டிராப்ஷிப்பிங்கிற்கான ஷிப்பிங் உத்திகள்
டிராப்ஷிப்பிங் பிசினஸ்கள் தாங்களாகவே தயாரிப்புகளை ஷிப்பிங் செய்யாவிட்டாலும், வழக்கமாக அவர்களுடைய சப்ளையர்களிடமிருந்து அவர்களுக்கு ஷிப்பிங் கட்டணங்கள் விதிக்கப்படும். டிராப்ஷிப்பிங் பிசினஸ்கள் இந்த ஷிப்பிங் கட்டணங்களை ஈடுகட்டப் பல்வேறு உத்திகளைத் தேர்வுசெய்யலாம்:
- இலவச ஷிப்பிங்கை வழங்குவதுடன் ஷிப்பிங் செலவுகளைத் தங்கள் லாபத்திலிருந்து எடுத்துக்கொள்வது
- இலவச ஷிப்பிங்கை வழங்குவதுடன் தங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிப்பது
- குறைந்த நிலையான ஷிப்பிங் கட்டணத்தை வசூலிப்பதுடன் தயாரிப்புகளின் செலவைச் சற்று அதிகரிப்பது
- வாடிக்கையாளரிடம் நிலையான ஷிப்பிங் கட்டணத்தை வசூலிப்பது
- சரியான ஷிப்பிங் செலவை வாடிக்கையாளருக்கு மாற்றுவது
பிசினஸ்கள் பல்வேறு தயாரிப்புகளுக்கு, ஒவ்வொரு பொருளுக்குமான ஷிப்பிங் கட்டணங்கள் போன்ற பல்வேறு உத்திகளைக் கொண்டிருக்கவும் தேர்வுசெய்யலாம்.
இந்தப் பக்கத்தில்
இலவச ஷிப்பிங்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷிப்பிங்கை வழங்குவது பின்வரும் பலன்களை வழங்கக்கூடும்:
- சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகள்
- எளிமையான ஷிப்பிங் அமைவு
- வாடிக்கையாளர் ஆர்டர் செய்வதற்கான அதிகரித்த வாய்ப்பு
உங்கள் சப்ளையர் உங்களுக்கு இலவச ஷிப்பிங்கை வழங்கினால், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷிப்பிங்கை வழங்குவது சிறந்த யோசனையாக இருக்கலாம். உங்கள் சப்ளையர் இலவச ஷிப்பிங்கை வழங்கவில்லை எனில், ஷிப்பிங் செலவை உங்கள் தயாரிப்பு விலை நிர்ணயத்தில் சேர்க்கவோ ஷிப்பிங் செலவை உங்கள் லாபத்தில் இருந்து எடுத்துக்கொள்ளவோ நீங்கள் தேர்வுசெய்யலாம்.
உங்கள் தயாரிப்புகளின் செலவில் ஷிப்பிங்கைச் சேர்ப்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முன்பணச் செலவை வழங்க உதவக்கூடும். இதைச் செய்யும் பல பிசினஸ்கள், ஷிப்பிங் சேர்க்கப்பட்டுள்ளதாக விளம்பரம் செய்கின்றன. முன்கூட்டியே முழுமையான விலையைத் தெரிந்துகொள்வது, உங்கள் செக்அவுட்டில் எந்த மறைமுகக் கட்டணங்களும் இருக்காது என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.
