Shopify மற்றும் NFTகள்
நான்-பஞ்சிபில் டோக்கன் (NFT) என்பது டிஜிட்டல் அல்லது பிசிக்கல் பொருள்களின் உரிமையைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் blockchain-இல் பதிவு செய்யப்பட்ட ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளங்காட்டி ஆகும். உரிமை, பரிவர்த்தனை வரலாறு மற்றும் மூலம் தொடர்பான பொதுவில் சரிபார்க்கக்கூடிய தரவை NFTகள் சேமித்து வைக்கலாம்.
Blockchainகள் என்பவை பகிர்ந்தளிக்கப்பட்ட தரவுத்தளங்கள் அல்லது லெட்ஜர் சிஸ்டம்கள் ஆகும், அவை வலையமைப்பில் உள்ள பல கணினிகள் அல்லது முனைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. தரவுத் தொகுதிகளாகப் பரிவர்த்தனைகள் சேமிக்கப்படும், பிறகு முழு வலையமைப்பாலும் உறுதி செய்யப்படும். பகிரப்பட்ட, நம்பகமான மற்றும் மாற்றமுடியாத நிகழ்வுகளின் காலவரிசையை உருவாக்க இந்தத் தரவுத் தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
NFTகள் பற்றியும், உங்கள் வர்த்தக உத்திக்கு அவற்றை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் மேலும் அறிக.
NFTகளின் முக்கியப் பண்புகளில் பின்வருவன அடங்கும்:
| பண்பு | விளக்கம் |
|---|---|
| நான்-பஞ்சிபில் | எவ்விதச் சிக்கலுமின்றி நீங்கள் ஒரு அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறொரு டாலரை மாற்றிக்கொள்ள முடிவதால் அது பரிமாற்றத்தன்மை கொண்டது. ஆனால், ஒவ்வொரு NFT-யும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் டோக்கனாகும். அதை நேரடியாகப் பிற டிஜிட்டல் டோக்கனுடன் மாற்ற முடியாது. |
| பரவலாக்கப்பட்டவை | ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் அல்லது blockchain-க்காக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் விதிகளின் தொகுப்பைக் கொண்ட புரோகிராம்கள் மூலமாக NFT-கள் உருவாக்கப்படுகின்றன (minted). ஸ்மார்ட் ஒப்பந்த விதிகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை, மேலும் இவற்றை மையப்படுத்தப்பட்ட நிறுவனம் இல்லாமலேயே செயல்படுத்த முடியும். இது மனிதப் பிழை அல்லது தீய நோக்கத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. |
| திரும்பப் பெற முடியாதவை | blockchain-இல் ஒரு NFT-ஐ உருவாக்கிய (mint) பிறகு, ஸ்மார்ட் ஒப்பந்தத்தில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டாலன்றி, பொதுவாக அதை மாற்ற முடியாது. |
| நிரந்தரமானவை | blockchain-இல் உள்ள அனைத்துப் பதிவுகளையும் மாற்ற முடியாது. அதாவது, ஒவ்வொரு NFT-இன் மூலமும் நிரந்தரமாக blockchain-இல் பதிவு செய்யப்படுகிறது. |
| வளரும் தொழில்நுட்பம் | பல வாடிக்கையாளர்கள் உட்பட பொதுவாகப் பலருக்கும் NFT மற்றும் blockchain தொழில்நுட்பம் புதியது. நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு NFT-களைப் பற்றிக் கற்பிக்க வேண்டும். மேலும் NFT கொள்முதல் தொடர்பான தெளிவான எதிர்பார்ப்புகளை அமைப்பதை உறுதிசெய்ய வேண்டும். NFT வாடிக்கையாளர் அனுபவம் குறித்து மேலும் அறிக. |
இந்தப் பக்கத்தில்
உங்கள் Shopify ஸ்டோரில் NFT-களுக்கான பயன்பாட்டு நேர்வுகள்
NFT மற்றும் blockchain தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மேலும், அவற்றின் முழுத் தாக்கம் மற்றும் பயன்பாட்டு நேர்வுகள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன. தற்சமயம், டிஜிட்டல் கலைப்படைப்புகள் போன்ற மீடியாக்களின் உரிமையைக் காண்பிப்பதற்காகவே, NFT-கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல பயன்பாடுகளை அவை கொண்டுள்ளன. உங்கள் Shopify ஸ்டோரில் பின்வரும் வழிகளில் நீங்கள் NFT-களைப் பயன்படுத்தப் பரிசீலிக்கலாம்:
- உங்கள் Shopify ஸ்டோர் மூலம் NFT-களை விற்கலாம்.
