டிராப்ஷிப்பிங்
டிராப்ஷிப்பிங் மூலம் நீங்கள் சரக்கு இருப்பு அல்லது ஷிப்பிங்கைக் கையாளாமலேயே தயாரிப்புகளை விற்கலாம். சப்ளையர்கள் ஆர்டர்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு நிறைவேற்றுவார்கள், இதனால் முன்கூட்டியே ஆகும் செலவுகளும் தளவாடச் சிக்கல்களும் குறையும். புதிய தொழில்முனைவோருக்கு டிராப்ஷிப்பிங் மிகவும் ஏற்றதாகும், மேலும் இது தயாரிப்புகளைப் பெறுவதற்கும் ஆர்டர் மேலாண்மைக்குமான Shopify-இன் கருவிகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.
பொதுவான பல டிராப்ஷிப்பிங் வகையான வணிக மாதிரிகள் உள்ளன:
- தயாரிப்புகளை மறுவிற்பனை செய்தல்: குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பொருட்கள் போன்றவற்றைச் சப்ளையர்களிடமிருந்து பெற்று வழங்குதல். எடுத்துக்காட்டாக, சூழலுக்கு உகந்த வீட்டு உபயோகப் பொருட்களை நீங்கள் விற்கலாம்.
- வணிக விரிவாக்கங்கள்: உள்ளூர்ச் சில்லறை விற்பனையாளர்களின் ஆன்லைன் இருப்பை விரிவுபடுத்த அவர்களுடன் கூட்டாளராகச் செயல்படுதல், எடுத்துக்காட்டாக, பூட்டிக் ஒன்றிலிருந்து கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விற்றல்.
- தயாரிப்புகளை உருவாக்குதல்: ஏற்கனவே உள்ள தயாரிப்புகளைப் புதிய சலுகைகளாகத் தொகுத்தல், எடுத்துக்காட்டாக, ஒரே சப்ளையரிடமிருந்து பொருட்களைப் பெற்றுத் தயாரிக்கப்பட்ட DIY கைவினைப் பொருள் தொகுப்புகள்.
ஆர்டர் நிறைவேற்றம் எப்படிச் செயல்படுகிறது, சப்ளையரை எப்படித் தேர்ந்தெடுப்பது, உங்கள் தயாரிப்பு வரிசையை எப்படி உருவாக்குவது என்பது போன்ற, டிராப்ஷிப்பிங் வணிகத்தை அமைப்பது குறித்து மேலும் அறிக:
விநியோகச் சங்கிலி மற்றும் நிறைவேற்றச் செயல்முறையானது, தயாரிப்புகளைப் பெற்று, உற்பத்தி செய்து, கிடங்கில் சேமித்து வைக்கும் சப்ளையர்களிடமிருந்து தொடங்குகிறது. ஒரு வாடிக்கையாளர் உங்கள் ஸ்டோரில் ஆர்டரைச் செய்யும்போது, அது பல படிநிலைகளைக் கொண்ட நிறைவேற்றச் செயல்முறையைத் தூண்டுகிறது: ஆர்டர் விவரங்கள் வாடிக்கையாளரிடமிருந்து உங்கள் Shopify ஸ்டோருக்கும், பின்னர் உங்கள் சப்ளையருக்கும் செல்லும். உங்கள் ஸ்டோரின் பிராண்டிங்கைப் பராமரிக்கும் அதே வேளையில், சப்ளையர் தயாரிப்பைத் தேர்ந்தெடுத்து, பேக் செய்து, உங்கள் வாடிக்கையாளருக்கு நேரடியாக ஷிப் செய்கிறார். இந்த நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையின் மூலம், நீங்கள் சரக்கு இருப்பு அல்லது ஷிப்பிங் செயல்பாடுகளை நிர்வகிக்க வேண்டியதில்லை. எனினும், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஆர்டர் கண்காணிப்புக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.
சப்ளையர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, மாதாந்திரக் கட்டணங்களை விதிப்பவர்களைத் தவிர்க்கவும். பொதுமக்களுக்கு நேரடியாக விற்காத சப்ளையர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் ஆர்டர் செயலாக்கத் திறனைச் சரிபார்க்கவும். சரியான கூட்டாண்மைக்கு, தங்கள் தயாரிப்புப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் ஆதரவுக் குழுக்கள் மற்றும் விரைவான ஷிப்பிங் நேரங்களை வழங்கக்கூடிய மையப்படுத்தப்பட்ட கிடங்கு இடங்களைக் கொண்ட சப்ளையர்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தயாரிப்பைப் பெறும் செயல்முறையை நெறிப்படுத்தவும் எளிதாக்கவும், தேவைக்கேற்ப அச்சிடுதல் சேவைகள் மற்றும் சப்ளையர் சந்தைகளுக்கான Shopify-இன் ஒருங்கிணைந்த செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் தயாரிப்பு வரிசையை உருவாக்கும்போது, மூன்றாம் தரப்புச் செயலிகள் மூலம் சப்ளையர்களுடனான ஒருங்கிணைப்பை ஆதரிக்கும் Shopify-இன் சூழலமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் தயாரிப்பு உத்தியை உருவாக்கும்போது, சப்ளையர்களின் திறன்களுக்கு ஏற்ப உங்கள் சலுகைகளைக் கவனமாகச் சீரமைக்கவும். எடுத்துக்காட்டாக, ஒரே சப்ளையரின் தயாரிப்புகளைப் பயன்படுத்தித் தொகுப்புகளை உருவாக்குவது, பிரிக்கப்பட்ட ஷிப்மென்ட்களைத் தவிர்க்கவும் ஆர்டர் நிறைவேற்றத்தை எளிதாக்கவும் உதவும். தயாரிப்புத் தேர்வு மற்றும் சப்ளையர் கூட்டாண்மைகளுக்கான இந்த உத்தியானது, திறமையான மற்றும் விரிவாக்கக்கூடிய டிராப்ஷிப்பிங் வணிகத்தை உருவாக்க உதவுகிறது.
டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையைப் பயன்படுத்தி நீங்கள் மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்றால், எல்லை தாண்டிய விற்பனைக்குப் பொருந்தும் வரி மற்றும் சுங்கக் கடமைகள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தக் கடமைகள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும், மேலும் உங்களின் விலை நிர்ணயம், இணக்கத் தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தைப் பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய யூனியனில் (EU) உள்ள வாடிக்கையாளர்களுக்கு EU-க்கு வெளியே உள்ள சப்ளையரிடமிருந்து நீங்கள் விற்றால், Import One-Stop Shop (IOSS) திட்டத்தில் பதிவு செய்து, குறிப்பிட்ட VAT தேவைகளுக்கு இணங்க வேண்டியிருக்கலாம். டிராப்ஷிப்பிங்கிற்கான வரி மற்றும் சட்டப்பூர்வக் கடமைகள் மற்றும் EU வரித் தேவைகள் குறித்து மேலும் அறிக.