விநியோகச் சங்கிலி மற்றும் நிறைவேற்றச் செயல்முறை

ஒரு தயாரிப்பு உருவாக்கப்படுவதிலிருந்து வாடிக்கையாளரின் கைகளைச் சென்றடையும் பாதை அதன் விநியோகச் சங்கிலி என அழைக்கப்படுகிறது. தயாரிப்பின் இந்தப் பயணத்தில் தொடர்பில் வரும் ஒவ்வொரு வணிகமும் அல்லது நபரும் அதன் விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாவர்.

உங்கள் ஆர்டர்களுக்கான நிறைவேற்றச் செயல்முறையில் ஒரு பெரும் பகுதியை உங்கள் விநியோகச் சங்கிலி உருவாக்குகிறது. உங்கள் தயாரிப்பிற்கான விநியோகச் சங்கிலியின் முக்கியப் பகுதிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அப்போதுதான் எப்போது சப்ளையர்களை மாற்றுவது, வெவ்வேறு ஷிப்பிங் விருப்பங்களை வழங்குவது அல்லது உங்கள் தயாரிப்பு வரிசையிலிருந்து ஒரு தயாரிப்பை அகற்றுவது போன்ற மேம்பாடுகளை எப்போது செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு விநியோகச் சங்கிலியிலுள்ள பங்குகள்

ஒரு விநியோகச் சங்கிலியில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கியப் பங்குகள்: உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஷிப்பிங் கேரியர்கள்.

உற்பத்தியாளர்கள்

உற்பத்தியாளர்கள் தயாரிப்புகளை உருவாக்கித் தயாரிக்கிறார்கள், ஆனால் பொதுவாக நேரடியாகப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில்லை. மாறாக, அவர்கள் மொத்த விற்பனையாளர்களுக்குப் பெருமளவில் விற்பனை செய்கிறார்கள்.

உற்பத்தியாளர்களிடம் பொதுவாக மிகக் குறைந்த உருப்படிக்கான செலவுகள் இருக்கும், ஆனால் நீங்கள் வழக்கமாக அதிக அளவில் தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும், இதை பெரும்பாலான சிறு வணிகங்களால் வாங்க முடியாது. உற்பத்தியாளர்களும் பொதுவாக உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உருப்படிகளை அனுப்புவதில்லை. உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும் வணிகங்கள், தாங்கள் வாங்கும் தயாரிப்புகளை ஸ்டாக் செய்து ஷிப்பிங் செய்ய வேண்டும்.

ஒரு உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக வாங்குவது என்பது சிறு வணிகங்கள் கணிசமாக வளர்ந்த பிறகு செய்யும் ஒரு செயலாகும். ஒரு வணிகம் போதுமான அளவு பெரியதாக மாறிய பிறகு, அவர்களால் அதிக அளவில் தயாரிப்புகளை ஆர்டர் செய்யவும் அவற்றைச் சேமித்து வைக்க ஒரு கிடங்கைக் கொண்டிருக்கவும் முடியும். இருப்பினும், தொடங்குவதற்கு, பெரும்பாலான சிறு வணிகங்கள் மொத்த விற்பனையாளர்களிடமிருந்தே வாங்குகின்றன.

மொத்த விற்பனையாளர்கள்

மொத்த விற்பனையாளர்கள் பொதுவாக பல்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து தயாரிப்புகளை வாங்கி, சற்று அதிக விலைக்குச் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கிறார்கள். அவர்கள் ஒரு துறை தொடர்பான தயாரிப்புகளை ஸ்டாக் செய்ய முயற்சிப்பார்கள், மேலும் பொதுவாகச் சில்லறை விற்பனையாளர்களுக்கு மட்டுமே விற்கிறார்கள், பொதுமக்களுக்கு அல்ல.

மொத்த விற்பனையாளர்கள் குறைந்தபட்ச ஆர்டர் அளவுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவை வழக்கமாக உற்பத்தியாளர்களின் குறைந்தபட்ச அளவுகளை விட மிகவும் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, ஒரு உற்பத்தியாளரிடம் நீங்கள் 500 அல்லது 1000 காபி குவளைகளை ஆர்டர் செய்ய வேண்டியிருக்கலாம், அதேசமயம் ஒரு மொத்த விற்பனையாளர் தனிப்பட்ட விற்பனையை அனுமதிக்கலாம் அல்லது ஒரு ஆர்டருக்கு 10 மட்டுமே தேவைப்படலாம். பெரும்பாலான சிறு வணிகங்கள் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை வாங்குகின்றன, ஏனெனில் அவர்கள் குறைந்த அளவிலான அல்லது குறைந்தபட்ச அளவுகள் இல்லாத கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளனர் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை அனுப்ப முடியும்.