- வாடிக்கையாளர்களின் கொள்முதல், ஈடுபாடு மற்றும் விசுவாசத்திற்காக அவர்களுக்குப் பரிசளிக்க, இலவச NFT-களை வழங்கலாம்.
- குறிப்பிட்ட NFT-களின் உரிமையின் அடிப்படையில், டோக்கன்கேட்டட் வர்த்தகம் வாயிலாகப் பிரத்தியேகத் தயாரிப்புகள், தள்ளுபடிகள் அல்லது தயாரிப்பு அறிமுகங்களுக்கான முன்கூட்டிய அணுகல் ஆகியவற்றை வழங்கலாம்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோர்கள் அல்லது நேரடி நிகழ்வுகள் வழியாகப் பிற பிராண்டுகளுடனான டோக்கன்கேட்டட் ஒருங்கிணைப்புகளின் மூலமாகச் சாத்தியமுள்ள பார்வையாளர்களை அதிகரிக்கலாம்.
- வாடிக்கையாளர் கையகப்படுத்துதல் மற்றும் தக்கவைப்புப் பிரச்சாரங்களுக்காக, NFT உரிமையின் அடிப்படையில் வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்கலாம்.
உங்கள் Shopify ஸ்டோருக்காக NFT உத்தியை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.
Shopify Payments மூலம் NFT-களை விநியோகியுங்கள்
நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட NFT விற்பனையாளராக இருந்தால், உங்கள் Shopify ஸ்டோர்ஃபிரண்ட் அல்லது Storefront API மூலம் Shopify Payments-ஐப் பயன்படுத்தி முதல் தரப்பான, முதன்மை NFT விற்பனைகளைச் செயல்படுத்தலாம். முதன்மை விற்பனை என்பது NFT-இன் முதல் விற்பனையாகும். அப்போது NFT உங்களால் விற்கப்பட்டு, உருவாக்கப்பட்டு (mint), நேரடியாக வாடிக்கையாளரின் வாலட்டில் டெலிவரி செய்யப்படும்.
Shopify Payments இயக்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டுகள், Shop Pay மற்றும் பிற விரைவான செக்அவுட் முறைகள் போன்ற கட்டண முறைகளைப் பயன்படுத்தி NFT-களுக்குப் பணம் செலுத்தலாம். NFT-களை விற்பதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பினால், Shopify Payments மூலம் NFT-களை விற்பது தொடர்பான அபாயங்கள் மற்றும் தேவையம்சங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
உங்கள் Shopify ஸ்டோரில் NFT-களுக்கான பேமெண்ட்டுகளை ஏற்கும் திட்டம் இல்லை எனில், அதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச NFT-களை வழங்கலாம்.
Shopify Payments மூலம் NFT-களை விற்பதற்கான ஆதரவு தற்போது பின்வரும் பிராந்தியங்களில் உள்ளது: ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா.
NFT-களை விநியோகிப்பதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பியுங்கள்
Shopify Payments மூலம் NFT-களை விற்பதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க, Shopify-இன் NFT விநியோகச் செயலி கூட்டாளர்களில் ஒருவரை உங்கள் ஸ்டோரில் சேர்க்கலாம். NFT விநியோகச் செயலி கூட்டாளரைச் சேர்த்த பிறகு, சில தகுதிநிலைச் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி கேட்கப்படுவீர்கள், மேலும் உங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதா என்பதைத் தெரிவிக்கும் மெசேஜ் ஒன்றைச் செயலியில் பெறுவீர்கள்.
சில NFT வகைகள் மற்றும் விநியோக முறைகளுக்கு Shopify Payments மூலம் ஆதரவளிக்கப்படுவதில்லை. அவற்றுள் பின்வருவன அடங்கும்:
- NFT சந்தைகள் மற்றும்/அல்லது நீங்கள் உருவாக்குநராகவோ உரிமையாளராகவோ இல்லாத NFT-களை மறுவிற்பனை செய்தல்.