ஒரே நிலையான ஷிப்பிங் கட்டணம்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரே நிலையான ஷிப்பிங் கட்டணத்தை வழங்குவது பின்வரும் பலன்களை வழங்கக்கூடும்:
- சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகள்
- உங்கள் சொந்த ஷிப்பிங் செலவுகளை ஈடுசெய்ய உதவும்
- வாடிக்கையாளர் ஆர்டர் செய்வதற்கான அதிகரித்த வாய்ப்பு
எந்தவொரு ஆர்டருக்கும் நிலையான ஷிப்பிங் கட்டணம் உண்டு என்று விளம்பரப்படுத்துவது, உங்கள் செக்அவுட்டில் மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
எந்தவொரு குறிப்பிட்ட வாரத்திலும் நீங்கள் பெறும் ஆர்டர்களைக் கணிப்பதன் மூலம் ஷிப்பிங்கிற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும். உங்கள் சப்ளையரிடமிருந்து வரும் அனைத்து ஷிப்பிங் கட்டணங்களையும் கூட்டி, அந்த ஷிப்பிங் தொகையை ஆர்டர்களின் எண்ணிக்கையால் வகுத்தால், உங்கள் ஷிப்பிங் செலவுகளை ஈடுசெய்ய ஒவ்வொரு ஆர்டருக்கும் எவ்வளவு நிலையான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
எடுத்துக்காட்டு
| தயாரிப்பு | ஒவ்வொரு உருப்படிக்குமான ஷிப்பிங் செலவு | கணிக்கப்பட்ட ஆர்டர்களின் எண்ணிக்கை | கணிக்கப்பட்ட மொத்த ஷிப்பிங் செலவு |
|---|---|---|---|
| தட்டு | $5 | 4 | $20 |
| கிண்ணம் | $4 | 4 | $16 |
| குவளை | $4 | 10 | $40 |
| மொத்தங்கள் | 18 | $66 | |
இந்த ஸ்டோர் $66 மொத்த ஷிப்பிங் செலவில், 18 ஆர்டர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கிறது. அனைத்து ஷிப்பிங் செலவுகளையும் ஈடுசெய்ய, ஸ்டோர் ஒவ்வொரு ஆர்டருக்கும் $3.67 ($66 / 18) என்ற நிலையான ஷிப்பிங் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
அடுக்குமுறை நிலையான கட்டணங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடுக்குமுறை நிலையான ஷிப்பிங் கட்டணங்களை வழங்குவது பின்வரும் பலன்களைத் தரக்கூடும்:
- உங்கள் சொந்த ஷிப்பிங் செலவுகளை ஈடுசெய்ய உதவும்
- ஆர்டர் செய்யப்பட்டவற்றின் அடிப்படையில் மிகவும் துல்லியமான ஷிப்பிங் கட்டணங்கள் கிடைக்கும்
- பெரிய ஆர்டர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஷிப்பிங்கை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்
விலை அல்லது எடையின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான மதிப்புகளுக்குப் பொருந்தும்படி ஒவ்வொரு ஷிப்பிங் கட்டணத்தையும் நீங்கள் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, $0–$9.99, $10–$29.99 மற்றும் $30-க்கும் அதிகமான விலையைக் கொண்ட கார்டுகளுக்கு, நீங்கள் மூன்று ஷிப்பிங் கட்டணங்களை உருவாக்கலாம்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் தனித்துவமான ஸ்டிக்கி நோட் தாள்களை விற்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் சப்ளையர் ஒரு பேக்கை ஷிப் செய்ய $1 கட்டணமும், ஆர்டரில் உள்ள ஒவ்வொரு கூடுதல் பேக்கிற்கும் $0.25 கட்டணமும் வசூலிக்கிறார். ஒவ்வொரு பேக்கின் எடையையும் (எடுத்துக்காட்டாக 1 lb) ஒன்றுபோலவே அமைத்தால், ஆர்டரின் எடையைப் பொறுத்து நீங்கள் வெவ்வேறு ஷிப்பிங் செலவுகளை அமைக்கலாம். 1 பேக் அல்லது 1 lb ஆர்டர்களுக்கு, நீங்கள் $1 கட்டணம் வசூலிக்கலாம். 2–5 பேக்குகள் அல்லது 2–5 lb ஆர்டர்களுக்கு, நீங்கள் $2 வசூலிக்கலாம். 6–10 பேக்குகள் கொண்ட ஆர்டர்களுக்கு, நீங்கள் $4 வசூலிக்கலாம். சப்ளையரிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் ஷிப்பிங் சேமிப்பை உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வழங்க இது உதவுகிறது.
