Smart Pricing இல் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விலைகளைப் புதுப்பித்தல்
ஒரு பரிசோதனை முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, பரிசோதனையின் சுருக்கத்தை முடிவுகள் பக்கத்திலிருந்து நீங்கள் அணுகலாம். இந்தப் பக்கமானது பரிசோதனையில் சேர்க்கப்பட்டுள்ள தயாரிப்புகளின் ஒட்டுமொத்த லாபம் மற்றும் வருவாய்த் தரவு உட்பட பரிசோதனையின் முடிவுகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த லாப அதிகரிப்பு இருக்கும்போது அல்லது லாப நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லாதபோது, ஒரு CSV கோப்பைப் பயன்படுத்தி உங்கள் சோதனை விலைகளை நிரந்தரமாகச் செயல்படுத்துவதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது.
இந்தப் பக்கத்தில்
ஒரு விலை நிர்ணயப் பரிசோதனையின் முடிவுகளை விளங்கிக்கொள்ளுதல்
விலை நிர்ணயப் பரிசோதனை நிறைவடையும்போது, பரிசோதனையின் முடிவுகளைக் கோடிட்டுக் காட்டும் முடிவுகளின் பக்கத்தைப் பெறுவீர்கள். உங்கள் பரிசோதனை முடிவுகளில் பின்வரும் பிரிவுகள் அடங்கும்:
- பரிசோதனை முடிவுகளின் சுருக்கம்
- பரிசோதனைப் பகுப்பாய்வு மற்றும் அளவீடுகள்
- தனிப்பட்ட சோதனை விலைகளின் செயல்திறன் அட்டவணை
பரிசோதனை முடிவுகளின் சுருக்கம்
பரிசோதனை முடிவுகளின் சுருக்கம், பரிசோதனையின் முடிவுகள் பக்கத்தின் மேல் பகுதியில் காண்பிக்கப்படும். பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்து, சாத்தியமான 3 சுருக்கங்கள் உள்ளன:
- லாப அதிகரிப்பு: இதில் விலை நிர்ணயப் பரிசோதனையின் முடிவானது ஸ்டோரின் ஒட்டுமொத்த லாப அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
- குறைந்தபட்ச மாற்றம்: இதில் விலை நிர்ணயப் பரிசோதனையின் முடிவானது ஸ்டோர் லாபத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அல்லது குறைவு எதையும் ஏற்படுத்தியிருக்காது.
- லாபக் குறைவு: இதில் விலை நிர்ணயப் பரிசோதனையின் முடிவானது ஸ்டோரின் ஒட்டுமொத்த லாபக் குறைவை ஏற்படுத்தியிருக்கும்.
லாபம் அதிகரிக்கும்போது அல்லது குறைந்தபட்ச மாற்றம் ஏற்படும்போது, ஒரு CSV கோப்பைப் பயன்படுத்தி, சோதனை விலைகளைப் பயன்படுத்தும் வகையில் உங்கள் விலைகளைப் புதுப்பிக்க நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் ஸ்டோர் லாபத்தில் குறைந்தபட்ச மாற்றம் ஏற்பட்டால், மார்க்கெட்டிங் அல்லது விற்பனை மேம்பாட்டு பட்ஜெட் போன்ற உங்கள் பிசினஸின் விலை நிர்ணயத்துடன் தொடர்புடைய பிற செலவுகள், விலை நிர்ணய மாற்றங்களைச் செயல்படுத்துவதைத் தகுதியானதாக்குகிறதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பரிசோதனை முடிவுகளை ஆதரிக்கும் பகுப்பாய்வு
பரிசோதனையின் முடிவுகள் பக்கத்தில், பரிசோதனையின்போது பதிவுசெய்யப்பட்ட விற்பனைத் தரவை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
மொத்த மாற்றத் தரவானது, அசல் விலைகள் மற்றும் சோதனை விலைகளை ஒப்பிடும் குழுவாக்கப்பட்ட பட்டை வரைபடங்கள் மூலம் குறிக்கப்படுகிறது. அதிகரிப்பு அல்லது குறைவின் அறிகுறி உட்பட சதவீதத்தின் வித்தியாசமும் காண்பிக்கப்படும். கூடுதலாக, 95% நம்பிக்கையில் முடிவுகள் புள்ளிவிவர முக்கியத்துவத்தை அடைந்ததா இல்லையா என்பதன் அடிப்படையில் முடிவற்றது அல்லது முடிவானது என்ற காட்டி காண்பிக்கப்படும்.