- இரண்டாம் நிலை ராயல்டிகளைக் கொண்ட NFT-கள். அதாவது, இரண்டாம் நிலை விற்பனைகளில் இருந்து வாடிக்கையாளர் ராயல்டிகளை ஈட்டக்கூடிய வகையில் NFT-ஐ விற்பது அல்லது பரிசளிப்பது போன்றவை.
- ஸ்டேக்கிங் வெகுமதிகளைக் கொண்ட NFT-கள். அதாவது, வாடிக்கையாளர்கள் தானாகவே டோக்கன்களை ஈட்டக்கூடிய வகையில் ஒரு NFT-ஐ விற்பது அல்லது பரிசளிப்பது போன்றவை.
- Shopify Payments சேவை விதிமுறைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்படும் மற்றும்/அல்லது கேமிஃபை (gamified) செய்யப்படும் NFT-கள்.
NFT-களை விற்பது மற்றும் உருவாக்குவது (minting)
Shopify வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட NFT விற்பனையாளராக, உங்கள் ஸ்டோரில் Shopify Payments மூலம் முதல் தரப்பான, முதன்மை NFT விற்பனைகளை நீங்கள் இயக்கலாம். NFT-களுக்கான கட்டணமாக ஆதரிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை ஏற்க, உங்கள் ஸ்டோரில் கிரிப்டோகரன்சி கட்டணச் செயலி ஒன்றையும் சேர்க்கலாம்.
உங்கள் Shopify ஸ்டோர் மூலம் NFT-களை விற்பதும் உருவாக்குவதும் (minting), Shopify-இல் வேறு எந்தவொரு தயாரிப்பையும் விற்பதைப் போன்றதே ஆகும். NFT-கள் டிஜிட்டல் தயாரிப்புகள் என்பதால், அவற்றை வாங்கிய உடனேயே உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்.
Shopify-இன் NFT விநியோகச் செயலி கூட்டாளர்களின் உதவியுடன், நீங்கள் விரும்பும் blockchain-க்கான ஸ்மார்ட் ஒப்பந்தங்களையும் உங்கள் NFT-கள் குறிக்கும் சொத்துகளையும் வரையறுக்கலாம். உங்கள் Shopify ஸ்டோர் மூலம் NFT-களை விற்க, நீங்கள் எந்தவொரு கிரிப்டோகரன்சியையும் சொந்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிரிப்டோகரன்சி வாலட் வைத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை.
உங்களின் blockchain உத்தியை உருவாக்குவதற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் Shopify-இன் Plus Services Partner பக்கத்தைப் பார்வையிடலாம்.
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச NFT-களை வழங்குங்கள்
NFT-களை விற்பது உங்கள் ஸ்டோருக்கான புதிய வருவாய் ஆதாரமாக அமையலாம் என்றாலும், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவும் நீங்கள் NFT-களைப் பரிசளிக்கலாம். உங்கள் ஸ்டோரில் இலவச NFT-களைச் சலுகையாகப் பயன்படுத்தக்கூடிய வழிகளுக்கான உதாரணங்கள் பின்வருமாறு:
- வாடிக்கையாளர்களின் மொத்தக் கொள்முதல் தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு NFT வழங்கி அவர்களின் கொள்முதல்களுக்கும் விசுவாசத்திற்கும் வெகுமதியளிக்கலாம்.
- வாடிக்கையாளரின் கொள்முதலுடன் சேர்க்கப்பட்டுள்ள நம்பகத்தன்மைச் சான்றிதழை அல்லது NFT ரசீதை வழங்கலாம்.
- இலவச NFT-களுக்கான சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டோரில் டோக்கன்கேட்டட் பலன்களுக்கான அணுகலை வழங்கலாம்.
- சந்தைப்படுத்தல் பதிவுப் பக்கத்தில் இலவச NFT-களை வழங்குவதன் மூலம், இதற்கு முன் உங்கள் பிராண்டில் ஈடுபாடு காட்டியிருக்காத புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம்.