சில்லறை விற்பனையாளர்கள்

நீங்கள் பொதுமக்களுக்குத் தயாரிப்புகளை விற்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு சில்லறை விற்பனையாளர். பெரும்பாலான டிராப்ஷிப்பிங் வணிகங்கள் மொத்த விற்பனையாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களிடமிருந்து தயாரிப்புகளை வாங்கும் சில்லறை விற்பனையாளர்கள் ஆவர்.

உங்கள் தயாரிப்புகளை வாங்கும்போது, மற்றொரு சில்லறை விற்பனையாளரிடமிருந்து வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் ஒரு மொத்த விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக வாங்குவதை விட நீங்கள் அதிக விலை கொடுக்க நேரிடும்.

ஷிப்பிங் கேரியர்கள்

விநியோகச் சங்கிலியின் ஒரு முக்கியமான பகுதி, உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையே தயாரிப்புகள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பதாகும். உற்பத்தியாளர்கள் அதிக குறைந்தபட்ச ஆர்டர் அளவுகளைக் கொண்டிருப்பதால், அவர்கள் பயன்படுத்தும் ஷிப்பிங் கேரியர்களில் பெரும்பாலானவை சரக்குக் கப்பல்கள் போன்ற சரக்கு ஷிப்பிங் கேரியர்களாகும். மொத்த விற்பனையாளர்கள் பொதுவாக டெலிவரி லாரிகள் போன்ற கூரியர் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த இடங்களுக்கு உங்கள் தயாரிப்புகள் எவ்வாறு சென்று வருகின்றன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதார்த்தமான விநியோகத் தேதிகளை வழங்க உங்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, உங்கள் மொத்த விற்பனையாளர் ஆர்டர்களை மிக விரைவாகச் செயல்படுத்தலாம், ஆனால் அதன் பிறகு உங்கள் வாடிக்கையாளருக்குத் தயாரிப்பை ஷிப்பிங் செய்ய இருக்கும் விலை மலிவான, மெதுவான ஷிப்பிங் முறையைத் தேர்வுசெய்யலாம்.

விநியோகச் சங்கிலி மற்றும் நிறைவேற்றச் செயல்முறை உதாரணம்

உங்கள் தயாரிப்புகள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு சென்றடைகின்றன என்ற முழுச் செயல்முறையையும் நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் வளரும்போது உங்கள் வணிகத்தை மேலும் சிறப்பாக மாற்றலாம்.

உற்பத்தியாளரிடமிருந்து ஒரு வாடிக்கையாளருக்குத் தயாரிப்பு செல்லும்போது அது எடுக்கக்கூடிய அனைத்துப் படிகளையும் பின்வரும் உதாரணம் காட்டுகிறது.