ஒவ்வொரு உருப்படிக்குமான ஷிப்பிங் கட்டணங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு உருப்படிக்குமான ஷிப்பிங் கட்டணங்களை வழங்குவது பின்வரும் பலன்களைத் தரக்கூடும்:
- உங்களின் சொந்த ஷிப்பிங் செலவுகளை முழுமையாக ஈடுசெய்ய முடியும்
- ஆர்டர் செய்யப்பட்டவற்றின் அடிப்படையில் மிகவும் துல்லியமான ஷிப்பிங் கட்டணங்கள் கிடைக்கும்
- பெரிய ஆர்டர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஷிப்பிங்கை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்
உங்கள் சப்ளையர்கள் ஒவ்வொரு தயாரிப்புக்கும் நிலையான கட்டணத்தை வசூலித்து, அதிக அளவிலான ஆர்டர்களுக்கு தள்ளுபடி வழங்கவில்லை எனில், ஷிப்பிங் செலவுகளைத் துல்லியமாக வைத்திருக்கவும் பெரிய ஆர்டர்களால் ஏற்படும் லாப இழப்பைத் தடுக்கவும் ஒவ்வொரு உருப்படிக்குமான ஷிப்பிங் கட்டணங்கள் உதவும். பொருத்தமான ஷிப்பிங் கட்டணங்களைக் கொண்ட ஷிப்பிங் சுயவிவரத்தில் நீங்கள் ஒவ்வொரு தயாரிப்பையும் சேர்க்கலாம். செக்அவுட்டில் கார்ட்டில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளின் ஷிப்பிங் கட்டணங்களும் இணைக்கப்பட்டு மொத்த ஷிப்பிங் செலவு கணக்கிடப்படும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் AA மற்றும் AAA பேட்டரிகளை விற்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு AA பேட்டரி பேக்கையும் ஷிப் செய்ய $3 செலவாகும் மற்றும் ஒவ்வொரு AAA பேட்டரி பேக்கிற்கும் $2 செலவாகும். ஒவ்வொரு பேட்டரி அளவுக்கும் பொருத்தமான ஷிப்பிங் கட்டணங்களுடன் நீங்கள் ஷிப்பிங் சுயவிவரத்தை உருவாக்கலாம். ஒரு ஷிப்பிங் சுயவிவரத்தில் AA பேட்டரிகளுக்கு $3 கட்டணமும், மற்றொரு சுயவிவரத்தில் AAA பேட்டரிகளுக்கு $2 கட்டணமும் அமைத்தால், இரண்டிலும் தலா ஒரு பேக்கை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு செக்அவுட்டில் $5 ஷிப்பிங் கட்டணம் காட்டப்படும்.
பல வேறுபட்ட சுயவிவரங்களைச் சேர்ந்த தயாரிப்புகள் அடங்கிய ஆர்டர்களை உங்கள் ஸ்டோர் பெற்றால், ஒவ்வொரு உருப்படிக்குமான ஷிப்பிங் முறையானது சிக்கலானதாக மாறலாம். மேலும் தகவலுக்கு, ஒருங்கிணைந்த ஷிப்பிங் கட்டணங்கள் என்பதைப் பார்க்கவும்.
மேம்பட்ட ஷிப்பிங் கட்டண எடுத்துக்காட்டு
உங்கள் சப்ளையர் ஷிப்பிங் செலவுகளை எவ்வாறு தீர்மானிக்கிறார் என்பதைப் பொறுத்து, உங்களின் ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய வேறு சில காரணிகளும் இருக்கலாம்:
- சில சப்ளையர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு கட்டணங்களை வசூலிப்பார்கள்.
- ஒரு ஆர்டரில் பல உருப்படிகள் இருக்கலாம், அதற்கு சப்ளையர்கள் வெவ்வேறு ஷிப்பிங் கட்டணங்களை வசூலிக்கக்கூடும்.