வாடிக்கையாளரின் வாலட் முகவரியைச் சேகரித்து, NFT விநியோகச் செயலி மூலமாக NFT-ஐ உருவாக்கி டெலிவரி செய்வதன் மூலம் அவருக்கு இலவச NFT-ஐப் பரிசளிக்கலாம் அல்லது வாடிக்கையாளரை இலவச NFT உரிமைகோரல் பக்கத்திற்குத் திருப்பிவிடுவதன் மூலமும் வழங்கலாம்.
இலவச NFT உரிமைகோரல் பக்கத்தை உருவாக்குங்கள்
கிளைம் பக்கத்தைப் பயன்படுத்தி, பிற தயாரிப்புகளின் வாங்குதலுடன் பரிசாகவோ அல்லது வாங்குதல் தேவையின்றியோ நீங்கள் NFT-ஐ விநியோகிக்கலாம். இலவச NFT குறித்து மின்னஞ்சல் அல்லது பிற சந்தைப்படுத்தல் சேனல்கள் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கலாம். உங்கள் ஸ்டோருக்கான NFT கிளைம் பக்கத்தை உருவாக்கி வடிவமைக்க, NFT விநியோகச் செயலி கூட்டாளர் உடன் இணைந்து செயல்படலாம்.
வாடிக்கையாளர் தங்களின் கிரிப்டோகரன்சி வாலட் தகவல்களை NFT கிளைம் பக்கத்தில் வழங்கிய பிறகு, NFT விநியோகம் அல்லது ஏர்-ட்ராப்பிங் செயலி கூட்டாளர் மூலம் NFT மின்ட் செய்யப்பட்டு அவர்களின் வாலட்டிற்கு நேரடியாக டெலிவரி செய்யப்படும். வாடிக்கையாளரிடம் கிரிப்டோகரன்சி வாலட் இல்லை எனில், மின்ட் செய்தல் மற்றும் டெலிவரிக்கு முன்பு NFT கிளைம் பக்கத்தில் இருந்தே ஒரு வாலட்டை உருவாக்குமாறு அவர்களுக்குத் தூண்டப்படும். NFT வாடிக்கையாளர் அனுபவம் குறித்து மேலும் அறிக.
டோக்கன்கேட்டட் வர்த்தகம்
ஒரு குறிப்பிட்ட NFT-ஐ வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டோரில் உள்ள தயாரிப்புகள், தள்ளுபடிகள் அல்லது சேகரிப்புகளுக்கான பிரத்யேக அணுகலை வழங்க டோக்கன்கேட்டட் வர்த்தகம் அனுமதிக்கிறது. மேலும், பிற பிராண்டுகளால் விநியோகிக்கப்படும் NFT-களின் அடிப்படையிலான கூட்டுத் தயாரிப்புகள் மற்றும் சேகரிப்புகள் மூலம் கூட்டாண்மைகளை அமைக்க பிராண்டுகள் டோக்கன்கேட்டிங்கைப் பயன்படுத்துகின்றன. தங்களின் வழக்கமான வாடிக்கையாளர் தளங்களுக்கு அப்பாலும் சாத்தியமான பார்வையாளர்களை அதிகரிக்க இந்த வகையான கூட்டாண்மைகள் பிராண்டுகளை அனுமதிக்கின்றன.
Shopify-இன் டோக்கன்கேட்டிங் செயலி கூட்டாளர்களின் உதவியுடன், இது போன்ற பலன்களைப் பெறக்கூடிய குறிப்பிட்ட NFT-களை நீங்கள் தேர்வுசெய்யலாம்:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள சேகரிப்புகள், தயாரிப்புகள் மற்றும் தள்ளுபடிகளுக்கான பிரத்யேக அணுகல்.
- பிற ஸ்டோர்களுடனான கூட்டாண்மைகள் வாயிலாகக் கூட்டுத் தயாரிப்புகள் மற்றும் சேகரிப்புகளுக்கான அணுகல்.
- Discord சேனல்கள் மற்றும் சமூகங்கள், நேரடி நிகழ்வுகள், ஏர்டிராப்கள் மற்றும் சில்லறை விற்பனை ஸ்டோர்ச் செயல்பாடுகள் உட்பட சமூக ஈடுபாட்டுச் சேனல்களுக்கான அணுகல்.
