தயாரிப்பு வரிசையை உருவாக்குதல்

நீங்கள் விற்கும் தயாரிப்புகளின் குழு தயாரிப்பு வரிசை என அழைக்கப்படும். நீங்கள் உங்கள் தயாரிப்பு வரிசையைப் பல வழிகளில் தேர்ந்தெடுக்கலாம். தொடங்கும் போது, சில பிசினஸ்களுக்குக் குழந்தைகளின் கைவினைப் பொருட்கள், செல்லப் பிராணிகளுக்கான ஆக்சஸரீஸ்கள் அல்லது பிளஸ்-சைஸ் ஆண்களின் ஆடைகள் போன்ற தயாரிப்புகளைக் கண்டறிவதற்கான ஒரு கருப்பொருள் இருக்கும். சில பிசினஸ்களுக்கு அவர்கள் எந்தத் தயாரிப்புகளை விற்க விரும்புகிறார்கள் என்பது துல்லியமாகத் தெரிந்திருக்கும், ஆனால் அவற்றை எங்கிருந்து பெறுவது என்பது தெரிந்திருக்காது. மற்ற பிசினஸ்களுக்கு எதை விற்பது என்றே இன்னும் தெரிந்திருக்காது.

நீங்கள் தொடங்கும் போது உங்கள் நிலை என்னவாக இருந்தாலும், சரியான சப்ளையர்களையும் விற்கச் சரியான தயாரிப்புகளையும் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும்.

இந்தப் பிரிவில்