தயாரிப்புகளுக்கான யூனிட் விலைகளைக் காட்டுதல்

நீங்கள் அளவுகள் அல்லது அளவீடுகளின் அடிப்படையில் தயாரிப்புகளை விற்றால், குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான ஒரு யூனிட்டுக்கான விலையை நீங்கள் காட்டலாம். வெவ்வேறு அளவிலான பேக்கேஜ்கள் அல்லது வெவ்வேறு பிராண்டுகளிலிருந்து வரும் ஒரே மாதிரியான தயாரிப்புகளின் விலைகளை வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க உதவுவதற்காக, சில துறைகளிலும் பிராந்தியங்களிலும் இது பொதுவான நடைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, வெவ்வேறு சப்ளையர்களிடமிருந்து நீங்கள் காபிக் கொட்டைப் பைகளை விற்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், பிராண்டின் மிகச் சிறிய பையின் அளவைப் பொறுத்து அதன் விலை $15 USD முதல் $30 USD வரை இருக்கும், அதைப் போலவே பையின் அளவும் 500g முதல் 1kg வரை இருக்கும். ஒவ்வொரு காபிக் கொட்டைப் பைகளுக்குமான ஒரு கிராமுக்கான யூனிட் விலையை நீங்கள் காட்டலாம், இது பேக்கேஜ் அளவு மற்றும் விலை நிர்ணயம் வேறுபட்டிருந்தாலும், ஆர்டர் செய்யும்போது எந்தத் தயாரிப்புகள் அதிக விலை அல்லது குறைந்த விலையைக் கொண்டுள்ளன என்பது பற்றி உங்கள் வாடிக்கையாளர்கள் தகவலறிந்த முடிவை எடுக்க உதவும்.

ஒரு தயாரிப்புக்கான யூனிட் விலையை நீங்கள் உள்ளிடும்போது, எந்தவொரு Online Store 2.0 தீமின் தயாரிப்புப் பக்கங்கள், சேகரிப்புப் பக்கங்கள், கார்ட் பக்கம் மற்றும் செக்அவுட் பக்கங்களில் யூனிட் விலை தானாகவே காட்டப்படும். உங்களிடம் பழைய தீம் இருந்தால், யூனிட் விலைகளைக் காட்ட உங்கள் தீம் குறியீட்டை நீங்களே தனிப்பயனாக்கலாம். இயல்புநிலை ஆர்டர் உறுதிப்படுத்தல் அறிவிப்புகளும் தானாகவே யூனிட் விலைகளைக் காட்டும், ஆனால் உங்களிடம் தனிப்பயனாக்கப்பட்ட அறிவிப்பு வார்ப்புரு இருந்தால், யூனிட் விலைகளைச் சேர்க்க உங்கள் வார்ப்புருவை நீங்களே புதுப்பிக்கலாம்.

தயாரிப்புகளில் யூனிட் விலைகளைக் காட்டுவதற்கான பரிசீலனைகள்

உங்கள் தயாரிப்புகளில் யூனிட் விலைகளைச் சேர்ப்பதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஒரு யூனிட்டுக்கான விலையைக் காட்டுவது சில பிராந்தியங்களில் சட்டப்பூர்வத் தேவையாகும். உங்கள் வணிகம் இந்தத் தேவைக்கு உட்பட்டதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
  • யூனிட் விலை நிர்ணயத்திற்கு மெட்ரிக் அல்லது இம்பீரியல் யூனிட்களைப் பயன்படுத்தலாம். ஆனால் தயாரிப்புக்கு யூனிட் விலையைச் சேர்க்கும்போது, உங்கள் Shopify நிர்வாகியின் பொதுவானவை அமைப்புகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தற்போதைய யூனிட் சிஸ்டம் அமைப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் யூனிட்கள் மட்டுமே விருப்பங்களாகக் காட்டப்படும். ஒரே ஸ்டோரில் உள்ள வேறுபட்ட தயாரிப்புகளுக்கு மெட்ரிக் மற்றும் இம்பீரியல் ஆகிய இரு யூனிட்களையும் பயன்படுத்த, பிற யூனிட் சிஸ்டத்திலுள்ள தயாரிப்புகளுக்கு யூனிட் விலைகளைச் சேர்க்கும் முன்பு உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை யூனிட் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை எடை யூனிட்டை அமைப்பது அல்லது மாற்றுவது குறித்து மேலும் அறிக.
  • அனைத்துச் சந்தைகளிலும் ஒரே யூனிட் வகையை யூனிட் விலை நிர்ணயம் காட்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு தயாரிப்பை அமெரிக்காவில் $1.50/12ft எனவும் ஐரோப்பிய யூனியனில் €1.30/4yd எனவும் காட்ட முடியாது.
  • அனைத்துத் தயாரிப்புகளிலும் யூனிட் விலை நிர்ணயத்தைச் சேர்ப்பது விருப்பத்தேர்வாகும். வழக்கமாக யூனிட் விலை நிர்ணயம் உள்ளடங்கியிருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு வகையின்கீழ் தயாரிப்பை உருவாக்கும்போது, யூனிட் விலை நிர்ணயத்தைச் சேர்க்கும்படியான எந்தவொரு தேவையும் பிராம்ட்டும் Shopify நிர்வாகியில் இல்லை.
  • டன்கள் (t), சென்டிகிராம்கள் (cg), ஸ்டோன்கள் (st) போன்ற சில யூனிட் வகைகள் யூனிட் விலை நிர்ணயத்திற்கான விருப்பங்களில் சேர்க்கப்படவில்லை.