டோக்கன்கேட்டட் வர்த்தகமானது உங்கள் blockchain உத்தியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கலாம், குறிப்பாக சமூகத்தை உருவாக்குதல், வாடிக்கையாளரைத் தக்கவைத்தல் மற்றும் வருவாய் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது. ஆதரிக்கப்படும் blockchain-கள் முழுவதும், உங்களின் அனைத்து NFT உரிமையாளர்களுக்கும் கூடுதல் மதிப்பை வழங்குவதற்கு அனுமதிக்கும் ஒருங்கிணைப்புகளை Shopify-இன் செயலி கூட்டாளர்கள் தொடர்ந்து உருவாக்குகின்றனர்.
டோக்கன்கேட்டட் வர்த்தக அனுபவம்
வாடிக்கையாளரின் கிரிப்டோகரன்சி வாலட்டில் NFT-கள் சொந்தமாக வைக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன, மேலும் சாத்தியமான வாடிக்கையாளர் தேவையான எந்தவொரு NFT-களையும் வைத்துள்ளாரா என்பதைச் சரிபார்க்க டோக்கன்கேட்டிங் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளரிடம் தேவையான NFT-கள் உள்ளன என்பதை டோக்கன்கேட்டிங் செயலி உறுதிப்படுத்திய பிறகு, வாடிக்கையாளர் தங்களின் கார்ட்டில் பிரத்யேகச் சேகரிப்பு, தயாரிப்பு அல்லது தள்ளுபடியைச் சேர்த்து தங்களின் ஆர்டரை நிறைவுசெய்யலாம்.
உங்கள் ஸ்டோருக்கான டோக்கன்கேட்டட் வர்த்தகத்தை இயக்க, Shopify-இன் டோக்கன்கேட்டிங் செயலி கூட்டாளர்களைத் தொடர்புகொள்ளவும்.
மூன்றாம் தரப்பு NFT சந்தைகள்
NFT சந்தைகள் NFT-களை மின்ட் செய்யவும் விற்கவும் வழிகளை வழங்குகின்றன. இரண்டாம் நிலைச் சந்தையில் NFT-களை வாங்கவோ விற்கவோ உங்கள் வாடிக்கையாளர்கள் இந்தச் சந்தைகளுக்குச் செல்லலாம். இருப்பினும், சந்தைக்குள் உங்கள் வணிகத்தை தனித்துக்காட்ட சில வழிகளே உள்ளன, மேலும் உங்கள் பிராண்டிங், பகுப்பாய்வு அல்லது வாடிக்கையாளர் நிர்வாகத்தின் மீது உங்களுக்குக் குறைந்த கட்டுப்பாடே இருக்கும்.
நீங்கள் NFT-களை மின்ட் செய்து விற்கக்கூடிய சில பொதுவான சந்தைகள் பின்வருமாறு:
| சந்தை | Blockchain |
|---|---|
| Magic Eden | பல blockchain-கள் |
| OpenSea | பல blockchain-கள் |
| objkt | Tezos |
| Gaia | Flow |
நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள்
Shopify ஆனது blockchain சார்பற்று இருக்க முற்படுகிறது, அதாவது எந்தவொரு blockchain-இலும் ஒருங்கிணைப்புகளை உருவாக்க உங்களுடனும் செயலி கூட்டாளர்களுடனும் Shopify இணைந்து செயல்படுகிறது.
நீங்கள் வர்த்தகம் செய்வதற்கான ஒரு புதிய வழியை NFT-கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே வேளையில், அடிப்படை blockchain தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சில கவலைகள் தொடர்கின்றன. Ethereum போன்ற சில பிரபலமான blockchain-கள், blockchain தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது தங்களின் ஆற்றல் நுகர்வைக் குறைக்கப் பணியாற்றியுள்ளன.
ஆற்றல் நுகர்வு மற்றும் உங்களின் NFT-கள் தொடர்பான கேள்விகளுக்கு, நீங்கள் இணைந்து செயல்படும் blockchain செயலி கூட்டாளரைத் தொடர்புகொள்ளவும்.
கூடுதல் ஆதாரங்கள்
NFT-கள் குறித்து மேலும் அறிய, நீங்கள் NFT-களுக்கான FAQ பக்கத்தையும், Shopify-இன் NFT சமூக இடுகையையும் மதிப்பாய்வு செய்யலாம்.