விநியோகச் சங்கிலி மற்றும் நிறைவேற்றச் செயல்முறைப் படிகள்
படிவிவரங்கள்
1. உற்பத்தியாளர் தயாரிப்புகளை உருவாக்குகிறார்.
  • மொத்த விற்பனையாளர்களின் தேவைகளின் அடிப்படையில், உற்பத்தியாளர் சரியான எண்ணிக்கையிலான தயாரிப்புகளை உருவாக்க முயற்சிப்பார்.
2. மொத்த விற்பனையாளர் தயாரிப்புகளை ஆர்டர் செய்கிறார்.
  • மொத்த விற்பனையாளர் உங்கள் ஸ்டோர் போன்ற தங்கள் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை நிறைவேற்றத் தேவையான சரியான அளவிலான தயாரிப்புகளை ஸ்டாக் செய்ய முயற்சிப்பார்.
  • மொத்த விற்பனையாளர் தயாரிப்புகளுக்காக உற்பத்தியாளருக்குப் பணம் செலுத்துவார்.
3. உற்பத்தியாளர் மொத்த விற்பனையாளருக்குத் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்கிறார்.
  • உற்பத்தியாளர் தயாரிப்புகளை மொத்த விற்பனையாளரிடம் கொண்டு செல்ல ஒரு சரக்குக் கேரியரிடம் கொடுப்பார்.
  • உற்பத்தியாளர் சரக்குக் கேரியருக்குப் பணம் செலுத்துவார்.
4. சரக்குக் கேரியர் தயாரிப்புகளை மொத்த விற்பனையாளரிடம் கொண்டு வருகிறார்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிப்பிங் முறை மற்றும் வணிகங்களின் இருப்பிடங்களைப் பொறுத்து, தயாரிப்புகள் கப்பல், விமானம் அல்லது லாரி மூலம் கொண்டு செல்லப்படலாம்.
  • தயாரிப்புகள் வந்து சேரச் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகலாம்.
5. மொத்த விற்பனையாளர் தயாரிப்புகளை ஒரு கிடங்கில் வைக்கிறார்.
  • மொத்த விற்பனையாளர் தங்களது சரக்கு இருப்பு எண்களைப் புதுப்பிப்பார், இதன் மூலம் சில்லறை விற்பனையாளர்கள் எவை கிடைக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
6. ஒரு வாடிக்கையாளர் உங்கள் ஸ்டோரில் ஆர்டர் செய்கிறார்.
  • ஆர்டர் விவரங்களுடன் Shopify இடமிருந்து நீங்கள் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
  • ஆர்டருக்கான பணம் உங்களின் அடுத்த பேஅவுட்டில் சேர்க்கப்படும்.
  • வாடிக்கையாளர் ஒரு ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவார்.
7. உங்களின் மொத்த விற்பனையாளரிடம் நீங்கள் ஆர்டரை வழங்குகிறீர்கள்.
  • உங்கள் மொத்த விற்பனையாளர் உங்கள் ஸ்டோரிலிருந்து தானியங்கி ஆர்டர் அறிவிப்புகளைப் பெற்றால், ஆர்டரைப் பற்றி நீங்கள் உங்கள் மொத்த விற்பனையாளரிடம் மேனுவலாகத் தெரிவிக்க வேண்டியதில்லை.
  • உங்கள் மொத்த விற்பனையாளரை தனிப்பயன் நிறைவேற்றச் சேவை என நீங்கள் அமைத்திருந்தால், உங்கள் மொத்த விற்பனையாளருக்கு மின்னஞ்சலை அனுப்ப, நீங்கள் மேனுவலாக ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்க வேண்டும். ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பது உங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலையும் அனுப்புகிறது.
  • உங்கள் மொத்த விற்பனையாளர் ஆர்டர்களை வேறு வழியில் பெற விரும்பினால், உங்கள் ஆர்டர்களை உங்கள் மொத்த விற்பனையாளருக்கு எவ்வாறு அனுப்புவது என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் தயாரிப்புகளுக்காக உங்கள் மொத்த விற்பனையாளருக்குப் பணம் செலுத்துகிறீர்கள்.
8. உங்கள் மொத்த விற்பனையாளர் ஆர்டரை நிறைவேற்றுகிறார்.
  • உங்கள் மொத்த விற்பனையாளர் கூரியர் சேவையைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளருக்கு ஆர்டரை அனுப்புகிறார்.
  • உங்கள் மொத்த விற்பனையாளர் கூரியர் சேவைக்குப் பணம் செலுத்துகிறார்.
  • உங்கள் வாடிக்கையாளர் ஒரு ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுகிறார்.
  • ஷிப்பிங் கேரியர் ஷிப்பிங் எண்ணை வழங்கினால், அதை ஷிப்பிங் அறிவிப்பு மின்னஞ்சல் மூலம் உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பலாம்.
9. கூரியர் சேவை உங்கள் வாடிக்கையாளருக்குத் தயாரிப்பைக் கொண்டுவருகிறது.
  • தேர்வுசெய்யப்பட்ட ஷிப்பிங் முறையைப் பொறுத்து, இதற்குச் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகலாம்.
10. உங்கள் வாடிக்கையாளர் தங்களின் ஆர்டரைப் பெறுகிறார்.
  • தயாரிப்பு உற்பத்தியாளரிடமிருந்து வாடிக்கையாளரைச் சென்றடைகிறது.