தயாரிப்பின் அடிப்படையில் செயல்திறன் முடிவுகளின் பட்டியல்
சோதனை விலைகளின் செயல்திறன் பிரிவில், பரிசோதனையின் குறிப்பிட்ட விற்பனை மற்றும் லாபத் தரவுகளுடன் விலை நிர்ணயப் பரிசோதனையில் சேர்க்கப்பட்ட தயாரிப்புகளின் பட்டியலும் காண்பிக்கப்படும். ஒவ்வொரு தயாரிப்பும் பின்வரும் தரவைக் காண்பிக்கும்:
| நெடுவரிசை | விளக்கம் |
|---|---|
| சோதனை விலை | பரிசோதனைக்கான சோதனை விலையையும் கட்டுப்பாட்டு விலையிலிருந்து ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவையும் சதவீதமாகக் காண்பிக்கும். |
| விற்கப்பட்ட யூனிட்கள் | பரிசோதனைக் காலத்தின்போது விற்கப்பட்ட தயாரிப்புகளின் மொத்த அளவையும் கட்டுப்பாட்டு விலையில் தயாரிப்பு விற்பனையின் அளவிலிருந்து ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவையும் சதவீதமாகக் காண்பிக்கும். |
| வருவாய் | பரிசோதனைக் காலத்தின்போது தயாரிப்பு விற்பனைக்கான மொத்த வருவாயையும் கட்டுப்பாட்டு விலையில் தயாரிப்பு விற்பனைக்கான வருவாயிலிருந்து ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவையும் சதவீதமாகக் காண்பிக்கும். |
| பொருட்களின் செலவு | பரிசோதனைக் காலத்தின்போது விற்கப்பட்ட தயாரிப்புக்கான பொருட்களின் மொத்த செலவைக் காட்டுகிறது. ஒரு தயாரிப்புக்கான பொருட்களின் செலவை, விற்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கையால் பெருக்கி இது கணக்கிடப்படுகிறது. |
| லாபம் | பரிசோதனைக் காலத்தின்போது தயாரிப்பின் மொத்த லாபத்தையும், கட்டுப்பாட்டு விலையில் தயாரிப்பின் விற்பனைக்கான வருவாயிலிருந்து ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவையும் சதவீதத்தில் காட்டுகிறது. வருவாயிலிருந்து விற்கப்பட்ட பொருட்களின் செலவைக் கழித்து லாபம் கணக்கிடப்படுகிறது. |
குறுக்கு-விலை நெகிழ்ச்சி
விலை நிர்ணயப் பரிசோதனையை உருவாக்கும்போது, பரிசோதனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துத் தயாரிப்புகளின் விலைகளும் சோதிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக மேம்படுத்தப்படும். இதில் சில தயாரிப்புகளின் விலையை அதிகரிப்பதும், பிற தயாரிப்புகளின் விலையைக் குறைப்பதும் அடங்கும். ஒட்டுமொத்த ஸ்டோரின் லாபம் அதிகரிப்பதாகப் பரிசோதனையின் முடிவுகள் காட்டினால், விலை அதிகரிப்பு மற்றும் குறைப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய CSV கோப்பைப் பயன்படுத்தி விலை உதவிக்குறிப்புகளை நிரந்தரமாகச் செயல்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு வகையான உதவிக்குறிப்புகளையும் ஏற்றுக்கொள்வது முக்கியமாகும், ஏனெனில் விலை அதிகரிப்பு மற்றும் குறைப்புகளின் சமநிலை மற்றும் அது வாடிக்கையாளர்களின் தேவையுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைப் பொறுத்து ஸ்டோரின் ஒட்டுமொத்த லாபம் தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் கருத்து cross-price elasticity of demand (தேவையின் குறுக்கு-விலை நெகிழ்ச்சி) என்று குறிப்பிடப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ஃபோன் கேஸ்கள் மற்றும் ஃபோன் ஆபரணங்களை விற்றால், உங்கள் ஸ்டோரில் உள்ள தயாரிப்புகளின் விற்பனைக்கு இடையிலான தொடர்பை நீங்கள் கவனிக்கலாம். ஒரு குறிப்பிட்ட பிராண்ட் ஃபோன் கேஸின் விலையை நீங்கள் உயர்த்தும்போது, அந்த 1 மாற்றம் உங்கள் ஸ்டோரின் பிற தயாரிப்புகளின் விற்பனையை எவ்வாறு பாதிக்கும் என்பதை நீங்கள் கண்டறியலாம், உதாரணமாக:
- அந்தப் பிராண்ட் ஃபோன் கேஸின் விற்பனை குறைவதையும், உங்கள் ஸ்டோரில் உள்ள விலை குறைவான வேறொரு பிராண்ட் ஃபோன் கேஸின் விற்பனை அதிகரிப்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.