- சில சப்ளையர்கள் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் விருப்பத்தேர்வை வழங்கக்கூடும்.
உங்கள் சப்ளையர் உங்களுக்குப் பின்வரும் ஷிப்பிங் கட்டணங்களை வழங்குவதாக வைத்துக்கொள்வோம்:
| ஆரடரிலுள்ள தயாரிப்புகள் | கனடாவுக்கான அடிப்படை ஷிப்பிங் செலவு* | கனடாவுக்கான ஒவ்வொரு கூடுதல் உருப்படிக்குமான செலவு | அமெரிக்காவுக்கான அடிப்படை ஷிப்பிங் விலை* | அமெரிக்காவுக்கான ஒவ்வொரு கூடுதல் உருப்படிக்குமான செலவு |
|---|---|---|---|---|
| தட்டுகள் |
தரநிலை: $5 எக்ஸ்பிரஸ்: $11 |
தரநிலை: $2 எக்ஸ்பிரஸ்: $2 |
தரநிலை: $3 எக்ஸ்பிரஸ்: $8 |
தரநிலை: $1 எக்ஸ்பிரஸ்: $2 |
| கிண்ணங்கள் |
தரநிலை: $4 எக்ஸ்பிரஸ்: $9 |
தரநிலை: $1 எக்ஸ்பிரஸ்: $2 |
தரநிலை: $2 எக்ஸ்பிரஸ்: $6 |
தரநிலை: $1 எக்ஸ்பிரஸ்: $2 |
| குவளைகள் |
தரநிலை: $3 எக்ஸ்பிரஸ்: $8 |
தரநிலை: $1 எக்ஸ்பிரஸ்: $2 |
தரநிலை: $1.50 எக்ஸ்பிரஸ்: $5 |
தரநிலை: $1 எக்ஸ்பிரஸ்: $2 |
| தட்டுகள் மற்றும் கிண்ணங்கள் |
தரநிலை: $7 எக்ஸ்பிரஸ்: $13 |
தரநிலை: $2 எக்ஸ்பிரஸ்: $3 |
தரநிலை: $6 எக்ஸ்பிரஸ்: $11 |
தரநிலை: $1.50 எக்ஸ்பிரஸ்: $2 |
| தட்டுகள் மற்றும் குவளைகள் |
தரநிலை: $6 எக்ஸ்பிரஸ்: $11 |
தரநிலை: $2 எக்ஸ்பிரஸ்: $2.50 |
தரநிலை: $5 எக்ஸ்பிரஸ்: $9 |
தரநிலை: $1.50 எக்ஸ்பிரஸ்: $2 |
| கிண்ணங்கள் மற்றும் குவளைகள் |
தரநிலை: $6 எக்ஸ்பிரஸ்: $11 |
தரநிலை: $2 எக்ஸ்பிரஸ்: $2.50 |
தரநிலை: $5 எக்ஸ்பிரஸ்: $9 |
தரநிலை: $1.50 எக்ஸ்பிரஸ்: $2 |
| தட்டுகள், கிண்ணங்கள் மற்றும் குவளைகள் |
தரநிலை: $8 எக்ஸ்பிரஸ்: $15 |
தரநிலை: $2 எக்ஸ்பிரஸ்: $2.50 |
தரநிலை: $6 எக்ஸ்பிரஸ்: $13 |
தரநிலை: $1.50 எக்ஸ்பிரஸ்: $2 |
*"ஆரடரிலுள்ள தயாரிப்புகள்" நெடுவரிசையில் உள்ள ஒவ்வொரு உருப்படியிலும் ஒன்றை ஷிப் செய்வதற்கான செலவும் அடிப்படை செலவில் அடங்கும்.