யூனிட் விலைகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன

ஒரு தயாரிப்பின் யூனிட் விலையானது தயாரிப்பு விலை மற்றும் நீங்கள் அமைக்கும் மொத்தத் தொகை மற்றும் அடிப்படை அளவீட்டு மதிப்புகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. தயாரிப்பின் மொத்த யூனிட்களின் விலையை அது கொண்டிருக்கும் யூனிட்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதை அடிப்படை அளவீட்டால் பெருக்குவதன் மூலம் யூனிட் விலை கணக்கிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 600g எடையுள்ள $30 USD விலையுள்ள ஒரு தயாரிப்பு உங்களிடம் இருந்து, அந்தத் தயாரிப்பு வகைக்கு 1kg என்பதே தரநிலை என்பதால் அதன் யூனிட் விலையை ஒரு 1kg-க்குக் காட்ட விரும்பினால், பின்வரும் மதிப்புகளின் அடிப்படையில் யூனிட் விலை கணக்கிடப்படும்:

  • தயாரிப்பு விலை: $30.00 USD
  • மொத்த எடை: 600g
  • அடிப்படை எடை: 1kg

இந்த மதிப்புகளின்படி, யூனிட் விலை $50.00/kg எனத் தானாகவே கணக்கிடப்படும். ஏனெனில் 600g எடையுள்ள $30 USD விலையுள்ள தயாரிப்பு ஒரு கிராமிற்கு $0.05 என்றாகிறது ($30/600g = 0.05). விரும்பிய அடிப்படை அளவீடு 1kg (அல்லது 1000g) ஆக இருக்கும்போது, அதன் யூனிட் விலை 0.05g x 1000g என்றாகி $50.00/kg எனக் காட்டப்படும்.

இதற்குப் பதிலாக, 500g-க்கான யூனிட் விலையைக் காட்ட விரும்பினால், பின்வரும் மதிப்புகளின் அடிப்படையில் யூனிட் விலை கணக்கிடப்படும்:

  • தயாரிப்பு விலை: $30.00 USD
  • மொத்த எடை: 600g
  • அடிப்படை எடை: 500g

கிராமிற்கான விலை முன்பு போல $0.05/g ஆகவே இருக்கும். ஆனால் அடிப்படை அளவீடு இப்போது 500g என்பதால், அதன் யூனிட் விலை 0.05g x 500g என்றாகி $25.00/500g எனக் காட்டப்படும்.

விலை புலத்தில் செய்யப்படும் மாற்றங்களின் அடிப்படையில் யூனிட் விலைகள் மாறும் வகையில் புதுப்பிக்கப்படும். உங்கள் தயாரிப்பின் விலையை மாற்றினால், நீங்கள் ஏற்கனவே கொண்டுள்ள மொத்த அளவீடுகள் மற்றும் அடிப்படை அளவீடுகளின் அடிப்படையில் யூனிட் விலை புதுப்பிக்கப்படும்.

உங்கள் தயாரிப்புக்கு யூனிட் விலைகளைச் சேர்க்கவும்

உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள தயாரிப்புகள் அல்லது மாறுபாடுகளுக்கு யூனிட் விலையைச் சேர்க்கலாம். ஒவ்வொரு தயாரிப்புக்கும் அல்லது மாறுபாட்டுக்கும் 1 யூனிட் விலையை மட்டுமே தொடர்புபடுத்தியிருக்க முடியும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: உங்கள் தயாரிப்பில் மாறுபாடுகள் இருந்தால், மாறுபாடுகள் பிரிவில் நீங்கள் திருத்த விரும்பும் மாறுபாட்டைக் கிளிக் செய்யவும்.