- அந்தப் பிராண்ட் ஃபோன் கேஸின் விற்பனையில் எந்த மாற்றமும் இல்லாததை நீங்கள் கவனிக்கலாம், ஆனால் ஃபோன் சார்ஜர்கள் அல்லது ஃபோன் கிரிப்கள் போன்ற உங்கள் ஸ்டோரில் உள்ள பிற தயாரிப்புகளின் விற்பனையில் வீழ்ச்சியடைவதை நீங்கள் கவனிக்கலாம்.
உங்கள் தயாரிப்புகளுக்கு இடையிலான இந்தத் தொடர்பு, தேவையின் குறுக்கு-விலை நெகிழ்ச்சி ஆகும்.
வழங்கப்பட்ட CSV-ஐப் பயன்படுத்திப் பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகளின் விலைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் மாற்றுவது, உங்கள் ஸ்டோரில் உள்ள அனைத்துத் தயாரிப்பு விலைகளுக்கும் இடையேயான குறுக்கு-விலை நெகிழ்ச்சி காரணியைப் பராமரிக்கிறது, மேலும் ஸ்டோரின் லாப முடிவுகள் பரிசோதனையின் முடிவுகளுடன் அதிகளவில் ஒத்துப்போவதைக் குறிக்கிறது.
உங்கள் விலைகளைப் புதிய பரிசோதனை விலைகளுக்குப் புதுப்பிக்கவும்
விலை நிர்ணயப் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் தயாரிப்புகளின் விலைகளைப் புதுப்பிக்க முடிவெடுத்தால், பரிசோதனையின் முடிவுகள் பக்கத்திலிருந்து CSV கோப்பைப் பதிவிறக்கலாம். பின்னர், அந்த CSV கோப்பைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளைப் புதுப்பிப்பதன் மூலம் தயாரிப்பு விலைகளை மொத்தமாக மாற்றலாம். CSV கோப்பைப் பயன்படுத்தித் தயாரிப்புகளை இறக்குமதி செய்தல் குறித்து மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Shopify Smart Pricing என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் செயல்படுத்த விரும்பும் விலைகளுடன் உள்ள, நிறைவடைந்த பரிசோதனையைக் கிளிக் செய்யவும்.
பரிசோதனை விலைகளை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்றுமதி செய்யப்பட்ட CSV கோப்பைப் பயன்படுத்தி, உங்கள் தயாரிப்பு விலைகளை மொத்தமாகப் புதுப்பிக்கவும். CSV கோப்பைப் பயன்படுத்தித் தயாரிப்புகளை இறக்குமதி செய்தல் குறித்து மேலும் அறிக.
பரிசோதனைக்குப் பிறகு அசல் விலைகளையே வைத்திருக்கவும்
விலை நிர்ணயப் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் தயாரிப்புகளின் விலைகளைப் புதுப்பிக்க வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்தால், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை, ஏனெனில் Smart Pricing செயலியானது தானாகவே அசல் தயாரிப்பு விலையைப் பயன்படுத்தும் வகையில் இயல்புநிலையாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தயாரிப்புகளின் விலைகளை மாற்றுவதற்கான ஒரே வழி, CSV கோப்பைப் பயன்படுத்தி விலை புதுப்பிப்புகளை நீங்களே செயல்படுத்துவதாகும்.