உங்களின் சந்தை ஆய்வின் அடிப்படையில், நீங்கள் பின்வரும் ஆர்டர்களைப் பெறுவீர்கள் என்றும் அதற்காகப் பின்வரும் ஷிப்பிங் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கணிக்கிறீர்கள்:
- தரநிலையான ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்லும் 1 குவளைக்கான 5 ஆர்டர்கள்: 5 x $3 = $15
- எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவுக்கு 1 மக் அடங்கிய 1 ஆர்டர்: 1 x $8 = $8
- ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு 1 மக் அடங்கிய 7 ஆர்டர்கள்: 7 x $1.50 = $10.50
- ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவுக்கு 2 கிண்ணங்கள் அடங்கிய 2 ஆர்டர்கள்: 2 x $5 = $10
- எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்கைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு 2 கிண்ணங்கள், 2 மக்குகள் அடங்கிய 1 ஆர்டர்: 1 x $13 = $13
- ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவுக்கு 4 தட்டுகள், 4 மக்குகள் அடங்கிய 4 ஆர்டர்கள்: 4 x $18 = $72
- ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு 2 தட்டுகள், 2 கிண்ணங்கள் மற்றும் 2 மக்குகள் அடங்கிய 4 ஆர்டர்கள்: 4 x $10.50 = $42
24 ஆர்டர்களுக்கான ஷிப்பிங் கட்டணமாக $170.50 செலவாகும் என்று முடிவுகள் கணிக்கின்றன. உங்கள் ஷிப்பிங் செலவுகளை ஈடுகட்ட, ஒவ்வொரு ஆர்டருக்கும் ஷிப்பிங்கிற்கு $7.11 நீங்கள் கட்டணமாக வசூலிக்க வேண்டியிருக்கும்.
இலவச ஷிப்பிங் வழங்குதல்
நீங்கள் இலவச ஷிப்பிங்கை வழங்கவும், உங்கள் விலையில் ஷிப்பிங் அடங்கியுள்ளது என்று விளம்பரப்படுத்தவும் விரும்பினால், உங்கள் தயாரிப்புகளின் விலையில் $170.50 ஷிப்பிங் செலவைப் பிரித்துச் சேர்க்கலாம். கணிப்புகளின் அடிப்படையில், நீங்கள் 77 தயாரிப்புகளை விற்பனை செய்வீர்கள். இதன்படி, உங்கள் ஷிப்பிங் செலவை ஈடுகட்ட உங்களின் ஒவ்வொரு தயாரிப்பின் விலையிலும் $2.22-ஐச் சேர்க்க வேண்டியிருக்கும்.
இருப்பினும், இரண்டு ஆர்டர்களுக்கு எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் தேவைப்படும் என நீங்கள் கணிப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்துடன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்கை வழங்கலாமா அல்லது எல்லாவற்றையும் ஸ்டாண்டர்டு ஷிப்பிங்காகவே வைத்திருக்கலாமா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்கைக் கட்டணத்துடன் வழங்கினால், முதலில் உங்கள் ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கை மட்டும் ஈடுகட்டுவதற்கான செலவைத் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் அதுதான் உங்கள் தயாரிப்புகளின் விலையை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. ஸ்டாண்டர்டு ஷிப்பிங் கொண்ட ஆர்டர்களில் 72 தயாரிப்புகள் உள்ளன, அவற்றின் மொத்த ஷிப்பிங் செலவு $149.50. அதாவது உங்கள் ஷிப்பிங் செலவுகளை ஈடுகட்ட, உங்களின் தயாரிப்பு விலையை $2.08 அதிகரிக்க வேண்டும்.
மொத்தம் $21 ஷிப்பிங் கட்டணம் செலவாகும் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் கொண்ட இரண்டு ஆர்டர்கள் உள்ளன. இந்த ஆர்டர்களில் மொத்தம் 5 தயாரிப்புகள் உள்ளன. ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கை ஈடுகட்டத் தயாரிப்பின் விலைகள் ஏற்கனவே $2.08 அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொத்த எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் கட்டணமான $21-இல் $10.40 ஏற்கனவே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள $10.60-ஐ இரண்டு எக்ஸ்பிரஸ் ஆர்டர்களிலிருந்து வசூலிக்க வேண்டும். அதாவது நீங்கள் கணித்துள்ள செலவுகளை ஈடுகட்ட, எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்கிற்கு நீங்கள் $5.30 கட்டணம் வசூலிக்கலாம்.