  4. விலை நிர்ணயம் பிரிவில், உங்கள் யூனிட் விலை மதிப்புகளை உள்ளமைக்க யூனிட் விலை என்பதைக் கிளிக் செய்யவும்:

    1. மொத்தத் தொகை புலத்தில், உங்கள் தயாரிப்பின் மொத்த அளவீட்டை உள்ளிட்டு, அளவீட்டு யூனிட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. விருப்பத்தேர்வு: இயல்புநிலை அடிப்படை அளவீட்டை மாற்ற விரும்பினால், அடிப்படை அளவீடு புலத்தில் உங்கள் புதிய அடிப்படை அளவீட்டைச் சேர்த்து, அளவீட்டு யூனிட்டைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, 200g எடையுள்ள தயாரிப்பிற்கு, 1kg என்பதை அடிப்படை யூனிட்டாகத் தேர்ந்தெடுக்கலாம்.
    3. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Products ஐகானைத் தட்டவும்.
  2. நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பைத் தட்டவும்.
  3. உங்கள் தயாரிப்பு விலைப் பகுதியைத் தட்டவும்.
  4. இதைத் தட்டவும்: யூனிட் விலையைக் காட்டு. பின்னர் உங்கள் யூனிட் விலை மதிப்புகளை உள்ளமைக்கவும்:
    1. தயாரிப்பின் மொத்த அளவீடு புலத்தில், உங்கள் தயாரிப்பின் மொத்த அளவீட்டை உள்ளிட்டு, அளவீட்டு யூனிட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. விருப்பத்தேர்வு: இயல்புநிலை அடிப்படை அளவீட்டை மாற்ற விரும்பினால், அடிப்படை அளவீடு புலத்தில் உங்கள் புதிய அடிப்படை அளவீட்டைச் சேர்த்து, அளவீட்டு யூனிட்டைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, 200g எடையுள்ள தயாரிப்பிற்கு, 1kg என்பதை அடிப்படை யூனிட்டாகத் தேர்ந்தெடுக்கலாம்.
    3. முடிந்தது என்பதைத் தட்டவும்.
  5. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

தயாரிப்பின் யூனிட் விலையைத் திருத்தவும்

மொத்த மற்றும் அடிப்படை அளவீடுகள் மற்றும் அளவீட்டு யூனிட்களைப் புதுப்பிப்பதன் மூலம் எந்த நேரத்திலும் தயாரிப்பின் யூனிட் விலையைப் புதுப்பிக்கலாம்.

விலை புலத்தில் செய்யப்படும் மாற்றங்களின் அடிப்படையில் யூனிட் விலைகள் மாறும் வகையில் புதுப்பிக்கப்படும். உங்கள் தயாரிப்பின் விலையை மாற்றினால், நீங்கள் ஏற்கனவே கொண்டுள்ள மொத்த அளவீடுகள் மற்றும் அடிப்படை அளவீடுகளின் அடிப்படையில் யூனிட் விலை புதுப்பிக்கப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் யூனிட் விலையைக் கொண்டுள்ள தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: உங்கள் தயாரிப்பில் மாறுபாடுகள் இருந்தால், மாறுபாடுகள் பிரிவில் நீங்கள் திருத்த விரும்பும் மாறுபாட்டைக் கிளிக் செய்யவும்.

  4. தற்போதுள்ள யூனிட் விலை மதிப்புகளைத் திறக்க, விலை நிர்ணயம் பிரிவில் யூனிட் விலை என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. யூனிட் விலை மதிப்புகளைப் புதுப்பித்துவிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தயாரிப்பின் யூனிட் விலையை நீக்கவும்

தயாரிப்பின் யூனிட் விலையை எந்த நேரத்திலும் நீக்கலாம். நீங்கள் பின்னர் கைமுறையாகப் புதிய யூனிட் விலையைச் சேர்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நீக்க விரும்பும் யூனிட் விலையைக் கொண்டுள்ள தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: உங்கள் தயாரிப்பில் மாறுபாடுகள் இருந்தால், மாறுபாடுகள் பிரிவில் நீங்கள் திருத்த விரும்பும் மாறுபாட்டைக் கிளிக் செய்யவும்.

  4. விலை நிர்ணயம் பிரிவில், யூனிட் விலை என்பதைக் கிளிக் செய்து, அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தயாரிப்புகளின் யூனிட் விலைகளை மொத்தமாகப் புதுப்பித்தல்

மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தியோ அல்லது புதுப்பிக்கப்பட்ட யூனிட் விலை மதிப்புகளுடன் தயாரிப்பு CSV கோப்பை இறக்குமதி செய்தோ, உங்கள் தயாரிப்புகளின் யூனிட் விலையை மொத்தமாகப் புதுப்பிக்கலாம். இந்த விருப்பங்கள் டெஸ்க்டாப் சாதனத்தைப் பயன்படுத்தும்போது மட்டுமே கிடைக்கும்.

