00 USD என்ற ஒப்பீட்டு விலை என்பதும் காலியான ஒப்பீட்டு விலை என்பதும் ஒன்றல்ல. ஒப்பீட்டு விலையைக் காட்டக் கூடாத மாறுபாடுகளுக்கான புலத்தை முற்றிலுமாக அழித்துவிட்டீர்களா என்பதை உறுதிசெய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.