நீங்கள் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்கை வழங்க வேண்டாம் என முடிவு செய்தால், அதற்குப் பதிலாக ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கைப் பயன்படுத்தும் வகையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஆர்டர்களையும் மீண்டும் கணக்கிட வேண்டும். இப்போது உங்களின் ஷிப்பிங் செலவு $160.50 ஆக இருக்கும், அதாவது அந்தச் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு தயாரிப்பிலும் $2.09-ஐச் சேர்க்க வேண்டும்.
ஒரே ஷிப்பிங் கட்டணத்தை வழங்குதல்
உங்கள் சப்ளையர் ஸ்டாண்டர்டு மற்றும் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்கை வழங்குவதால், ஒவ்வொரு விருப்பத்திற்கும் ஒரே நிலையான கட்டணத்தை வழங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும். கணிப்புகளின் அடிப்படையில், எக்ஸ்பிரஸ் ஷிப்பிங்குடன் 2 ஆர்டர்கள் கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு மொத்தம் $21 செலவாகும். மேலும் ஸ்டாண்டர்டு ஷிப்பிங்குடன் 22 ஆர்டர்களையும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இதற்கு $149.50 செலவாகும். உங்களின் ஷிப்பிங் கட்டணங்களை ஈடுகட்ட, எக்ஸ்பிரஸ் ஆர்டர்களுக்கு $10.50 மற்றும் ஸ்டாண்டர்டு ஷிப்பிங் ஆர்டர்களுக்கு $6.80-ஐ நிலையான ஷிப்பிங் கட்டணமாக நீங்கள் வசூலிக்க வேண்டும்.
நீங்கள் தொடக்கத்தில் கணித்ததை விட, உங்களின் உண்மையான ஆர்டர் எண்கள் மற்றும் ஷிப்பிங் செலவுகளைக் கணக்கிட உங்கள் பிசினஸ் வளரும்போது இந்த ஷிப்பிங் கட்டணங்களை அடிக்கடி சரிசெய்ய வேண்டியிருக்கும்.
மேலும் துல்லியமாக இருக்க, ஆர்டர் எந்த நாட்டிலிருந்து வழங்கப்பட்டது என்பதன் அடிப்படையில் வெவ்வேறு நிலையான ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் உருவாக்கலாம்.
அடுக்கு ஷிப்பிங் கட்டணங்களை வழங்குதல்
உங்கள் கணிப்புகள் தவறாக இருக்கும் பட்சத்தில் உங்களின் ஷிப்பிங் செலவுகளை மிகவும் துல்லியமாக வைத்திருக்க, அடுக்கு நிலையான கட்டணங்களையும் வழங்கலாம். எடை அல்லது விலையின் அடிப்படையில் நீங்கள் அடுக்கு நிலையான கட்டணங்களை வழங்க முடியும் என்பதை நினைவில்கொள்ளவும். ஒவ்வொரு தயாரிப்பின் எடையையும் 1 lb என அமைத்து, எடையின் அடிப்படையில் நிலையான ஷிப்பிங் கட்டணங்களை உருவாக்கினால், ஒவ்வொரு எடைக்குமான சராசரி ஷிப்பிங் செலவு என்ன என்பதை நீங்கள் கணக்கிடலாம்.
1 lb எடையுள்ள ஆர்டர்களுக்கான செலவுகள்
| ஆர்டரில் உள்ள தயாரிப்புகள் | கனடாவுக்கான ஷிப்பிங் செலவு | அமெரிக்காவிற்கான ஷிப்பிங் செலவு |
|---|---|---|
| 1 தட்டு | $5 | $3 |
| 1 கிண்ணம் | $4 | $2 |
| 1 மக் | $3 | $1.50 |
கனடாவுக்கு 1 lb ஷிப் செய்வதற்கான சராசரி செலவு $4 மற்றும் அமெரிக்காவிற்கு $2.17.