யூனிட் விலைகளைப் புதுப்பிக்க மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தினால், திருத்தியில் உள்ள கலங்களில் யூனிட் விலைகளைக் காட்ட யூனிட் விலை நெடுவரிசையைச் சேர்க்க வேண்டும். அதன் பிறகு, திருத்தியிலுள்ள அந்தக் கலத்தைக் கிளிக் செய்து, மொத்த அளவு, அடிப்படை அளவு மதிப்புகள் மற்றும் யூனிட்டுகள் உட்பட தயாரிப்பின் யூனிட் விலை மதிப்புகளைப் புதுப்பிக்கலாம். மொத்தத் திருத்தியைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

யூனிட் விலைகளைப் புதுப்பிக்கத் தயாரிப்பு CSV-ஐப் பயன்படுத்தினால், உங்களின் CSV கோப்பில் உள்ள பின்வரும் நெடுவரிசைகளில் மதிப்புகளைச் சேர்க்க வேண்டும்:

  • யூனிட் விலை மொத்த அளவு
  • யூனிட் விலை மொத்த அளவு யூனிட்
  • யூனிட் விலை அடிப்படை அளவு
  • யூனிட் விலை அடிப்படை அளவு யூனிட்

CSV-இல் உள்ள இந்த நெடுவரிசைகள் அனைத்தின் மதிப்புகளும் தயாரிப்பின் யூனிட் விலையைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும். CSV கோப்புடன் தயாரிப்புகளை இறக்குமதி செய்வது மற்றும் தயாரிப்பு CSV கோப்பிலுள்ள நெடுவரிசைகளின் விளக்கங்கள் குறித்து மேலும் அறிக.

ஆன்லைன் ஸ்டோரில் யூனிட் விலைகளைக் காட்டுதல்

அனைத்து Online Store 2.0 தீம்களிலும் யூனிட் விலை அம்சம் ஏற்கனவே கிடைக்கிறது. உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் யூனிட் விலைகளைக் காட்ட நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தயாரிப்பில் யூனிட் விலை சேர்க்கப்பட்டிருந்தால், அனைத்து சந்தைகளுக்கும் அந்த யூனிட் விலைகள் காட்டப்படும்.

நீங்கள் விண்டேஜ் தீமைப் பயன்படுத்தி, அதை யூனிட் விலை அம்சத்தை ஆதரிக்கும் பதிப்புக்குப் புதுப்பிக்க முடியாவிட்டால், யூனிட் விலையைக் காட்ட உங்கள் தீம் குறியீட்டை நீங்களே மேனுவலாகத் தனிப்பயனாக்கலாம். உங்கள் விண்டேஜ் தீமைத் தனிப்பயனாக்குவதில் உதவி தேவைப்பட்டால், நீங்கள் ஒரு Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம். Shopify பார்ட்னரைப் பணியமர்த்துவது குறித்து மேலும் அறிக.

உங்கள் ஆர்டர் அறிவிப்புகளில் யூனிட் விலைகளைக் காட்டுதல்

இயல்பாகவே, இந்த அம்சம் செயல்பாட்டில் இருக்கும்போது, ஆர்டர் உறுதிப்படுத்தல் அறிவிப்பு யூனிட் விலைகளைக் காட்டும்.

உங்கள் தயாரிப்பில் யூனிட் விலைகளைச் சேர்த்த பிறகும், ஆர்டர் உறுதிப்படுத்தல் அறிவிப்புகளில் அவை காட்டப்படவில்லை என்றால், உங்களின் வார்ப்புருவை மேனுவலாகப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். அறிவிப்பு வார்ப்புரு தனிப்பயனாக்கப்பட்டுள்ள நிலையில் இது நடக்கக்கூடும். ஏனெனில், அந்தத் தனிப்பயனாக்கங்கள் இயல்புநிலை வார்ப்புருவில் உள்ள புதுப்பிப்புகளை மீறிச் செயல்படலாம்.

இதற்கு முன்பு உங்கள் ஆர்டர் அறிவிப்பு மின்னஞ்சல்களில் யூனிட் விலைக் குறியீட்டை மேனுவலாகச் சேர்த்திருந்தால், இந்தப் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, முந்தைய குறியீட்டைப் புதிய குறியீட்டைக் கொண்டு மாற்ற வேண்டும். மாற்றப்பட்ட "order-list__item-price" கிளாஸ், ஒரே அறிவிப்பு வார்ப்புருவில் பல முறை வரலாம். எனவே, தொடர்புடைய அனைத்து இடங்களிலும் உள்ள குறியீட்டைப் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகிப் பக்கத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. ஆர்டர்கள் பிரிவில், ஆர்டர் உறுதிப்படுத்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. "order-list__item-price" கிளாஸ் வார்ப்புருவில் காட்டப்படும் ஒவ்வொரு முறையும், அதன் உள்ளே பின்வரும் குறியீட்டுத் துணுக்கைச் சேர்க்கவும்:

{% if line.unit_price_measurement %}
  <div class="order-list__unit-price">
    {{- line.unit_price | unit_price_with_measurement: line.unit_price_measurement -}}
  </div>
{% endif %}

 5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.