டிராப்ஷிப்பிங் என்றால் என்ன?

நீங்களே சரக்கு இருப்பைச் சேமிக்காமலோ தயாரிப்புகளை ஷிப்பிங் செய்யாமலோ தயாரிப்புகளை விற்பதற்கான ஒரு வழிதான் டிராப்ஷிப்பிங். டிராப்ஷிப்பிங்கை அமைப்பதும் உங்கள் முதல் ஆன்லைன் வணிகத்தைத் தொடங்குவதும் எளிதானது.

நீங்கள் ஒரு டிராப்ஷிப்பிங் வணிகத்தை நடத்தினால், உங்கள் சார்பாக உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்யும் சப்ளையர்களிடமிருந்து உங்கள் தயாரிப்புகள் கிடைக்கும். இந்தச் சப்ளையர்கள் உற்பத்தியாளர்களாகவோ கிடங்குகளாகவோ தங்கள் வீட்டிலிருந்தே தயாரிப்புகளை உருவாக்கும் குடும்ப உறுப்பினர்களாகவோ இருக்கலாம். Shopify மூலம், தேவைக்கேற்ப அச்சிடுதல் செயலிகள் மற்றும் டிராப்ஷிப்பிங் செயலிகள் வாயிலாகச் சப்ளையர்களைக் கண்டறிவது எளிது.

நீங்கள் டிராப்ஷிப்பிங்கை முயன்று பார்ப்பதற்கு முன், அது எவ்வாறு செயல்படுகிறது, அதன் அம்சங்கள் மற்றும் குறைபாடுகள் மற்றும் ஆர்டர்களும் தயாரிப்புகளும் கடந்து செல்லும் செயல்முறை ஆகியவற்றை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

இந்தப் பிரிவில்