2 lb எடையுள்ள ஆர்டர்களுக்கான செலவுகள்
| ஆர்டரில் உள்ள தயாரிப்புகள் | கனடாவுக்கான ஷிப்பிங் செலவு | அமெரிக்காவிற்கான ஷிப்பிங் செலவு |
|---|---|---|
| 2 தட்டுகள் | $7 | $4 |
| 2 கிண்ணங்கள் | $5 | $3 |
| 2 மக்குகள் | $4 | $2.50 |
| 1 தட்டு மற்றும் 1 கிண்ணம் | $7 | $6 |
| 1 தட்டு மற்றும் 1 மக் | $6 | $5 |
| 1 கிண்ணம் மற்றும் 1 மக் | $6 | $5 |
கனடாவுக்கு 2 lb ஷிப் செய்வதற்கான சராசரி செலவு $5.84 மற்றும் அமெரிக்காவிற்கு $4.25.
நீங்கள் 3 lb, 4 lb மற்றும் அதற்கு மேல் அதிக எடையுள்ள ஆர்டர்களுக்கான கணக்கீடுகளைத் தொடர்ந்தால், நீங்கள் இன்னும் துல்லியமான ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கலாம். இது எதிர்பாராத ஷிப்பிங் செலவுகளால் ஏற்படும் லாப இழப்பைக் குறைக்க உதவும்.
ஒவ்வொரு பொருளுக்குமான ஷிப்பிங் செலவுகளை வழங்குதல்
ஒவ்வொரு தயாரிப்புக்கும், நீங்கள் ஒரு ஷிப்பிங் சுயவிவரத்தை அமைத்து, ஆர்டர் செய்யப்படும் தயாரிப்புகளின் அடிப்படையில் ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கலாம்.
வெவ்வேறு சுயவிவரங்களில் உள்ள தயாரிப்புகள் ஒரு ஆர்டரில் இருக்கும்போது, செக்அவுட்டின் போது அவற்றின் ஷிப்பிங் கட்டணங்கள் இணைக்கப்படும். இதனால் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஷிப்பிங் செலவுகள் அதிகமாகலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் தட்டுகளுக்கு $5 கட்டணத்தில் ஒரு ஷிப்பிங் சுயவிவரத்தையும் கிண்ணங்களுக்கு $4 கட்டணத்தில் மற்றொரு ஷிப்பிங் சுயவிவரத்தையும் அமைத்தால், ஒரு தட்டு மற்றும் கிண்ணத்துடன் செக்அவுட் செய்யும்போது ஷிப்பிங் கட்டணம் $9 ஆக மாறும்.
ஒவ்வொரு ஷிப்பிங் சுயவிவரத்திற்கும் உங்களின் ஷிப்பிங் கட்டணங்களை அமைப்பதற்கான அடிப்படை வழிமுறை என்னவென்றால், கார்ட்டில் வேறு என்ன இருந்தாலும் அந்த சுயவிவரத்தில் உள்ள தயாரிப்புகளுக்கான சராசரி செலவைக் கண்டறிவதாகும்.
ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தட்டுகளை ஷிப்பிங் செய்வதற்கான செலவு:
- 1 தட்டு = $5
- 2 தட்டுகள் = $7 ($5 + $2)
- 3 தட்டுகள் = $9 ($5 + $2 + $2)
- 1 தட்டு மற்றும் 1 கிண்ணம் = $3.5 ($7 x 0.5)
- 2 தட்டுகள் மற்றும் 1 கிண்ணம் = $6 ($9 x 0.66)
- 3 தட்டுகள் மற்றும் 1 கிண்ணம் = $8.25 ($11 x 0.75)
- 1 தட்டு மற்றும் 1 மக் = $3 ($6 x 0.5)
- 2 தட்டுகள் மற்றும் 1 மக் = $5.33 ($8 x 0.66)
- 3 தட்டுகள் மற்றும் 1 மக் = $7.50 ($10 x 0.75)
எந்த எண்ணிக்கையிலான தட்டுகளையும் ஷிப்பிங் செய்வதற்கான சராசரி செலவு $6.04.
ஸ்டாண்டர்டு ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவுக்குக் கிண்ணங்களை ஷிப்பிங் செய்வதற்கான செலவு:
- 1 கிண்ணம் = $4
- 2 கிண்ணங்கள் = $5 ($4 + $1)
- 3 கிண்ணங்கள் = $6 ($4 + $1 + $1)
- 1 கிண்ணம் மற்றும் 1 தட்டு = $3.5 ($7 * .5)
- 2 கிண்ணங்கள் மற்றும் 1 தட்டு = $6 ($9 * .66)
- 3 கிண்ணங்கள் மற்றும் 1 தட்டு = $8.25 ($11 * .75)
- 1 கிண்ணம் மற்றும் 1 குவளை = $3.5 ($7 * .5)
- 2 கிண்ணங்கள் மற்றும் 1 குவளை = $6 ($9 * .66)
- 3 கிண்ணங்கள் மற்றும் 1 குவளை = $8.25 ($11 * .75)
எந்தவொரு அளவிலான கிண்ணங்களையும் ஷிப்பிங் செய்வதற்கான சராசரிச் செலவு $5.55 ஆகும்
நிலையான ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவிற்கு குவளைகளை ஷிப்பிங் செய்வதற்கான செலவு:
- 1 குவளை = $3
- 2 குவளைகள் = $4 ($3 + $1)
- 3 குவளைகள் = $5 ($3 + $1 + $1)
- 1 குவளை மற்றும் 1 தட்டு = $3 ($6 * .5)
- 2 குவளைகள் மற்றும் 1 தட்டு = $5.33 ($8 * .66)
- 3 குவளைகள் மற்றும் 1 தட்டு = $7.50 ($10 * .75)
- 1 குவளை மற்றும் 1 கிண்ணம் = $3.5 ($7 * .5)
- 2 குவளைகள் மற்றும் 1 கிண்ணம் = $6 ($9 * .66)
- 3 குவளைகள் மற்றும் 1 கிண்ணம் = $8.25 ($11 * .75)
எந்தவொரு அளவிலான குவளைகளையும் ஷிப்பிங் செய்வதற்கான சராசரிச் செலவு $5.07 ஆகும்
இந்த எண்களின் அடிப்படையில், கனடாவிற்கான ஒவ்வொரு எதிர்பார்க்கப்படும் ஆர்டருக்கும் பின்வரும் லாபங்களைப் பெறுவீர்கள்:
- நிலையான ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவிற்கு 1 குவளையின் 5 ஆர்டர்கள்: $25.35 - $15 = $10.35 லாபம்
- நிலையான ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவிற்கு 2 கிண்ணங்களின் 2 ஆர்டர்கள்: $11.10 - $10 = $1.10 லாபம்
- நிலையான ஷிப்பிங்கைப் பயன்படுத்தி கனடாவிற்கு 4 தட்டுகள் மற்றும் 4 குவளைகளின் 4 ஆர்டர்கள்: $44.44 - $72 = $27.56 இழப்பு
ஒரு பொருளுக்கான ஷிப்பிங்கைத் திறம்படப் பயன்படுத்த, ஒவ்வொரு ஷிப்பிங் சுயவிவரத்திலும் எடை அல்லது விலையை அடிப்படையாகக் கொண்ட அடுக்கு ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்க வேண்டியிருக்கும்.
ஒரு பொருளுக்கான ஷிப்பிங்கின் கூடுதல் உதாரணங்களுக்கு, ஒருங்கிணைந்த ஷிப்பிங் கட்டணங்களைப் பார்க்கவும்.